அரிசோனா ஆனைமுகன் ஆலயத்தில் மஹாருத்ர யக்ஞமும், கோஷ்ட தெய்வங்களின் பிராணப் பிரதிஷ்டையும்

‘நமசிவாய’ மந்திரம் ஏழு காண்டங்கள் அடங்கிய கிருஷ்ண யஜுர்வேதத்தில் தைத்திரீய ஸம்ஹிதையில், நான்காம் காண்டத்தில், ருத்ர நமகத்தில் எட்டாவது அநுவாகத்தில் வருகிறது. ருத்திரம் நமகம், சமகம் என்று இரண்டு பிரிவுகளை உடையது. ஒவ்வொன்றிலும் பதினொன்று அநுவாகங்கள் [துதிகள்] இருக்கின்றன.

சிவபெருமானின் ஒரு அம்சமான ருத்திரனைக் குறித்து இத்துதிகள் பாடப்படுவதால் இதற்கு ருத்ரம்என்று பெயர். ருத்ரத்திற்கு குத்ரப் ப்ரஸ்’னம், சதாருத்ரீயம், ருத்ராத்யாயம் என்ற மற்ற பெயர்களும் உள்ளன.
யார் தலையில் கைவைத்தாலும் அவர்கள் எரிந்து சாம்பலாகவேண்டும் என்று சிவபெருமானிடம் வரம்பெற்ற பத்மாசுரனை அழிக்க மோகினியாக வேடம்தரித்துவந்த விஷ்ணு, அந்த அரக்கனை, அவன் தன் தலையிலேயே கைவைக்கும்படி செய்து, அவனை அழித்தபின்னர், தாண்டவ நடனமாடி, உலகநன்மைக்காக ருத்ரயக்ஞம் செய்தார் என்று புராணங்கள் பறைசாற்றுகின்றன.

View More அரிசோனா ஆனைமுகன் ஆலயத்தில் மஹாருத்ர யக்ஞமும், கோஷ்ட தெய்வங்களின் பிராணப் பிரதிஷ்டையும்

ஆறுமுகநாவலரின் தமிழ் நடை

நாவலரும் அவர் வழி வந்த நல்லறிஞரும் திருத்தி வளர்த்த நம் தமிழ்மொழி இப்போது சிதைக்கப்பட்டு வருவது கொடுமையானது. பத்திரிகைகள் முதலிய ஊடகங்களிலேயே பல எழுத்துப்பிழைகளும் சொற்பிழைகளும் மிக அதிகளவில் காணப்படுகின்றன. சிலரது எழுத்துக்களில் ஆங்கிலத்தில் வேற்றுமையுருபுகளை பெயருடன் சேர்க்காமற் பிரித்தெழுதுவது போல, தமிழில் எழுத முயல்வது தெரிகின்றது. புதிது புதிதாக பல மரபுகள் உருவாகின்றனவா? என்று ஐயமுண்டாக்குவதுபோல பலரது எழுத்துநடை உள்ளது.

View More ஆறுமுகநாவலரின் தமிழ் நடை

சிவநெறி – சமய அவிரோதம்

அவிரோதம் என்பதற்குப் பட்சபாதமின்மை எனப் பொருள் உரைத்தனர், உரையாசிரியர். அதாவது எல்லாச் சமயங்களையும் நடுநிலையில் நின்று நோக்குதல் என்பது பொருள். ஞானியர் எம்மதத்து நூல்களிலும் கூறப்பட்டுள்ள மெய்ப்பொருளைத் தம்முடைய பொருளாகவே கொண்டு பயனடைவர். தாம் படித்துள்ள ஒருநூலின் பொருளே பெரிது எனக் காதும்பேதைமை பெரியோர்க்கில்லை.
சமயங்களின் வரலாற்றில் ஒருமதத்தைச் சார்ந்தவர் மற்றொரு மதத்தினை வாதில் வென்றார் எனக் கூறுவதைக் காண்கின்றோம். தோற்றனவாகக் கூறப்படும் மதங்கள் இன்றும் நிலவக் காண்கின்றோம். வென்ற மதங்கள் ஒளிகுன்றி இருப்பதையும் காண்கின்றோம். அதனால் வெற்றி தோல்வி அவனவன் கற்ற கல்விவலியினாலும் வாதத் திறமையினாலும், வாதிக்கேயன்றி மதத்துக்கில்லை.

View More சிவநெறி – சமய அவிரோதம்

பார்புகழ் கார்த்திகை தீபம்

கார்த்திகைதீப ஒளியைக் கற்பனை நயம்படக் கூறுவது மிகவும் ரசிக்கத்தக்கதாகும். பொருளும், நயமும், கருத்தாழமும் செறிந்த பாடல்கள் இவை. கார்த்திகைதீபக் காட்சியை பல்வேறு விதங்களில் பகிர்கின்றது கார்த்திகைத்தீபவெண்பா. கற்று, கேட்டு, இறைவன் பெருமைகளை உணர்ந்து அன்புடன் வழிபடுவோருக்கு, அவனே அத்தீபம்போல உறுதுணையாய் நிற்கின்றான். சோணகிரியின் அழகிய உச்சியில் அஞ்சேல் என அபயமளித்தபடி கார்த்திகைத் தீபமாக விளங்குகிறான் ஈசன். அண்ணாமலையே ஈசன் – அவனே கார்த்திகைத் திருத்தீபம்.

View More பார்புகழ் கார்த்திகை தீபம்

திருவாரூர் நான்மணிமாலை — 2

இவ்வளவு பெருமைகள் உடைய வரானாலும் திருவாரூர் தியாகேசர் எளிவந்த தன்மையுடையவர். அவர் கண்ணப்ப நாயனார் உமிழ்ந்த நீரைப் புனிதமாக ஏற்று அதில் திருமஞ்சனம் செய்தார். அவர் ருசிபார்த்துக் கொடுத்த ஊனை மிகச்சிறந்த நைவேத்தியமாக ஏற்றார். அவர் செருப்புக்காலால் மிதித்ததையும் செம்மாந்து ஏற்றுக் கொண்டார்.
இது மட்டுமா அர்ஜுனன் வில்லால் அடித்ததையும் பொறுத்துக் கொண்டார். மதுரையில் வைகைக்கரை உடைத்தபோது பாண்டிய மன்னனிடம் பிரம்படி பட்டபோது அதையும் உவந்து ஏற்றுக்கொண்டார்…

View More திருவாரூர் நான்மணிமாலை — 2

திருவாரூர் நான்மணிமாலை -1

திருவாரூருக்குள் நுழையுமுன் அங்குள்ள அகழியைத் கடக்கவேண்டுமே! அந்த அகழி கடல் போல் தோற்றமளிக்கிறது. மேகங்கள் அந்த அகழியைக் கடல் என்று நினைத்து அதில் படிகின்றன. சிவந்த கண்களையுடைய யானைகளும் அந்த அகழியில் படிகின்றன. வீரர்கள் யானைக்கும் மேகங்களுக்கும் வேற்றுமை தெரியாமல் இரண்டையுமே சங்கிலிகளால் பிணைக்கிறார்கள். தாங்கள் படிந்த அகழியில் யானைகள் இருப்பதை அறிந்த மேகங்கள் விரைவாக நீங்குகின்றன. இந்த அகழியில் காகங்கள் கூட்டமாகப் பறக்கின்றன. இந்தக் காட்சி உக்கிரகுமாரபாண்டியன் மேகங்களைச் சிறை பிடித்து வந்த நிகழ்ச்சியை நினைப்பூட்டு கிறது குமரகுருபரருக்கு.

View More திருவாரூர் நான்மணிமாலை -1

சிவலிங்கம் இந்துமதம் இன்னபிற: பழ.கருப்பையாவுக்கு ஒரு எதிர்வினை

பழ.கருப்பையாவின் அரசியல் அழுத்தங்கள் புரிந்து கொள்ளக் கூடியவையே. ஆனால் இந்தக் கட்டுரையில் சம்பந்தமே இல்லாமல் இந்துமதத்தையும், சிவலிங்க வழிபாட்டையும், ஆதி சங்கரரையும், வேதாந்தத்தையும், விவேகானந்தரையும் மிகக் கீழ்த்தரமாக அவதூறு செய்திருக்கிறார். அதனாலேயே இந்த எதிர்வினை… வேத இலக்கியத்தில் ஆண்குறியைக் குறிப்பதற்காக வரும் சிஷ்ணா (शिष्ण – shiSHNaa) என்ற சொல்லையும், அதனுடன் எந்த வகையிலும் தொடர்பில்லாத, குழந்தை என்ற பொருள் கொண்ட சிசு (शिशु – shishu) என்ற சொல்லையும் குழப்பியடிக்கிறார் இந்த பிரகஸ்பதி… பன்னிரு சைவத் திருமுறைகளிலும் ஆயிரக் கணக்கான இடங்களில் நான்மறைகளும், வேள்விகளும் மீண்டும் மீண்டும் போற்றப் பட்டுள்ளன என்பதை உண்மையான தமிழ்ச் சைவர்கள் உணர்வார்கள். சைவ சமயக் குரவர்கள் போற்றிய மகத்தான மரபை, வெறும் சல்லிக்காசு அரசியல் லாபத்திற்காக அவதூறு செய்யும் பழ.கருப்பையா போன்ற கீழ்த்தரமான அரசியல்வாதிகளின் உண்மை முகத்தை உணருங்கள்…

View More சிவலிங்கம் இந்துமதம் இன்னபிற: பழ.கருப்பையாவுக்கு ஒரு எதிர்வினை

சிவசமய வடிவாய் வந்த அத்துவிதம்       

சைவசித்தாந்தம் இந்த பேதாபேத வாதத்தில் ஈடுபடாமல் சிவத்துக்கும் ஆன்மாவுக்கும் இடையே அத்துவித சம்பந்தத்தைப் பேசுகின்றது. இந்த அத்துவித சம்பந்தத்தில் ஆன்மா எந்தநிலையிலும் சிவத்தை விட்டுப் பிரிந்துநிற்பதில்லை. இந்த அத்துவித சம்பந்தத்தை முதலில் எடுத்தோதியவர் நான்மறைவல்ல ஞானசம்பந்தர்… கலப்பினால் ஒன்றாதல் அபேத சம்பந்தம். அது பொன்னும் ஆபரணமும் போலன்று; உடலும் உயிரும்போல். வேறாதல் பேத சம்பந்தம். இருளும் ஒளியும் போலன்று; கண்ணொளியும் சூரியனொளியும் போல். கண்ணுக்கு ஒளியிருந்தாலும் பொருளை அறிவதற்குச் சூரியனொளி இன்றியமையாமல் வேண்டப்படும். காணும் ஒளியும் காட்டும் ஒளியும் என அவை வேறாம். உடனாதல் பேதாபேத சம்பந்தம். சொல்லும் பொருளும் போல அன்று. ஆன்மபோதமும் கண்ணொளியும் போல். கண் கண்டாலும் ஆன்மபோதமும் உடன் நின்று கண்ணுக்கு இன்னபொருள் என அறிவிக்கின்றது…

View More சிவசமய வடிவாய் வந்த அத்துவிதம்       

காசி[நன்னகர்]க் கலம்பகம்

முக்தி தரும் முத்தலங்களுள் ஒன்றான காசித்தலத்தின் மகிமையைக் காசிக் கலம்பகம் என்ற பிரபந்தத்தின் மூலம் தெரிவிக்கிறார் குமரகுருபரர். பல வகை மலர்கள் கலந்த மாலை கதம்பம் எனப்படுவது போல பலவகையான பொருட்களும் அகம் சார்ந்த பாடல்களும், பல வகையான செய்யுட்களும் இக்கலம்பகத்தில் விரவியிருக் கின்றன… குருகே! இவள் குருகை விடுத்தாள் என்று ஐயனிடம் சொல். குருகு என்றால் வளை என்றும் பொருள். இவள் வளையல்கள் அணிவதை விட்டுவிட்டாள். காதல் மேலீட்டால் இவள் அணிகளைத் துறந்தாள். இதேபோல சுகத்தை விடுத்தாள் என்றும் சொல் (சுகம் என்றால் கிளி என்றும் பொருள்). பால் பருகும் அன்னமே! நீ சென்று என் ஐயனிடம், இவள் அன்னத்தையும் உன்பொருட்டு விடுத்தாள் என்று சொல் என்கிறாள். இவளுக்கு உண்ணும் உணவும் தேவையில்லை (அன்னம் என்றால் உண்ணும் உணவு என்றும் பொருள்)…

View More காசி[நன்னகர்]க் கலம்பகம்

நாயன்மார்கள்: ஓர் சொற்பொழிவு

நாயன்மார்களின் சரிதங்கள், நமது சமயப் பண்பாட்டு மலர்ச்சிக்கும் எழுச்சிக்கும் அவர்கள் ஆற்றிய பங்களிப்பு குறித்து சமீபத்தில் ஒரு நிகழ்ச்சியில் ஜடாயு ஆற்றிய உரை. பெரியபுராணத்தின் பின்னணியையும், சம்பந்தர், அப்பர், சுந்தரர், சிறுத்தொண்டர், கண்ணப்பர், திருநீலகண்டர் மற்றும் சில நாயன்மார்களையும் குறித்து வரலாறு, இலக்கியம், சமயம் என்ற மூன்று தளங்களையும் தொட்டுச் செல்கிறது இந்த 50 நிமிட உரை. இங்கே கேட்கலாம்..

View More நாயன்மார்கள்: ஓர் சொற்பொழிவு