தாரிக்-இ-ஃபிரோஷாஹி, இஸ்லாமிய அரசனின் கீழ் வசிக்கும் ஒரு ஹிந்துவின் நிலையைக் குறித்து இவ்வாறு கூறுகிறது –
“இஸ்லாமிய அரசனின் திவான் (கணக்காயன், அமைச்சன்) ஹிந்துக்களிடன் வரியைச் செலுத்தும்படி கேட்கையில் அந்த ஹிந்துவானவன் பணிவுடனும், அடக்கத்துடனும் அந்த வரியை திவானிடம் ஒப்படைக்க வேண்டும். அந்த திவான் வரி செலுத்துக் ஹிந்துவின் வாயில் எச்சிலைத் துப்ப நினைத்தால் அந்த ஹிந்து எந்தவிதமான தயக்கமுமின்றி தனது வாயைத் திறந்து திவான் துப்பும் எச்சிலை தனது வாயில் பெற்றுக் கொள்ள வேண்டும்… ஒரு ஹிந்துவைக் கேவலமாக நடத்த வேண்டுவது ஒரு இஸ்லாமியனின் கடமை. ஏனென்றால் ஹிந்துக்களே முஸ்தபாவின் (முகது நபி) மிகப் பெரும் எதிரிகள். ஹிந்துக்களைக் கண்ட இடத்தில் கொல்லவும், கொள்ளையடிக்கவும், அவர்களையும், அவர்களின் பெண்களையும் அடிமைகளாக்கவும் முஸ்தபா (முகமது நபி) கட்டளையிட்டிருக்கிறார். ஒன்று ஹிந்துக்கள் இஸ்லாமை ஏற்றுக் கொள்ள வேண்டும் அல்லது அவர்கள் கொல்லப்பட, அடிமைகளாக்கப்பட்ட, அவர்களின் சொத்துக்களைக் கைப்பற்ற குரான் உத்தரவிடுகிறது…”
Category: வரலாறு
அக்பர் என்னும் கயவன் – 14
முகமது-பின்-காசிமின் காலம் துவங்கி 1858-ஆம் வருடம் முகலாய ஆட்சி முடிவடையும் வரைக்கும் இஸ்லாமிய அரசர்களிடம் நிதி நிர்வாகம் என்பதே இருந்ததில்லை. அவர்களின் பொருளாதாரம் கொள்ளையடிப்பு பொருளாதாரம். பல்வேறு விதமான வரிகள், ஊழல்கள், அடுத்தவனிடம் அடித்துப் பிடுங்குவது, செத்தவனின் சொத்தை (அவனுக்கு வாரிசு இருந்தாலும் இல்லாவிட்டாலும்) தனதாக்கிக் கொள்வது, அடுத்த நாட்டின் மீது திடீரெனப்படையெடுத்து அப்பாவிகளிடம் கொள்ளையடிப்பது என அத்தனை கீழ்த்தரச் செயல்களையும் செய்த பொருளாதாரம் அது…. குடிமக்களைக் கசக்கிப் பிழிபவர்களை மட்டுமே நிதி நிர்வாகத்தைக் கவனிக்க அக்பர் அனுமதிப்பார் என்கிறார் வரலாற்றாசிரியரான பதாயுனி. அதற்கு ஏராளமான உதாரணங்களைத் தருகிறார். ஏழைகளிடமிருந்து நிலத்தை அபகரிக்கும் சையத் மிர் ஃபதாவுல்லா போன்றவர்களுக்குத்தான் அக்பரின் அரசவையில் மரியாதை இருந்தது.
View More அக்பர் என்னும் கயவன் – 14அக்பர் என்னும் கயவன் – 13
அக்பரையும் அசோகரையும் ஒப்பிடுகிற அறிவிலிகளைக் கண்டு அக்பர் சிரித்திருப்பார் என்பதில் சந்தேகமில்லை. கலிங்கத்தை வென்ற அசோகர் வன்முறையை முற்றிலும் ஒதுக்கித் தள்ளியவர். ஆனால் அக்பரோ கொலைகளிலும், கொள்ளைகளிலும் மகிழ்கிற அற்பனாகவே இறுதிவரை வாழ்ந்து மறைந்ததொரு கயவன். அக்பரால் வெல்லப்பட்ட சிற்றரசுகள் அனைத்திலுமே அக்பரின் வாள் இடைவிடாத படுகொலைகளையும், கொள்ளைகளையும், கற்பழிப்புகளையும், வழிபாட்டுத் தல அழிப்புகளையும், பெண்களைக் கவர்ந்து செல்வதனையும், அப்பாவிகளை அடிமைகளாகப் பிடித்துச் செல்வதனையும், கோவில்களை அழித்து மசூதிகளாக்குவதனையும்…..இன்ன பிற கொடுமைகளையும் இடைவிடாமல் செய்திருக்கிறது என்பதினை அக்பரின் வரலாற்றாசிரியர்களே சந்தேகமின்றி குறித்து வைத்துள்ளார்கள்….
View More அக்பர் என்னும் கயவன் – 13சமணர் கழுவேற்றம்: புத்தக விமரிசனம்
சமணர் கழுவேற்றம் ஒரு வரலாற்று நிகழ்வு என்பதற்கு சிறிதும் ஆதாரமில்லை என்பதே உண்மை. வரலாற்றாசிரியர்களும் தமிழறிஞர்களும் பெரியபுராணமும் திருவிளையாடற்புராணமும் கூறும் செய்திகள் இலக்கிய மிகைக் கூற்றுகள் மட்டுமே என்று தங்கள் நிலைப்பாட்டைத் தெளிவாகப் பதிவு செய்துள்ளனர். இதற்கு மாறாக, சைவ பாரம்பரியவாதிகள் முற்றிலும் உண்மையாக நடந்த சம்பவமே என்று வாதிட்டிருக்கின்றனர். சமணர் தரப்பில் இந்த நிகழ்வு எங்கும் பதிவுசெய்யப் படவில்லை என்பது ஏற்கனவே சுட்டிக்காட்டப் பட்டுள்ளது. இது தொடர்பான ஒட்டுமொத்த விவாதங்களையும் கோர்வையாக சான்றுகளுடன் இந்த நூலாசிரியர் எடுத்துக் காட்டுகிறார்…..
View More சமணர் கழுவேற்றம்: புத்தக விமரிசனம்யாழ்ப்பாணத்து சைவசித்தாந்த சபாபதி நாவலர் — 2
சைவசித்தாந்தநெறிநின்று விலகாத சபாபதி நாவலர் சித்தாந்த ஆச்சார்யர்களைப் பெரிதும் போற்றிவந்துள்ளதுடன், அவர்கள் வழியிலேயே செயற்படவேண்டும் என்கிற ஆர்வமும் உடையவராக விளங்கியுள்ளார்.
சிதம்பர சபாநாதர் புராணம் எழுதிய நாவலர் புராண காவியங்களுக்கு எதிரான கொள்கைகளை கண்டித்து, வைதீக காவிய தூஷண மறுப்பு என்கிற நூலும் எழுதியுள்ளார். ஆக, புராணபடன மரபை வளர்ப்பதிலும் நாவலரவர்கள் ஆறுமுகநாவலருக்குப்பின் கணிசமான பணியாற்றினார் எனக் கருதலாம்.
யாழ்ப்பாணத்துச் சைவசித்தாந்த சபாபதி நாவலர் — 1
அவையோர் வியக்கும் உரைவன்மையாலும், அந்த உரையிடையே பிரவாகிக்கும் சைவசித்தாந்தக்கருத்துகளாலும், கிறிஸ்துவர்கள், நாத்தீகர்கள் போன்ற பிறதத்துவ நம்பிக்கையாளர்களும் மதத்தவர்களும் நாவடங்கி ஓடச்செய்யும் சொற்போர் வெற்றியும் மிக்கவராக சபாபதிநாவலர் விளங்கினார்.
அதனாலேயே இவருக்கு “நாவலர்” என்ற பட்டத்தைச் சுப்பிரமணிய யோகீந்திரர் வழங்கிக் கௌரவித்திருக்கிறார். நாவன்மை பொருந்தியவர்களாகவும், சைவசித்தாந்தச் சொற்பொழிவுகளை ஆற்றுவதில் தலைசிறந்தவர்களாகவும் விளங்குபவர்களுக்கே திருவாவடுதுறை ஆதீனம் “நாவலர்” என்ற அதியுயர் விருதினை வழங்கி கௌரவித்தது என்பதை நாம் அறியலாம்.
View More யாழ்ப்பாணத்துச் சைவசித்தாந்த சபாபதி நாவலர் — 1அக்பர் என்னும் கயவன் – 12
இஸ்லாமிய வரலாற்றாசிரியர்களின் குறிப்பில் கூறப்படும் “விபச்சாரிகள்” என்கிற பதம் ஹிந்துப் பெண்களைக் குறித்தே சொல்லப்பட்டது. போர்களில் தங்களின் பெற்றோர்களையும், சகோதரர்களையும், கணவன்மாரையும் இழந்த அப்பாவிப் பெண்கள் அக்பரால் அடிமைகளாக இழுத்துச் செல்லப்பட்டு விபச்சாரத்தில் ஈடுபட வைக்கப்பட்டார்கள். சிறுவர்களுடன் உறவு கொள்வதில் ஆரம்பித்து விபச்சாரமும், போதைமருந்து உபயோகமும், குடிகாரர்களின் சண்டைகளும் அக்பரின் அரசாட்சியில் தினப்படி வாழ்க்கைமுறையாகவே இருந்தன என்பதில் சந்தேகமில்லை. அக்பர் தனது அரசவை முக்கியஸ்தர்களின் மனைவிகளையும் விட்டு வைக்கவில்லை… சிறுவர்களின் மீது பித்துப் பிடித்து அலைந்த பாபரை அவர் தனது மனைவியிடம் உடலுறவு கொள்ளும்படி பாபரின் தாய் வற்புறுத்தி அனுப்பி வைத்த சம்பவமும் பதிவாகியிருக்கிறது. அக்பரின் தகப்பனான ஹுமாயுன் அதற்குச் சிறிது குறைந்தவனில்லை. தனது உபயோகத்திற்கென சிறுவர்களை எப்போது தன்னுடனேயே வைத்திருந்தான் ஹுமாயுன். அக்பரும் ஏராளமான சிறுவர்களை தனது அந்தப்புரத்திற்கு அருகிலேயே வைத்திருந்ததாக அபுல் ஃபசல் கூறுகிறார்….
View More அக்பர் என்னும் கயவன் – 12அக்பர் என்னும் கயவன் – 11
அக்பரின் சமகால குறிப்பேடுகள் அவர் தனது ஹராமிலும் (அந்தப்புரம்), சிறைகளிலும், சத்திரங்களிலும் அடைத்து வைத்திருந்த ஏராளமான அழகிய பெண்களை தனது உபயோகத்திற்கு மட்டும் வைத்துக் கொண்டதுடன் தனது அமைச்சரவை சகாக்களுடன் அவர்களைப் பகிர்ந்து கொண்டதனையும் குறிப்பிடுகின்றன…போரில் தோற்றுச் சரணடையும் ஹிந்து அரசர்கள் தங்களின் பெண்களை தங்களிடம் ஒப்படைக்க வேண்டும் என அக்பர் விரும்பினார். இந்த வழிமுறையின் மூலமாக இந்தியாவின் பல தலைசிறந்த ஹிந்து அரசர்களின் மகள்களைத் தனது அந்தப்புரத்திற்கு அபரித்துச் சென்றார்… விர் பத்ரா பன்னாவை நெருங்குகையில் அவர் சென்ற பல்லக்கிலிருந்து கீழே விழுந்து இறந்துவிட்டார். அவருடைய மனைவி உடன்கட்டை ஏற இருக்கையில் அக்பர் அதனைத் தடுத்து அவளைத் தன்னோடு அழைத்துச் சென்று அவளையும் தனது அந்தப்புரத்தில் அடைத்துவிட்டார். மேலோட்டமாகப் பார்க்கையில் மிக உயரிய ஒன்றாகத் தெரியும் இதனை சிறிது யோசித்தால் அந்தப் பெண்ணை அடைவதற்காக அகபர் செய்த் திட்டமிட்ட படுகொலை என்பதனை நாம் உணரலாம்….
View More அக்பர் என்னும் கயவன் – 11அக்பர் என்னும் கயவன் – 10
பதினாலாவது வயதில் அரியணை ஏறிய நாளிலிருந்து அக்பரின் அந்தப்புரப் பெண்களின் எண்ணிக்கை கூடிக் கொண்டே சென்றது. சமகால இஸ்லாமிய மற்றும் ஐரோப்பிய வரலாற்றுக் குறிப்புகள் அக்பரின் மட்டுமீறிய பெண்ணாசை குறித்து நீண்ட குறிப்புகளைக் கொண்டிருக்கின்றன. போரில் தோற்கடிக்கப்பட்டவன் இஸ்லாமியனாக இருந்தால் அவர்களின் நிரம்பி வழியும் அந்தப்புரம் அப்படியே அக்பரின் கையில் ஒப்படைக்கப்படும். அதுவே ஹிந்துக்களாக இருந்தால் அவர்கள் குரூரமாக மிரட்டப்பட்டு அவர்களின் சகோதரிகளையும், மகள்களையும் பிற பெண்களையும் தனது அந்தப்புரத்திற்கு அனுப்புமாறு நிர்பந்திப்பது அக்பரின் வழக்கமாக இருந்தது… இதன் காரணமகாகவே, கணிசமான ஹிந்துப் பெண்களும், அவர்களின் பெற்றோர்களும் தங்களைத் தீயிலிட்டுக் கொளுத்திக் கொண்டு மரணமடைந்தார்கள். இன்னும் சிலர் தங்களின் பெண்களின் முகத்தில் வாளால் வெட்டியும், தீயில் கருக்கியும் அவளது முகத்தை அவலட்சணமாக்கினார்கள். இன்னும் சிலர் தங்களைத் தூக்கிச் செல்ல வந்த முகலாயப் படைத்தலைவனுக்கு பொன்னும், பொருளும் கொடுத்து அவனது மனதை மாற்ற முயன்றார்கள். பெரும்பாலான சமயங்களில் தப்புவதற்கு வாய்ப்பில்லாமல் நிரம்பி வழியும் அக்பரின் அந்தப்புரத்தின் ஐயாயிரத்தில் ஒருத்தியாக அடைபட்டார்கள்….
View More அக்பர் என்னும் கயவன் – 10அக்பர் என்னும் கயவன் – 9
அக்பர் ஹிந்துக்களை தனக்கு அருகே வைத்துக் கொண்டது அவரது பாதுகாப்பிற்கேயன்றி வேறெதற்குமில்லை. அவரது மங்கோலிய உறவினர்களைப் போல அல்லது அரசவை முஸ்லிம்களைப் போல ஹிந்துக்கள் தன்னைக் கொலை செய்ய முயலமாட்டார்கள் என்கிற நம்பிக்கை அக்பருக்கு இருந்தது. ஹிந்துக்களுக்குத் தான் எத்தனை துன்பம் விளைவித்தாலும் கடவுளுக்கு அஞ்சி அவர்கள் தனக்குக் கட்டுப்பட்டு நடப்பவர்கள் என்கிற எண்ணமும், அவர்களின் மரியாதையான நடத்தையும், முட்டாள்தனமும் தனக்கு லாபமாக இருப்பதனை உணர்ந்தவர் அக்பர்… ஹிந்துக்களின் இடங்களைத் தாக்கிக் கொள்ளையடிக்கும் நேரத்தைத் தவிர அக்பர் ஒருபோதும் அவரது சொந்த முஸ்லிம்களை நம்பியதில்லை. சக முஸ்லிம்களை தன்னுடைய பொக்கிஷ அறைக்கோ அல்லது அவரது அந்தப்புரத்திற்கோ நுழைய அவர் அனுமதித்ததேயில்லை என்பதே உண்மை….
View More அக்பர் என்னும் கயவன் – 9