சந்திரயான்-3 மென்மையான தரையிறக்கம் (ஃசாப்ட் லேண்டிங்) செய்யும் அந்த தருணத்தை நேற்று இந்தியா முழுவதும் பார்த்து பரவசப் பட்டார்கள். இதுவே ஒரு சாதனையாக சொல்லலாம்.. சில அடிப்படையைப் புரிந்துகொண்டால் சந்திரயானை நன்கு அனுபவிக்கலாம். இந்தக் கட்டுரையின் நோக்கமும் அதுவே… மேலே செல்லும்போது, அதன் உள் இருக்கும் எரிபொருள் குறைவாகி, புவி ஈர்ப்பு மாறும். அப்போது அதன் வலிமையைச் சரியாகக் கணக்கிட்டு அதைக் கீழே இருந்து சரி செய்ய ஆணை பிறப்பிக்க வேண்டும்… கவருக்குள் இருக்கும் இன்னொரு முதல் கவருக்கு பேலோட் அதற்குள் இருக்கும் இன்னொரு கவர் அதற்கு பேலோட்…. இப்படி. சந்திரயான்விலும் இப்படித்தான் பல பேலோட் இருக்கிறது… நாம் வெள்ளையரைப் பார்த்தால் நம்மைவிட அவர்கள் ஒரு படி மேலே என்ற மனப்பான்மை நம்மையும் அறியாமல் நம்மிடம் இருக்கும். கடந்த சில வருடங்களாக நம் பாரதப் பிரதமர் மோடியின் ஆட்சியில் அந்த மனப்பான்மை படிப்படியாகக் குறைந்து வருகிறது. நேற்று நிலவை மென்மையாக முத்தமிட்ட போது அந்த மனப்பான்மை முழுவதும் மறைந்து ’மதி நிறைந்த நன்னாளானது’….
View More சந்திரயான் – கோல் முதல் கோள் வரை..Author: சுஜாதா தேசிகன்
பதம் பிரித்த திவ்ய பிரபந்தம் – இரண்டாம் பதிப்பு
பொன் கிடைத்தவன், அதை உருக்கி மார்பில் அணிந்துகொள்வான். பெருமாளும் அப்படியே. ஆழ்வார் பாசுரங்களைப் பாடினால் தானும் உருகி, உங்களையும் உருக்கி உங்களைத் தன் மார்பில் வைத்துக்கொள்வான்.. முதல் பதிப்பை உபயோகித்தவர்கள் சொன்ன கருத்துக்களை நினைவில் கொண்டு, புத்தகத்தை மேலும் செம்மைப்படுத்தி இரண்டாம் பதிப்பு வெளிவர இருக்கிறது. புத்தகம் பற்றிய விபரம் மற்றும் அடிக்கடி கேட்கப்படும் கேள்விகளைக் கீழே தந்துள்ளேன்…
View More பதம் பிரித்த திவ்ய பிரபந்தம் – இரண்டாம் பதிப்புமெய்யனான குலசேகராழ்வார்
ஒரு ஸ்ரீவைஷ்ணவன் மற்றொரு ஸ்ரீவைஷ்ணவன் காலில் விழ வேண்டும். விழும் போது நடுவில் பெருமாள் இருக்கிறார் என்று எண்ணம் வர வேண்டும். இப்படி அடியார்களுடன் பழகி அவர்களை வணங்கினால் தான் தான் பரமபதத்துக்கு சென்றால் சுலபமாக இருக்குமாம்.. திருவேங்கடத்தில் ஒரு ஏரியில் வாழும் நாரையாகப் பிறக்க கடவேன் என்கிறார். பிறகு அங்கே இருக்கும் சுனையில் மீனாகப் பிறக்க வேண்டும்; பொன்வட்டில் பிடிப்பவனாகப் பிறக்க வேண்டும் ; செண்பக மரமாக என்று அடுக்கிக்கொண்டு போகிறார் ஆழ்வார். ஆனால் இவை எல்லாம் கொஞ்சம் தள்ளியே இருக்கிறது. எல்லாவற்றிருக்கும் ஏதோ ஒரு குறை இருக்கவே செய்கிறது. ஆழ்வார் யோசித்தார். ’கண்ணா இரண்டு லட்டு தின்ன ஆசையா’ மாதிரி படியாய் கிடக்கிறேன் இன்று கோரிக்கை வைக்கிறார். அடியார்கள் அதன் மீது ஏறிச் செல்வார்கள், அதனால் அடியார்களின் பாத தூளியும் கிடைக்கும் அதே சமயம் பெருமாளின் “உன் அடிக்கீழ் அமர்ந்து புகுந்தேனே” என்றும் இருக்கலாம்… படி என்பது ஒரு கல் அது பள்ளியில் படித்த மாதிரி ஒரு அறிவில்லாத non living thing. அசேதனம். “பவளவாய் காண்பேனே” என்கிறார். படி எப்படிப் பார்க்க முடியும் என்று உங்கள் மனதில் தோன்றலாம்…
View More மெய்யனான குலசேகராழ்வார்இரண்டு திருநட்சத்திரங்கள், இரண்டு பெண்கள் – ஓர் நெறி
மழை மேலும் அடித்தது. அட்டோவை முழுவதும் மூடி இருட்டாக்கினார். உள்ளே பீடி வாசனை அடித்தது. வயல், இருட்டு, மழை ஆட்டோ வெளிச்சத்தில் என்னைப் பத்திரமாக திருநகரிக்கு அழைத்துச் சென்றார்… “வெளியூருக்குச் சென்றால் இன்னும் கொஞ்சம் அதிகமாகக் கிடைக்கும்… ஆனால் இங்கேயே இருக்கிறேன். ஆழ்வார் இங்கே தான் இருக்கிறார் இல்லையா ?” அவளிடம் விடைபெற்றுக்கொண்டு கோயிலை விட்டு வெளியே வந்தேன். நல்ல மழை. நனைந்துகொண்டு நடக்க ஆரம்பித்த போது “சாமி…” என்று ஒரு குரல் கேட்டுத் திரும்பி பார்த்தேன். அவள் தான்… “என் நட்சத்திரமும் கார்த்திகையில் ரோகிணி தான்” ஆழ்வார் நட்சத்திரம் தான் என்றாள். . சிரிப்பு மாறாமல். அடுத்த பால பாடம் “பேராசையும் கபடமும் இல்லாமல் இருக்க வேண்டும்”….
View More இரண்டு திருநட்சத்திரங்கள், இரண்டு பெண்கள் – ஓர் நெறிவாத்சல்யம்: மாடு மேய்க்கும் கண்ணா !
‘ஹாய், ஊ’ என்று நாம் கூப்பிடுவது போலக் கண்ணன் மாடுகளைக் கூப்பிட மாட்டான். கண்ணன் எல்லாப் பசுக்களுக்கு பெயர் வைத்துத் தான் கூப்பிடுவான். கண்ணன் பெயர் சொல்லிக் கூப்பிடும் போது அவை வாலை ஆட்டிக்கொண்டு வருமாம். ”இனிது மறித்து நீர் ஊட்டி” என்கிறாள் ஆண்டாள்… போன வருடம் அக்டோபர் மாதம் பிருந்தாவன், மதுரா, துவாரகா என்று யாத்திரை சென்ற போது எல்லா இடங்களிலும் ஒன்றைக் கவனித்தேன். அது பசுக்களை தெய்வமாகவே பாவிக்கிறார்கள். சாலை ஓரங்களில் பசுக்களுக்கு கழணீர் தொட்டிகள் நிறையக் கட்டியுள்ளார்கள். பல இடங்களில் காய்ந்த புல், தழைகளைப் பெரிய மிஷின் வைத்து பொடியாக்கி பசுக்களுக்கு மூட்டை மூட்டையாகக் கட்டிவைத்துள்ளார்கள்….
View More வாத்சல்யம்: மாடு மேய்க்கும் கண்ணா !பக்தி ஓர் எளிய அறிமுகம் – 4
பெருமாளை “நீ அப்பேர் பட்டவன், இப்பேர் பட்டவன்” என்று சும்மா புகழ்ந்து அன்பு செலுத்துவது கடினம்; செயற்கைத்தனமும் பொய்மையும் கலந்துவிடும். அதே பெருமாளை தன் குழந்தையாக, தன் காதலியாக பாவித்தால் சுலபமாக அன்பு செலுத்த முடியும். அதனால்தான் ஆழ்வார்கள்…
View More பக்தி ஓர் எளிய அறிமுகம் – 4பக்தி ஓர் எளிய அறிமுகம் – 3
பக்தனுடைய சம்பந்தம் பெருமாளுடைய சம்பந்தத்தை விட பெருமை வாய்ந்தது. அதைப் பற்றி உயர்வாக பல ஆழ்வார் பாடல்களில் எடுத்துக்காட்ட முடியும். ஆனால் கூட்டம் இருக்கும்போது நமக்கு அவை நினைவுக்கு வருவதில்லை, வீட்டில் படித்ததைக் கோயில் வரிசையில் மறந்துவிடுவதுடன், ஒருவரை ஒருவர் அடித்துக்கொள்கிறோம்.
View More பக்தி ஓர் எளிய அறிமுகம் – 3பக்தி ஓர் எளிய அறிமுகம் – 2
“துறவு என்பது ஒரு வெளிவேஷமல்ல அது உள்ளத்தில் நிறைவேற வேண்டிய ஒரு வெற்றியாகும். ஆயினும் நாம் உலகத்தில் பார்ப்பதென்ன? மழித்தலும் நீட்டலும் மற்ற வெளிவேஷங்கள் தான். உள்ளத்தில் எரியும் ஆசைகளைத் தணிக்காமல் இந்த வெளிவேஷங்களினால் என்ன பயன்?
View More பக்தி ஓர் எளிய அறிமுகம் – 2பக்தி – ஓர் எளிய அறிமுகம்: பாகம் 1
அந்தச் செருப்புத் தைக்கும் தொழிலாளி, “இதில் என்ன விந்தை? ஒரு பெரிய ஆலமரத்தை சின்ன விதையில் அடக்கியவர், பிரபஞ்சத்தை தன் வாயில் காண்பித்தவர், அவருக்கு யானையை ஊசியில் நுழைப்பது என்ன பெரிய விஷயமா?” என்று பதில் சொன்னார்… பக்திக்கு அறிவு தேவையில்லை. வேறு என்னதான் தேவை என்று கேட்கலாம்; உணர்வு. உணர்வு மட்டும்தான் தேவை. உணர்வு வர நமக்குத் தேவை நம்பிக்கை. கேள்வி கேட்காத நம்பிக்கை.
View More பக்தி – ஓர் எளிய அறிமுகம்: பாகம் 1