நாயன்மார்கள்: ஓர் சொற்பொழிவு

நாயன்மார்களின் சரிதங்கள், நமது சமயப் பண்பாட்டு மலர்ச்சிக்கும் எழுச்சிக்கும் அவர்கள் ஆற்றிய பங்களிப்பு குறித்து சமீபத்தில் ஒரு நிகழ்ச்சியில் ஜடாயு ஆற்றிய உரை. பெரியபுராணத்தின் பின்னணியையும், சம்பந்தர், அப்பர், சுந்தரர், சிறுத்தொண்டர், கண்ணப்பர், திருநீலகண்டர் மற்றும் சில நாயன்மார்களையும் குறித்து வரலாறு, இலக்கியம், சமயம் என்ற மூன்று தளங்களையும் தொட்டுச் செல்கிறது இந்த 50 நிமிட உரை. இங்கே கேட்கலாம்..

View More நாயன்மார்கள்: ஓர் சொற்பொழிவு

மானக் கஞ்சாற நாயனார் மகள் (கைகொடுத்த காரிகை)

தலை மயிரை இழப்பதை பெண்கள் அபசகுனமாகவே நினைப்பார்கள்.நோய்வாய்ப்பட்டு அதன் காரணமாக தலை முடியை இழக்க நேரும் போது கூட அவர்கள் மிகவும் உணர்ச்சி வசப்படுவார்கள் வருந்துவார்கள். கோவிலுக்குக் காணிக்கையாகக் கொடுப்பதைத் தவிர மற்ற நேரங்களில் தங்கள் கூந்தலை இழக்க மனம் ஒப்ப மாட்டார்கள். இந்த நிலையில் ஒரு பெண் தனது அலங்காரத்தோடு கூடிய கூந்தலை இழக்க நேரிட்டால்? அது எவ்வளவு கொடுமை! அதுவும் தன் திருமண நாளன்று? அந்தப் பெண்ணின் மனம் என்ன பாடு பட்டிருக் கும்? இப்படி ஒரு சம்பவம் நடப்பதை எந்தத் தாயால் பொறுக்க முடியும்? என்றாலும் தந்தைக்காகத் தன் அலங்கரிக்கப் பட்ட கூந்த லையும் தியாகம் செய்கிறாள் ஒரு மகள்…

View More மானக் கஞ்சாற நாயனார் மகள் (கைகொடுத்த காரிகை)

பெரியபுராணம்: இளைஞர் வாழ்வியலுக்கான ஒரு சமுதாயக் காவியம் – 2 [நிறைவுப் பகுதி]

இப்புராணத்தில் பேசப்பெறும் அநேகமான அடியவர்கள், இல்லறத்தினரே என்பதால் பரவலாக எல்லா நிலைகளிலும் பெரியபுராணத்தில் காதல், திருமணம், திருமணவாழ்வு முதலியன பேசப்பட்டிருக்கிறது… மனுநீதிகண்ட சோழனின் வரலாற்றைப் பேசும் போது நீதிமுறைமை மனிதர்களுக்கு மட்டுமல்ல, மிருகங்களுக்கும் பொருந்தும் என்று சேக்கிழார் புதுமை காட்டுகிறார்… இவற்றால் தமது காவியத்தை புரட்சிக் காவியமாகவும் சமுதாயக் காவியமாகவும் தெய்வச் சேக்கிழார் மாற்றியிருக்கிறார்.

View More பெரியபுராணம்: இளைஞர் வாழ்வியலுக்கான ஒரு சமுதாயக் காவியம் – 2 [நிறைவுப் பகுதி]

பெரியபுராணம்: இளைஞர் வாழ்வியலுக்கான ஒரு சமுதாயக் காவியம் – 1

காமச்சுவை நிறைந்துள்ள சீவக சிந்தாமணி என்ற ஒரு சமணகாவியத்தில் நாட்டரசன் மூழ்கியிருப்பதை விரும்பாத சேக்கிழார், மந்திரிக்கான உரிமையுடனும் நட்புரிமையுடனும் உரிய வேளையில் தட்டிக்கேட்டு திருத்தவேண்டிய நிலைக்கு ஆளானார்…. ஞானசம்பந்தப் பெருமானின் இளமை, துணிந்து நின்று சமணத்தை எதிர்த்து சைவத்தை பாண்டிய நாட்டில் தாபிக்கிறது… பெண் மீது கொண்ட காதலும் அதற்கிடையில் ஏற்பட்ட பேதைமைமிக்க ஊடலையும் நீக்க, அந்தப் பரமனையே தன் மானிடக் காதலியிடம் தூதனுப்புகிறது அந்தச் சுந்தரரின் இளமை…

View More பெரியபுராணம்: இளைஞர் வாழ்வியலுக்கான ஒரு சமுதாயக் காவியம் – 1