20.1% பட்டியலின மக்கள் வாழும் தமிழ்நாட்டில் 1% கூட அந்த மக்களின் வாக்குகளை பெற முடியாத பட்டியலின கட்சிகள்வரை பாஜகவிற்கு பட்டியலின மக்கள் வடமாநில பட்டியலின மக்கள்போல் ஆதவு அளித்துவிடக்கூடாது என்ற நோக்கத்துடன் பல்வேறு பொய் செய்திகளை பரப்பிவருகின்றனர். பட்டியலின மக்களின் விரோதி பாஜக என்று திட்டமிட்டு பிரசாரம் செய்து வருகின்றனர். இதையெல்லாம் முறியடிக்கும்விதமாக தமிழக பட்டியலின மக்கள் பாஜக பக்கம் இருக்கிறார்கள் என்பதை பறைசாற்றவும் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்துகிற மாநாடாகவும் லட்சம்பேர் சங்கமிக்கிற மாநாடாகவும் ஏற்பாடு செய்யப்பட்டு இருக்கிறது. என் சொந்தங்கள் அனைவரும் இந்த மாநாட்டில் பங்கு பெற அன்புடன் அழைக்கிறேன். உங்கள் உதவிகளையும் ஆலோசனைகளையும் எதிர்பார்க்கிறேன்..
View More பாஜக எஸ்சி அணி சமதர்ம எழுச்சி மாநாடு: மே 27, விழுப்புரம்Category: அறிவிப்புகள்
தமிழ்ஹிந்து தளத்திற்கு நாரதர் விருது-2017
இந்து ஊடக அமைப்பான விஸ்வ சம்வாத் கேந்திரம் கடந்த சில வருடங்களாக ஊடகங்களில் ஆக்கபூர்வமாக இந்து சிந்தனையை வளர்ப்பவர்களை கௌரவித்து ’நாரதர் விருதுகளை’ வழங்கி வருகிறார்கள். இவ்வருடம் சென்னை மையம் அளிக்கும் விருதுகளுக்கு சத்யா (துக்ளக்), ஜடாயு (தமிழ்ஹிந்து.காம்) மீனாக்ஷி (மங்கையர் மலர்), பத்மன்ஜி ஆகியோர் தேர்ந்தெடுக்கப் பட்டுள்ளனர். விருது விழா ஜூன் 10, 2017, சனிக்கிழமை மாலை 6 மணிக்கு சென்னை தி.நகரில் நடைபெறுகிறது. அனைவரும் வருக, அழைப்பிதழ் கீழே…
View More தமிழ்ஹிந்து தளத்திற்கு நாரதர் விருது-2017வலம்: புதிய மாத இதழ்
இந்த வருட விஜயதசமி (அக்-11) அன்று முதல் இதழ் வெளிவருகிறது. வரலாறு, அரசியல், கலை, இலக்கியம் உள்ளிட்ட எல்லாத் துறைகளைச் சேர்ந்த ஆழமான விரிவான கட்டுரைகளை வலம் இதழ் தாங்கி நிற்கும். சமரசமின்மை, நேர்மை, நுண்ணிய பார்வையுடன் செயல்படும் ஓர் இதழாக ‘வலம்’ விளங்கும். இதழின் பொறுப்பாசிரியர்கள் அரவிந்தன் நீலகண்டன், ஜடாயு மற்றும் ஹரன் பிரசன்னா. 80 பக்கங்களுடன் கருப்பு -வெள்ளையில் மாதம் தோறும் ‘வலம்’ இதழ் வெளிவரும். இந்த இதழுக்குத் தங்கள் ஆதரவை வழங்குமாறு அன்போடும் பணிவோடும் கேட்டுக்கொள்கிறோம். ஆன்லைன், டிடி/செக் அல்லது வங்கிக்கணக்கு மூலம் இதழுக்கான சந்தாவை செலுத்தலாம்…
View More வலம்: புதிய மாத இதழ்இந்துத்துவ அம்பேத்கர் – நூல்வெளியீட்டு விழா
பாபாசாகேப் அம்பேத்கரை இந்துத்துவ பார்வையில் பார்க்கையில் அவரது இந்துமத விமர்சனத்தை கணக்கில் எடுத்துகொண்டே அவரது இந்துத்துவ ஆதார நிலைபாடுகளை ம.வெங்கடேசன் முன்வைக்கிறார். ஆனால் பாபாசாகேப் அம்பேத்கரை இந்து விரோதியாக காட்டுகிறவர்கள் அவரது ஆதார இந்துத்துவ நிலைபாடுகளை மறைத்தே அவரை இந்துவிரோதியாக காட்டவேண்டியதுள்ளது. இதிலிருந்தே உண்மையான பாபாசாகேப் அம்பேத்கர் யார் என்பதும் அவரது முழுமையான பரிமாணங்கள் என்னென்ன என்பதும் விளங்கும்.
View More இந்துத்துவ அம்பேத்கர் – நூல்வெளியீட்டு விழாசென்னையில் வெ.சா நினைவுக் கூட்டம்: நவ-15, ஞாயிறு
கடந்த மாதம் அக்டோபர்-21 அன்று மறைந்த பெரியவர், கலை இலக்கிய விமர்சகர் வெங்கட் சாமிநாதன் நினைவாக, ஆதாரம் அறக்கட்டளை ஏற்பாடு செய்துள்ள அஞ்சலிக் கூட்டம் சென்னையில் நடைபெறுகிறது. நாள் 15-நவம்பர் 2015 ஞாயிறு காலை 10 மணி. இடம்: கோகலே சாஸ்திரி இன்ஸ்டிட்யூட், மயிலாப்பூர் (அமிர்தாஞ்சன் – விவேகானந்தா கல்லூரி வழியில்). திருப்பூர் கிருஷ்ணன், கீழாம்பூர் சங்கரசுப்பிரமணியன், ஆர்.வெங்கடேஷ், அரவிந்தன் நீலகண்டன், ஜடாயு, இசைக்கவி ரமணன் ஆகியோர் பங்கேற்கின்றனர். அனைவரும் வருக. அழைப்பிதழ் கீழே…
View More சென்னையில் வெ.சா நினைவுக் கூட்டம்: நவ-15, ஞாயிறு“எது கருத்து சுதந்திரம்?” கருத்தரங்கம்: திருச்செங்கோடு, பிப்ரவரி 8
“மாதொருபாகன்” நாவல் தொடர்பான சர்ச்சையை முன்வைத்து, அந்த நாவல் சித்தரிப்புகளின் வரலாற்றுத் தன்மை…
View More “எது கருத்து சுதந்திரம்?” கருத்தரங்கம்: திருச்செங்கோடு, பிப்ரவரி 8சென்னையில் 7வது இந்து ஆன்மீக, சேவைக் கண்காட்சி: 3-9 பிப்ரவரி 2015
சென்னையில் 7வது ஹிந்து, ஆன்மீக சேவைக் கண்காட்சி நேற்று கோலாகலமாகத் தொடங்கியது. இடம்: ஏ.எம்.ஜெயின் கல்லூரி வளாகம், மீனம்பாக்கம், சென்னை.பிப்ரவரி 3ம் நாள் முதல் 9ம் நாள் வரை, தினந்தோறும் காலை 9.30 மணி முதல் இரவு 9 மணி வரை. நூற்றுக் கணக்கான ஆன்மீக, சமூகசேவை அமைப்புகள் பங்கேற்கின்றனர். தமிழ்ஹிந்து இணையதளத்தின் அரங்கும் உண்டு. அனைவரும் வருக !
View More சென்னையில் 7வது இந்து ஆன்மீக, சேவைக் கண்காட்சி: 3-9 பிப்ரவரி 2015திருவாதவூரில் சட்டவிரோதமாக சர்ச் – உடனே அகற்ற வேண்டும்
மதுரை மாவட்டம் மேலூர் அருகில் மாணிக்கவாசகர் பிறந்த திருவாதவூர் உள்ளது. இக்கிராமத்தில் ஒரு கிறிஸ்துவ குடும்பம் கூட கிடையாது. ஆனால் வேண்டுமென்றே உள்நோக்கத்துடன் கிறிஸ்துவ சர்ச் ஒன்றை மாணிக்கவாசகர் கோயில் அருகிலேயே அமைத்துள்ளனர். சர்ச் (கிறிஸ்துவ வழிபாட்டுக்கூடம்) கட்ட அரசு அனுமதி ஏதும் பெறவில்லை. கிராமத்தில் வசித்து வரும் அப்பாவி பொது மக்களை பிரார்த்தனை கூட்டங்களுக்கு அழைத்து கிறிஸ்துவ மதப்பிரச்சாரம் செய்துள்ளனர். மோசடி மதமாற்ற முயற்சிகள் அனைத்தையும் செய்து வந்துள்ளனர். இதன் காரணமாக ஊர்ப்பொது மக்கள் எதிர்ப்பு தெரிவித்து இந்து இயக்கங்களுக்கு தகவல் கொடுத்தனர்… இந்து இயக்கங்கள் எதிர்ப்பு தெரிவித்த காரணத்தால் கிறிஸ்துவ மதப்பிரச்சார கூட்டங்கள் தற்காலிகமாக தடைசெய்யப்பட்டுள்ளது. ஆனால் இன்னும் சர்ச் அப்படியே உள்ளது. இதன் காரணமாக கிறிஸ்துவர்கள் தொடர்ந்து மோசடி மதமாற்ற நடவடிக்கைகளில் ஈடுபடும் வாய்ப்பு உள்ளது… .
View More திருவாதவூரில் சட்டவிரோதமாக சர்ச் – உடனே அகற்ற வேண்டும்சென்னை குண்டு வெடிப்பு பலிதானிகளுக்கு அஞ்சலி
பாரத அன்னையின் பாதங்களில் 8-8-1993 அன்று தம் இன்னுயிர்களை பலிதானமாக்கிய எம் இந்துத்துவ…
View More சென்னை குண்டு வெடிப்பு பலிதானிகளுக்கு அஞ்சலிஆழி பெரிது புத்தக வெளியீட்டு விழா
இன்று (12 ஜூலை 2014) ‘ஆழி பெரிது’ நூல் நண்பர்களின் ஒரு சிறிய…
View More ஆழி பெரிது புத்தக வெளியீட்டு விழா