பாரதப்பிரதமர் தொடங்கி வைத்து காசி தமிழ் சங்கமம் நிகழ்ச்சி சிறப்பாக நடைபெற்று வருகிறது. இலங்கையிலிருந்தும் காசிக்கு காலகாலமாக அறிஞர்களும் பக்தர்களும் பயணித்திருக்கிறார்கள்… இலங்கையின் பல பாகங்களிலும் காசி விஸ்வநாதருக்கு பேராலயங்கள் உள்ளன. புனித யமுனை நதி நீரை எடுத்து வந்து நல்லூரில் யமுனா ஏரியில் அந்த தீர்த்தத்தை சேர்த்ததாகவும் ஐதீகம்… காசிக்கும் தமிழகத்திற்கும் உள்ள தொடர்புகளோடு கூட, காசிக்கும் இலங்கை சைவ தமிழர்களுக்கும் உள்ள தொடர்பும் கூட இவ்வேளையில் சிந்திக்கப்பட வேண்டும்…
View More காசி – இலங்கைத் தமிழ் கலாசார பிணைப்புகள்Category: ஆன்மிகம்
கந்த மான்மியம்: 700 பாடல்களில் கந்தபுராணம் முழுமையும்
சுமார் பத்தாயிரத்துக்கும் மேற்பட்ட பாடல்கள் கொண்ட கந்தபுராணத்தை இலங்கை சைவ தமிழர்கள் மிகவும் பக்தி சிரத்தையுடன் பாராயணம் செய்துவரும் மரபு உண்டு. ஆனால் நவீன வாழ்வியல் இப்புராண படன மரபை பெரிதும் சிதைத்து விட்டது. இப்பொழுதெல்லாம் புராண படனம் சடங்காகவே சில இடங்களில் நடைபெறுகிறது. இம்மரபை மீளெழுச்சி செய்ய வேண்டியது அவசியமாகும்… எனவே, பொருத்தமான 700 பாடல்களை கதை ஓட்டத்திற்கேற்ப தொகுத்து, சப்தசதி என்ற எண்ணிக்கை அடிப்படையில் தேவி மகாத்மிய வடிவிலேயே, இதனை உருவாக்கலாம் என கருதினேன். கந்த மான்மியம் என்று தமிழ் மரபுகேற்ப அதற்கு பெயரிடலாம் என்றும் கருதினேன்…
View More கந்த மான்மியம்: 700 பாடல்களில் கந்தபுராணம் முழுமையும்கலிதோஷம் போக்கும் கந்தபுராணம்: நூல் வெளியீடு
முருகனின் விரத நாட்களில் கந்தபுராணம் முழுவதும் 10,500க்கும் மேல் உள்ள பாடல்களை பாராயணம் செய்துவந்தனர் நமது முன்னோர்கள். இன்றைய நிலையில் இவ்வளவு அதிக எண்ணிக்கையில் உள்ள பாடல்களை பாராயணம் செய்வது அரிதாக உள்ளது. எனவே கந்தபுராண பாராயணத்தை மீள் எழுச்சி செய்யும் நோக்கில் அனைவரும் பாராயணம் செய்வதற்கு வசதியாக 351 பாடல்களாக சுருக்கி, கலிதோஷம் போக்கும்கந்தபுராணம் என்ற இந்நூல் தொகுக்கப்பட்டுள்ளது…
View More கலிதோஷம் போக்கும் கந்தபுராணம்: நூல் வெளியீடுசாணக்கிய நீதி – 3
நம்மைச் சுற்றியிருப்பவர்களின் உண்மையான குணம் என்ன, அவர்கள் எப்படி தங்கள் சுய உருவத்தைக் காட்டுவார்கள் என்று எப்பொழுது, எப்படி அறிந்துகொள்வது? இது அரசருக்கு மட்டுமல்ல, அனைவருக்கும் தெரியவேண்டிய ஒன்றுதானே! உண்மையான நண்பரைப் பற்றி நமக்குத் துயரத்தால் கையறு நிலை வரும்போதுதான் அறிய இயலும்
View More சாணக்கிய நீதி – 3சாணக்கிய நீதி – 2
வாழ்க்கையை நடத்திச் செல்லச் செல்வம் தேவை. அதிலும், எதிர்பாராது வரும் தேவைக்காகச் செல்வத்தைக் காப்பாற்றி வைக்கவேண்டும். அந்தச் செல்வத்தைக்கூட, இல்லாளுக்காக – மனைவியைக் காப்பதற்காகச் விட்டுவிடவேண்டும் என்கிறார், சாணக்கியர்
View More சாணக்கிய நீதி – 2சாணக்கிய நீதி -1
எந்த நாடு உன்னைத் தன்மானம், மதிப்பு, வாழும் வழி, குடும்பம், உற்றார் உறவினர், நலம்விரும்பிகள், கற்கும் வழி, தன் முன்னேற்றம் – இவற்றைப் பெற அனுமதிக்கவில்லையோ, அந்த நாட்டில் வசிக்காதே. அதைவிட்டு நீங்கு. அது நீ வாழத் தகுதியற்றது.
View More சாணக்கிய நீதி -1குரு பூர்ணிமா, குரு யார்?: ஓர் விளக்கம்
வியாச பகவான் ஞானத்தை விஸ்தாரமாக விளக்கி அளித்தவர். ஞான விஷயங்களை பிறருக்கு விளக்கிக் கூறி புரிய வைக்கும் சாமர்த்தியம் கொண்டவர். உண்மையில் வேத வியாசர் என்ற பெயரிலேயே இந்த பொருள் உள்ளது. வேதம் என்றால் ஞானம். வியாசம் என்றால் விரிவான விளக்கம்.. நாம் எத்தனை மேதாவியானாலும் அந்த மேதமையில் உள்ள ஆத்ம ஜோதி தூண்டப்படாவிட்டால் நாம் முழுமையடைந்ததாக பொருள் அல்ல. அப்படிப்பட்ட தூண்டப்படுதல் அல்லது உத்தீபனம் அல்லது சக்தி பாதம் சத்குருவால் மட்டுமே சாத்தியம்…
View More குரு பூர்ணிமா, குரு யார்?: ஓர் விளக்கம்தண்டபாணி பஞ்சரத்னம், பொருளுடன்
பழனியாண்டவர் மீது அமைந்த சம்ஸ்கிருத ஸ்தோத்திரம் வேண்டும் என்று நண்பர் கேட்டார். தண்டபாணி பஞ்சரத்னம் உடனடியாக நினைவுக்கு வந்தது. கீழ்க்காணும் இந்த எளிய, இனிய ஸ்துதி சிருங்கேரி சங்கராச்சாரியார் ஜகத்குரு ஸ்ரீ ஸச்சிதானந்த சிவாபினவ நரசிம்ம பாரதி சுவாமிகள் (1858-1912) அருளியது. பழனி திருக்கோயிலுக்கும் சிருங்கேரி பீடத்திற்கும் நீண்டகாலத் தொடர்பு உண்டு…
View More தண்டபாணி பஞ்சரத்னம், பொருளுடன்எங்கே போகிறேன்?
“சுவாமிகள் எழுதிவைத்த திருமுகக் குறிப்பில் ஜீவசமாதி செய்துவிடும்படி ஆஞ்ஞை கொடுத்திருக்கிறாராம்!”
“சுருங்கச்சொன்னால் கம்ப்யூட்டர் விளையாட்டில் இருக்கும் ஒரு பாத்திரம்போலத்தான் நீ! நீ உணர்ந்து எல்லாமே அந்த விளையாட்டுதான்! கம்ப்யூட்டர் விளையாட்டு எவ்வளவு உண்மையோ, அத்தனை உண்மைதான் நீ இதுவரை கண்டது, கேட்டது, அறிந்தது, துறந்தது, தேடியது – அனைத்துமே!”
பழங்காலத்தில் கோவில் வழிபாடு
காசு கொடுத்தால், இப்பொழுது சில கோவில்களுக்குள் முன்னால் சென்று தரிசனம்செய்யலாம். வரிசையில் மணிக்கணக்காக நின்று, கடைசியில் தர்ம தரிசனம் கிடைத்தால், ‘போ! போ!’ என்று விரட்டப்படுவதே நிதர்சனம்.
இன்னும் சில கோவில்களுக்குச் சென்றால், வியப்புகலந்த பய உணர்வு மேலிடுகிறது. கோவில் வெறிச்சோடிக் கிடக்கிறது.