அணு ஆயுதப்போர் இருநாட்டிற்குமே மாபெரும் கேட்டையும், அழிவையும், பல இலட்சக்கணக்கான உயிர்ச்சேதத்தையும், அணுக்கதிர்வீச்சினால் பல்லாண்டுகள் எவரும் அணுகமுடியாத நிலமையையும் விளைவிக்கும் [mutually assured destruction]. அரசு சரியாகச் செயல்பட முடியாத நிலையும் உண்டாகும். பயங்கரவாதிகள் கையில் அணு ஆயுதங்கள் சிக்க பாகிஸ்தான் காரணமாகக்கூடும் என்று டேனியல் பைமன் எழுதியுள்ளார்.
View More ராஃபேல் போர்விமானமும், பாரதப் படைத்தலைமையும்… – 1Category: தொடர்
தொடர் கட்டுரைகள்
கொலைகாரக் கிறிஸ்தவம் – 12
……போர்ச்சுகீசியர்களுக்கு எதிராக முஸ்லிம்கள் செய்த சதிவேலைகளுக்காகவும், துரோகத்திற்காகவும், கோவாவின் எதிர்காலப் பாதுகாப்பிற்காகவும் மிக அவசியமானது என நினைத்த அல்ஃபோன்ஸோ டி அல்புகர்க்கி , தனது கேப்டன்களை அழைத்து, கோவா தீவில் வசிக்கும் அனைத்து முஸ்லிம்களையும் — அவர்கள் ஆண், பெண், குழந்தைகள் என யாராக இருந்தாலும் — கண்ட இடத்திலேயே கொல்லும்படி உத்தரவிட்டான். இதனைத் தொடர்ந்து, அடுத்த நான்கு நாட்கள் கோவாவில் வசித்த முஸ்லிம்களின் ரத்தம் தெருவெங்கும் ஓடியது.
View More கொலைகாரக் கிறிஸ்தவம் – 12கொலைகாரக் கிறிஸ்தவம்: ஓர் வரலாறு – 1
இந்தியாவின் கோவா பகுதியை ஆண்ட போர்ச்சுக்கீசிய கிறிஸ்தவர்களால் தங்களின் ஆளுமைக்கு உட்பட்ட பகுதியில் வசிக்கும் ஹிந்துக்கள், சமணர்கள், பவுத்தர்கள் போன்றவர்களின் மதவழிபாட்டு உரிமையை அழித்தொழித்து, அவர்களைக் கிறிஸ்தவர்களாக கட்டாய மதமாற்றம் செய்யும் வகையில் கொண்டுவரப்பட்ட ‘இன்குசிஷன் (Inquisition)’ என்னும் கொடூரமான வழக்கம் 1560-ஆம் வருடம் ஆரம்பிக்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து பல இலட்சக்கணக்கான ஹிந்துக்கள் கொடூரமான முறையில் மதமாற்றம் செய்யப்பட்டார்கள். மதம் மாற மறுத்த பலர் இரக்கமற்ற முறையில் படுகொலை செய்யப்பட்டார்கள். துரதிருஷ்டவசமாக இந்தியர்களுக்கு, முக்கியமாக ஹிந்துக்களுக்கு அது குறித்தான அறிவு சிறிதும் இல்லாமல் இருப்பது கண்கூடு. அந்தக் கொடூர காலகட்டத்தைக் குறித்து இங்கு சிறிதளவு அறிவினைப் புகட்டுவதே இந்தத் தொடரின் நோக்கமாகும்…
View More கொலைகாரக் கிறிஸ்தவம்: ஓர் வரலாறு – 1கிறிஸ்தவ மதத்தை நிராகரித்தல் – 12
<< இத்தொடரின் மற்ற பகுதிகளை இங்கே வாசிக்கலாம் >> ஸ்ரீலஸ்ரீ சட்டம்பி சுவாமிகள்…
View More கிறிஸ்தவ மதத்தை நிராகரித்தல் – 12நம்பிக்கை – 5: பிரார்த்தனை – எதற்காக, எப்படிச் செய்ய வேண்டும்?
நான் ஆரம்பத்திலிருந்தே, எப்போதும், பிரார்த்தனை என்பது ஒரு பயனைப் பெறுவதற்கு என்று நம்பியிருந்தால்? அதை நான் எப்படி மாற்றிக்கொள்வது?… நல்ல கேள்வி. நீ தேடியது கிடைப்பதற்கு உனக்குப் பிரார்த்தனை உதவியதா என்கிற கேள்வியை நீ உன்னிடத்திலேயே கேட்டுக்கொள்ள வேண்டும். அவ்வாறு சில முறை நடந்திருக்கலாம். அனால் எப்போதும் அப்படி நடந்திருக்காது. விதிவிலக்கை விதியாக்க முடியாது. உண்மியிலேயே கடவுள் நீ கேட்கும் பயன்களையெல்லாம் தந்துகொண்டிருந்தால் இவ்வுலகில் என்ன நடக்கும் என்பது நமக்குத் தெரிந்தது தானே! ப்ரூஸ் அல்மைட்டி (Bruce Almighty) திரைப்படம் ஞாபகம் இருக்கிறதல்லவா?…. “அண்ணா! இந்தக் காலத்துக் குழந்தைகள் எதற்கெடுத்தாலும் ஆதாரம் கேட்கிறார்கள். நான் எப்படிப் பதில் சொல்வது?” என்று தன் கவலையைத் தெரிவித்தாள் சௌம்யா. இந்த நவீன காலத்துக் குழந்தைகள் தான் ஆதாரம் கேட்கின்றன என்று நீ உண்மையிலேயே நினைக்கிறாயா? பண்டையகாலம் தொன்றுதொட்டு, மனித இனம் கேள்வி கேட்க ஆரம்பித்ததிலிருந்து, இதே கதைதான். உண்மையில் சொல்லப்போனால், நம்முடைய சமய / ஆன்மிக நூல்களில் பெரும்பான்மையானவை குருவுக்கும் சீடனுக்கும் இடையே நடக்கும் உரையாடல்கள் போலவும், கேள்வி பதில் பகுதிகளாகவும் தான் இருக்கின்றன…
View More நம்பிக்கை – 5: பிரார்த்தனை – எதற்காக, எப்படிச் செய்ய வேண்டும்?நம்பிக்கை – 3: நான் யார்?
நீ பார்ப்பதாகச் சொல்லும் அனைத்துப் பொருட்களும், நீ நடைமுறப்படுத்துவதற்காகப் பயன்படுத்தும் உருவங்களுக்குக் கொடுக்கப்பட்டுள்ள பெயர்களே அன்றி வேறில்லை. அதற்கு மேல் அவற்றுக்கு மதிப்பில்லை . ஆம். நாம் என்ன செய்கிறோம் என்றால், அதையும் தாண்டிச் சென்று, அந்தப் பொருட்கள் நிரந்தரமாக இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம். பொருட்களாக, நபர்களாக, உறவுகளாக, சொத்துக்களாக, நமது சொந்த உடலாக, நமது சாதனைகளாக, என்று எதுவாக இருந்தாலும், அவைகள் நிரந்தரமாக இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம், இல்லையா?… இருக்கலாம். ஆனால், அதற்கும் கடவுளுக்கும் என்ன சம்பந்தம்?.. மாமா, நாம் கடவுளைப் பற்றி விவாதிப்போம் என்று நினைத்தேன். நீங்கள் என்னை சிக்க வைக்கிறீர்கள். உண்மையில் நீங்கள் யார் என்று உங்களுக்குத் தெரியுமா?…
View More நம்பிக்கை – 3: நான் யார்?நம்பிக்கை – 2: யார் கடவுள்?
நீ சாப்பிடும் உணவின் சக்தியையும் பலத்தையும் உன்னுடைய இடது காலுக்கு மட்டும்தான் நீ அனுப்பவேண்டும் என்று நான் சொன்னால், உன்னால் அவ்வாறே செயல்படுத்த முடியுமா?…. இப்போது உன் நினைவிலிருந்து அந்தப் பாடலை அழித்துவிடேன் – அதெப்படி முடியும்? என்னால் முடியாது! – ஆகவே, உன் மனதும் உன் கட்டுப்பாட்டில் இல்லை. வேறு எதுதான் உன்னுள் உன் கட்டுப்பாட்டில் உள்ளது? என்னையோ அல்லது வேறு யாரையோ உன்னால் கட்டுப்படுத்த முடியுமா?… உன் உடலின் செயல்பாடுகளையும், மனத்தின் செயல்பாடுகளையும் உன்னால் கட்டுப்படுத்த முடியவில்லை எனும்போது, அவை வேறு ஒன்றால் கட்டுப்படுத்தப் படுகின்றன என்பதையும் நீ ஒத்துக்கொள்கிறாய்… ஆம், ஒரு விதத்தில் ஒத்துக்கொள்கிறேன்… அதே தான் மற்ற உயிரினங்களையும் அதே விதத்தில் கட்டுப்படுத்துகிறது… இந்த அடையாளப்படுத்துதல் இருக்கின்றவரை நம்மால் உருவமில்லாத எதையுமே கண்முன் கொண்டுவர முடியாது. இந்த அடையாளப்படுத்துதல் என்பதுதான் கடவுளுக்கு உருவமளிப்பதற்கான காரணம்….
View More நம்பிக்கை – 2: யார் கடவுள்?நம்பிக்கை – 1
“என்னுடைய குடும்பத்தைச் சேர்ந்த என் மருமகன்கள் மற்றும் மருமகள்கள் பயன்பெறவேண்டும் என்பதற்காக, எனக்கு மிகவும் ஈடுபாடுள்ள கருத்துப்பொருளான “கடவுள் நம்பிக்கை” பற்றி எழுத வேண்டிய வாய்ப்பு கிடைத்தது.முதல் ஆறு அத்தியாயங்கள் அவர்களுக்காக எழுதப்பட்டவைதான்… ஒன்பதாவது அத்தியாயத்திலிருந்து என் மாமன்கள், அத்தைகள் போன்ற வயதில் மூத்தவர்களுக்கும் இது பிடித்துப்போக, அவர்கள் தங்கள் குழந்தைகளுடன் சேர்ந்து இதைப் படிக்க விரும்பி அவ்வாறே செயல்பட்டனர்” என்ற முன்னுரையுடன் இந்தத்தொடரை எழுதியிருக்கும் திரு.T.V.ஜெயராமன் ICWA படிப்பில் 1987-ல் இந்திய அளவில் மூன்றாவதாகத் தேர்வு பெற்று Chartered Accountant and a Cost Accountant தொழிலை மேற்கொண்டவர். மேலும் பல தளங்களில் நிபுணத்துவம் பெற்று, தேசிய அளவில் திறன் மேம்பாட்டுத் (Skill Development) துறையில் வேலையில்லா இளைஞர்களுக்குப் பல தளங்களில் பயிற்சி அளித்து வேலை வாய்ப்பைப் பெற்றுத்தரும் உன்னதப் பணியைத் திறம்படச் செய்து வந்தவர். ஆன்மீகத்தில் மிகவும் ஈடுபாடு கொண்டவர். 2017ம் ஆண்டு மார்ச் 31ம் நாள் மறைந்தார்..
View More நம்பிக்கை – 1ஆக்ராவிலிருந்து சத்ரபதி சிவாஜி தப்பிய வரலாறு – 5
கட்டக்கை அடையும் சிவாஜி ஒரு தவறைச் செய்கிறார். ஒரு சிறிய குதிரையை விலைக்கு வாங்கும்போது, அதற்குச் சேரவேண்டிய விலையை விடவும் அதிகமாகப் பணத்தை குதிரைக்காரனுக்குக் கொடுக்கிறார். ஆச்சரியமடையும் குதிரைக்காரன், இதுபோலப் பணம்கொடுக்க முகலாயர்களிடமிருந்து தப்பிய சிவாஜியால் மட்டும்தான் முடியும் எனச் சொல்லவே, சிவாஜி தன் கையிலிருந்த மொத்தப் பணத்தையும் அவனிடம் கொடுத்துவிட்டு அங்கிருந்து தப்புகிறார்.
View More ஆக்ராவிலிருந்து சத்ரபதி சிவாஜி தப்பிய வரலாறு – 5ஆக்ராவிலிருந்து சத்ரபதி சிவாஜி தப்பிய வரலாறு – 4
சிவாஜி மிகவும் உடல்நிலை சரியில்லாமல் படுத்துக்கிடப்பதாகவும், அவரைத் தொந்திரவுசெய்ய வேண்டாம் என்றும் கேட்டுக்கொள்கிறார். ஆட்கள் பரபரப்பாக சிவாஜியின் கூடாரத்திற்குள் மருந்துக் குப்பிகளை எடுத்துச் செல்வதும், வெளியே வருவதுமாக இருக்கிறார்கள்.
இத்தனை பாதுகாப்புகளுக்கு மத்தியிலிருந்து தப்பிய ஒருவன், நிச்சயமாக தனக்கு ஆபத்து விளைவிக்கும் வகையில் ஆக்ராவுக்குள் எங்கேனும் ஒளிந்து கொண்டிருப்பான் என நம்புகிறார். கோபமும், வருத்தமும் தோய்ந்த மனிதராக மாறும் ஔரங்கஸிப், சிவாஜியைக் கண்டதும் கைதுசெய்து தன்னிடம் ஒப்படைக்க வேண்டும் என ராஜா ஜெய்சிங்குக்குக் கடிதம் எழுதுகிறார்.