ஒன்றுபட்ட ஒரே தேசமாக, ஒற்றுமையாக நமது நாடான இந்தியா இருப்பதற்கான காரணங்கள் என்ன என்று நானும் நண்பரும் ஒரு நாள் சாதாரணமாக உரையாட ஆரம்பித்தோம். பேசப் பேசத் தான் இது எவ்வளவு பெரிய, மகத்தான விஷயம் என்ற உணர்வு ஏற்பட்டு அதிகரித்து வந்து. பின்பு, இந்த உரையாடலையே ஒரு காணொளியாகப் பதிவு செய்தால் என்ன எண்ணம் தோன்றியது. அதன் விளைவே கீழ்க்கண்ட வீடியோ பதிவு… வைகோ, சீமான் போன்ற முட்டாள்கள் இந்தியா துண்டு துண்டாக உடையும் என்ற ரீதியில் செய்யும் பிரிவினைவாத பிரசாரங்கள், இந்தியா ஏதடா, இந்து ஏதடா என்பது போன்ற உளறல்கள் ஆகியவற்றையும் பற்றி இந்த உரையாடலின் ஊடாக பதிலடி கொடுத்துள்ளோம். தனித் தமிழ் தேசம் சாத்தியமில்லாத ஒன்று என்பதை அழுத்தமாக வலியுறுத்தியிருக்கிறோம்…
View More ஒன்றுபட்ட இந்தியா: ஒரு உரையாடல் / விவாதம்நம்பிக்கை – 1
“என்னுடைய குடும்பத்தைச் சேர்ந்த என் மருமகன்கள் மற்றும் மருமகள்கள் பயன்பெறவேண்டும் என்பதற்காக, எனக்கு மிகவும் ஈடுபாடுள்ள கருத்துப்பொருளான “கடவுள் நம்பிக்கை” பற்றி எழுத வேண்டிய வாய்ப்பு கிடைத்தது.முதல் ஆறு அத்தியாயங்கள் அவர்களுக்காக எழுதப்பட்டவைதான்… ஒன்பதாவது அத்தியாயத்திலிருந்து என் மாமன்கள், அத்தைகள் போன்ற வயதில் மூத்தவர்களுக்கும் இது பிடித்துப்போக, அவர்கள் தங்கள் குழந்தைகளுடன் சேர்ந்து இதைப் படிக்க விரும்பி அவ்வாறே செயல்பட்டனர்” என்ற முன்னுரையுடன் இந்தத்தொடரை எழுதியிருக்கும் திரு.T.V.ஜெயராமன் ICWA படிப்பில் 1987-ல் இந்திய அளவில் மூன்றாவதாகத் தேர்வு பெற்று Chartered Accountant and a Cost Accountant தொழிலை மேற்கொண்டவர். மேலும் பல தளங்களில் நிபுணத்துவம் பெற்று, தேசிய அளவில் திறன் மேம்பாட்டுத் (Skill Development) துறையில் வேலையில்லா இளைஞர்களுக்குப் பல தளங்களில் பயிற்சி அளித்து வேலை வாய்ப்பைப் பெற்றுத்தரும் உன்னதப் பணியைத் திறம்படச் செய்து வந்தவர். ஆன்மீகத்தில் மிகவும் ஈடுபாடு கொண்டவர். 2017ம் ஆண்டு மார்ச் 31ம் நாள் மறைந்தார்..
View More நம்பிக்கை – 1இளையராஜா @ கூகிள்
அமெரிக்காவின் சிலிகான் பள்ளத்தாக்கில் அமைந்துள்ள கூகிள் நிறுவனத்தின் தலைமையகத்தில் அண்மையில் இளையராஜா பங்குபெற்ற நேர்காணல் & கேள்வி-பதில் நிகழ்ச்சி நடந்தது. ஜீசஸ் வாழ்வில் நிகழ்ந்ததாகக் கூறப்படும் உயிர்த்தெழுதல் என்பதற்கு எந்த வரலாற்று ஆதாரங்களும் இல்லை என்று பல ஆய்வுகளும் குறிப்பிடுவதை Youtube டாகுமென்டரிகளில் பார்த்ததாக ராஜா கூறினார். இரண்டாயிரம் வருடமாக கிறிஸ்தவ மதத்தின் ஆதாரமாக இருந்த இந்த விஷயம் நடக்கவேயில்லை என்பது உறுதிப்படுத்தப் பட்டுள்ளது. ஆனால், சமீபகாலத்தில் ஸ்ரீரமண மகரிஷி வாழ்வில் அவர் 15 வயது சிறுவனாக இருந்தபோது மரண அனுபவத்தைப் பெற்று அதன்பின் உயிர்த்தெழுந்தார், அதைக் கடந்து மரணத்தை வெல்லும் ஞானநிலையை அடைந்தார் என்றார். அங்கங்கு கறிவேப்பிலை போல சில ஆங்கில வாக்கியங்கள் தவிர்த்து நிகழ்ச்சி முழுவதும் இளையராஜா தமிழிலேயே பேசினார்….
View More இளையராஜா @ கூகிள்‘திராவிட இயக்கத்தின் இந்துமத வெறுப்பு’ கருத்தரங்கம்: வீடியோ
சென்னை ஐ.ஐ.டி. வளாகத்தில் 2017 டிசம்பரில் சுதேசிய இந்தியவியல் – 3 (Swadeshi Indology – 3) மாநாடு சிறப்பாக நடைபெற்றது. அதன் ஒரு பகுதியாக நிகழ்ந்த ‘திராவிட இயக்கத்தின் இந்துமத வெறுப்பு’ குறித்த கருத்தரங்கத்திற்கு டாக்டர். பேராசிரியர் கனகராஜ் ஈஸ்வரன் தலைமை தாங்கினார். ம.வெங்கடேசன், பத்மன், ஜடாயு, தேவப்ரியா ஆகியோர் உரையாற்றினர். ஈ.வெ.ராவின் சமூக அழிப்புக் கொள்கைகள், தமிழ் ஊடகங்களின் இந்து எதிர்ப்பு மனநிலை, தமிழ் இலக்கியங்களைத் திரித்தும் அவற்றின் இந்துக்கூறுகளை இருட்டடித்தும் திராவிட இயக்கத்தினர் செய்த பிரசாரம், கிறிஸ்தவ மிஷநரிகளின் பொய்கள் ஆகியவை குறித்து இந்த உரைகள் அமைந்தன. பார்வையாளர்களுடனான கேள்வி பதில்களும் சிறப்பாக இருந்தன. இந்த நிகழ்வின் முழு வீடியோ பதிவையும் இங்கு காணலாம்…
View More ‘திராவிட இயக்கத்தின் இந்துமத வெறுப்பு’ கருத்தரங்கம்: வீடியோ2019 தேர்தல்: வாராது போல வந்த மாமணியைத் தோற்போமோ?
மோடி எப்படியாவது ஒழிய வேண்டும் என்பதே இவர்களது ஒரே குறி. அதற்காக எவருடனும் கூட்டணி வைக்கவும் எதைச் செய்யவும் சோனியாவும், கம்னியுஸ்டுகளும் பிற மாநிலக் கட்சிகளும் தயாராக இருக்கிறார்கள். காங்கிரஸ் ஜெயிக்கா விட்டாலும் பரவாயில்லை, எப்படியாவது மோடி அகற்றப் பட வேண்டும், எவர் வந்தாலும் தங்கள் கொள்ளைகளைக் குறையாமல் அடிக்கலாம் என்ற நம்பிக்கையில் இருக்கும் காங்கிரஸும், இந்தியாவைத் துண்டு துண்டாகப் பிரித்து பலவீனப் படுத்த விரும்பும் அத்தனை நாசகார சக்திகளும் கொண்டாட்டங்களுடன் காத்திருக்கின்றன… ஒருவேளை மோடியும் பிஜேபியும் அழியுமானால் என்னென்ன நடக்கப் போகின்றன? வலிமையற்ற கொள்ளைக்காரர்களினால் சீன பாக்கிஸ்தானியக் கைக்கூலிகளினால் ஆன அரசாங்கம் நிலையற்ற இந்தியாவை உருவாக்கும். இந்தியா சகல துறைகளிலும் பல பத்தாண்டுகளுக்கு பின்னால் தள்ளப் படும். இந்தியா முழுக்க மீண்டும் இஸ்லாமிய பயங்கரவாதிகளினால் தாக்கப் படும். குண்டுகள் வெடிக்கும். அப்பாவி மக்கள் உடல் சிதறி பலியாவார்கள்.. அபாயகரமான, மோசமான, பயங்கரமான சக்திகள் இன்று ஒன்று கூடி வருகின்றன. இவர்களை எப்படி நாம் எதிர் கொள்ளப் போகிறோம்? இதில் இருந்து மோடி அரசை மட்டும் அல்லாமல் இந்தியாவையும் நம் எதிர்காலத்தையும் எப்படி பாதுகாக்கப் போகின்றோம்? நாம் என்ன செய்ய வேண்டும்?…
View More 2019 தேர்தல்: வாராது போல வந்த மாமணியைத் தோற்போமோ?ஆக்ராவிலிருந்து சத்ரபதி சிவாஜி தப்பிய வரலாறு – 5
கட்டக்கை அடையும் சிவாஜி ஒரு தவறைச் செய்கிறார். ஒரு சிறிய குதிரையை விலைக்கு வாங்கும்போது, அதற்குச் சேரவேண்டிய விலையை விடவும் அதிகமாகப் பணத்தை குதிரைக்காரனுக்குக் கொடுக்கிறார். ஆச்சரியமடையும் குதிரைக்காரன், இதுபோலப் பணம்கொடுக்க முகலாயர்களிடமிருந்து தப்பிய சிவாஜியால் மட்டும்தான் முடியும் எனச் சொல்லவே, சிவாஜி தன் கையிலிருந்த மொத்தப் பணத்தையும் அவனிடம் கொடுத்துவிட்டு அங்கிருந்து தப்புகிறார்.
View More ஆக்ராவிலிருந்து சத்ரபதி சிவாஜி தப்பிய வரலாறு – 5தென்புலத்தார் திரும்பிவரும் நாளில் – கோகோ (Coco) திரைப்படம்
எள்ளுப்பாட்டனார் எர்னெஸ்டோவின் நினைவிடத்தில் நுழைந்து அவர் சமாதி அறையில் மாட்டி வைத்திருக்கும் கிடாரை உருவி எடுக்கையில் தடுமாறி விழுகிறான் மிகைல். அந்தக் கணத்தில் தென்புலத்தார் உலகம் திறந்து வழிவிட, யார் கண்களுக்கும் தென்படாமல், யாதும் சுவடுபடாமல் அவ்வுலகில் நுழைகிறான்.. டிஸ்னி படங்களில் நாம் கண்டுவந்த பாகன்மார் கதைகளை, அவர்தம் ஆதார நமபிக்கைகளை, தொன்மங்களை, கோகோ (Coco) என்ற இந்த ஆண்டின் ஆஸ்கார் விருது வென்றிருக்கும் திரைப்படம் மிக வெளிப்படையாகவே சித்தரித்திருக்கிறது. சாதலை எண்ணி அஞ்ச வேண்டியதில்லை என்பது இந்தப்படத்தின் முக்கியச் செய்தி…
View More தென்புலத்தார் திரும்பிவரும் நாளில் – கோகோ (Coco) திரைப்படம்ஆக்ராவிலிருந்து சத்ரபதி சிவாஜி தப்பிய வரலாறு – 4
சிவாஜி மிகவும் உடல்நிலை சரியில்லாமல் படுத்துக்கிடப்பதாகவும், அவரைத் தொந்திரவுசெய்ய வேண்டாம் என்றும் கேட்டுக்கொள்கிறார். ஆட்கள் பரபரப்பாக சிவாஜியின் கூடாரத்திற்குள் மருந்துக் குப்பிகளை எடுத்துச் செல்வதும், வெளியே வருவதுமாக இருக்கிறார்கள்.
இத்தனை பாதுகாப்புகளுக்கு மத்தியிலிருந்து தப்பிய ஒருவன், நிச்சயமாக தனக்கு ஆபத்து விளைவிக்கும் வகையில் ஆக்ராவுக்குள் எங்கேனும் ஒளிந்து கொண்டிருப்பான் என நம்புகிறார். கோபமும், வருத்தமும் தோய்ந்த மனிதராக மாறும் ஔரங்கஸிப், சிவாஜியைக் கண்டதும் கைதுசெய்து தன்னிடம் ஒப்படைக்க வேண்டும் என ராஜா ஜெய்சிங்குக்குக் கடிதம் எழுதுகிறார்.
நான் ஏன் நரேந்திர மோடியை ஆதரிக்கிறேன்: புத்தக அறிமுகம்
ஒரு தமிழ்நாட்டு இளைஞர் விருப்பு வெறுப்பின்றி நரேந்திர மோதியின் அரசாட்சி குறித்து வைத்த விமர்சனங்கள் இவை. ஒருவகையில் ஒரு முன்னாள் கம்யூனிஸ்டின் வாக்குமூலமும் கூட… நாடு என்பது ஆட்சியாளர்கள் ஒருபக்கம் – மக்கள் ஒரு பக்கம் என்று இரண்டு சக்கரங்களால் நகர வேண்டிய வண்டி. இரண்டும் சரியாக உருண்டால்தான் நாடு முன்னேறும்; ஒவ்வொரு வீடும் முன்னேற்றம் காணும்… ஆட்சி – அதிகாரம் – வரி வருமானம் – பட்ஜெட் என்று அனைத்தையும் முதலில் நிர்வாக ரீதியாக யார் புரிந்து கொள்கிறார்களோ அவர்களுக்கே இங்கே அரசை முறையாக விமர்சனம் செய்ய தகுதி வருகிறது. இது எந்த நாட்டுக்கும் எந்த ஆட்சிக்கும் பொருந்தும்….
View More நான் ஏன் நரேந்திர மோடியை ஆதரிக்கிறேன்: புத்தக அறிமுகம்ஆக்ராவிலிருந்து சத்ரபதி சிவாஜி தப்பிய வரலாறு – 3
அந்த வீட்டிற்குப் போனால் தனது கதி என்னவாகும் என்பதினை முழுவதும் உணர்ந்திருந்த சிவாஜி, உடனடியாக அங்கிருந்து தப்பத் தீர்மானிக்கிறார். ஔரங்கஸிப் சிவாஜிக்குக் கெடுதல் செய்யத் தயாராகிவிட்டதாக உறுதிப்படுத்தப்பட்ட தகவல்கள் அவரை எட்டுகின்றன.
View More ஆக்ராவிலிருந்து சத்ரபதி சிவாஜி தப்பிய வரலாறு – 3