திருமாவளவனைத்தான் காஷ்மீர் சிக்கலுக்கு தீர்வுகாண்பதற்கான எம்.பி. க்கள் குழுவில் மத்திய அரசு சில மாதங்களுக்கு முன்பு இடம் பெறச்செய்தது. அவரும் சுஷ்மா ஸ்வராஜ், அருண் ஜெட்லி போன்ற ஒரு தேசிய தலைவரைப் போல் அவர்களுடன் காஷ்மீருக்குச் சென்று திரும்பினார். திரும்பிய பிறகு அவர் கூறியது, ‘காஷ்மீருக்கு இந்தியா சுதந்திரம் அளிக்க வேண்டும்’ என்பதுதான்.
View More இந்திய இறையாண்மைக்கு சவால் விடும் தமிழக எம்.பி!Category: அரசியல்
கருத்துக் கணிப்புகளும் கருத்துத் திணிப்புகளும்- 2
பெரும்பாலான தமிழக பத்திரிகையாளர்கள் தி.மு.க. தலைவரை கருணாநிதி என்று குறிப்பிடுவதில்லை; ‘கலைஞர்’ என்றே குறிப்பிடுவர். பத்திரிகையில் பட்டப் பெயர்களுக்கு இடமில்லை என்றபோதிலும், தமிழக பத்திரிகையாளர்கள் தொடர்ந்து இந்தத் தவறைச் செய்து வருகின்றனர். இதற்குக் காரணம் அவர்களது கலைஞர் மீதான உளச்சார்பு. இத்தகைய உளச்சார்பு இருப்பவரால், அ.தி.மு.க.வுக்கு ஆதரவான அலையை ஆமோதிக்க முடியுமா?
View More கருத்துக் கணிப்புகளும் கருத்துத் திணிப்புகளும்- 2கருத்துக் கணிப்புகளும் கருத்துத் திணிப்புகளும்- 1
கட்சிகளின் கொள்கைகள் மீதான அபிமானம், அரசுகளின் செயல்முறை மீதான நாட்டம், நன்றியுணர்வுடன் கூடிய ஆசை போன்றவற்றால் கருத்துக் கணிப்புகள் மக்களை குறிப்பிட்ட அளவில் முட்டாளாக்கி, தவறாக வழிநடத்துகின்றன [..] தேர்தல் சமயத்தில் இந்த கணிப்புகள் ஏற்படுத்தும் உளவியல் தாக்கங்களையும் நெருக்கடிகளையும் சிந்தித்தால், ஊடகங்களின் அதர்மம் புரியும்!
View More கருத்துக் கணிப்புகளும் கருத்துத் திணிப்புகளும்- 1அபத்தமான பேச்சு, ஆபத்தான முடிவு
பல்வேறு அமைப்புகள் இந்தப் பகுதிகளில் ஆய்வு செய்தபோது பயங்கரவாத அமைப்புகளின் புகலிடமே பாகிஸ்தான் ஆக்கிரமித்துள்ள காஷ்மீர் பகுதியில்தான் என்ற முழு உண்மை வெளிவந்துள்ளது… ஒருபுறம் பயங்கரவாதச் செயல்களைச் செய்துகொண்டு இருக்கும் பாகிஸ்தானைக் கண்டிப்பது போல் கண்டித்தாலும், தொடர்ந்து அவர்களுக்கு ஆயுதங்கள் கொடுப்பதை சீனா, அமெரிக்கா நிறுத்திக் கொள்ளவில்லை… இச் சமயத்தில, உள்துறை செயலாளரின் பேச்சு– அதைச் செயல்படுத்த முனையும்போது, காஷ்மீர் மாநிலத்தில் நடக்கும் கல்லெறி சம்பவத்திற்குப் பதிலாக துப்பாக்கி தோட்டாக்கள்…
View More அபத்தமான பேச்சு, ஆபத்தான முடிவுஇந்து எதிரிகளான எமகிங்கரர்கள்
இன்று பாரதம் ஆறு எம கிங்கரர்களிடம் சிக்கித் தவிக்கிறது– முல்லா, மிஷினரி, மார்க்ஸிஸ்ட், மெக்காலே, மீடியா, மெய்னோ… எனவே இந்துக்கள் ஒற்றுமையுடன் தங்களை குருஷேத்திர யுத்தத்திற்குக் காலம்தாழ்த்தாது தயார்படுத்திக் கொள்வது அவசியமாகும். மீண்டும் ’வந்தே மாதரம்’ கோஷம் எழுப்பும் நேரம் நெருங்கிவிட்டது. 200 ஆண்டுகள் போராடி வெள்ளையர்களை வெளியேற்றிவிட்டு, அல்பத்தனமாக ஒரு வெள்ளைக்காரியின் காலடியில் நாட்டைக் கொடுத்திருப்பது…
View More இந்து எதிரிகளான எமகிங்கரர்கள்இந்தியாவில் இஸ்லாமிய பயங்கரவாதம் -1
பூஞ்ச்சில் ஒரு கடை வீதியில் உள்ள கடைக்காரர் ஒருவரிடம், “எடை சரியில்லை. முஸ்லீம்களை ஏமாற்றுகிறாயா?” எனக் கூச்சலிட்டு கடைக்காரர் மண்டையைப் பிளந்து கலவரத்திற்கு வித்திட்டார்கள். இதைப்போலவே ஜம்முவில் ஒரு முஸ்லீம் பெண் குழந்தைக்கு ஒரு இந்து சுற்றுலாப் பயணி அன்பெழுக நெற்றியில் முத்தம் கொடுத்து விட்டார் என்று சொல்லி சுற்றுலா பேருந்து ஒன்றையே ஏரியில் முழ்கடித்தார்கள்.
View More இந்தியாவில் இஸ்லாமிய பயங்கரவாதம் -1தேசிய உணர்வை அவமதிக்கும் பிரதமர்!
உமக்குத்தான் துணிவு இல்லை, கொடியேற்றத் தடை விதிக்கும் ஜம்மு-காஷ்மீர் மாநில அரசை கண்டிக்கவும் திராணியில்லை, தடையை மீறி தேசியக் கொடியேற்றச் செல்லும் தேச பக்தர்களை அவமதிக்காமலாவது இருக்க வேண்டாமா நாட்டின் பிரதமர்? தேசிய உணர்வைத் தூண்டும் பாரதிய ஜனதா இளைஞர்களின் கடமையுணர்வைப் பாராட்ட மனமில்லாவிடினும் அதற்கு அரசியல் நோக்கமா கற்பிப்பது?
View More தேசிய உணர்வை அவமதிக்கும் பிரதமர்!லஷ்கர்-ஏ-தொய்பாவும் காங்கிரசின் குள்ளநரித்தனமும்
பாகிஸ்தானில் உள்ள அனைத்து மசூதிகளிலும் பூட்டு போட்ட சிறிய, பெரிய பெட்டிகள் வாசலில் வைக்கப்பட்டன. தொழுகை முடிந்து வீட்டிற்கு திரும்பும் போது வெளியில் வைக்கப்பட்டுள்ள பெட்டியில் பணத்தை போடுவார்கள். தங்களது பயங்கரவாத பணிகளுக்கு பணம் திரட்டும் வழி முறைகளில் இதுவும் ஒன்றாகும்… லஷ்கர்-இ-தொய்பாவினர் இந்தியாவில் தாக்குதல் நடத்துவதற்கு அனைத்துவிதமான உதவிகளை செய்தவர்கள் சிமி இயக்கத்தினர்.
View More லஷ்கர்-ஏ-தொய்பாவும் காங்கிரசின் குள்ளநரித்தனமும்மக்களை முட்டாளாக்கும் புத்திசாலி மந்திரி
அரசியல் சாசன அமைப்புகளான நாடாளுமன்ற பொது கணக்குக் குழு, உச்சநீதி மன்றம், மத்திய புலனாய்வு அமைப்பு ஆகியவை விசாரித்துவரும் ஸ்பெக்ட்ரம் ஊழலை மூடி மறைக்க தொலைதொடர்புத் துறை அமைச்சர் போடும் வேடங்கள், ஆ.ராசாவை விட கேவலமாக உள்ளன. அவர் மீது நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடுத்திருக்கிறார் சுப்பிரமணியம் சாமி. பிரதமர் மன்மோகன் உண்மையிலேயே நேர்மையானவராக இருந்தால், கபில் சிபலை உடனடியாக பதவியிலிருந்து நீக்க வேண்டும்.
View More மக்களை முட்டாளாக்கும் புத்திசாலி மந்திரிபெரியார் யாருக்குப் பெரியார்?
உண்மையிலேயே தாழ்த்தப்பட்டவர்களுக்கு ஈவேரா பாடுபட்டாரா? பிற்படுத்தப்பட்டவர்களுக்கு பாடுபட்டாரா? இந்த இரு சமுதாயத்தினரையும் தன் சமுதாயமாகவே பார்த்தாரா? தாழ்த்தப்பட்டவர்களை கொடுமைப்படுத்திய பிராமணர்களை கடுமையாக எதிர்த்ததுபோல் – தாழ்த்தப்பட்டவர்களை கொடுமைப்படுத்திய பிற்படுத்தப்பட்ட சமுதாயத்தினரை எதிர்த்தாரா? [..]
View More பெரியார் யாருக்குப் பெரியார்?