1875 முதற்கொண்டு 1975 வரைக்கும் வெவ்வேறு இந்தியவியல் அறிஞர்களும் ஸ்ரீமத் வால்மீகி ராமாயண நூலை படைப்பாய்வுக்கு உட்படுத்தியிருக்கின்றனர். இதில் ஒரு முக்யமான புள்ளி Bhandarkar Oriental Research Institute வாயிலாக அந்த நூலின் க்ரிடிகல் எடிஷன் பதிப்பை ஆய்வின் பாற்பட்டு பதிப்பித்த அறிஞர் பெருமக்களுடைய கருத்துக்களாகும்.. ஸ்ரீ ஏ.கே.ராமானுஜன் எழுதிய “முன்னூறு ராமாயணம்” என்ற வியாசத்தில் சில கருத்துக்களை முன்வைக்கிறார். “அசல் படைப்பு என்று எந்த ஒரு படைப்பையும் சொல்லலாகாது. ஒவ்வொரு ராமாயணக் கதையையும் தனிக்கதையாகப் பார்க்க வேண்டுமேயன்றி மறுவாசிப்பாகப் பார்க்கலாகாது” என்பது எந்த அளவுக்குச் சரியானது? “தேவ பாடையின் இக்கதை செய்தவர் – மூவர் ஆனவர் தம்முளும் முந்திய நாவினார் உரையின்படி” என்று ஆதிகவியாகிய வால்மீகியைப் பின்பற்றியே தாம் இராமாயணம் எழுதுவதாகக் கம்பர் தமது பாயிரத்தில் கூறியுள்ளார்…
View More வால்மீகி ராமாயணமும் “முன்னூறு ராமகதைகளும்”: ஓர் அலசல் – 1Category: இலக்கியம்
வேதம் நிறைந்த தமிழ்நாடு: நூல் வெளியீடு
தொல்லியல் ஆராய்ச்சியாளரும் அறிஞருமான டாக்டர் ஆர்.நாகஸ்வாமி எழுதிய “Tamil Nadu – The Land of Vedas” என்கிற ஆங்கில நூல் வெளியீட்டு விழா இம்மாதம் 12-ம் தேதி சென்னையில் நடந்தது. “தமிழகத்தின் பழம்பெருமை வாய்ந்த கலாச்சாரம் வேதத்தை அடிப்படையாகக் கொண்டது தான். சிறப்பு வாய்ந்த தமிழ்ப் பண்பாட்டிற்கு வேதத்தின் பங்களிப்பு அளவிலடங்காது. என்னுடைய இந்த நூலை இரண்டு பாகங்களாகப் பிரிக்கலாம். முதல் பாகத்தில் தமிழகத்திற்கும், தமிழ் கலாச்சாரத்திற்கும் வேதங்கள் ஆற்றிய பங்கை தமிழ் இலக்கியங்களின் சான்றுகள் மூலமாக நிறுவியுள்ளேன். புறநானூறு முதற்கொண்டு சங்ககால இலக்கியங்களில் ஆரம்பித்து தமிழ் இலக்கியங்களில் கூறப்பட்டுள்ளவற்றை ஆராயந்து சொல்லியிருக்கிறேன். இரண்டாம் பாகத்தில் கல்வெட்டுக்கள், செப்புப்பட்டயங்கள் மூலம் தமிழகத்துக்கு வேதத்தின் பங்களிப்பையும் நிறுவியுள்ளேன். இந்தப் புத்தகத்தில் கூறப்பட்டுள்ள ஒவ்வொரு விஷயமும் ஆதாரங்களின் அடிப்படையில் கூறப்பட்டவை” என்றார் டாக்டர் நாகஸ்வாமி….
View More வேதம் நிறைந்த தமிழ்நாடு: நூல் வெளியீடுசென்னைப் புத்தகக் கண்காட்சி 2016: ஓர் அனுபவம்
பகவத்கீதை ஏன் உலகிலேயே மோசமான புத்தகம், இந்துமதத்தை அழித்து ஒழிப்பதே நமது நோக்கம் போன்ற பிரசாரங்களை வேறுவேறு தலைப்புகளில் சொல்லும் விதவிதமான புத்தகங்கள் கணிசமான அரங்குகளில் இருந்தன. இதற்கு நடுவில், வாசிப்பின்பத்தையும் அறிவுத் தேடலையும் மையப் படுத்தி நல்ல புத்தகங்களை விற்கும் அரங்குகளும் ஆங்காங்கே தென்பட்டன..”புத்தகங்களில் நான் பொன்னியின் செல்வனாக இருக்கிறேன்” என்று மிஸ். தமிழ்த்தாயின் கீதை கட்டாயம் சொல்லக்கூடும். அந்த அளவுக்கு சின்னதும் பெரிசுமாக விதவிதமான அளவுகளில், விதவிதமான அட்டைப்படங்களுடன் பொ.செ. வீற்றிருந்தது… சென்னைப் புத்தகக் கண்காட்சி என்பது ஒரு மிக முக்கியமான பண்பாட்டு நிகழ்வு. அது தொடர்ந்து இவ்வளவு பெரிய அளவில் இத்தகைய வீச்சுடன் நடப்பதே ஒரு பெருமைக்குரிய விஷயம்…
View More சென்னைப் புத்தகக் கண்காட்சி 2016: ஓர் அனுபவம்தமிழ் இலக்கிய வாசிப்பை எங்கிருந்து தொடங்குவது
தமிழ் இலக்கிய வாசிப்பை எங்கிருந்து தொடங்குவது என்று கேட்டுவரும் சில நண்பர்களுக்கு எனது பரிந்துரை (நூலகத்தில் போய் புத்தகம் படிப்பதெல்லாம் ruled out, வாங்கித் தான் வாசிக்க வேண்டும் என்பதால், ‘வாங்கி’ படிக்கும் வகையில் இருக்கவேண்டும் என்பதையும் கணக்கில் கொண்டு)… உங்கள் ஒட்டுமொத்த தமிழ் நவீன இலக்கிய வாசிப்புக்கு இந்த நூலை ஒரு வழிகாட்டியாகக் கொள்ளலாம். நூலின் கடைசியில் தமிழின் மிகச்சிறந்த நாவல்கள், சிறுகதைகள், கவிதைகள், வணிக இலக்கியம் எனப் பட்டியல்கள் உள்ளன.. திரும்பத் திரும்ப வாசித்துத் தீரவேண்டிய, பல எழுத்தாளர்களின் கதைகள் ஒரே புத்தகத்தில் அடங்கிய தொகுப்பு இது… கவிதைகளில் உங்களுக்கு ஆர்வம் உண்டா தெரியவில்லை. ஆனால், கவிதைகளை வாசித்து ரசிக்க இயலாத இலக்கிய வாசிப்பு முழுமையானதல்ல, சொல்லப் போனால், ரொம்பவே அரைகுறையானது…
View More தமிழ் இலக்கிய வாசிப்பை எங்கிருந்து தொடங்குவதுபாரதியின் பாடல்களில் வேதத்தின் ஆளுமை
தீ வளர்த்தல் என்பது ஒரு சடங்கு மட்டுமல்ல. அன்பு, அறிவு ,அருள், இன்பம் ஆகியவை வேண்டும் கனலாகும் அக்னி தத்துவத்தில் அவனுக்கு பெருமதிப்பு இருந்ததால்தான் வழிபாட்டு அம்சங்களில் மட்டுமின்றி, கவிதைநயம் வெளிப்படும் இடங்களிலெல்லாம் தீ, நெருப்புச்சுவை, சுடர் சோதி, கனல், அக்னிக்குஞ்சு போன்ற சொற்களைப் பயன்படுத்தியிருக்கிறான்.
அக்னியின் பல்வேறு வடிவங்கள் குறியீடுகளாகவும், நேர்முகக் கருத்துக்களாகவும், அமைகின்றன. அறியாமை உறக்கத்திலிருந்து ஆத்மாவை எழுப்பும் விடியலாக வைகறை வேதங்களில் காட்டப்படுகிறாள்.
அன்னையர் தினம்
ஒருதாய் எட்டு குழந்தைகளைக் காப்பாற்றுவாள். ஆனால் அந்த எட்டுக் குழந்தைகளும் சேர்ந்துகூட அந்தத் தாயைக் காப்பாற்றமாட்டார்களாம். முன்பெல்லாம் மதர்ஸ் டே என்ற ஒன்றைப்பற்றிக் கேள்விப்பட்டதேயில்லை. இப்பொழுது வருஷம் 365 நாட்களுமே ஏதாவது ஒரு டே கொண்டாடப்பட்டு வருகிறது. ஒருபக்கம் மீடியாவில் ‘மதர்ஸ் டே’ ஆரவாரமாகப் பேசப்பட்டாலும் மறுபக்கம் முதியோர் இல்லங்கள்! மதர்ஸ் டேயில் அக்கறையும் ஆர்வமும் நம்பிக்கையும் இருந்தால் முதியோர் இல்லங்கள் ஏன்?
View More அன்னையர் தினம்அடுத்த வீடு
மாமா அடிக்கடி புகையிலை போடுவார். நான் அங்கு போகும்போதெல்லாம் மறக்காமல் அரையணா சாமான் (புகையிலை) வாங்கித்தரச் சொல்லுவார். சிலசமயம் காசும் தருவார். சில சமயம் ”நான் காசு தந்தேனே கார்டு எங்கே? அரையணா சாமான் எங்கே?” என்று கேட்பார். வாயில் வந்த பொய்யைச் சொல்லி சமாளிப்பேன்.
View More அடுத்த வீடுகால்குலஸ் வாழ்க்கை
அவர் புன்னகைத்தார். “ நாலு மார்க்” என்றார். ராகவன் சாரின் ஒரு சிறப்பு அம்சம் அது என்று சீனியர்கள் சொல்லியிருக்கிறார்கள். அவர் என்னைப் பார்த்தார். “ நீ அந்த சியாமளாவைப் பார்த்து ஜொள்ளு விடுவதை நான் பாத்திருக்கேன். அந்த காதலை ஜி g ந்னு வைச்சுக்குவோம். சியாமளாவின் புன்னகையை எக்ஸ் Xனு வைச்சுக்குவோம்” … வீட்டின் உட்புறம் , ஒரு அறையில் கட்டிலின் அருகே நாற்காலியில் அவர் அமர்ந்திருந்தார். உடல் வற்றிப்போய், கைகளில் நரம்புகள் புடைத்து, அசாதாரணப் பளபளப்பில் தோல் மினுங்க, அவரைப் பார்க்கையில் என்னமோ செய்தது….
View More கால்குலஸ் வாழ்க்கைபாரதி பாடலில் அராஜக “செக்யுலர்” திருத்தங்கள்
பாரதியின் மூலப் பிரதியில், சொற்கள் தெளிவாக இருந்த சில இடங்களில் கூட வலிந்து திருத்தங்கள் செய்யப் பட்டு அதிகாரபூர்வமான “அரசாங்கப் பதிப்பு” வெளியிடப்பட்டுள்ளது. “பேய்த்தகை கொண்டோர், பெருமையும் வன்மையும் ஞானமும் அறியா நவைபடு துருக்கர்”.. இதில் *நவைபடு துருக்கர்* என்பது, “நவைபுரி பகைவர்” என்று மாற்றப் பட்டிருக்கிறது. வேறோர் இடத்தில் “துருக்கர் ஆண்டழிப்ப” என்பது “துரோகிகள் அழிப்ப” என்று மாற்றப் பட்டிருக்கிறது.. “மேற்படி செய்யுளிலே மகமதியர்களைப் பற்றி வந்திருக்கும் பிரஸ்தாபங்களில் வீரரசத்தை மட்டுமே கவனிக்கவேண்டுமேயல்லாமல், மகமதிய நண்பர்கள் தமது விஷயத்தில் உதாசீனம் இருப்பதாக நினைக்கக் கூடாது என்று கேட்டுக் கொள்கிறோம்…” என்று பாரதியே சொல்கிறார். பாரதிக்கு எந்த அளவுக்கு மத நல்லிணக்கத்திலும், சமூக ஒற்றுமையிலும் கருத்து இருந்ததோ, அதே போன்று, கூர்மையான, சுயமரியாதையுடன் கூட வரலாற்றுப் பிரக்ஞையும் இருந்தது….
View More பாரதி பாடலில் அராஜக “செக்யுலர்” திருத்தங்கள்அம்மாவும் சில மாமிகளும் மற்றும் நானும் [சிறுகதை]
அந்த வீட்டு மாமா வருகிற கார் சத்தம் தெரு முனையில் கேட்டவுடனேயே மாமி பேச்சை அவசர அவசரமாக நிறுத்தி விட்டு “வரேன் மாமி” என சன்னலை விட்டு ஓடுவாள்.இது அம்மாவுக்கும் எங்களுக்கும் பெரிய ஆச்சரியம், ஏனெனில் எங்கள் அப்பா வருகிறாரென்று நாங்கள் எந்த வேலையையும், விளையாட்டையும், பேச்சையும் பாதியிலே நிறுத்தியதேயில்லை… ஒரு விதத்தில் மாமாவும் நல்லவர்தான். மாமியும் பாவம் பரம சாது. ஆனால் அவர்களின் உறவின் இழையில் நுண்ணிய சிக்கல்கள். சராசரி நல்ல தனத்தொடு கூடிய ஒரு ஆண் + சராசரியான ஒரு நல்ல பெண் = ஒரு சராசரி சந்தோஷமான தம்பதிகள் என்ற சமன்பாடு சரியாக இருக்கின்ற தருணங்கள் வெகு குறைவே என்ற ஞானம் எனக்கு பிறந்தது… நான் சொன்னேன் ”அந்த மாமி பாவம் இல்ல!!” அண்ணா சொன்னான் “போடி பாவமும் இல்ல ஒண்ணும் இல்ல! பெரிய பங்களாவில இருங்காங்க. கார் வச்சுண்டு இருக்காங்க பையன் கான்வெண்டில படிக்கறான் ஊட்டியிலயோ எங்கயோ, நம்மளை மாதிரி கார்பரேஷன் ஸ்கூலா என்ன? ஜாலியாத்தான் இருக்காங்க. நாமதான் பாவம்!”….
View More அம்மாவும் சில மாமிகளும் மற்றும் நானும் [சிறுகதை]