அர்த்தசாஸ்திரம்: உலகின் முதல் பொருளாதார நூல் – புத்தக அறிமுகம்

செல்வத்தின் அறிவியல் என்று புகழப்படும் அர்த்தசாஸ்திரம் குறித்த மிக எளிமையான அற்புதமான அறிமுகத்தை இந்நூலில் வழங்கியிருக்கிறார் புகழ்பெற்ற வரலாற்றாசிரியர் தாமஸ் டிரவுட்மன். சந்தையை எப்படி நிர்வகிக்கவேண்டும்? வர்த்தகம் எப்படி நடத்தப்படவேண்டும்?
வியாபாரிகளுக்கு இடையில் தோன்றும் போட்டிகளை எப்படிச் சமாளிக்கவேண்டும்? – இப்படி அர்த்தசாஸ்திரம் விவாதிக்கும் ஒவ்வொரு பொருளாதார, அரசியல், ஆட்சி நிர்வாக அம்சமும் இன்றும் நமக்குப் பொருத்தமாக இருக்கின்றன.. இந்திய வர்த்தக வரலாற்றை அறிந்துகொள்ள விரும்பும் அனைவருக்கும் இது ஓர் அத்தியாவசியத் தொடக்க நூல்…

View More அர்த்தசாஸ்திரம்: உலகின் முதல் பொருளாதார நூல் – புத்தக அறிமுகம்

பாகிஸ்தான்: இந்தியப் பிரிவினை – அம்பேத்கரின் நூல் தமிழில்

பாகிஸ்தான் என்ற தனி நாடு தேவையா என்பது குறித்து இந்து தரப்பு வாதங்கள், இஸ்லாமியத் தரப்பு வாதங்கள் எல்லாவற்றையும் விரிவாகச் சொல்லிவிட்டு கடைசியில் பிரிவினைதான் ஒரே வழி என்ற முடிவையும் முன்வைப்பவர், அந்தப் பிரிவினையை எப்படி நடைமுறைப்படுத்தவேண்டும் என்று சொல்லியிருப்பவைதான் மிகவும் முக்கியமானவை. அது தொடர்பாக டாக்டர் அம்பேத்கர் முன்வைத்திருக்கும் யோசனைகள் எல்லாம் ஒரு மாமேதை, ஒரு தீர்க்கதரிசி சொன்ன ஆலோசனைகளாக இருக்கின்றன. சற்று உணர்ச்சி மேலிடச் சொல்வதென்றால், மாபெரும் ரிஷி கண்டு சொன்ன வேத வாக்கியங்கள் போல் இருக்கின்றன..

View More பாகிஸ்தான்: இந்தியப் பிரிவினை – அம்பேத்கரின் நூல் தமிழில்

கேள்விக்கென்ன பதில் – புத்தக அறிமுகம் 

பொதுவாக தொலைக்காட்சி, பத்திரிகைகள் போன்றவற்றில் எடுக்கப்படும் பேட்டிகளில் இடதுசாரி, திராவிட இயக்கம், காங்கிரஸ், இஸ்லாம், கிறிஸ்தவம் போன்றவற்றைச் சேர்ந்த பிரபலமென்றால் பூப்போல் கேள்விகள் கேட்பார்கள். வலதுசாரி பிரபலங்கள் என்றால் முள்ளால் குத்திக் கிழிப்பார்கள்.

View More கேள்விக்கென்ன பதில் – புத்தக அறிமுகம் 

சைவ சமயத்தில் மொழிப்போர்: புத்தக விமரிசனம்

இந்த முக்கியமான நூல் சித்தாந்த பண்டித பூஷணம் ஆ.ஈசுரமூர்த்திப் பிள்ளை (1897-1971) எழுதிய சில நூல்கள் மட்டும் கட்டுரைகளின் நேர்த்தியான தொகுப்பாகும்… சம்ஸ்கிருதமே பாரத நாட்டின் பொதுமொழி; சைவம் என்பது பாரத நாடெங்கும் பரவியுள்ள வேதநெறியில் கிளைத்த சமயமே அன்றி “தமிழர் மதம்” அல்ல என்பதைத் தமிழிலக்கிய ஆதாரங்களிலிருந்தே நிறுவுகிறார்.. 1960ல் வெளிவந்த “நாடும் நவீனரும்” 125 தலைப்புகளின் கீழ் கேள்வி-பதில், விவாதம், கண்டனம், விமர்சனம் என்ற பாணியில் அமைந்துள்ளது. “நவீனர்” என்று ஆசிரியரால் குறிக்கப் படும் சைவர்களை எதிர்த்தரப்பாக்கி விஷயங்கள் அலசப்படுகின்றன…

View More சைவ சமயத்தில் மொழிப்போர்: புத்தக விமரிசனம்

காஷ்மீர் முதல் ஈழம் வரை – புத்தக அறிமுகம்

காஷ்மீர் முதல் யுத்தம், சரஸ்வதி நதி, இந்தியாவில் பிரிட்டிஷ் ஆட்சி, பிரிட்டிஷாரின் ஆட்சிக்கு முன்பான பாரம்பரியக் கல்வி மற்றும் தொழில்நுட்பம், கீழவெண்மணி படுகொலை, மரிச்சபி படுகொலை, சிலைத்திருட்டு, தலித் அரசியல் என இந்திய அரசியல், வரலாற்றுக் களத்தின் முக்கிய விஷயங்கள் அனைத்தையும் பற்றி எழுதப்பட்ட முக்கியமான நூல்களின் சாராம்சமானது இந்தத் தொகுப்பில் இடம் பெற்றுள்ளது…

View More காஷ்மீர் முதல் ஈழம் வரை – புத்தக அறிமுகம்

பாரதம் : நேற்று இன்று நாளை – புத்தக அறிமுகம்

நூலாசிரியர் B.R.மகாதேவன் எழுதியுள்ள முன்னுரை: பிரிட்டிஷார் இந்துஸ்தானில் கால்பதித்தபோது இங்கு கல்வி, மருத்துவம்,…

View More பாரதம் : நேற்று இன்று நாளை – புத்தக அறிமுகம்

வேதகால பாரதம் – புத்தக அறிமுகம்

சுதந்தரம் கிடைத்த காலகட்டத்தில் பாளாசாஸ்த்ரி ஹரிதாஸ் மராத்தியில் எழுதிய புத்தகம். தமிழில் B.R.மகாதேவன் மொழிபெயர்ப்பில் காஞ்சி காமகோடி பீடாதிபதிகள் ஆசியுரையுடன் வெளிவருகிறது… எதிர்கால இந்தியா எந்த விழுமியங்களின் அடிப்படையில் கட்டமைக்கப்படவேண்டும்? தொடர்ச்சியான தாக்குதல்களை மீறியும் அந்த ஆன்மா தன்னைத் தற்காத்துக் கொண்டு புத்துணர்ச்சியுடன் மீண்டெழுந்தது எப்படி? அந்த அடிப்படையில் வேத கால பாரதத்தின் தெளிவான அழுத்தமான சித்திரத்தை இந்தப் புத்தகம் மீட்டுருவாக்கித் தந்திருக்கிறது.. நம் முன்னோர்கள் வாழ்ந்த நம் கடந்த காலம் என்பது கை நழுவிப் போன பொற்காலம் மட்டுமல்ல;
அதுவே
நாம் சென்றடையவேண்டிய பொன்னுலகமும் கூட…

View More வேதகால பாரதம் – புத்தக அறிமுகம்

திருவள்ளுவர் – ஒரு விரிவான வரலாற்றுத் தேடல் : புத்தக அறிமுகம்

அறிவியலாளர்கள் குறைவாகவும், ஆர்வலர்கள் அதிகமாகவும் குறள் ஆராய்ச்சியில் இறங்கியதால் இன்றும் குழப்பம் தொடர்கிறது. திருவள்ளுவரின் காலம், ஜாதி, சமயம், பல்வேறு குறட்பாக்கள் எடுத்தாளும் நூல்கள், கருத்துகள், சர்ச்சைகள் என பல கோணங்களிலிருந்தும் வள்ளுவனையும் குறளையும் ஆராய்ந்து தொகுத்து எழுதப்பட்டுள்ள நூல் இது. நூலாசிரியர் ஜனனி ரமேஷ் மிகுந்த முயற்சியெடுத்து, பாடுபட்டு இதை உருவாக்கியிருக்கிறார். திருக்குறள் ஆர்வலர்கள் கட்டாயம் வைத்திருக்க வேண்டிய நூல் இது.

View More திருவள்ளுவர் – ஒரு விரிவான வரலாற்றுத் தேடல் : புத்தக அறிமுகம்
பாரத வரலாற்றின் ஆறு பொற்காலங்கள்

வீர சாவர்க்கரின் “பாரத வரலாற்றின் ஆறு பொற்காலங்கள்” – ஓர் அறிமுகம்

“பாரத வரலாற்றின் ஆறு பொற்காலங்கள்” – வீர சாவர்க்கர், தமிழில் பத்மன். இந்த…

View More வீர சாவர்க்கரின் “பாரத வரலாற்றின் ஆறு பொற்காலங்கள்” – ஓர் அறிமுகம்

ரகமியின் வீர வாஞ்சி: மறுபதிப்பு

தமிழ்நாட்டின் நினைவிலேயே ஏறக்குறைய விலகிவிட்டிருந்த “திருநெல்வேலிப் புரட்சி”யையும் அதன் முக்கியப்புள்ளியான வாஞ்சிந்தாதனின் வீர வரலாற்றையும் குறித்து பல்லாண்டு கால உழைப்பைச் செலுத்தி, ஆதாரங்களைத் திரட்டி அதன் அடிப்படையில் மிகச்சொற்பமான புனைவுத்தன்மை சேர்த்து ரகமி எழுதிய நூல் இது. அச்சில் இல்லாதிருந்த இந்த நூலை, இந்த சுதந்திரப் பவள விழா ஆண்டில் பாரதி நூலகம், மறுபதிப்பு செய்துள்ளது. அதே பழைய எழுத்துருவில், படங்களுடன் சேர்த்து வெளியிருப்பது மிகச் சிறப்பு..

View More ரகமியின் வீர வாஞ்சி: மறுபதிப்பு