கடந்த மார்ச்-23, 2017 அன்று மாபெரும் நவீனத் தமிழிலக்கிய எழுத்தாளரான அசோகமித்திரன் மறைந்தார். அவருக்கு அஞ்சலி செலுத்தும் முகமாக பெங்களூர் வாசக வட்டம் சார்பாக, ஏப்ரல் 2, ஞாயிறு ஒரு நினைவுக் கூட்டம் நிகழ்ந்தது. அக்கூட்டத்தில் ஆற்றப்பட்ட உரைகளும், கலந்துரையாடலும் இலக்கியத் தரத்துடன் சிறப்பாக அமைந்தன. அவற்றின் வீடியோ பதிவுகள் கீழே… டாக்டர் ப.கிருஷ்ணசாமி அசோகமித்திரனுடன் 30 ஆண்டுகளுக்கும் மேலாக நெருங்கிய தொடர்பில் இருந்தவர். சிறந்த இலக்கிய விமர்சகர், ஆய்வாளர். அசோகமித்திரனின் தனித்துவம் மிக்க இலக்கிய ஆளுமை குறித்து சிறப்பாகவும் உள்ளத்தைத் தொடும் வகையிலும் தனது உரையில் எடுத்துரைத்தார்….
View More பெங்களூர் அசோகமித்திரன் நினைவுக் கூட்டம்: பதிவுகள்Category: இலக்கியம்
இராவணன் இயற்றிய சிவதாண்டவத் தோத்திரம்
தான் இயற்றிய இந்தச் சிவதாண்டவத் தோத்திரத்தினையும் பாடுகிறான். இவற்றினால் மனமகிழ்ந்த சிவபிரான் அவனை விடுவித்து, அவன் பக்தியை மெச்சி சந்திரஹாசம் எனும் வாளையும் பரிசளிக்கிறார்.
கம்பீரமான குரலில் பாட, சிவதாண்டவத்தின் ஜதிகளுக்கொப்ப சொற்களைப் பயன்படுத்தி அவன் இயற்றியுள்ள இந்த சமஸ்கிருதத் தோத்திரம் படிக்கவே இனிமையாகவும் கம்பீரமாகவும் இருக்கும். பெரும்பாலான அடிகளில் ஒரே எழுத்தில் தொடங்கும் (மோனை) பலவிதமான பொருள்கொண்ட சொற்கள் அமைந்து தாண்டவத்தின் ஆண்மைத்தனமான அழகை (பௌருஷத்தை) சித்தரிக்கின்றன. சொற்கள் எழுப்பும் ஒலிகளும் வார்த்தை ஜாலங்களாகி நம்மை வியப்பில் ஆழ்த்துகின்றன.
இருளும் வெளியும் – 1
நாம் சூரியவொளி உள்ள காலத்தைப் பகலென்றும், அஃதில்லாத காலத்தை இரவென்றும் கூறுகின்றோம். இப்பகலிரவு எனும் பொழுதுகளைப் பூனையின் கண்களும் அக்கண்களைப் போன்ற பிறகண்களும் ஒருபடித்தாகவே காண்கின்றன. இவ்வகைக்கண்கள் புறவொளியை வேண்டாமலேயே காண்கின்றன. இத்தகைய கண்களையுடையவை இருளென்பதையே அறியா. பின் பகலிரவென்பதை எவ்வாறறியுமெனில், ஞாயிற்றின் வெப்பத்தால் பகலையும், அஃதின்மையால் இரவையும் அறியும் எனலாம்.
View More இருளும் வெளியும் – 1உடுக்கை இழந்தவள் [சிறுகதை]
இந்த நால்வரின் எண்ணத்தில் நல்லவையே உதிக்காதா? அதுவும் க்ஷத்ரியர் அவையில் இந்த சூதனுக்கு என்ன வேலை? ஆனால் சூதனுக்கு உடலோடு ஒட்டிய பொற்கவசம் எப்படி? எந்தத் தேரோட்டி கவசம் அணிகிறான்? தேரோட்டிகளுக்கு கவசம் அணிவிப்பது நல்ல யோசனையாக இருக்கிறதே! அவர்களை எதிராளியின் வில்லிலிருந்தும் வேலிலிருந்தும் பாதுகாக்குமே…அஸ்வத்தாமனின் கண்கள் சுருங்கி இருந்தன. அர்ஜுனன் அடிமையா? இது என்ன குறுக்கு வழி கர்ணா? உன் கவசத்துக்கு இனி என்ன பயன்? நீ அர்ஜுனனை போரில் வென்றிருந்தால் சூதன் என்று இழித்துப் பேசி உனக்கு கற்பிக்க மறுத்த என் தந்தைக்கும் மாமனுக்கும் சரியான பாடமாக இருந்திருக்கும்…
View More உடுக்கை இழந்தவள் [சிறுகதை]ஆபுத்திரன் நாடு அடைந்த காதை – மணிமேகலை 25
இந்த உடம்பின்கண் தோன்றும் பொய், களவு, காமம் என்ற மூன்றும் தீவினையாகும். நமது வாய்மொழியில் தோன்றுவது நான்கு. அவை பொய், குறளை எனப்படும் நிந்தனைச் சொற்கள், கடுஞ்சொல் மற்றும் பயனற்ற சொற்கள் என்பவையாகும். மனதில் தோன்றும் மூன்று ஆசை, கோபம், மயங்குதல் என்பவையாகும். மேற்சொன்ன பத்தும் தீயவழிகளாகும். நன்கு கற்றறிந்தோர் இந்தப் பத்தின் வழி செல்லமாட்டார்கள். அப்படிச் சென்றார்களாயின் விலங்குநிலை, பேய்நிலை அல்லது நரகநிலை அடைந்து மனத்தளவில் துன்பங்களை அனுபவிப்பார்கள்.. நல்வினை எதுவென்று கேட்டால் மேற்கூறிய பத்து வினைச் செயல்களையும் தவிர்த்து, நல்லொழுக்கத்தின்கண் நின்று, தானங்கள் செய்து, மனிதர், தேவர் மற்றும் பிரம்ம நிலைகளை எய்தி இன்புற்று இருத்தலாகும்…
View More ஆபுத்திரன் நாடு அடைந்த காதை – மணிமேகலை 25சிறைவிடு காதை – மணிமேகலை 24
என்னுடைய அந்தபுரத்தில் மணிமேகலை என்ற பெண் ஒருத்தி இருக்கிறாள். உன்னை ஒருவருக்கும் தெரியாமல் அவள் இருக்கும் இடத்திற்கு அழைத்துச்செல்லச் சொல்கிறேன். நீ அங்குள்ள அந்தப்புர மகளிரின் கண்களில் பட்டுக்கொண்டிருப்பதுதான் உன் வேலை. பிறகு நல்ல சமயம் பார்த்து, ‘மணிமேகலை கண்சாடை காட்டித் தன்னுடைய இளம் முலைகள் இரண்டையும் உன்னுடைய அழகிய மார்பில் பொருந்தும்படி என்னுடன் கூடினாள்’ என்று மற்றவர்களிடம் கூறவேண்டும். இதற்கு வெகுமதி ஒரு கிழி நிறை பொன் கழஞ்சு. இது அரச கட்டளை. செய்ய மறுத்தால் தண்டிக்கப்படுவாய்.
View More சிறைவிடு காதை – மணிமேகலை 24புருஷ லட்சணம் [சிறுகதை]
சிகண்டி அத்தனை மலர்ந்த முகத்தை கிருஷ்ணன் ஒருவனிடம்தான் இது வரை கண்டிருக்கிறான். பீஷ்மர் புன்னகைத்து சிகண்டி இது வரை பார்த்ததே இல்லை, அவன் பார்த்ததெல்லாம் தீர்க்கமான பார்வையுடன் போரிடும், ஆணையிடும் பீஷ்மரைத்தான். இன்றோ பார்ப்பவரின் மனதையும் மலரச் செய்யும் மகிழ்ச்சியை அவர் முகத்தில் அவன் கண்டான்… சிகண்டியின் முகம் விகசித்தது. அவன் தலையை குனிந்துகொண்டான். ஆனால் அவன் கன்னம் பிரகாசிப்பதை அவனாலும் தடுக்க முடியவில்லை. அவன் தோள்கள் லேசாக குலுங்கின. பீஷ்மர் அவனையே நோக்கினார். பிறகு அவரும் சிரிக்க ஆரம்பித்தார். சிகண்டி வாயைப் பொத்திக் கொண்டு மேலும் சிரித்தான்….
View More புருஷ லட்சணம் [சிறுகதை]சிறை செய்த காதை — மணிமேகலை 23
விலக்கப்படவேண்டியவை ஐந்து என்று உலகில் உண்மைப் பொருளை நோக்கி ஆய்வுசெய்து உணர்ந்த ஆன்றோர்கள் கூறுகின்றனர். கள், பொய், களவு, கொலை மற்றும் காமமாகும். இவற்றுள் காமம் மற்ற நான்கையும் தனக்குள் கொண்டதாகும். காமத்தை நீக்கியவர்கள் மற்ற குற்றங்களை நீக்கியவர்களாவர். காமத்தை ஒழித்தவர்களே நிறைந்த தவமுடையவர்கள். காமத்தை நீக்காதவர்கள் பொறுக்கவியலாத துயரை அடைவார்கள்.
View More சிறை செய்த காதை — மணிமேகலை 23கந்திற்பாவை வருவதுரைத்த காதை — மணிமேகலை 22
அறவண அடிகள் உனக்குப் பல தர்ம சிந்தனைகளைக் கூறுவார். தவத்தையும் தருமைத்தையும் சார்ந்து தோன்றும் பனிரெண்டு நிதானங்களைப் பற்றியும், பிறவியறுக்கும் தருமம்பற்றியும் தனக்கே உரியவகையில் கூறுவார். உலகமக்களின் பாவம் என்னும் இருள் அகல ஞாயிறுபோலத் தோன்றிய புத்தன் கூறிய அறநெறிகளைப் பாதுகாக்க வேண்டி பல பிறவிகள் எடுத்து இந்த நகரத்திலேயே தங்கியிருப்பேன். அவர் உன்னையும் உன் தாய் மாதவியையும் அவருடன் தங்கியிருக்கக் கோருவார். உங்களைப் பல்லாண்டு தவறின்றி வாழ வாழ்த்துவார். உன்னுடைய மனப்பாலான துறவறம் பூண்டு அறநெறி கற்கவேண்டும் என்பது நிறைவேற வாழ்த்துவார்
View More கந்திற்பாவை வருவதுரைத்த காதை — மணிமேகலை 22உதயகுமாரனை வாளால் எறிந்த காதை — மணிமேகலை – 21
தன் மனைவியின் வடிவத்திலிருந்த மணிமேகலை உதயகுமாரனுடன் பேசிக்கொண்டிருப்பதை விஞ்சையன் பார்த்தான். தன் மனைவி தன்னைப் பார்த்தும் பாராமல் இருப்பதோடு மட்டுமல்லாமல், அயலான் ஒருவனுடன் பேசிக்கொண்டிருப்பதைக் கண்டு அசூயைகொண்டான்.
அவனோ அரசகுமாரன். இவளோ முத்துப்பல் மின்ன யௌவனம் காட்டும் இளமங்கை. அதனால்தான் அவள் தனது யானைத்தீ பசிப்பிணி மறைந்தபின்னும் வித்யாதர உலகிற்குத் திரும்பாமல் இந்த ஊரில் சுற்றிக்கொண்டிருக்கிறாள் போலும்! விஞ்சையனின் கோபமானது அக்னிக் கொழுந்தினைப்போலத் தழைத்து எரியத்தொடங்கியது.
