கானக மக்களும் மலைவாசிகளும் தமக்கென்று ஒரு தனிக்கலாசாரத்தைப் பின்பற்றுகின்றனர். அவர்கள் இந்துக்களே அல்ல – இதுபோன்ற ஆதாரமற்ற கருத்துக்கள் காலனியம் கட்டமைத்த வரலாறு மூலமாக புகுத்தப் பட்டன. தமிழில் உள்ள சைவ, வைணவ பக்தி இலக்கியங்களை சாதாரணமாகக் கற்பவர்களுக்குக் கூட இந்த சித்திரிப்புகள் எவ்வளவு பொய்யானவை என்பது புரியும். “கானவர் தம் மாமகளிர்” என்கிறார் சம்பந்தர். மலைக்குறவர் இனங்கள் திருமாலின் பொன்னடி வணங்கும் காட்சியைப் பாடுகிறார் பெரியாழ்வார்..
View More கானக மக்களும் மலைக்கோயில்களும்Category: இலக்கியம்
இரு புறநானூற்றுப் பாடல்கள்
ஒக்கல் வாழ்க்கையின் குரூரத்தால் அதன் வன்முறையால் நொந்து போன ஒருவனின் புலம்பலாகத் தான் இந்த எளிய கவிதை எனக்குத் தோன்றுகிறது. புல்லைத் தின்று வாழும் அந்த ஜீவனுக்கு மான் என்ற அடையாளம் கூட இல்லை, வெறும் ‘புல்வாய்’ அது… தமர் பிறர் அறியா அமர் – புறநானூற்றுப் பாடல்களை வாசித்துக் கொண்டே வரும் போது, இந்தச் சொற்றொடரைக் கண்டு திகைத்து நின்று விட்டேன். தம்மவர் என்றும் அயலார் என்றும் அறியாத போர்க்களம்…
View More இரு புறநானூற்றுப் பாடல்கள்வாரியாரின் திருப்புகழ் குரு
திருமுருக கிருபானந்த வாரியார் சுவாமிகளின் திருப்புகழ் அறிவு அவரது திருப்புகழமிர்தம் என்கிற பத்திரிகை மூலமும், பல தொகுதிகளாக இருக்கும் திருப்புகள் விரிவுரை நூல்கள் மூலமாகவும் தெரிந்து கொள்ளலாம். அத்தனை திராவிடப்பதர்களும் தெய்வத் தமிழுக்கு செய்த தீமையை அனலில் இட்ட பஞ்சாக அழிக்கும் வலிமை சுவாமிகளின் திருப்புகழ் விரிவுரைக்கு உண்டு.இப்படிப்பட்ட மகானின் திருப்புகழ் குரு மதுரை பிரம்மஸ்ரீ திருப்புகழ் சுவாமி ஐயர்…
View More வாரியாரின் திருப்புகழ் குருஅர்த்தங்கள்: அச்சம், மடம், நாணம், பயிர்ப்பு
ஒரு பெண் எப்போது பார்த்தாலும், வேண்டியது வேண்டாதது எல்லாத்துக்கும் நாணப்பட வேண்டும் என்றும், பயந்துகொண்டே இருக்க வேண்டும் என்றும், முட்டாளாகத் திரிய வேண்டும் என்றும் நம் முன்னோர்கள் நினைத்தார்கள் என்று எண்ணுவது அவர்களுக்கு நாம் செய்யும் துரோகம். வள்ளுவர் நாணுடைமை என்ற ஓர் அதிகாரத்தையே உருவாக்கியிருக்கிறார். அங்கே ஆண்/பெண் வேறுபாடில்லை…
View More அர்த்தங்கள்: அச்சம், மடம், நாணம், பயிர்ப்புகம்பர் உருவப்படங்கள்
காலத்தால் முற்பட்ட, வரலாற்று ரீதியான, ஆதாரபூர்வமான கம்பர் உருவம் என்றால் அது தேரெழுந்தூர் கோயில் சிற்பம் தான். ஆனால், கம்பன் கழகங்கள் இந்த உருவத்தை ஏதோ காரணத்தால் வேண்டுமென்றே பயன்படுத்தாமல், தாங்களாக ஒரு உருவத்தைக் கற்பித்து, அந்தப் படங்களையே பயன்படுத்தி வருகிறார்கள்..
View More கம்பர் உருவப்படங்கள்நல்லா இருந்த தமிழ்நாடும்..
இளங்கோவடிகள் வந்தார். சிலப்பதிகாரம் என்ற முத்தாரத்தை தமிழன்னைக்கு அணிவித்தார். மாணிக்கவாசகர், சுந்தரர் மற்றும் நாயன்மார்கள் தமிழன்னையை ஆடவல்லான் கையில் கொண்டு சேர்த்தனர். யாருக்கு கிடைக்கும் இந்த புகழ், என்றே மனம் குளிர்ந்தாள் தாய்… ஈரோட்டில் இருந்து ஒரு கயவன் வந்தான். அவளை காட்டுமிராண்டி என்று தூற்றினான். காஞ்சியில் இருந்து மற்றொரு விஷம் இறங்கியது. திருவாரூர் ரயில் வந்தது…
View More நல்லா இருந்த தமிழ்நாடும்..சென்றதினி மீளாது மூடரே : ஓர் விளக்கம்
கவலை இல்லாத மனிதர் உண்டா? கடந்த காலத்தையும், எதிர்காலத்தையும் நினைத்துத்தானே நிகழ்காலம் சாத்தியம் ஆகிறது. இன்று புதிதாய்ப் பிறந்தோம் என்று ஒவ்வொரு நாளும் ஒருவர் திண்ணமாக அந்த எண்ணத்தை திடமாக மனத்தில் கொண்டு கடந்த காலத்தை விட்டால் பின் அந்த மனநிலை எப்படி இருக்கும்? அதுவே மிகவும் மூட நிலையாகத்தானே இருக்கும்? கஷ்டம்… நீங்கள் மயக்கத்திலிருந்து விழித்து உங்கள் இயல்பை உணரும் ஒவ்வொரு கணமும் புதுப் பிறவிதான். இது நோயில்லை. இதுதான் ஸ்வஸ்தம் என்பது. இந்த விளக்கத்தைப் பாரதியார் எங்கே கூறுகிறார்?..
View More சென்றதினி மீளாது மூடரே : ஓர் விளக்கம்சிவமாக்கும் தெய்வம் – 2
திரும்ப முனைவர் கோ.ந.முத்துக்குமாரசுவாமி ஐயாவுடனான எனது பிள்ளைத்தமிழ் ஆராய்ச்சி அனுபவங்களைத் தொடர்கிறேன்’நீயெல்லாம் தமிழைப் படித்து என்ன செய்து விடப்போகிறாய்?’ எனும் மனப்பான்மை அவருக்கு இருக்கவேயில்லை. முதல் சந்திப்பிலிருந்தே, அறிவியல் புலத்தின் பின்னணியிலிருந்து நான் தமிழை நோக்கிப் பயணித்தது அவருக்குப் பெருத்த மகிழ்ச்சியையும், ஆச்சரியத்தையும் அளித்தது. எனது தமிழார்வத்தை இலக்கிய, ஆன்மீக உண(ர்)வூட்டி வளர்த்தார்…
View More சிவமாக்கும் தெய்வம் – 2சிவனுக்கான திருவீடு
சிவபெருமானை எழுந்தருளச் செய்ய கோபுரங்களும், விமானங்களும், மாடங்களும் கொண்ட மாபெரும் கோயில்களோ அல்லது பூஜா மண்டபங்களோ அத்தியாவசியமா என்ன? அவனை என்றும் இருத்தி வழிபடுவதற்கு உரிய உன்னதமான திருவீடு எது? மாணிக்கவாசகர், ஆதிசங்கரர், பசவண்ணர், திருமூலர் முதலான மகான்களும் அருளாளர்களும் தெளிவாகவே அதைக் கூறுகிறார்கள்…
View More சிவனுக்கான திருவீடுபாரதியாரின் அழகுத் தெய்வம் பாடல்: ஓர் தேடல்
ஞாலத்தில் விரும்பியது நண்ண வேண்டும் என்ற நியதி இல்லை. ஆனால் எண்ணியது எய்தும் என்று பாரதி கூற வருவது போல் படுகிறது. விருப்பம் என்பது நமது இச்சையை மட்டும் சார்ந்து நிற்பது. ஆனால் எண்ணுவது என்பது உலகில் உள்ள புற அக மெய்மையைக் கவனத்தில் கொண்டு எழும் மனத்தின் செய்கை என்று படுகிறது… மனத்தின் விழியில் பட்டதை மனம் நயப்பது விருப்பம். மனத்தின் விழியில் அல்லாமல் ஜீவனின் விழியில் பட்ட சிவம் என்னும் நன்மையான பொருளை நாடுதல் எண்ணம் என்று ஒருவாறு வித்யாசம் காணமுடிகிறது. …
View More பாரதியாரின் அழகுத் தெய்வம் பாடல்: ஓர் தேடல்