தாமிரபரணி புஷ்கரம்: தடை போடுகிறதா தமிழ்நாடு அரசு?

இந்த நிகழ்வானது பாரத நாடெங்கும் தொடர்ந்து நடந்து வரும் பல்வேறு புனிதநீராடல் விழாக்களிலிருந்து எந்த வகையிலும் வேறுபட்டதல்ல.. இந்த அனைத்து மாநிலங்களிலும் சம்பந்தப்பட்ட அரசுத்துறைகள் கோயில் நிர்வாகங்கள், ஆன்மீக அமைப்புகள கூடிப் பேசி பரஸ்பர ஒத்துழைப்புடன் இந்த விழாக்கள் நடந்தேறுகின்றன. முதலமைச்சர்களே கூட கலந்து கொள்கிறார்கள். அத்தகைய நல்ல முன்னுதாரணத்தை கடந்த வருடம் காவேரி புஷ்கரத்தின் போது தமிழ்நாடு அரசும் கடைப்பிடித்தது. இப்போது என்ன ஆயிற்று?.. “குறுக்குத்துறை சுப்பிரமணியசுவாமி கோயிலில் அதிகமான பக்தர்கள் செல்ல பாதைவசதி இல்லை; இடவசதியும் இல்லை” என்று வெட்கமில்லாமல் எழுதுகிறார் ஒரு அரசு அதிகாரி. 1990களில் கூட கோயிலுக்கு முன்பாக மனதைக் கொள்ளை கொள்ளும் மணல்மேடு இருந்தது. அதனை முழுவதுமாகத் தோண்டி மணல் கொள்ளையர்கள் அழித்த பிறகு, இப்போது சேறும் சகதியும் முட்புதர்களும் பரவிய குப்பை மேடாக ஆகி விட்டிருக்கிறது. அட, இந்த விழாவை முன்னிட்டாவது அதைத் தூய்மை செய்து பயன்பாட்டுக்கு ஏற்றபடி ஆக்கலாம் என்று இந்த ஆணையருக்கு புத்தி போகவில்லை. அரசின் கையாலகாத் தனத்தை முரசறைவது தான் அவருக்குத் தெரிந்திருக்கிறது…

View More தாமிரபரணி புஷ்கரம்: தடை போடுகிறதா தமிழ்நாடு அரசு?

ஆங்கிலப் புத்தாண்டும் ஆலய வழிபாடும்

ஜனவரி முதல் தேதியன்று கோவில்களைத் திறந்து வைத்து, நள்ளிரவு பூஜைகள் செய்யப்பட்டுப் பொதுமக்கள் கடவுள் தரிசனம் செய்வது இந்தியாவில் பல கோவில்களில் நடைமுறையில் உள்ளது. இது, வேத நாகரிகத்திற்கும், ஆகம விதிகளுக்கும், ஹிந்து கலாச்சாரத்திற்கும் விரோதமான செயலாகும். ஆயினும் ஹிந்துக் கோவில்கள் பெரும்பாலும் அரசுகளின் கட்டுப்பாட்டில் இருப்பதால், அரசுகளின் அற்நிலையத்துறைகள் இந்த வழக்கத்தைக் கடைப்பிடித்து வருகின்றன. ஹிந்து மக்களும் இதன் விபரீதத்தைப் புரிந்துகொள்ளாமல் ஆங்கிலப் புத்தாண்டு பிறக்கும் நடுநிசி நேரத்தில் கோவில்களுக்கு வந்து, வரிசையில் நின்று தரிசனம் செய்கின்றனர். ஆனால் விவரம் அறிந்த ஹிந்துக்களும், ஹிந்து அமைப்புகளும், மிகவும் வருத்தமுற்று இந்த வழக்கத்திற்கு எதிராகக் கருத்துக்களைத் தெரிவித்து வருகின்றனர்.. பிரச்சாரம் செய்து விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகின்றனர். ஆயினும் வருமானத்தை மட்டுமே குறிக்கோளாகக் கொண்டு இயங்கும் அரசு அறநிலையத்துறைகள், ஆகம விதிகளைப் புறந்தள்ளி, ஆங்கிலப் புத்தாண்டைக் கோவில்களில் கொண்டாடும் வழக்கத்தைக் கடைப்பிடிக்கின்றனர்….

View More ஆங்கிலப் புத்தாண்டும் ஆலய வழிபாடும்

சுப்பிரமணிய புஜங்கம்

என் சந்நிதிக்கு வந்து யார் என்னை வணங்குகிறார்களோ அவர்களின் தீவினைகள் கடலலைகள் அழிதல்போல் அழிந்துபடும். ஆகவே என்முன் வாருங்கள்,’ என உணர்த்துவது போலத் திருச்செந்தூர்க் கடலலைகள் வந்துவந்தழியும். அந்தச் சீரலைவாய்க் குமரனை என் மனதில் வைத்து தியானிக்கிறேன்…. உயிர்மங்கும்பொழுதில் உனது தாள்களை நினைக்கவும் சக்தியற்றவனாகி விடுவேன். ஓ செந்திலாய் எனக்கூறவும் இயலாதவனாகி விடுவேன். கைகளைக் குவிக்க இயலாது. அப்போது நீ என்னைக் கைவிடலாகாது. இப்போதே நான் உனக்கு அடைக்கலம் என்று கூறிக்கொள்கிறேன்…

View More சுப்பிரமணிய புஜங்கம்

ஏன் இந்துசமயப் பண்டிகைகளைப் பழிக்கிறார்கள்?

ஞாயிறு, பக்ரி-ஈத், ரம்சான் போன்ற சமயப்பண்டிகைகளின்போது, அனைத்துச் சமயத்தோரும், சமயமறுப்பாளரும் ஒன்றுகூடி, நமது கிறித்தவ, இஸ்லாமிய உடன்பிறப்புகளை வாழ்த்துகிறார்கள்.  இப்படி வாழ்த்துவது சமயநல்லிணக்கத்தை ஏற்படுத்தும் பாராட்டத்தகுந்த  ஒரு நற்செயலே ஆகும்… ஆயினும், இந்துக்களின் பண்டிகை எனில் [வருடப்பிறப்பு, சிவராத்திரி, தீபாவளி, கோகுலாஷ்டமி, பிள்ளையார் சதுர்த்தி, இன்ன பிற] அப்பண்டிகை ஏன் கொண்டாடப்படக்கூடாது என்று பெரிதாக வாதங்கள் கிளம்புகின்றன….

View More ஏன் இந்துசமயப் பண்டிகைகளைப் பழிக்கிறார்கள்?

பாதுகாப்பான தீபாவளியே ஆனந்தமான தீபாவளி !

ஒரு பட்டாசினை பற்றவைக்கும்போது கை மற்றும் உடம்பின் எந்த பாகமும் பட்டாசின் அருகில் இருப்பது நல்லது அல்ல. ஒரு பட்டாசினை நீங்கள் பற்ற வைக்கும்போது உங்கள் கண்ணை கவசமாக பாதுகாக்கும்விதமாக பாதுகாப்புக் கண்ணாடி அணிந்து கொள்வது நல்லது… எதிர்பாராதவிதமாக பட்டாசினால் நெருப்புக் காயம் பட்டுவிட்டால் உடனடியாக காயம் பட்ட இடத்தை தண்ணீரில் நனைக்க வேண்டும். தீக்காயம் பட்ட இடம் எரிச்சல் அடங்கிக் குளிரும். முகத்தில் காயம் ஏற்பட்டு கண்ணிலும் காயம் ஏற்பட்டுவிட்டால், முகத்தையும் கண்ணையும் தண்ணீர் விட்டு கழுவவே கூடாது.சுத்தமான துணியைக் கொண்டு முகத்தை லேசாக மூடி உடனடியாக மருத்துவரிடம் காண்பிக்க வேண்டும்….

View More பாதுகாப்பான தீபாவளியே ஆனந்தமான தீபாவளி !

தீபாவளிப் பட்டாசுக்கு எதிரான பிரசாரங்கள்: ஒரு பதிலடி

பட்டாசு வெடிப்பதால் சுற்றுப்புறச் சூழல் நிச்சயம் மாசடைந்து போய்விடாது. ஊர் முழுக்க திரியும் கார்களால், லாரிகளால், குப்பைகளால் வராத மாசு, ஒரே ஒரு நாள் பட்டாசு வெடிப்பதால் வந்துவிடாது. பட்டாசு வெடிக்கவேண்டுமா வேண்டாமா என்பதை முடிவு செய்யவேண்டியது ஹிந்து மத எதிரிகள் அல்ல. ஹிந்து மதத்தின் ஆதரவாளர்களே அதை முடிவு செய்யவேண்டும்… தெருவோரத்து நாய்க்கு ஒரு பிஸ்கட்டை வாழ்நாளில் போடாத கூட்டம்தான், ஹிந்துக்கள் பட்டாசு வெடிக்கும்போது பறவைகளுக்கும் நாய்க்கும் பொங்கிக்கொண்டு வருகிறது. மாட்டுக்கறி உண்டால் மாடு செத்துப் போகும் என்பதைப் பற்றி யோசிக்காதவர்கள்தான் நாய்க்கும் பறவைக்கும் வெடிக்கு எதிராகப் பரிந்துகொண்டு வருகிறார்கள். இந்த இரட்டைத்தனமெல்லாம் இது ஹிந்துப் பண்டிகை என்பதால் மட்டுமே….

View More தீபாவளிப் பட்டாசுக்கு எதிரான பிரசாரங்கள்: ஒரு பதிலடி

தேவிக்குந்த நவராத்திரி — 1

வழக்கமான புலித்தோலும், பாம்பணிகளும் இல்லாமல், மல்லிகை மலர்மாலைகளும் வாசனைத்திரவியங்களும் அணிந்து பேரழகனாகக் காட்சியளிக்கிறார் எம்பெருமான்.
தேவாதிதேவன் பல்லக்கில் பவனிவருவதனால் வேதவிற்பன்னர்கள் வேதம், ருத்ரம் முதலியனவற்றை ஓதுகின்றனர்; பூ, பழம் ஆகிய நைவேத்தியங்கள் அடியார்களால் படைக்கப்படுகின்றன. ஆனால், ஈசனின் கவனம் இவை ஒன்றிலுமே இல்லை. அவர் வேறெதிலோ கருத்தைச் செலுத்தியபடி எங்கோ நோக்கியுள்ளார். ஏன் என்னஆயிற்றாம்? யாரும் இதை உணரவில்லை. கூட்டத்தில் ஒருவரே உணர்ந்து கொண்டார். ‘எம்பிரான் உள்ளம் அழகின் சிகரமான தன் மனையாள் பார்வதியிடம் சென்றுவிட்டது. அவளைச் சந்தித்து ஆசையுடன் அளவளாவும் ஆவலில் ஐயன் விரைந்து கொண்டிருக்கிறார்’ என்கிறார் அந்த அடியார்…

View More தேவிக்குந்த நவராத்திரி — 1

ஜல்லிக்கட்டு: போராட்டக்களம் அளித்த படிப்பினை

ஜல்லிக்கட்டு மீதான தடையை நீக்கக் கோரி தமிழகத்தில் நடத்தப்பட்ட வரலாறு காணாத போராட்டம் அதன் இலக்கை எட்டிவிட்டது. ஜனநாயகத்தில் மக்கள் சக்தியே மதிப்பு மிக்கது- இறுதியானது என்பதும், சட்டங்களுக்காக மக்கள் அல்ல- மக்களுக்காகவே சட்டங்கள் உருவாக்கப்படுகின்றன என்பதும் நிலைநாட்டப்பட்டிருக்கின்றன. ஆனால், இந்தப் போராட்டக் களத்தில் இடையிடையே ஒலித்த தேச விரோத கோஷங்களும், மத்திய அரசுக்கு எதிரான முழக்கங்களும், இந்தப் போராட்டம் குறித்த மீள்பார்வையை அவசியமாக்கியுள்ளன.

View More ஜல்லிக்கட்டு: போராட்டக்களம் அளித்த படிப்பினை

மார்கழிமாதத் திருவாதிரை நாள் வரப் போகுதையே

பெரியோர்கள் பிறவாமையை வேண்ட, அப்பர் பெருமான் பிறப்புக்கு அஞ்சாமல், தில்லைத் திருக்கூத்தினைக் காணும் பேறு கிட்டுமாயின் மனித்தப் பிறவியும் வேண்டுவதே என்றார். இடையில் அப்பர் பெருமானுக்கு ஒரு ஐயம் வந்தது. தில்லைத் தரிசனம் பிறவியைக் கொடுக்குமோ? தில்லைச் சிற்றம்பலம் இப்பிறவியில் உலக வாழ்க்கைக்கு இன்றியமையாது வேண்டிய அன்னம் (சோறு) முதலிய பொருள்களைக் கொடுக்கும். மறுமையில் பொன்னுலகு (சுவர்க்கம்) முதலிய பதங்களையும் மீட்டும் பிறவி எடுக்காத வீட்டுலகையும் தரும். என்றாலும், இந்தப் பூவுலகில் என் அன்பு மேலும் மேலும் பெருகி இன்புறுவதற்கு ஏதுவாகத் தில்லையம்பலக் கூத்தினைத் தரிசிப்பதற்குப் பிறவியைத் தருமோ? எனக் கேட்கின்றார்…

View More மார்கழிமாதத் திருவாதிரை நாள் வரப் போகுதையே

அரிசோனா ஆனைமுகன் ஆலயப் பிள்ளையார் சதுர்த்தி பிரம்மோத்சவம்

ஊர்திக்குமுன்னே பலர் முழக்கமிட்டபடி ஆனந்தக்கூத் தாடியவாறே முன்செல்ல, “ஊர்தியைப் பார்த்தவாறு நாம் ஏன் செல்லவேண்டும்? நமது ஆடும் அடியார்களின் ஆட்டத்தை இரசிப்போம்,” என்பதுபோல, பேருருவப் பிள்ளையார் செல்லும் திசையை நோக்காது, தன்னைத் தொடர்பவர்களைக் கண்ணுற்றவாறே அமர்ந்திருந்தது தனிச்சிறப்பாக அமைந்தது. ஊர்வலம் முடிந்ததும், பேருருவப் பிள்ளையார் தனது வழக்கமான இடத்திற்குச் சென்றார். அவரை மீண்டும் காண இன்னும் ஓராண்டு காத்திருக்கவேண்டும் என்பதால், அன்றுமட்டும், தன்னிடத்தில் அடியார்கள் தன்னைக் காணட்டும் என்பதுபோல அவரது இல்லம் அன்றுமட்டும் திறந்துவைக்கப்பட்டது

View More அரிசோனா ஆனைமுகன் ஆலயப் பிள்ளையார் சதுர்த்தி பிரம்மோத்சவம்