ஆதி சங்கரரின் ஆன்ம போதம் -6.

உலகம் என்று நாம் காண்பது நம் உடலில் உள்ள கண், காது, மூக்கு, நாக்கு மற்றும் தோல் என்ற ஐந்து கர்ம இந்திரியங்கள் மூலமாகவும், அவை வழியே பெறப்படும் தகவல்களின் மேல் நாம் வளர்க்கும் எண்ணங்கள் மூலமாகவும் நம் மனதில் பதிந்துள்ள ஓர் உருவகம்தான். இந்திரியங்கள் மூலம் நமக்குக் கிடைக்கும் தகவல்கள் எப்படி இருந்தாலும், இறுதியில் அவைகளைப் பற்றிய நமது எண்ணங்கள் முன்னதைவிட வலிமை வாய்ந்தனவாக இருக்கின்றன.

தற்போது வரும் தகவல்களுடன், முன்பு அவை தொடர்பான வந்த தகவல்களும் அவை பற்றிய எண்ணங்களும் சேர்ந்து ஒரு தொகுப்பாக மனதில் பதிவதுதான் அந்த வலிமைக்குக் காரணம். அதாவது உள்ளதைவிட நாம் பார்க்கும் பார்வையின் கோணமும் (அஹங்காரம்) இதில் சேர்ந்திருக்கிறது. இவை எல்லாமே நமது விழிப்பு (ஜாக்ரத்) நிலையில் நடக்கின்றன. அதனால் அதை “ஜாக்ரத அஹங்காரம்” என்று சொல்வார்கள்.

View More ஆதி சங்கரரின் ஆன்ம போதம் -6.

கடவுள் என்றால் என்ன? – 2

சுவாமி தயானந்த சரஸ்வதியின் விளக்கங்கள் – ஈஸ்வரன் பௌதீக ஒழுங்கு முறைகளிலும், உயிரியல் ஒழுங்கு முறைகளிலும் வியாபித்து இருக்கின்றார். எனவே உயிரியலைப் பற்றித் தெரிந்துகொள்வது ஈஸ்வரனை பற்றி தெரிந்து கொள்வதே ஆகும். அதனால் இதுவும் புனிதமானது… என்னடா ஒரு எலிக்கு வேலை செய்யும் மருந்து நமக்கு அந்த வேலையை செய்வதா ! நாம் எலியைவிட மட்டமா என்பது உண்மை அல்ல. முத்துக்களை தாங்கி பிடிக்க அதன் இடையே கோர்க்கப்பட்ட நூல் இழைபோல் பிராணன் என்பது எல்லா உயிரினிடத்தும் உள்ளே இருந்து உயிருடன் இருக்கும் வரையில் தாங்கிப்பிடிக்கிறது… தர்மம் என்பது மனிதனுடைய தலையைப் போன்றது. அதுவே உங்கள் செய்கைகளை கட்டுப்படுத்துகிறது. இந்த கட்டுப்படுத்துதல் இல்லை என்றால் ஒருவருக்கு எது நல்லது, எது கெட்டது என்ற தெரிந்துகொள்ள வாய்பே இல்லை….

View More கடவுள் என்றால் என்ன? – 2

கடவுள் என்றால் என்ன? – 1

சுவாமி தயானந்த சரஸ்வதி அவர்களின் விளக்கங்கள் – வேதம் இங்கே இருப்பது ஒரு ஈஸ்வரன் என்று சொல்லவில்லை, இங்கே இருப்பது எல்லாமுமே ஈஸ்வரன்தான் என்கிறது… ஒரு பௌதீக பேராசிரியர் சக்தி-பொருண்மை என்பதை கூறுகையில் E=mc2 என்கிறார். ஒரு எம்.எஸ்.சி. மாணவன் அவர் வகுப்பில் எழுந்து எனக்கு உங்கள்மேல் நம்பிக்கை இருப்பதால் எனக்கு அந்த சமன்பாடு பற்றி புரியாவிட்டாலும் பரவாயில்லை என்பது எப்படி முட்டாள் தனமோ அப்படித்தான் நான் கடவுளை நம்புகிறேன் என்பதுவும். இந்த அகிலமே ஈஸ்வரன் தான் என்றால் அது வெறும் நம்பிக்கை சார்ந்தது அல்ல; நாம் துருவித் துருவி ஆராய்ந்து புரிந்து கொள்ள வேண்டிய ஒன்றாகும்… .சிருஷ்டியும், சிருஷ்டிப்பவரும் கடவுள் தான் என்பது வேதம். இங்கே படைப்பும் படைப்போனும் வேறு வேறு இல்லை. எனவே இந்த ஜகத் என்பது ஈஸ்வரனின் விரிவாக்கமே அன்றி உருவாக்கம் இல்லை என்று புரிந்துகொள்ள வேண்டும்…..

View More கடவுள் என்றால் என்ன? – 1

ஆதி சங்கரரின் ஆன்ம போதம் – 5

அது எப்படி மனத்தை மனத்தால் அறியமுடியும் என்று உங்களுக்குக் கேட்கத் தோன்றினால் அது நியாயமான கேள்விதான். அதனை விளக்க வேதாந்திகள் ஒரு உதாரணம் சொல்வார்கள். ரமணரும் ‘பிணம் சுடு தடி போல்’ என்ற அந்த உவமையைக் கூறுகிறார். மற்ற கட்டைகளோடு பிணத்தையும் நன்கு எரியவிட்ட கழியும் சேர்ந்து தானும் எரிந்துவிடும். இப்படியாக மனத்தின் மூலத்தை அறிவிக்க உதவிய மனம் தானும் அழிந்து போவதை மனோ நாசம் என்பார்கள்…. தடி ஒன்றை எடுத்துக்கொண்டு தன்னை நோக்கி ஒருவன் வருகிறான் என்றால் ஓடிவிடப் பார்க்கும் ஒரு பசு, அவனே தடிக்குப் பதிலாக புல்லை எடுத்துக்கொண்டு வருகிறான் என்றால் அவனை நோக்கித் தானே ஓடி வருகிறது? இப்படித்தான் மனிதர்களும் தான் விரும்புவதை நோக்கி ஓடிக்கொண்டும், வெறுப்பதை விட்டு விலகியும் இருக்கிறார்கள். விலங்குகளின் இந்தக் குணத்திலிருந்தும் மனிதன் மீள வேண்டாமா என்று கேட்கிறார்….

View More ஆதி சங்கரரின் ஆன்ம போதம் – 5

[பாகம் 24] அழுதால் அடையலாம்: சித்பவானந்தர்

ருத்ரன் என்பதன் பொருள் “அழச்செய்பவன்” என்பதாகும். உயிர்களை அழச் செய்வதன் மூலம் அவைகளைப் பண்பாடுறச் செய்வது ருத்ரனின் ஒப்பற்ற செயலாகிறது. உலகத்தவர் அழுகின்ற அழுகையின் உட்பொருளை ஆராய்ந்து பார்த்தால் அது துன்பத்தினை தவிர்த்து இன்பத்தினை நாடுவதாகவே இருப்பதைக் காணலாம்…. அழிந்து போகும் உலகப் பொருட்களை நாடி ஓடும் மனிதன் ஒருக்காலும் நிலைத்த இன்பத்தினைப் பெறமாட்டான். அதற்கு மாறாக அவன் மேலும் மேலும் துன்பத்தில் அகப்பட்டுப் பிறவிப் பெருங்கடலினூடே தத்தளிக்க வேண்டியதுதான்… யானே பொய், என் நெஞ்சும் பொய், என் அன்பும் பொய் – ஆனால் வினையேன் அழுதால் உன்னைப் பெறலாமே…

View More [பாகம் 24] அழுதால் அடையலாம்: சித்பவானந்தர்

ஆதி சங்கரரின் ஆன்ம போதம் – 4

அறியாமை என்பதற்கு ஒரு தனியான இருப்பு கிடையாது. அறிவு இல்லாமல் இருப்பதுதான் அறியாமை எனும் நிலை. அறியாமையை அகற்றுவதுதான் அறிவைப் புகட்டுவது என்றாகிறது…. கலங்கிய மாசு படிந்த நீரில் தேத்தாங் கொட்டையின் பொடியைப் போட்டால் அது எப்படி நீரைத் தெளிவாக்கியபின் தானும் நீரின் அடியில் வண்டலுடன் தங்கி மறைகிறதோ, அது போல அறியாமையில் கலங்கி இருக்கும் சீவனுக்கு, ஞானத்தை நாடி அவன் செய்யும் பயிற்சிகள் மூலம், அறியாமையைப் போக்கி ஞானத்தைக் கொடுத்து, பின்பு அந்த ஞானமும் தானே அழியும்… .
கர்மங்கள் எல்லாம் அஞ்ஞானத்திற்கு எதிராகச் செயல்படாததால், அவைகள் அஞ்ஞானத்தை நீக்குவதில்லை. ஞானம் ஒன்றே அறியாமையைப் போக்கும்….

View More ஆதி சங்கரரின் ஆன்ம போதம் – 4

ஆதி சங்கரரின் ஆன்ம போதம் – 3

ஒரு கர்மத்தைச் செய்வதால் அதன் விளைவாக ஒரு குறிப்பிட்ட இடத்தில் கிடைப்பதை நாம் பெறுவது ஆப்ய கர்மம்; கர்மம் செய்வதால் இப்போது இல்லாவிட்டாலும் வேறொரு காலத்தில் கிடைக்கும் என்பது உத்பாத்ய கர்மம்; ஒரு வடிவத்தில் இல்லாவிட்டால் உரு மாற்றி வேறொரு வடிவத்தில் காணலாம் என்பது விகார்ய கர்மம்; ஒரு பொருளின் மேல் உள்ள அசுத்தத்தை நீக்துவதம்மூலன் அந்தப் பொருளை நன்கு காணக்கூடியது சம்ஸ்கார்ய கர்மம்…. இருக்கும் ஆன்மாவை மறைக்கும் உபாதிகளை நீக்க வேண்டும் என்பதற்குத்தான் முயற்சிகள் எல்லாமே…

View More ஆதி சங்கரரின் ஆன்ம போதம் – 3

ஆதி சங்கரரின் ஆன்ம போதம் – 2

இறக்காமல் இருப்பதற்கு பிறக்காமல் இருக்க வேண்டும்; அது எப்படி என்று யோசிப்பவன்தான் முமுக்ஷூ என்ற சாதகன்… ஒன்றை அறிவது மட்டுமல்லாது, அந்த அறிவைப் பற்றி அறிவது என்பதில் மனிதன் மற்ற ஜீவராசிகளிடம் இருந்தும் வித்தியாசப்படுகிறான்… தவங்கள் செய்வதாலேயே ஒருவனுக்கு ஆன்மாவைப் பற்றிய அறிவு வளர்ந்துவிடாது. ஆனால் அவை ஆன்மாவைப் பற்றிய அறிவை வளரவிடாது தடுக்கும், நமது முந்தைய பாவச் செயல்களால் நாமே வளர்த்துவிட்டுள்ள, திரைகளை அகற்ற உதவும்… நாம் ஆன்மாவைப் பற்றிய போதத்தின் முதல் படியில் இருக்கிறோம்.

View More ஆதி சங்கரரின் ஆன்ம போதம் – 2

[பாகம் 20] மேலாம் வாழ்வு, உண்மை காணல்

அவதார புருஷர்கள் பெரிய கப்பல் போன்று மற்றவர்களையும் கரையேற்றுவர். சச்சிதானந்தம் பிறப்புரிமை என்பதை ஒவ்வொருவரும் அறியவேண்டும். செயல் அனைத்தையும் கடவுளிடம் ஒப்படைக்கிறவர்கள், தங்களுடைய பிறப்புரிமையைப் பெறத் தகுதியுடையவர்களாகிறார்கள்… நம்முடைய கோட்பாட்டினின்று மாறுபட்டுள்ளது என்ற ஒரே காரணம் பற்றி, பிறர் கோட்பாடுகளை ஒதுக்குதல், புறக்கணித்தல் பொருந்தாது… அன்பு செய்து வாழும் தன் மனைவியைத் தன்பாற்பட்டவள் என்ற காரணம்பற்றி ஒருவன் தாழ்வாக எண்ணுவானாயின் அவனினும் குறைபாடுடையவன் எவன்?

View More [பாகம் 20] மேலாம் வாழ்வு, உண்மை காணல்

ஆதி சங்கரரின் ஆன்ம போதம் – 1

எப்போதும் இருக்கும் சூரியனை மேகம் மறைப்பதால் சூரியன் இல்லை என்று சொல்வது எப்படித் தவறோ, அதே போன்று பிரம்மத்தைப் பற்றி அறியாததால் பிரம்மம் இல்லை என்று சொல்வது தவறு… பகவான் ரமணர் எழுதிய ஒவ்வொரு நூலுக்கும் பின்னணியில் காரணம் இருக்கிறது. பகவான் தானாக எழுதியவை மிகக் குறைவு. முஸ்லீம் அன்பர் ஒருவரால் உந்தப்பட்ட ஒரு ரசமான பின்னணியுடன் இந்த “ஆன்ம போதம்” தமிழில் உருவெடுத்தது. சங்கரரின் இந்த நூல் முழுவதும், 69 சுலோகங்களும் தமிழ் வெண்பாக்களாக பகவானால் எழுதி முடிக்கப்பட்டன… தவங்களினால் பாவம் தவிர்ந்தவராய், சாந்தி அவிர்ந்தவராய், ஆசை அறுந்தாராய் ….

View More ஆதி சங்கரரின் ஆன்ம போதம் – 1