இந்து முன்னணி தலைவர் சு.வெள்ளையப்பன் படுகொலை

jaihind

நம் வணக்கத்துக்குரிய திரு வெள்ளையப்பன் அவர்கள் தேசவிரோத கும்பலால் படுகொலை செய்யப்பட்டுள்ளார். இந்துக்களின் உரிமைகளுக்காக களமாடி வீரமரணம் அடைந்து பாரத அன்னையின் பாதங்களில் பலிதானியாகி உள்ள இப்பெரும் வீரரின் பிரிவால் வருந்தும் அவர் குடும்பத்தினருடனும் இந்து இயக்கங்களுடனும் தமிழ்ஹிந்து.காம் சோகத்தை பகிர்ந்து கொள்கிறது. தற்போதைய தமிழக சூழலில் தேசபக்த இந்து இயக்கங்களின் மீது தொடர்ந்து தாக்குதல்களும் இந்து இயக்கங்களை சேர்ந்தவர்கள் கொல்லப்படுவதும் நடந்து வருகிறது. பாஜகவின் மருத்துவ பிரிவு தலைவர் கொல்லப்பட்டதும் ஊட்டியில் போன மாதம் ஆர் எஸ் எஸ் அமைப்பைச் சார்ந்தவர் கொலைவெறித்தாக்குதலுக்கு ஆளானதும், நாகர்கோவிலில் திரு. எம்.ஆர்.காந்தி அவர்கள் இஸ்லாமிய வெறியர்களால் தாக்கப்பட்டதும் ஏதோ தனித்தனியாக நடத்தப்பட்ட தாக்குதல்கள் என நினைப்பதற்கில்லை.

பொதுவாக அமெரிக்க தூதரகத்தின் முன் நடந்த வன்முறை மதவெறி ஆர்ப்பாட்டம், விஸ்வரூபம் பிரச்சனையில் இஸ்லாமிய அமைப்புகளுடன் அரசு நடந்து கொண்டவிதம் ஆகியவை இஸ்லாமிய மதவெறி அமைப்புகளை தமிழ்நாட்டில் நன்றாக வேர் ஊன்ற செய்துள்ளன. ஓட்டு வங்கி அரசியலை பயன்படுத்தி அதனை பயங்கரவாத செயல்களுக்கான ஒரு முகமூடியாக பயன்படுத்தும் இஸ்லாமிய அரசியல் பாபா சாகேப் அம்பேத்கர் கூறியது போல ஒரு ஹிட்லரிய அரசியல் என்பதை மக்கள் உணர வேண்டும். ஹிந்து ஒற்றுமையின்மையின் இறுதிவிளைவு ஜிகாதி வெடிகுண்டுகளால் அப்பாவி ஹிந்துக்கள் சாதி -கட்சி என எவ்வித பேதமும் இன்றி உடல் சிதறி தெருக்களில் மடிவதே என்பதை ஹிந்துக்கள் புரிந்து கொள்ள வேண்டும். துரதிர்ஷ்டவசமாக இந்துக்கள் தமிழ்நாட்டிலும் பாரதமெங்கிலும் வகுப்புவாரி பெரும்பான்மையாக இருக்கிறார்களே தவிர அரசியல் பெரும்பான்மையாக இல்லை. அப்படி அரசியல் பெரும்பான்மை சக்தியாக இந்துக்கள் தங்களை ஒருங்கிணைத்தால் ஒழிய இந்துக்கள் இனிவரும் நாட்களில் பெரும் இழப்புகளை ஆதிக்கவாத இஸ்லாமிய பாசிச சக்திகளால் சந்திக்க வேண்டியிருக்கும்.

மதச்சார்பின்மை ஜனநாயகம் மாற்று அரசியல் என வாய் கிழிய பேசுகிறவர்கள் இந்துக்களின் பெரும்பான்மை பலத்தினால்தான் இதெல்லாம் இந்தியாவில் எஞ்சியிருக்கின்றன என்பதை உணர வேண்டும். இந்துக்கள் இனியும் வாளாவிருந்தால் வருங்காலம் இந்த தலைமுறை இந்துக்களை இகழும். இந்துக்கள் ஒருங்கிணைய வேண்டும் அரசியல் வலிமை பெற்று ஆதிக்க அன்னிய மத சக்திகளை இந்த மண்ணிலிருந்து ஜனநாயக ரீதியில் அப்புறப்படுத்த வேண்டும். இந்த தெய்வீக பணியில் தேச சேவையில் நம்மை நாமே இணைத்துக் கொள்வோம். வந்தே மாதரம்! வெற்றி வேல்! வீர வேல்!

அதுவே பாரத அன்னையின் திருவடிகளில் தன் உயிரையே பலிதானமாக்கிய நம் வணக்கத்துக்குரிய தலைவர் திரு.சு.வெள்ளையப்பன் அவர்களின் நினைவுக்கு நாம் செலுத்தும் அஞ்சலியாகும்.

இந்து முன்னணி தலைவர் மதிப்பிற்குரிய திரு.ராம.கோபாலன் அவர்களின் அறிக்கை:

இந்து முன்னணி மாநில செயலாளர் சு. வெள்ளையப்பன் படுகொலைக்குக் காரணமானவர்கள் உடனடியாக கண்டுபிடித்து தண்டிக்கப்பட வேண்டும்!

இந்து முன்னணியின் மாநில செயலாளர் சு. வெள்ளையப்பன், தமிழகம் முழுவதும் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியவர், ஏராளமான ஊழியர் களை உருவாக்கியவர். அவர் வேலூரில் இன்று பட்டப்பகலில் படுகொலை செய்யப்பட்டுள்ளது அதிர்ச்சியையும், சோகத்தையும் அளிக்கிறது. இந்து சமுதாய ஒருங்கிணைப்புப் பணியில் கடந்த 16 ஆண்டுகளாக இந்து முன்னணியின் முழு நேர ஊழியராக பணியாற்றியவர். சங்கரன்கோவிலைச் சேர்ந்த வெள்ளையப்பன் ஜலகண்டேஸ்வர் கோயிலில் சுவாமி பிரதிஷ்டை செய்யப்பட்ட புனர்நிர்மாணப்பணியில் முக்கிய பணியாற்றியவர். தொடர்ந்து அந்த ஆலயத் திருப்பணிக்கு சேவையாற்றி வந்தவர். சமீபத்தில் அறநிலையத்துறை ஜலகண்டேஸ்வரர் ஆலயத்தை எடுத்தத்தை எதிர்த்து தொடர்ந்து போராடங்களை நடத்தி வருபவர்.

சு. வெள்ளையப்பன் பழகுவதற்கு இனிமையான வர், எளிமையானவர். சமுதாயத்திற்கு ஒரு பிரச்னை என்றால் அங்கு இந்து சமுதாயத்தின் பிரதிநிதியாக முதல் நபராக பங்கேற்பவர். நியாயத்தை எடுத்துக் கூறுவார். அத்தகைய நல்ல உள்ளம் படைத்தவரை கொடூர மனம் படைத்தவர்கள் கொன்று குவித்துள்ளார்கள். வேலூரில் தொடர்ந்து படுகொலைகள் நடந்த வண்ணம் உள்ளன.

தமிழகத்தில் அரசியலைச் சார்ந்தவர்கள், அமைப்பு களைச் சார்ந்தவர்கள் நாள்தோறும் படுகொலை செய்யப்படுகிறார்கள். தமிழகம் கொலைக்களமாக மாறி வருவதை எண்ணிப் பார்க்கையில் கவலை அளிக்கிறது.

அரசு இனி கொலைகள் நடக்காது என்று உறுதி அளிக்கும் வகையில் அதன் செயல்பாடு இருக்க வேண்டும். இல்லையேல் நாளைக்கு யாருக்கு வேண்டுமானாலும் எதவும் நடக்கும் என்பது அரசாட்சிக்கு அழகல்ல. தமிழக காவல்துறை புலனாய்வுக்குத் தெரியாமல் இது நடந்திருக்க முடியாது, அல்லது புலானய்வுத் துறை செயலிழந்துவிட்டதா? காவல் துறை புலனாய்வுத் துறையின் ஆலோசனைகளை அலட்சியப்படுத்துகிறதா? காவல்துறையை தனது கட்டுப்பாட்டில் வைத்திருக்கும் தமிழக முதல்வர் இது குறித்து தனி கவனம் செலுத்த வேண்டும் என்று இந்து முன்னணி வலியுறுத்திக் கேட்டுக்கொள்கிறது.

இந்தப் படுகொலை செய்த குற்றவாளிகளை கண்டுபிடித்து, உடனடியாக கைது செய்து தண்டிக்க வேண்டும்.

இந்தப் படுகொலையைக் கண்டித்து தமிழகம் முழுவதும் நாளை அமைதியான முறையிலும், ஜனநாயக வழியிலும் நமது கண்டனத்தைத் தெரிவிக்கும் வகையில் கடையடைப் புக்கு இந்து முன்னணி அழைப்பு விடுக்கிறது. இந்து முன்னணியின் வேண்டுகோளை ஏற்று வணிகர்களும், வியாபாரிகளும், பொதுமக்களும் கடையடைப்புக்கு ஆதரவு தர கேட்டுக்கொள் கிறோம்.

வெள்ளையப்பனின் ஆன்மா நற்கதியடை தமிழகத்தின் அனைத்து ஆலயங்களிலும் மோட்ச தீபம் ஏற்றி கூட்டுப் பிரார்த்தனை செய்யவும் கேட்டுக் கொள்கிறோம்.

23 Replies to “இந்து முன்னணி தலைவர் சு.வெள்ளையப்பன் படுகொலை”

 1. திரு வெள்ளையப்பன் அவர்களுக்கு என் மனப்பூர்வமான அஞ்சலிகள்.

 2. மாவீரர்கள் என்றும் புதைக்கப்படுவதில்லை! விதைக்கப்படுகிறார்கள்.
  “உப்பை தின்றவன் தண்ணீர் குடித்தே ஆகவேண்டும்”.

  அந்த காலம் வரும்வரை காத்திருப்போம்…
  நெஞ்சில் வேதனைகளை பதித்திருப்போம்…

  வெள்ளையப்பன்ஜீ-க்கு வீர வணக்கம்.

 3. ஜெயலலிதா அரசு மீது நம்பிக்கை வைக்க வேண்டாம், அவர் இந்துக்களின் நலனுக்காக எதுவும் செய்துவிட போவதில்லை, ஜெயலலிதாவின் நாற்காலி ஆசையை மென்மையாக கண்டிக்க வேண்டாம், இவருக்கும், கருணாநிதிக்கும், காங்கிரஸ், மற்றும் போலி மதசார்ப்பின்மைவாதிகளுக்கும் எந்த வித்தியாசமும் இல்லை, முலாயம் சிங்க், லாலு போன்றோரும் கங்கையில் குளித்து இந்துக்களாகத்தான் காட்டிக்கொள்கிறார்கள், ஆனால் செய்வது மதவாதிகளுக்கு துதி பாடுவது, திப்பு சுல்தான், ஹைதர் அலி போன்றோருக்கு மணிமண்டபம் அமைத்தல் தொடங்கி இந்த முதல்வர் செய்வது தேச துரோக செயல்களே! ஜெயலலிதா ஒரு தேச துரோகி, இந்து விரோதி, வெளியில்தான் ஜெயலலிதா, உள்ளே பல கருணாநிதிகள் உள்ளனர். இந்துக்களால் ஒதுக்கப்பட வேண்டியவர் ஜெயலலிதாவும்தான், ஜெயலலிதாவை எதிர்ப்பதில் நாம் மென்மையான போக்கை கடைபிடிக்க வேண்டாம்.

 4. வீர வணக்கங்கள்….
  வெள்ளையப்பன்ஜீ-க்கு மனப்பூர்வமான அஞ்சலிகள்…………….

 5. மிகுந்த வேதனை தரும் விஷயம். கோயிலை அறநிலை துறை எடுக்க கூடாது என்று நாம் போராடும் சமயத்தில் இது போன்று நடந்துள்ளது ஆச்சரியமும் மிகுந்த வேதனையும் அளிக்கிறது.

  ஏற்கனவே ஜலகண்டேஸ்வரர் கோயில் கோட்டை உள்ளே நுழைய சில ஜிஹாதி அமைப்புகள் முயற்சி செய்வது நாம் அறிந்ததே…

  வேலூர் அறநிலை துறை இணை ஆணையர் மற்றும் சமந்தப்பட்ட இடத்தில உள்ள அறநிலைத்துறை ஆய்வரும் கூட விசாரிக்க படவேண்டும்.

  இது ஒரு மிகபெரிய கொள்ளை கூட்ட மற்றும் தேச விரோத சக்திகளின் கூட்டமைப்பு செய்த வேலையோ என்ற என்ன தோன்றுகிறது.

  தமிழகத்தை கேரளாவை போன்ற ஒரு நிலைக்கு தள்ள ஆப்ரகாமிய கயவர்கள் முயற்சி செய்கிறார்கள்.

 6. ஒவ்வொரு இந்துவுக்கும், முதல்வர் உட்பட தம்மைச்சுற்றிப்பின்னப்பட்டுவரும் மாய வலை புரியவில்லைபோலிருக்கிறது, விழிப்புணர்வும்,ஒற்றுமையும் நமக்கு வாய்க்கவேண்டும்.

 7. ஹிந்து மக்களே விழித்து கொள்ளுங்கள் இப்போதாவது , வீர வெள்ளைஅப்பனுக்கு வீர வணக்கங்கள்.

 8. சுவாமி விவேகானந்தர் உரைத்தது போல் ‘ஹிந்து ஒருவனுக்கு ஏற்ப்பட்ட துயரம் தனது சகோதரனுக்கு நடந்ததாக நினைத்து எவன் ஒருவனின் மனம் துடிக்குமோ அவன் மட்டுமே ஹிந்து’. அவ்வாறின்றி, ‘காசே கடவுள், காமமே வாழ்க்கை’ என்று வாழ்பவர்கள், நம்மில் அதிகரிதிருப்பதால்தான், பயங்கரவாதிகளும் பிரிவினைவாதிகளும் எந்தவித அச்சமுமின்றி ஹிந்து சமுதாயத்திற்காக வேலை செய்பவர்களை படுகொலை செய்கின்றனர். பிரிவினைவாதிகளிடமிருந்து நமது தேசத்தை காப்பாற்ற, சுவாமி விவேகானந்தர் கூறிய வழியில் நடைபோட இன்றே நாம் ஹிந்துமுன்னனியில் இணைந்து தேச பணி செய்வதே, அன்னாரின் ஆத்மா சாந்தியடைய நாம் செய்யும் அஞ்சலியாகும்.

 9. மானனீய ஸ்ரீ வெள்ளையப்பன் ஜீ அவர்களை இழந்து வாடும் அவர் தம் குடும்பத்தினருக்கும் அவருடன் தோளொடு தோள் கொடுத்து சமூஹ நற்பணி செய்துவந்து அன்னாரை இழந்து தவிக்கும் ஹிந்து முன்னணி கார்யகர்த்தர்களுக்கும் எனது ஆழ்ந்த அனுதாபங்கள்; வீர வணக்கம். வெற்றிவேல் பெருமான் அனைவருக்கும் தேசத்தைக்காக்க மன உறுதி கொடுக்கட்டும்.

  கேரளத்தில் க்றைஸ்தவர்களும் முஸல்மான் களும் கம்யூனிஸ மதத்தவர்களும் மதம் பிடித்து மாகாணத்தை சின்னாபின்னமாக்கி பொழுது விடிந்து பொழுது போனால் வன்முறை என்ற படிக்கு ஆக்கியுள்ளனர். ஆப்ரஹாமிய வன்முறை கேரளத்திலிருந்து அண்மையிலுள்ள மாகாணங்களுக்கும் தீ போல பரவுகிறது.

  கர்நாடகத்தில் மங்களூர். தமிழகத்தில் நாகர்கோவில்,கன்யாகுமரி,கோயம்புத்தூர் போன்ற பகுதிகளில் ஹிந்துக்களுக்கு எதிரான ஆப்ரஹாமிய வன்முறை தலைவிரித்து ஆடுகிறது. ராயவேலூர், ஆம்பூர், வாணியம்பாடி போன்ற ஊர்களில் கிட்டத்தட்ட பாகிஸ்தான் தான்.

  மேல் விஷாரம் ஹிந்துக்கள் இல்லாத ஊராக மாற்றப்பட்டுள்ளது. முஸ்லீம் மதவெறிக்கு ஆளான கீழ் விஷாரத்தில் இருக்கும் வன்னியர்களுக்கு முஸல்மான் களது ஒட்டுப்பொறுக்கும் அரசியல் கட்சிகள் ஏதும் உதவிக்கு வரவில்லை. ஹிந்து இயக்கங்களே தொல்லைக்கு ஆளான கீழ்விஷாரத்து ஹிந்துக்களைக் காத்தது.

  முஸ்லீம் மதவெறியர்களிடம் கையூட்டு பெறும் த்ராவிட மோசடி கும்பல்களில் ஏதேனும் ஒன்றை தொடர்ந்து தேர்ந்தெடுத்து வரும் தமிழக மக்கள் இப்போதாவது விழித்து இந்த த்ராவிட பணவெறி பிசாசுகளை விரட்டினால் தமிழகம் பிழைக்கும்.

 10. நான் பழகியத்தில் இனிமையான,எளிமையான வெள்ளையப்பன் ஜி படுகொலை கண்டிக்க தக்கது. ஹிந்து ஆகிய நாம் ஜாதி இன வேறுபட்டால் பிரிந்து இருப்பதும், மத உணர்வின்றி மிகவும் மெத்தன போக்கோடு இருப்பதும்,இதற்க்கு காரணம்….தன்னை மட்டும் காத்து கொள்வது தற்காப்பு இல்லை ஹிந்து சகோதரர்களே!!!!!!!!!! வேலூர் ஹிந்து

 11. வெள்ளையப்பன் ‘ஜி க்கு வீர வணக்கங்கள் ஹிந்து இயக்கங்களின் செயல் வீரர்களை படு கொலை செய்வது என்பது தொடர் நிகழ்வாகவே உள்ளது இத்தகையக பயங்கரவாதிகளின் மேல் கடுமையான நடவடிக்கை எடுக்கபடுவதில்லை என்பதே நிதர்சனமான உண்மை

 12. ஹிந்துக்கள் ஒற்றுமைபட்டாவ்லோழியா எந்த அரசும் நல்லது செய்யாது. தைரியமாக ஹிந்டுகல்லின் நலன் காப்பாற்ற ச்செயல்பட்டாது.

 13. எதிர்பாராமல் நிரபராதிகளைத் தாக்கும் இஸ்லாத்து பயங்கரவாதத்தைப் பற்றி இந்துக்கள் இனியாவது புரிந்து கொள்ளவேண்டும். வேலூர் பக்கலில் உள்ள ‘விஷாரம்’ எனும் முஸ்லிம்கள் குடியிருக்கும் இடத்திலிருந்துதான் இஸ்லாத்துத் தீவிரவாதிகளால் இக்கொடுஞ்செயல் நடந்திருக்கலாம். நினைத்தாலே ஆத்திரம் பொங்குகிறது. இதற்குக் காரணம் இந்திய அரசாங்கம் இவர்களுக்கு அளிக்கும் அசாதாரண சலுகைகள்தான். வேலியே பயிரை மேய அனுமதிக்கப்படுகிறது. ஜன நாயகம் இந்திய தேசபக்தி இல்லா ஐந்தாம் படைகள் செய்யும் காரியமிது. இனி இந்து தலைவர்கள் தங்கள் ஆட்களுடன்தான் எங்கும் பயணம் செய்ய வேண்டும். இந்துக்களே!! இனியாவது ஒற்றுமையாக ஒன்றாகுங்கள். நம் பெரும்பான்மை இவர்களுக்குக் காட்டவேண்டும்.

 14. நம் தர்மம் காக்க தன்னுயிர் ஈந்த மானனீய ஸ்ரீ வெள்ளையப்பன் ஜி ஆன்மா அமைதிபெற எம் முக்கண் எந்தையை இறைஞ்சுவோம். இந்த தியாகம் ஹிந்து சமூகத்திற்கு வீரத்தினையும், உணர்வையும், ஒற்றுமையையும் வழங்கட்டும்.
  ஓம் த்ரய்ம்பகம் யஜாமஹே சுகந்திம் புஸ்டிவர்த்தனம் உர்வாருகமிவ பந்தனாத்
  ம்ருத்யோர் முக்க்ஷீய மாம்ருதாத் ஓம்.
  ஓம் சாந்தி சாந்தி சாந்தி

 15. ஹிந்து. தலைவர்கள் இனி பாதுகாப்புடன் தன் செல்ல வேண்டும்

 16. இந்து சகோதரர் திரு எம்.சதாசிவம் கூறி உள்ளது போல ஜெயாவையும் நம்பகூடாது கருணாவையும் நம்பகூடாது. இருவரும் ஒரே குட்டையில் ஊரிய மட்டைகள். கருணா ரம்ஜான் போது குல்லாய் அணிந்தால் இந்த பொம்பளை முக்காடு அணிந்து கைகளை விரித்து அல்லாவை வேண்டுகிறார். மனிதநேய(மற்ற) மக்கள் கட்சிக்கு 2 சீட்கள் பெற்று கொடுத்தார். இப்போது என்னாச்சி? கருணாநிதிக்கு ஜண்டா பிடிக்க போய்விட்டான் அந்த தாடிவாலா அண்ணாச்சி!. மேற்சொன்ன இரண்டு தேச துரோகிகளும் பதவி ஆசை பிடித்தவர்கள். அதற்காக எந்த கீழ் தரமான வேலைகளயும் செய்ய தயார். இருவரும் கேடு கெட்ட இழி பிறவிகள். இந்துகளாய் பிறந்து இந்துக்களுக்கே துரோகம் புரியும் துன்மார்கிகள்.

  மூட்டையில் இருந்து சிதறிய நெல்லிக்கனிகள் போன்ற இந்துக்களே!
  வீரம் & விவேகம் இரண்டும் இன்றி வீணாகி போகும் விந்துக்களே!
  உதைக்க உதைக்க உதைபட்டே அவமானப்படும் பந்துக்களே!
  எப்போதும் வாயற்றதுகளாக வாழ்ந்துவரும் ஜந்துக்களே! உங்களைதான்
  இந்துக்களே!

  எப்போதுதான் நீங்கள் திருந்த போகிறீர்கள்? காந்தி உப்பு சத்தியாகிரகம் செய்த நாளிலிருந்து உண்ணும் உணவில் உப்பே போட்டு சாபிடுவதில்லையா இந்த சொரணை கெட்ட இந்து ஜென்மங்கள்?. இவர்களை நினைத்தாலே ஆத்திரம் ஆத்திரமாக வருகிறது. அநியாயமாக ஒரு பிணம் விழுந்துள்ளது. ஒரே ஒரு கட்சிகாரனாவது வாய் திறந்து கண்டிதானா? இதே ஒரு துலுக்கன் வேறு எதோ காரணத்தால் கொலை செய்யப்பட்டு இருந்தால் கூட “காவி தீவிரவாதத்தை கருவறுப்போம்” என்று சின்ன புத்தி சிதம்பரம் சீறி இருப்பான். ” இறந்த முஸ்லிம் தியாகிக்கு அவர் பிறந்த ஊரில் ஒரு மணி மண்டபம் கட்டப்படும் அவர் மனைவிக்கு அரசாங்க வேலை தரப்படும்” என்று கூறி இன்னாள் முதல்வரும் அந்நாள் முதல்தர நடிகையுமான ஜெயா நாடகமாடி இருப்பார். “மதவாதம் தலை தூக்கிவிட்டது. எனவே சொக்கதங்கமான மதசார்பற்ற கட்சியான காங்கிரஸ் கட்சியுடன் கூட்டனி அமைப்போம்” என்று சந்தில் சமாரதனை பாடியிருப்பான் மஞ்சள் துண்டு மகான். “முஸ்லிம்கள் அப்பாவிகள். வெடிகுண்டை பார்த்து இது என்ன எள் உருண்டையா என்று கேட்குமளவுக்கு ஏதுமறியா ஏமாளிகள். சாந்த சொருபியான நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் வழிவந்த முஸ்லிமை படுகொலை செய்த படுபாவிகள் பாஜக மதவாதிகள்தான்” என்று confirm செய்து தீர்ப்பே வழங்கி விடுவார்கள் கம்யூனிஸ்ட் கம்னேட்டிகள். பத்திரிகைகாரர்கள் கேள்வி கேட்டாலும் கேட்காவிட்டாலும் “மதவாதம் வேரோடும் வேரடி மண்ணோடும் அழிக்கப்படவேண்டும்” என்று ஆற்காடு நவாபு ஒரு ஜவாபு (=பதில்) சொல்லுவார்

  இப்படி ஒவ்வொரு தொண்டனும் மடியும் போது தொண்டை கிழிய கத்தினாலும் போலி மதசார்பற்ற பொறுக்கிகளுக்கு பல்லக்கு தூக்கும் தொண்டினை புத்திகெட்ட இந்துக்கள் கடமையே கண்ணாய் செய்வான். ஒரு காலம் வரும் அப்போது இவன் minority ஆக மாறும் அலங்கோலம் வரும் அப்போது துலுக்கனின் துன்பம் கண்டு கலக்கம் வரும். அப்போது வந்து என்ன லாபம்.? “” சட்டி சுட்டதடா கை விட்டதடா புத்தி கெட்டதடா நெஞ்சு தொட்டதடா”” என்று பாட்டு பாடவேண்டியதுதான். அப்போது இந்த கருணாநிதி என்ற சில்லறை பையன் கல்லறையில் நிம்மதியாக நித்திரையில் இருப்பான் அட, இந்து ஜனங்களே! இது வரை நடந்ததற்கு வருந்தமாடீர்களா? இனிமேலாவது மனம் திருந்தமாட்டீர்களா? அட,போங்கப்பா! இவர்களை நினைத்து நினைத்து எனக்கு BP ஏறிவிடும் போலிருக்கிறது.

 17. ஹிந்து சமுதாயத்தின் நலனுக்காக போராடிய ஒரு தன்னலமில்லா ஊழியர் பாரத அன்னையின் திருவடியில் பலிதானம் செய்யப்பட்டுள்ளார். தமிழகத்தில் இது போன்ற வன்முறை வெறியாட்டங்களுக்கு இதுவரை நூற்றுக்கும் மேற்பட்ட ஊழியர்களை ஹிந்து இயக்கங்கள் இழந்துள்ளன. அரசாங்கமோ பாதுகாப்பு அமைப்புக்களோ நம்முடைய சமுதாய நலன் காக்கும் ஊழியர்களை காப்பாற்றுவார்கள் என்று எதிர்பார்த்து இருப்பது எவ்வளவு தூரம் நமக்கு ஆபத்தாக அமையும் என்பதை மீண்டும் ஒரு முறை நமக்கு இந்த சம்பவம் உணர்த்துகிறது. ஹிந்து அமைப்புக்களுடைய செயல்பாட்டுக்கு எதிராக செயல்படும் இயக்கங்களைப் பற்றி சரியானதொரு அணுகுமுறை மற்றும் நடைமுறை திட்டம் நம்மிடம் இருக்க வேண்டியது மிகவும் அவசியம். வன்முறையின் மூலம் ஹிந்து நலன் காக்கும் இயக்கங்களின் செயல்வீரர்கள் பாதிக்கப்படும் நேரத்திலெல்லாம் கூட்டம் போட்டு ஒப்பாரி வைப்பது மட்டுமே நமது இயக்கத்திற்கு நலன் பயக்காது. ஹிந்து சமுதாயத்தின் எதிரிகளை அடையாளம் கண்டு அவர்களது செயல்பாட்டை நுணுக்கமாகக் கண்காணிக்கும் ஒரு ஏற்பாடு மிகவும் அவசியம்.

 18. சசிகலாவை மீண்டும் போயஸ் தோட்டத்தில் நுழைத்ததில் சர்ச் மற்றும் , இஸ்லாமிய சக்திகளின் பங்கு இருக்கலாம் என்று தோன்றுகின்றது .சசிகலா மூலமாகவே இச்சக்திகள் தங்கள் காரியங்களை முடித்துக் கொள்கிறார்களோ என்ற ஐயம் எழுகிறது.

 19. Eelam Tamils also facing well organised Islamic movement in North and east of Sri Lanka.Many Indian politicians and Hindu activists does not understand the gravity of the situation.Eastern province
  which once had 70% Tamil Hindu majority reduced to just 35%.Muslims are being settled in large numbers also in northern province with the help of SL Gov in the name of resettlement(fake).Recent news was there are planning to settle 25000 Muslims in Northern province before the election.I never understood why Indian Hindus never supported Eelam Tamil Hindus.One of the worse feeling in life is
  witnessing traditional home land is being taken away.Tamil traditional areas which has been under
  the Tamils for thousands of years going to be taken away by force with the witness of over a Billion
  Hindus just across 5 miles from Sri Lanka.

 20. மாங்கனி இருக்கும் இடத்தை ஈக்கள் மொய்ப்பது போலவும் money இருப்பவனிடம் மனிதர்கள் சுற்றி சுற்றி வருவது போலவும் வாக்கு வங்கி உள்ளவனிடம் வலம் வந்து சலாம் போடுவது போலவும் எது நடந்தாலும் ஏது நடந்தாலும் உறக்கம் ஒன்றே உயர்வென கருதும் இளிச்ச வாயன் இந்துவிடம் காங்கிரஸ் என்ற அரக்கன் எப்படி இரக்கம் காட்டுவான்? அவனிடம் ஒற்றுமை இருக்கிறதா? ஒரு யானை இறந்துவிட்டால் வாயில்லா மற்ற யானைகளின் கண்களில் கண்ணீர் வழிகிறது. ஒரு விலங்குவிடம் உள்ள உணர்ச்சிகூட இவனிடம் இல்லை. நம் இனத்தை சேர்ந்த ஒருவன் நம் இனத்திற்காக பாடுபடும் ஒருவன் தீவிரவாதிகளால் அநியாயமாக படு கொலை செய்யப்பட்டுள்ளான் அதை பற்றி எந்தவித எண்ணமும் இல்லாமல் கல்லாக மண்ணாக இருக்கிறான். உணர்ச்சியில்லாத ஜடம் கைகால்கள் இயங்கா முடம்.
  நம் இந்த கதிக்கு மூல காரணம் சாதி என்ற சதி தான் . சாதி சனியனுக்கு ஒரு சமாதி கட்ட இந்து பெரியவர்கள் அனைவரும் ஒன்று சேர்ந்து தீர்க்கமான முடிவு ஒன்று எடுத்து ஒற்றுமைக்கு வழிவகுக்க வேண்டும். இந்துக்கள் ஒன்றுபட்டால் பிஜேபி ஆட்சிக்கு வருவதும் சுலபமாகிவிடும். பின் தேச துரோகிகள் துண்டை காணோம் துணியை காணோம் என்று அரசியல் களத்தை விட்டு ஓடிவிடுவார்கள் . கீழ்கண்ட slogan கள் வருகின்ற தேர்தலின் போது சுவரில் எழுத உதவும்.
  1. காங்கிரஸ் கரங்களில் படிந்திருப்பது ஊழல்கறை
  அவர்கள் இருக்கவேண்டிய இடம் புழல்சிறை
  2. மோடி கால ஆட்சி வேண்டுமா?
  ராகு(ல்) கால ஆட்சி வேண்டுமா?
  3. மன மோகன் சிங் சோனியாவின் பினாமி.
  அவரால் அழிந்தது இந்தியாவின் இகானமி
  4. communalism என்றால் மதவாதம்
  communism க்கு அதுதான் அடிநாதம்.
  5. சோனியா காணதுடிப்பது “ரோம்” ராஜ்ஜியம்
  பிஜேபி காண துடிப்பது “ராம்” ராஜ்ஜியம்.
  6. காங்கிரஸ் ஒரு ஊழல் பெருச்சாளி.
  3000 சீக்கியர்களை கொன்ற கொலையாளி.
  7. நம்பாதீர் BJP ஒரு மதவாத கட்சி என்ற rumour ஐ .
  நல்லாட்சி அமைந்திட ஆதரிப்பீர் தாமரை.
  8 உங்களுக்கு தேவை dynasty யா?
  அல்லது மோடியின் dynamic ஆட்சியா?
  9. அயோகியதனதிருக்கு மறுபெயர் அதிமுக
  அராஜகதிருக்கு மறுபெயர் மமக
  நாட்டுப்பற்றுக்கு மறுபெயர் பாஜக
  நோட்டு பற்றுக்கு மறுபெயர் திமுக
  10. congress ஐ தோற்றுவித்தது ஆலன் ஆக்டோவியன் Hume என்ற அன்னியர்.
  இந்திய map னை உருவாக்கியவர் ஆன்விலி (பிரான்ஸ்) என்ற அன்னியர்.
  1000 ஆண்டு நம்மை அடிமைபடுத்தி ஆண்டது இரு அன்னியர்.
  இனியும் நம்மை ஆளவேண்டுமா சோனியா என்ற அன்னியர்.
  11.DMK & ADMK இரண்டும் ஒரே குட்டையில் ஊறிய மட்டை– மறைந்த காமராஜர்.
  அதனால் BJP கே போடுங்கள் உங்கள் உயிரான ஓட்டை — வாழும் காமராஜர்
  12. If you select and elect BJP’s lotus
  That will raise our nation’s status.
  13. If you select and elect BJP
  people will be ever happy.
  14. Look at our Modi’s Gujarath
  Which is in developmental path
  15. Neither minority nor majority
  Only the poor will have priority.
  மேற்கண்டவற்றை யாரேனும் தமிழ் நாடு பிஜேபி க்கு அனுப்பிவைத்தால் நான் நன்றி உடையவனாக இருப்பேன். மேலும் அவர்கள் தேமுதிக, மதிமுக பாமக ஆகியவற்றுடன் கூட்டணி வைக்க பேச்சு வார்த்தை இப்போதே நடத்தலாம்.

  இந்த “தமில்ஹிந்து” வெப்சைட் உரிமையாளர்காரர்கள் “தமிழ்இந்து” என்ற பெயரில் ஒரு வார இதழ் (weekly ) துவக்கி வெப்சைட் ல் வரும் சூப்பர் கட்டுரைகளை வெளியிட வேண்டும். காரணம் வெப்சைட் னை அணைத்து மக்களும் காண்பதில்லை உள்ளங்கைநெல்லிக்கனி . அருமையான கட்டுரைகளை அனைவரும் படிக்க நேர்ந்தால் இந்து மக்கள் வெகுவாக உண்மை உணர்ந்து மனம் மாறி அவர்களிடையே ஒற்றுமை ஏற்படும். அதனால் ஒரு ஒட்டு வங்கி உண்டாகும்.அப்போது கட்சிகள் நம்மை மதிக்கும் நம்மை ஒரு பொருட்டாக எண்ணும் அதை செய்ய இந்த வெப்சைட் முன்வருமா? முயன்றால் முடியாதது ஒன்றுமில்லை “முடியாது” என்பது முட்டாள்களின் அகராதியில் இருக்கும் ஒரு கெட்ட வார்த்தை. ஆனால் இந்த website காரர்கள் அந்த கெட்ட வார்த்தையின் opposite word க்கு சொந்த காரர்கள். ஆகவே விரைவில் “தமிழ் இந்து” வை நாம் எதிர்பார்க்கலாம்.(தேர்தலுக்குள்) நான் சந்தா கட்ட ரெடிங்க அதனால நீங்கள் மேற்படி நற்பணியினை சீக்கிரம் முடிங்க.

 21. 3-7-2013 அன்று “சத்தியம்” என்ற தொ.கா ஒளிவழி (=channel )யில் மழை பெய்ய கோவில்களில் பூஜை ஏற்பாட்டினை “இந்து அறநிலைய துறை” செய்தது மத சார்பின்மைக்கு விரோதமானது. என்ற விவாதம் நடந்தது அதில் இருவர் கலந்துகொண்டனர். விரோதமில்லை என்று வாதாட யாரோ ஒரு “தத்தி”(fool ) வந்திருந்தார் (அந்த ஒளிவழி ஐ கிறிஸ்தவர்கள் நடத்துகிறார்கள் என்று நினைகிறேன்) பொதுவாகவே இந்து மதத்தையும் இந்துக்களையும் அவமானபடுதவேண்டும் என்ற ஒரே நோக்கத்துடன் விவாதங்களில் பங்கேற்க இந்துக்கள் சார்பில் ஒரு “டம்மி” ஆளை அழைத்து அவமானபடுத்தி அனுப்புவதே தொழிலாக கொண்டுள்ளன அணைத்து ஒளிவழிகளுமே. விவாதத்தை நடத்தியவர் “விரோதமில்லை” என்று வாதாட வந்தவரை பார்த்து “என் கேள்விகளுக்கு பதில் சொல்லாமல் மனபாடம் செய்து வந்ததை ஒப்புவிப்பது போல தெரிகிறது” என்று கூறும்போது அவர் “கேக்கபெக்கே” என்று சிரிக்கிறார். எனக்கு வந்த ஆத்திரத்தில் தொ.காட்சியினை உடைத்து விடவேண்டும் போலிருந்தது
  இந்து பக்தர்கள் தரும் உண்டி காணிக்கை மற்றும் சொத்துக்கள் மூலம் கிடைக்கும் வருமானம் ஆகியவற்றை கொண்டு நாட்டின் நன்மைக்காக மழை வேண்டி பூஜை செய்வது சரியா தவறா என்ற விவாதத்திற்கு நான் செல்ல விரும்பவில்லை. ஆனால் அச்செயல் secularism க்கு விரோதமானது என்றால்
  1. 80% இந்துக்களின் வரி பணத்தில் 15% துலுக்கர்கள் மெக்கா செல்ல மான்யம் தருவது ஒரு மதசார்பற்ற நாட்டிற்கு அழகா?
  2 முஸ்லிம்களின் ரம்ஜான் பண்டிகைக்கு 3000 பள்ளிவாசல்களுக்கு 4000 மெட்ரிக் டன் அரிசி தருவது மதசார்பின்மைக்கு அடையாளமா?
  3. மத அடிப்படையில் முஸ்லிம்களுக்கு இட ஒதுக்கீடு தருவது secularism ன் symbol ஆ? (பீடி factory தோல் தொழிற்சாலை நடத்துபவர்கள் அனைவரும் பரம ஏழைகளா?) பொருளாதார அடிபடியில் ஒதுக்கீடு செய்தால் அது communalism ஆ?
  4. கல்வி கூடங்களை நடத்த அவர்களுக்கு சலுகைகள் காட்டுவது மற்றும் முஸ்லிம் மாணவர்களுக்கு மட்டும் கல்வி கடன் வழங்குவது மதசார்பின்மையா?
  5. கோவில்களை மட்டும் அரசாங்கத்தின் பிடியிலும் தேவாலயம் மற்றும் பள்ளிவாசல்களை அவரவர் பிடியிலும் இருப்பது மதசார்பின்மையா?
  6. மதசாரற்ற நாட்டில் மத அடிப்படையில் விடுமுறை விடுவது சரியா?(சுதந்திர தினம் மற்றும் குடியரசு தினம் இவை இரண்டு போதுமே! வேறு ஏதும் வேண்டாம். அரசு அலுவலங்களில் வேண்டுமானால் ஒரு வருடத்திற்கு 30 நாட்கள் casual leave (தற்செயல் விடுப்பு) அனுமதிக்கலாமே.
  7. மதத்தின் அடிப்படையில் minority என்றும் majority என்றும் மக்களை பிரித்து minority கமிஷன் அமைப்பது secularism பேசும் நாட்டில் முறையா? (இவர்கள் மத அடிபடியில் மக்களை பிரித்துவிட்டு பிஜேபி ஐ பார்த்து divisive force என்றும் communal force என்றும் கூறுவது எந்த மனசாட்சி உள்ள மனிதனும் ஏற்கமாட்டான்.)
  8. இந்தியா முழுமைக்கும் முஸ்லிம்கள் Minority என்றால் தனி சலுகை பெற்று ஒரு தனி நாடு போல விளங்கும் காஷ்மீரில் யார் Minority ? அங்கேயும் இந்துகள் தான் majority ஆ? இது ரொம்ப அநியாயம். ஏழை பணக்காரன் என்ற அளவுகோலை பயன்படுத்தாமல் எதற்கு எடுத்தாலும் மதம் ஒன்றையே அளவுகோலாக பயன்படுத்தும் இந்த அரசு மதசார்பற்ற அரசு என்றால் கை கொட்டி சிரிப்பார்கள். ஊரார் சிரிப்பார்கள்.
  மேற்படி எட்டு point களை அந்த விவாதத்தில் பங்கு பெற்ற அந்த “எட்டை”(fool ) சொல்லியிருந்தால் “சபாஷ் சரியான போட்டி” என்று சொல்லமுடியும் விவாதத்தில் பங்குபெற வருவோர் தொ, கா பெட்டியில் வரும் தன முகத்தை தன மனைவிக்கும் தன பேரபிள்ளைகளுக்கும் காட்டி பெருமை பட்டுகொள்ளவே வருகிறார்கள் என்று தெரிகிறது. எனவே இனி எந்த தொ.கா நடத்தும் விவாத நிகழ்ச்சியிலும் பங்கேற்க கூடாது என்று தமிழ் நாடு பிஜேபி முடிவெடுக்கக் வேண்டும். அந்த இழப்பைசரிகட்ட Lotus நியூஸ் டிவியின் MD திரு D . பாரதி மோகனை அணுகி விவாத நிகழ்ச்சி ஒன்றினை தினமும் நடத்த ஏற்பாடு செய்ய கேட்டுகொள்ளுங்கள் அதில் டிவி நிலையத்தார் அனைத்துவிதமான இடக்கு மடக்கான கேள்விகளைகேட்கட்டும் . அதற்கு நறுக் நறுக் என்று பதிலளிக்க திரு H ராஜா, வானதி, தமிழிசை போன்றோரை அழைக்கலாம்.அதனால் மக்கள் நல்லதொரு விளக்கம் பெற்று பிஜேபி பற்றிஒரு சரியான கண்ணோட்டம் பெறுவார்.இப்போதைய நடைமுறையில் பிஜேபி க்கு கெட்ட பெயர்தான் ஏற்படும் என்பதிலே எள்ளளவும் சந்தேகமில்லை. தமிழக பிஜேபி தனது தன்மானத்தை நிலை நாட்ட என் பணிவான வேண்டுகோளை ஏற்று திரு பாரதி மோகனை சந்திப்பார்களா? இல்லை இவனுக்கு வேறுவேலை கிடையாது என்று என்னை நிந்திப்பார்க்ளா? Please என் பேச்சை கேளுங்க சார். அதே போல காங்கிரஸ் MLA (விளவங்கோடு தொகுதி) விஜய தாரணி என்ற கிறிஸ்தவ பொம்பிளை ரௌடி தனக்கு ஒரு இந்து பெயரை வைத்துகொண்டு நெற்றியில் திலகமிட்டு முக்கா கை ரவிக்கையினை அணிந்து டிவி நிகழ்சிகளில் பங்கு பெறுவார். In the debate she would talk as though she is a “know-it-all”
  சக விவாத பங்கேற்பாளர்களை எடுத்தெறிந்து பேசுவார். (தான் ஒரு எம் எல் எ என்ற திமிர் கொழுப்பு ஆணவம்) மற்றவர்கள் பேசும் போது இவர் குறுகிடுவார் ஆனால் இவர் பேசும்போது மட்டும் யாரும் குருகிடலாகாது. இவர் இந்துக்கள் மற்றும் பிஜேபி கட்சி ஆகியவற்றை கேவலபடுத்தி பேசுவதையே தலையாய கடமை என உறுதி பூண்டுள்ளார். Dear Radhakrishnanji , (BJP tamilnadu president)(நாகர்கோயில் கண்டெடுத்த நன்முத்து பிஜேபி யின் விலைமதிப்பற்ற சொத்து) – I request you to be kind enough to pay heed to my humble and simple demand which is for the benefit of our party A good Leader should give patient hearing to party’s cadre. I hope you will take necessary action in this regard as expedious as possible. Thanks in advance.

 22. திரு விஸ்வநாதன் அவர்கள் கூறுவது முற்றிலும் உண்மையே .ஏதோ ஜெயலலிதா கோயிலைச் சுற்றுவதால் மட்டுமே அவர் ஹிந்து தர்மத்தைக் காப்பவர் என்று நினைக்கக் கூடாது . கோயிலுக்குப் போகாமல் கூட இருக்கலாம் .ஆனால் ‘இது எனது ஒப்பற்ற
  மூதாதையரான ஹிந்துக்கள் வாழ்ந்த நாடு ; அவர்கள் ஆயிரம் ஆயிரம் ஆண்டுகளாக சிந்தித்து, வாழ்ந்து ,நமக்குக் கொடுத்த கலாசாரம் ஹிந்து கலாசாரம். ஹிந்து தர்மம் . அது ஜிஹாதிகளாலும் , க்ருசேடர்களாலும் கொஞ்சம் கொஞ்சமாக அழிந்து கொண்டிருக்கிறது; ஆகவே அதைத் தடுத்து நிறுத்த என்ன விலை வேண்டுமானாலும் கொடுப்பேன் . எனது அதிகாரம் , பதவி , இதெல்லாம் ஹிந்து தர்மம் என்ற கடலுக்கு முன் தூசுக்கு சமம் ; விலை மதிப்பில்லா இந்தக் கலாசாரம் உலகத்துக்கே தேவையானது ; இதற்கு ஈடு இணை இல்லை’ என்று பெருமிதம் கொள்பவரே உண்மையான ஹிந்துத்வவாதி

  ‘கடவுளே நான் அடுத்த முறையும் அதற்கு அடுத்த முறையும் முதல்வராக வேண்டும். முடிந்தால் பிரதமராக வேண்டும், என் மீது பெங்களூர் நீதி மன்றத்தில் உள்ள கேஸ் ஒன்றும் இல்லாமல் போகவேண்டும் .அப்படி நடந்தால் உனக்கு என்ன வேண்டுமனாலும் செய்கிறேன்’ என்பதா ஹிந்துத்வம்?.

  ஆகவே ஹிந்துக்களே திமுக. அ திமுக இரண்டையும் நம்பாதீர்கள்.

 23. நம்மாளுங்க எல்லாம் 4 வகை.
  முதல் வகை – TTD சேனல், Sankara டிவி பார்க்கும் வகை. அளவில் ரொம்ப சொற்பம்.
  இரண்டாம் வகை – சன் டிவி, கே டிவி, விஜய் டிவி வகை. அளவில் மிக அதிகம்.
  மூன்றாம் வகை – ஆளும்கட்சிக் காரர்கள் மட்டும் பார்ப்பது – ஜெயா டிவி.
  நான்காம் வகை – இதர சில்லறை சேனல்களை (ராஜ் டிவி, சத்யம் டிவி, Polimer டிவி, மெகா டிவி, வின் டிவி, தமிழன் டிவி, மக்கள் டிவி, ஆசீர்வாதம் டிவி, வெந்த டிவி, வேகாத டிவி) பெரும்பான்மையான மக்கள் பார்ப்பதில்லை.

  இது எதிலுமே வராமல் பாரதிய ஜனதா கட்சிக்கு என்று ஒரு தனியார் தொலைகாட்சி வந்தால் மட்டுமே ஒரு அளவுக்காவது விழிப்புணர்வு கிட்டும். அதுவும் மக்களுக்கு பொழுதுபோக்கு, நகைச்சுவை, இசை சேனல்களை விட சுவாரஸ்யமானதாக இருக்க வேண்டும். திரு விஸ்வநாதன் அவர்கள் கூறியது போல் தமிழ்ஹிந்துவை வார இதழாக நடத்தினால் நல்ல மாற்றத்தை ஓரளவுக்கு கொண்டு வர முடியும்.

  இணையதளத்தின் பயன்பாடு சென்னை மற்றும் புற நகர்ப் பகுதிகளில் மட்டும் இருக்கும் வரை ஒரு உபயோகமும் இல்லை. பெரும்பான்மையில் இளைஞர்கள் மட்டுமே இணையத்தை உபயோகிக்கிறார்கள். அதிலும் முக்கால்வாசி நேரம் வதனப்புத்தகத்தில் ஓடி விடுகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *