அமெரிக்க[அதிபர்] அரசியல் — 2

ஒருவரிடமோ, அல்லது ஒரு துறையிடமோ அதிகாரம் குவிந்துவிடக்கூடாது என்பதில் கண்ணும் கருத்துமாக இருந்த அமெரிக்கத்தந்தையர், அதிகாரத்தை மூன்றாகப் பங்கிட்டனர். அத்துடன் நிற்காது, அந்த மூன்று பிரிவுகளும் தங்கள் மனம்போனபோக்கில் நடந்துகொள்ளாமலிருக்க, தடைகளையும், சமப்படுத்துதலையும் [Checks and Balances] செய்யும்வண்ணம் அரசியல் அமைப்பை எழுதிவைத்தார்கள்.
மூன்றில் இரண்டுபங்கு பெரும்பான்மையுடன் இயற்றப்படும் எந்தச் சட்டத்தையும் அமெரிக்க அதிபரால் மறுக்கவியலாது. இந்த உரிமையின்மூலம், அதிபர் சர்வாதிகாரியாகச் செயல்படுவது மட்டுப்படுத்தப்ப்டுகிறது.

View More அமெரிக்க[அதிபர்] அரசியல் — 2

பாரதி பாடலில் அராஜக “செக்யுலர்” திருத்தங்கள்

பாரதியின் மூலப் பிரதியில், சொற்கள் தெளிவாக இருந்த சில இடங்களில் கூட வலிந்து திருத்தங்கள் செய்யப் பட்டு அதிகாரபூர்வமான “அரசாங்கப் பதிப்பு” வெளியிடப்பட்டுள்ளது. “பேய்த்தகை கொண்டோர், பெருமையும் வன்மையும் ஞானமும் அறியா நவைபடு துருக்கர்”.. இதில் *நவைபடு துருக்கர்* என்பது, “நவைபுரி பகைவர்” என்று மாற்றப் பட்டிருக்கிறது. வேறோர் இடத்தில் “துருக்கர் ஆண்டழிப்ப” என்பது “துரோகிகள் அழிப்ப” என்று மாற்றப் பட்டிருக்கிறது.. “மேற்படி செய்யுளிலே மகமதியர்களைப் பற்றி வந்திருக்கும் பிரஸ்தாபங்களில் வீரரசத்தை மட்டுமே கவனிக்கவேண்டுமேயல்லாமல், மகமதிய நண்பர்கள் தமது விஷயத்தில் உதாசீனம் இருப்பதாக நினைக்கக் கூடாது என்று கேட்டுக் கொள்கிறோம்…” என்று பாரதியே சொல்கிறார். பாரதிக்கு எந்த அளவுக்கு மத நல்லிணக்கத்திலும், சமூக ஒற்றுமையிலும் கருத்து இருந்ததோ, அதே போன்று, கூர்மையான, சுயமரியாதையுடன் கூட வரலாற்றுப் பிரக்ஞையும் இருந்தது….

View More பாரதி பாடலில் அராஜக “செக்யுலர்” திருத்தங்கள்

அம்மாவும் சில மாமிகளும் மற்றும் நானும் [சிறுகதை]

அந்த வீட்டு மாமா வருகிற கார் சத்தம் தெரு முனையில் கேட்டவுடனேயே மாமி பேச்சை அவசர அவசரமாக நிறுத்தி விட்டு “வரேன் மாமி” என சன்னலை விட்டு ஓடுவாள்.இது அம்மாவுக்கும் எங்களுக்கும் பெரிய ஆச்சரியம், ஏனெனில் எங்கள் அப்பா வருகிறாரென்று நாங்கள் எந்த வேலையையும், விளையாட்டையும், பேச்சையும் பாதியிலே நிறுத்தியதேயில்லை… ஒரு விதத்தில் மாமாவும் நல்லவர்தான். மாமியும் பாவம் பரம சாது. ஆனால் அவர்களின் உறவின் இழையில் நுண்ணிய சிக்கல்கள். சராசரி நல்ல தனத்தொடு கூடிய ஒரு ஆண் + சராசரியான ஒரு நல்ல பெண் = ஒரு சராசரி சந்தோஷமான தம்பதிகள் என்ற சமன்பாடு சரியாக இருக்கின்ற தருணங்கள் வெகு குறைவே என்ற ஞானம் எனக்கு பிறந்தது… நான் சொன்னேன் ”அந்த மாமி பாவம் இல்ல!!” அண்ணா சொன்னான் “போடி பாவமும் இல்ல ஒண்ணும் இல்ல! பெரிய பங்களாவில இருங்காங்க. கார் வச்சுண்டு இருக்காங்க பையன் கான்வெண்டில படிக்கறான் ஊட்டியிலயோ எங்கயோ, நம்மளை மாதிரி கார்பரேஷன் ஸ்கூலா என்ன? ஜாலியாத்தான் இருக்காங்க. நாமதான் பாவம்!”….

View More அம்மாவும் சில மாமிகளும் மற்றும் நானும் [சிறுகதை]

ஆதிசங்கரர் படக்கதை — 8

நீங்கள் அத்வைதம் கற்பிக்கும் ஆச்சாரியார் இல்லையா! புலையன் என்று என்னை விலகிப்போகச் சொல்கிறீர்களே, அது என் தேகத்தையா, இல்லை, என் ஆத்மாவையா? நம் இருவரின் உடம்பும் சோற்றால் ஆனவை; இந்தச் சோற்றாலான உடம்பு, அந்தச் சோற்றாலான உடம்பைவிட்டு விலகவேண்டுமா?

View More ஆதிசங்கரர் படக்கதை — 8

பிடிபிடி, கண்ணையாவை இறுக்கிப்பிடி!

கம்யூனிஸ்டுகளின் பரிந்துரைகளும் போராட்டங்களும் மோதல்களையும் தேக்கநிலையையுமே அளித்ததாலும், முன்னேற்றத்தையும் செழுமையையும் தராததாலும், உழைக்கும் வர்க்கத்தவர்கள், இவர்களைக் கைகழுவிவிட்டார்கள். மரணப்படுக்கையில் கிடக்கும் இடதுசாரி இயக்கத்தினையும் குறுகிச்சிறுத்துக்கொண்டிருக்கும் காங்கிரஸ்கட்சியையும் இரட்சிப்பதற்கு, உணர்ச்சிவசப்படும் ஒரு மாணவர்தலைவரை முன்னிறுத்தியிருக்கிறார்கள். இந்த முயற்சி அவர்கள் எவ்வளவு ஆழமாகப் புதைகுழிச் சேற்றில் முழுகிக்கிடக்கிறார்கள் என்பதைத்தான் காட்டுகிறது.

View More பிடிபிடி, கண்ணையாவை இறுக்கிப்பிடி!

கிறிஸ்தவ மதத்தை நிராகரித்தல் – 7

இயேசு ஆண்-பெண் கூடலினால் பிறக்கவில்லை என்பதை ஒரு வாதத்திற்காக ஒப்புக்கொண்டால்கூட, அவர் ஒரு சிறப்பான மனிதர் என்று ஏற்றுக்கொள்ள முடியுமே அன்றி ஒரு தாயின் கருவிலிருந்து பிறந்த அவரை கடவுள் என்று ஏற்றுக்கொள்ள முடியாது
பைபிள் வசனத்திலிருந்து 1890 ஆண்டுகளுக்கு முன்னர் இயேசு வாழ்ந்தகாலத்தில் உலகின் முடிவு நெருங்கிவிட்டதை அவர் சிலருக்கு உரைத்திருக்கிறார் என்பதும், அவர்களில் சிலர் நியாயத்தீர்ப்பு நாளையும் காண்பதற்கு உயிரோடு இருப்பார்கள் என்றும் சொல்லியிருக்கிறார் என்பதும் தெரிகிறது.
இயேசு சொன்னதைக் கேட்டவர்கள் ஒருவராவது இன்னும் உயிரோடிருக்கிறார்களா?
இயேசு தான் கடவுள் அல்லர் என்பதை உணர்ந்திருந்தது தெளிவாகத் தெரிகிறது. மேலும் அவரது நாமத்தை கர்த்தர், கர்த்தர், இயேசு, இயேசு என்று சொல்லுவதால் சொர்கத்துக்குப் போகமுடியாது என்பதும் புலப்படுகிறது.

View More கிறிஸ்தவ மதத்தை நிராகரித்தல் – 7

அமெரிக்க[அதிபர்] தேர்தல்/அரசியல் — 1

மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட குடியரசாக இருந்தாலும், பதவிக்கு வருபவர்கள் தங்களைத் தங்கள் பதவியில் நிலைநிறுத்திக்கொள்வதற்காகப் பிற்காலத்தில் பேச்சுரிமை, எழுத்துரிமை, சமயத்தை அனுசரிப்பது, அல்லாது அனுசரிக்காமலிருப்பது இவற்றைச் சட்டமியற்றி மட்டுப்படுத்தக்கூடாது என்பதில் அமெரிக்க்த் தந்தையர் எவ்வளவு கண்ணும் கருத்துமாக இருந்தார்கள் என்பது கண்கூடாகிறதல்லவா?
அதற்குக் காரணம் தனிமனித உரிமை காக்கப்படவேண்டுமென்ற தணியாத தாகம்.

View More அமெரிக்க[அதிபர்] தேர்தல்/அரசியல் — 1

இந்துத்துவ அம்பேத்கர் – நூல்வெளியீட்டு விழா

பாபாசாகேப் அம்பேத்கரை இந்துத்துவ பார்வையில் பார்க்கையில் அவரது இந்துமத விமர்சனத்தை கணக்கில் எடுத்துகொண்டே அவரது இந்துத்துவ ஆதார நிலைபாடுகளை ம.வெங்கடேசன் முன்வைக்கிறார். ஆனால் பாபாசாகேப் அம்பேத்கரை இந்து விரோதியாக காட்டுகிறவர்கள் அவரது ஆதார இந்துத்துவ நிலைபாடுகளை மறைத்தே அவரை இந்துவிரோதியாக காட்டவேண்டியதுள்ளது. இதிலிருந்தே உண்மையான பாபாசாகேப் அம்பேத்கர் யார் என்பதும் அவரது முழுமையான பரிமாணங்கள் என்னென்ன என்பதும் விளங்கும்.

View More இந்துத்துவ அம்பேத்கர் – நூல்வெளியீட்டு விழா

தமிழகத்தின் ஒவ்வொரு பகுதியிலும் இஸ்லாமிய பயங்கரவாதம்: ஆவணப் படங்கள்

தமிழகத்தின் ஒவ்வொரு பகுதியிலும் இஸ்லாமிய பயங்கரவாதம் மாநிலத்தின் ஒட்டுமொத்த அமைதியையும் நல்லிணக்கத்தையும் சீர்குலைக்கும் வகையில் பெரிதாகி வருகிறது என்பதை விளக்கும் தனித்தனி குறு வீடியோ பதிவுகளை இந்து முன்னணி வெளியிட்டுள்ளது. திண்டுக்கல், சிவகங்கை, தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், காரைக்கால், கடலூர், காஞ்சிபுரம், சென்னை, வேலூர், விழுப்புரம், கோவை, திருப்பூர், மதுரை, தேனி, விருதுநகர், நெல்லை, குமரி.. என ஒவ்வொரு பகுதியிலும் ஆவணப் படுத்தப் பட்டுள்ள இஸ்லாமிய பயங்கரவாத வளர்ச்சி பற்றிய ஆதாரபூர்வமான செய்திகளின் அடிப்படையில் இந்த வீடியோக்கள் உருவாக்கப் பட்டுள்ளன…

View More தமிழகத்தின் ஒவ்வொரு பகுதியிலும் இஸ்லாமிய பயங்கரவாதம்: ஆவணப் படங்கள்

தாலிபான் நாடாகும் தமிழகம்: ஆவணப் படம்

தமிழகத்தில் இஸ்லாமிய ஆதிக்கமும், அதன் இன்றியமையாத பக்கவிளைவான ஜிகாதி பயங்கரவாதமும் எந்த அளவுக்கு அபாயகரமாக வளர்ந்து வருகின்றன என்பதை விளக்கும் ஆவணப் படத் தொகுப்புகளை அண்மையில் இந்து முன்னணி வெளியிட்டது. அதில் முதலாவதாக வருவது இது. ஆம்பூர், ராமநாதபுரம், திண்டுக்கல் போன்ற பகுதிகளில் இஸ்லாமியர்களின் ஆக்கிரமிப்புகள் & அடக்குமுறைகள், அப்பாவி இந்துக்கள் மீதும் கோயில்கள் மீதும் தாக்குதல்கள், காவல்துறை, மாநில அரசு, சட்டம் எதையும் மதிக்காமல் முஸ்லிம் அமைப்புகள் தமிழகத்தில் செய்யும் அத்துமீறல்கள் வன்முறைகள் மிரட்டல்கள், லவ் ஜிகாத், தேசவிரோத செயல்கள், உலகளாவிய இஸ்லாமிய பயங்கரவாதத் தொடர்புகள் என்று பல விஷயங்களையும் தெளிவான செய்தி ஆதாரங்களுடன் புட்டுப் புட்டு வைக்கிறது இந்த ஆவணப் படம். யூ ட்யூபில் பார்க்கலாம்…

View More தாலிபான் நாடாகும் தமிழகம்: ஆவணப் படம்