அவர்களுக்குப் புரியும் வகையில் சொல்வதானால், திராவிட முன்னேற்றக் கழகத்தினர் என்பவர்கள் மூடரைப் பேரறிஞர் என்று சொல்வார்கள். இலங்கைத் தமிழர்களைக் கொல்ல உதவிய கருணாநிதியைத் தமிழினத் தலைவர் என்று மதிப்பார்கள். ஊழல் வழக்கில் தண்டிக்கப்பட்டவர்கள் என்றெல்லாம் அவர்களுடைய அருமை பெருமைகளைப் பட்டியலிடும்போது ஊழல் வழக்கில் தண்டிக்கப் படுபவர்கள் எல்லாருமே திமுகவினர் என்று புரிந்துகொண்டால் அது எவ்வளவு தவறாக இருக்கும். அது போன்றதுதான் சூத்திரர் எல்லாம் வேசி மகன்கள் என்று சொல்வதும்….
View More புதிய பொற்காலத்தை நோக்கி – 8Category: வரலாறு
புதிய பொற்காலத்தை நோக்கி – 7
பரந்து விரிந்து கிடக்கும் பிரிட்டிஷ் ஆவணங்களில் இருந்து ஓர் உண்மை தெரியவருகிறது. இந்திய கிராமப்புறங்களின் வருமானத்தில் உள்ளூர் காவல், நீர்ப்பாசன வசதிகள் ஆகியவற்றைப் போலவே கல்வி, மருத்துவ வசதி ஆகியவற்றுக்கும் அதிக முக்கியத்துவம் தரப்பட்டிருக்கிறது. இந்த வருமானமே உயர் கல்விக்கு மட்டுமல்லாமல் ஆரம்பக் கல்விக்கும் செலவிடப்பட்டு இருப்பதாக அந்த ஆவணங்கள் தெரிவிக்கின்றன… ஆசிரியர்கள் எல்லாம் அனைத்து ஜாதிகளைச் சேர்ந்தவர்களாக இருக்கிறார்கள். காயஸ்தர்கள், பிராமணர்கள், சதகோப், அகுரி பிரிவினர் அதிகமாக இருக்கிறார்கள். எனினும் 30 பிற ஜாதிகளில் இருந்தும் கணிசமான எண்ணிக்கையினர் இருந்திருக்கிறார்கள். சந்தால் ஜாதியைச் சேர்ந்த ஆறு ஆசிரியர்கள் கூட இருந்திருக்கிறார்கள்…
View More புதிய பொற்காலத்தை நோக்கி – 7இந்தியா அடிமைப்படுத்தப்பட்ட வரலாறு
வாஸ்கோ ட காமா இந்துஸ்தானில் காலடி எடுத்துவைத்த நாள் தொடங்கி ராபர்ட் க்ளைவ் ப்ளாஸி போரில் வெற்றி பெற்றது வரையான காலகட்டத்தில் நம் தேசத்தில் என்னவெல்லாம் எப்படியெல்லாம் நடந்தன என்பதை மிகவும் அருமையான முறையில் தொகுத்திருக்கிறார் ராய் மாக்ஸம்… புதிய அறுவடைக்கு யாரேனும் எஞ்சியிருந்தால் நிலைமை சற்று மேம்படக்கூடும். ஆனால் எனக்குத் தெரிந்து அதற்குள்ளேயே அனைவரும் இறந்துவிடுவார்கள் என்றே தோன்றுகிறது… எந்தவொரு அழகான பெண்ணையும் வைஸ்ராய்கள் விருப்பம்போல் துய்ப்பார்கள். ஒழுக்கக்கேடுகளில் பிரிட்டிஷாரும் சளைத்தவர்கள் அல்ல…
View More இந்தியா அடிமைப்படுத்தப்பட்ட வரலாறுபுதிய பொற்காலத்தை நோக்கி – 6
பொதுவாக நம் நாட்டில் அனைவருக்கும் கல்வியை பிரிட்டிஷார்தான் கொண்டுவந்தார்கள் என்று ஒரு பொய்யுரை பரப்பப்பட்டிருக்கிறது. சங்க காலம் தொடங்கி பிரிட்டிஷார் வருவதற்கு முன்புவரை எழுதப்பட்ட தமிழ் இலக்கியங்களில் 70 சதவிகிதத்துக்கு மேற்பட்டவை பிராமணரல்லாதவர்களால் எழுதப்பட்டவையே… பிரிட்டிஷ் கல்வியாளர் டோப்ஸ் எழுதுகிறார் – பள்ளிக்கு வருபவர்களின் எண்ணிக்கை மிகவும் குறைந்த நிலையில் இருந்த 1822–25 காலகட்டத்தில்கூட மதராஸ் பிரஸிடென்ஸியில் படித்தவர்களின் எண்ணிக்கையானது 1800களின் இங்கிலாந்து பள்ளிகளோடு ஒப்பிடும்போது பலமடங்கு அதிகமாகவே இருந்திருக்கிறது…
View More புதிய பொற்காலத்தை நோக்கி – 6புதிய பொற்காலத்தை நோக்கி – 5
இந்திய எஃகின் உயர் தரத்துக்கான காரணத்தை பிரிட்டிஷ்காரர்கள் கனிமச் சுரங்கத்துக்குக் கொடுத்துவிட்டனர். இந்திய எஃகு உற்பத்தியாளர்கள் மேற்கொண்ட தொழில்நுட்பங் களுக்கு எந்தவித அங்கீகாரமும் தந்திருக்கவில்லை.. 1775-ல் லண்டனில் வெளியான கட்டுரையில் இந்தியாவில் பனிக்கட்டி தயாரிக்கப்படும் வழிமுறை விரிவாக விவரிக்கப்பட்டிருக்கிறது. அதுவரையில் பிரிட்டிஷாருக்கு செயற்கை முறையில் பனிக்கட்டிகள் தயாரிக்கப்படுவது பற்றித் தெரிந்திருக்கவில்லை….
View More புதிய பொற்காலத்தை நோக்கி – 5புதிய பொற்காலத்தை நோக்கி – 4
பிரிட்டிஷ் ஆட்சிக்காலத்தில் அவர்களுடைய ஈவு இரக்கமற்ற பொருளாதாரக் கொள்கைகளால் 3-3.50 கோடி இந்திய மக்கள் பட்டினியால் மாண்டனர். இந்தியாவில் பஞ்சம் தலை விரித்தாடிக் கொண்டிருந்த நேரத்திலும்கூட இங்கிருந்து பிரிட்டனுக்கு பல கோடி டன் அளவுக்கு கோதுமை ஏற்றுமதி செய்யப்பட்டது. இந்திய பாரம்பரிய அமைப்பில் இருந்த சிறப்பான நிவாரணக் கட்டமைப்புகள் முற்றாக சிதைக்கப்பட்டதால் வறட்சி பஞ்சம் ஏற்பட்டபோது கொத்துக் கொத்தாக மக்கள் இறக்க நேரிட்டது. அது ஒருவகையில் பிரிட்டிஷ் காலனிய அரசு மேற்கொண்ட படுகொலை என்றே நேர்மையும் நியாயமும் கொண்ட வரலாற்றாசிரியர்கள் கிடைத்திருக்கும் ஆதாரங்களின் அடிப்படையில் சொல்லிவருகிறார்கள்…
View More புதிய பொற்காலத்தை நோக்கி – 4சோழர் காலத்து சமூக நீதி: ஒரு கல்வெட்டுக் கதை
சுமார் 965 வருடங்களுக்கு முன்பு இரண்டாம் இராஜேந்திர சோழன் காலத்தில் வேளாளர் மற்றும் பிராமணர்கள் அடங்கிய சித்திரமேழிப் பெருக்காளர்கள் கூடியிருந்த கூட்டத்திற்கு நீதி கேட்டு ஒரு வழக்கு வருகிறது.. ஆத்திரமடைந்த தம்பி அண்ணனை அடிக்க அண்ணன் மயக்கமுற்று விழுகிறான். இதைக்கண்ட தந்தை சம்பவ இடத்திற்கு வந்து அழுது புலம்புகிறார். காரணம் தம்பி அடித்ததில் அண்ணன் இறந்துவிட்டான்..
View More சோழர் காலத்து சமூக நீதி: ஒரு கல்வெட்டுக் கதைபுதிய பொற்காலத்தை நோக்கி – 3
ஐரோப்பாவில் விதைக் கலப்பையை 1662-ல் முதன் முதலில் பயன்படுத்தியதாக ஆவணப்படுத்தப்பட்டுள்ளது. ஆனால், இந்தியாவில் அந்தக் கலப்பை எப்போது என்று கணிக்க முடியாத பன்னெடுங்காலத்தில் இருந்தே வழக்கத்தில் இருந்துவந்திருக்கிறது. நீர்பாசன வசதிகள், அருமையான கலப்பைகள், ஆண்டுதோறுமான மழையளவைக் கணிக்கும் திறமை, ஊடு பயிர் சாகுபதி, இயற்கை உரங்களைப் பயன்படுத்துதல், உள்நாட்டுக்குள்ளேயே பகிர்ந்துகொள்ளுதல் என பல விஷயங்களில் பழங்கால பாரதம் முன்னணியில் இருந்திருக்கிறது…
View More புதிய பொற்காலத்தை நோக்கி – 3அரசிடமிருந்து கோவில்கள் மீட்பு – ஏன் அவசியம்?
சுதந்திரத்திற்குப்பின் காங்கிரஸ், திராவிட கட்சிகள் கோவிலுக்கு எதுவுமே செய்யவில்லை என்று நான் விவாதிக்க தயார் இல்லை. எல்லோருமே ஏதோ ஒன்று முயன்றுள்ளார்கள். ஆனால் பல ஆயிரம் வருடம் காப்பாற்றப்பட்ட இந்த நிலம் – கோவில் – சிலை – கல்வெட்டுகள் எல்லாம் கடந்த 50 வருடத்தில் சூறையாடப்பட்டதன் அளவீட்டை கவனியுங்கள். இது முழுக்க முழுக்க நிர்வாக கோளாறாலும், அதிகார துஷ்பிரயோகத்தாலும் நடந்தது என்பதை பிரித்துப் பார்க்க நமக்கு ஒரு ஆய்வு தேவையில்லை. எனவே, ஜக்கி வாசுதேவ் சொல்கிற ஒரு புள்ளிக்கு நாம் வர வேண்டும். இதில் ஹிந்து பெருமக்களுக்கும், இந்த கலாச்சாரத்திற்கும் மாதேவடிகளான செம்பியன் மாதேவியார் தருகிற வலிமையான செய்தி ஒன்று உள்ளது. “அண்ணா,எங்கள் ஊருடைய பழைய பெயர் என்ன?” என கேட்டார்கள். அப்போதும் ஆநாங்கூர்தான் என்றோம். ஆனால் அவர்கள் நம்பவில்லை..
View More அரசிடமிருந்து கோவில்கள் மீட்பு – ஏன் அவசியம்?புதிய பொற்காலத்தை நோக்கி – 2
பிரிட்டிஷார் நம்மைப் பற்றி எப்படி மோசமாக நினைத்திருந்தார்கள் என்பதை விவரித்த தரம்பால் அதன் பின் அதே பிரிட்டிஷாரின் ஆவணங்களைக் கொண்டு அவர்களுடைய கூற்றுகள் ஒவ்வொன்றையும் மறுத்திருக்கிறார்.. வான சாஸ்திரம், கணிதம், மருத்துவம், எஃகு உற்பத்தி, செயற்கை முறையில் பனிக்கட்டி தயாரித்தல், விவசாயம் போன்றவற்றில் எல்லாம் இந்தியா எப்படிச் சிறந்து விளங்கியது என்பது பற்றி பிரிடிட்ஷார்களின் ஆவணங்கள் சொல்வதை இனி பார்ப்போம்..
View More புதிய பொற்காலத்தை நோக்கி – 2