ஆங்கிலப் புத்தாண்டும் ஆலய வழிபாடும்

ஜனவரி முதல் தேதியன்று கோவில்களைத் திறந்து வைத்து, நள்ளிரவு பூஜைகள் செய்யப்பட்டுப் பொதுமக்கள் கடவுள் தரிசனம் செய்வது இந்தியாவில் பல கோவில்களில் நடைமுறையில் உள்ளது. இது, வேத நாகரிகத்திற்கும், ஆகம விதிகளுக்கும், ஹிந்து கலாச்சாரத்திற்கும் விரோதமான செயலாகும். ஆயினும் ஹிந்துக் கோவில்கள் பெரும்பாலும் அரசுகளின் கட்டுப்பாட்டில் இருப்பதால், அரசுகளின் அற்நிலையத்துறைகள் இந்த வழக்கத்தைக் கடைப்பிடித்து வருகின்றன. ஹிந்து மக்களும் இதன் விபரீதத்தைப் புரிந்துகொள்ளாமல் ஆங்கிலப் புத்தாண்டு பிறக்கும் நடுநிசி நேரத்தில் கோவில்களுக்கு வந்து, வரிசையில் நின்று தரிசனம் செய்கின்றனர். ஆனால் விவரம் அறிந்த ஹிந்துக்களும், ஹிந்து அமைப்புகளும், மிகவும் வருத்தமுற்று இந்த வழக்கத்திற்கு எதிராகக் கருத்துக்களைத் தெரிவித்து வருகின்றனர்.. பிரச்சாரம் செய்து விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகின்றனர். ஆயினும் வருமானத்தை மட்டுமே குறிக்கோளாகக் கொண்டு இயங்கும் அரசு அறநிலையத்துறைகள், ஆகம விதிகளைப் புறந்தள்ளி, ஆங்கிலப் புத்தாண்டைக் கோவில்களில் கொண்டாடும் வழக்கத்தைக் கடைப்பிடிக்கின்றனர்….

View More ஆங்கிலப் புத்தாண்டும் ஆலய வழிபாடும்

வேளாங்கண்ணி: உண்மையான வரலாறு என்ன?

வேளாங்கண்ணியின் உண்மையான, பழைய பெயர் “வேலன கண்ணி”. அம்பிகைக்குத் தேவாரம் சூட்டிய திருநாமம் இது. இந்த ஊருக்கருகில் சுமார் 10 கிமி தொலைவில் ‘கருங்கண்ணி’ எனும் ஊரும் அமைந்துள்ளது. இப்பகுதியில் புதையுண்ட தெய்வச் சிலைகளும் ஐம்பொன் தெய்வத் திருமேனிகளும் மிகுந்த அளவில் அகழ்வாராய்ச்சியில் கண்டெடுக்கப் பட்டுள்ளன. இன்றைய வேளாங்கண்ணியில் ரஜதகிரீசுவரர் சிவாலயம் ஒன்றும் அமைந்துள்ளது. இது பழமையான ஆலயமா அல்லது இன்றைய கபாலீசுவரர் ஆலயம் போன்ற புத்துருவாக்கமா என்பதை ஆய்வுக்குட்படுத்த வேண்டும்… இது தொடக்கத்திலிருந்தே மகிமை கொண்ட கிறித்தவ திருத்தலமாக நம்பப்பட்டது என்கிறார்கள். ஆனால், வாரன் ஹேஸ்டிங்க்ஸ் முதல் மவுண்ட்பேட்டன் வரையில் இந்தியாவை ஆண்ட நாற்பதுக்கும் மேற்பட்ட ஆங்கிலேய கவர்னர்களில் ஒருவர் கூட ஆரோக்கிய மாதாவை வந்து வழிபட்டதாகக் குறிப்பு இல்லை. இவ்வழிபாட்டுத்தலத்துக்கு 1962 வரை பஸிலிகா என்ற அந்தஸ்து வழங்கப்படாததன் காரணம் என்ன ? அற்புதங்கள் முன்பே நடந்ததாகக் கூறப்படுகிறது. ஆயினும், ஆங்கிலேயர் ஆண்ட காலத்தில் ஏன் பஸிலிகா அந்தஸ்துக் கிடக்கவில்லை ?….

View More வேளாங்கண்ணி: உண்மையான வரலாறு என்ன?

எல்லா கோவில்களிலும் செய்யுங்கள் – தினத்தந்தி தலையங்கம்

வாடகை பாக்கி வைத்திருப்பவர்களின் பெயர்களோடு, அவர்கள் எவ்வளவு பாக்கி வைத்திருக்கிறார்கள்? என்ற விவரங்களையெல்லாம் கோவிலில் பெரிய போர்டு வைத்திருக்கிறார்கள். .. 4 லட்சத்து 78 ஆயிரத்து 462 ஏக்கர் நஞ்சை, புஞ்சை, மானாவாரி நிலங்களும், 22 ஆயிரத்து 599 கட்டிடங்களும், 33 ஆயிரத்து 627 மனைகளும் உள்ளன… முன்னோர்கள் எழுதி வைத்த சொத்துக்களையெல்லாம் இன்று யார், யாரோ அனுபவித்துக்கொண்டிருக்கிறார்கள். அவைகளையும் உடனடியாக கணக்கெடுத்து, அதிரடி நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும். இறை பக்தி உள்ள முதல்-அமைச்சர் ஜெயலலிதா நிச்சயமாக இதற்கு உத்தரவிடுவார்….

View More எல்லா கோவில்களிலும் செய்யுங்கள் – தினத்தந்தி தலையங்கம்

கோவிலுக்குள்ளேயே நுழைந்துவிட்டன இந்து விரோத சக்திகள்

இந்து அறநிலையத்துறை தோமா-கிறிஸ்தவ மோசடிப்பிரச்சார ஆசாமியான தெய்வநாயகத்தையும் சீமான் என்கிற திரைப்பட இயக்குனரையும் மயிலை ஸ்ரீ கபாலீஸ்வரர் கோவிலுக்குள் உண்ணாவிரத போராட்டம் நடத்தவும் இந்து விரோத பேச்சுகள் ஆற்றவும் அனுமதித்ததாக அறிகிறோம்… இந்த விஷயத்தில் நமது எதிர்ப்பை முழுமையாகவும் ஒற்றுமையாகவும் காட்டுவதும் நமது கடமையாகும். இடம்: மயிலாப்பூர் காவல் நிலைய வளாகம், கச்சேரி ரோடு, மயிலாப்பூர். நேரம்: மே-3 (திங்கள்) மாலை நான்கு மணியளவில்.

View More கோவிலுக்குள்ளேயே நுழைந்துவிட்டன இந்து விரோத சக்திகள்

“தன்பெருமை தான் அறியான்”

நெருப்புத் தணல் மீது இயல்பாகவே வெண்மையான சாம்பல் படியும். வீசினால் சாம்பல் கலையும், மீண்டும் படியும். முடிவில் தணல் இன்றி சாம்பலே மிஞ்சும். சிவனுக்கு எனத் தனியாகத் திருமேனி இல்லை. அவன் தாங்கும் திருமேனிகள் அவனுடைய திருவருளால் வேண்டும்போது கொள்வனவாகும். திருவருளே சிவசத்தி.அதுவே அம்பிகை. அவனுடைய திருவருளாகிய அம்பிகையே அவனுடைய வடிவம் என்று உணர்த்துவது இந்தத் திருநீறு.

View More “தன்பெருமை தான் அறியான்”

கிறிஸ்துவ மதமாற்றத்தின் இருண்ட பக்கம்

அடிப்படை நாணயமற்ற நபர்களைக் கொண்ட சர்ச்சுகளும் மிஷனரிகளும் ‘மொழிக் களவு’ (Hijacking the native language), ‘கலாசாரக் களவு’, ‘இனவெறி’ (Racism) ஆகிய அபாயகரமான யுக்திகளின் மூலம் மதமாற்றம் செய்யத் தொடங்கினர். இவற்றில், இடையே சற்று மங்கியிருந்த ‘கலாசாரக் களவு’ (inculturation) முன்னரே உண்டு என்ற போதும் தற்போது பெரிதாகத் தலை தூக்கியிருக்கிறது. அதாவது, ‘கத்தோலிக்க ஆஸ்ரமங்கள்’ அமைத்தல்; ஆஸ்ரமத்தின் நுழைவாயிலின் முகப்பில் ‘ஓம்’ சின்னத்தை வைத்தல்; ‘ஓம்’ என்பது “வேதச்சொல்” என்றும் “இந்துச்சொல் அல்ல” என்றும் சாதித்தல்; ஆஸ்ரமத்தின் உள்ளே யோக முத்திரையுடன் பத்மாசனத்தில் தியானம் செய்வதுபோல் இயேசு வீற்றிருக்கும் சிலை அமைத்தல்….

View More கிறிஸ்துவ மதமாற்றத்தின் இருண்ட பக்கம்