ஒரு எளிய ஹிந்து அல்லது இந்தியன் தினம் தினம் ஒரு கூர்மையான வாதத்தால் வீழ்த்தப்பட்டுக் கொண்டே இருக்கிறான். ஒரு சாதரண பேச்சில் பகிரங்கமாக சீண்டப்படுகிறான். இந்த சூழலில், சமூகசேவை, கல்வி, மருத்துவம் தொடங்கி எல்லாமே இந்தியாவில் எப்படி ஒரு அரசியல் கருவியாக, உள்நோக்கம் கொண்டதாக ஆகியிருக்கிறது என்பதை தன் இயல்பான தர்க்கத்தால் முன் வைத்திருக்கிறார் B.R.மகாதேவன், கதைமாந்தர்களின் வழியாக. எப்படிப்பட்ட வாதங்களால் நாம் அன்றாடம் களத்தில் வீழ்த்தப்படுகிறோமோ, அது எல்லாவற்றிற்கும் வெகுசாதாரண மொழியில் பதில் சொல்ல,ஒரு தரப்பை உருவாக்கிக் கொள்ள இந்த புத்தகம் மிக முக்கியமானது…
View More ஒரு விசுவாசமான கலகக்காரனின் வெளிவராத கடிதங்கள் – புத்தக அறிமுகம்Tag: அறம் அறக்கட்டளை
ஊடகங்களும் மாற்றங்களும்: அ.நீ உரை
திருப்பூரில் ஆகஸ்டு-15 அன்று அறம் அறக்கட்டளை நிகழ்த்திய கருத்தரங்கில் ஊடகங்கள் குறித்து அரவிந்தன் நீலகண்டன் உரை நிகழ்த்தினார். பல சிந்தனைக்குரிய கருத்துக்களை அந்த உரையினூடாக அவர் தெரிவித்தார். போபால் விஷவாயு விபத்து காலத்தில் இந்திய ராணுவ வீரர்களுடன் களத்தில் இறங்கி பாதிக்கப் பட்டவர்களுக்கு உதவிய இயக்கம் ஆர் எஸ் எஸ் மட்டுமே. அப்போதைய செய்தித் தாள்களில் கூட அந்த விஷயம் வெளிவந்தது. ஆனால் அதற்கான எந்த சான்றுகளும் அந்த இயக்கத்திடம் இல்லை என்பதைக் குறிப்பிட்டு ஆவணப்படுத்துதல் எவ்வளவு முக்கியம் என்பதை விளக்கினார். பின்னர் மேற்கத்திய எழுத்தாளர் ஒருவரால் போபால் விபத்து குறித்த விவரணங்கள் எவ்வாறு திரிக்கப் பட்டன என்பதையும் கூறினார்…. தமிழகத்தில் ஒடுக்கப் பட்டவர்களுக்கு ஈவேராவின் இயக்கம் எந்த விதத்திலும் உதவவில்லை; இந்தியாவிலேயே முதன் முதலில் உடுப்பி மாநகராட்சியில் மனிதக் கழிவை அகற்றுவதை தடைசெய்து சட்டம் இயற்றியது பாரதிய ஜனதா கட்சி தான் – இத்தகைய அரிய தகவல்களை எடுத்துரைத்தார்… இந்த 20 நிமிட உரை முழுவதையும் கீழ்க்கண்ட வீடியோக்களில் காணலாம்…
View More ஊடகங்களும் மாற்றங்களும்: அ.நீ உரைதிருப்பூர்: ஐ.ஏ.எஸ் பயிற்சி துவக்க விழா!
விவேகானந்தர் 150-வது பிறந்த ஆண்டு விழாவின் ஒரு பகுதியாக, திருப்பூர் அறம் அறக்கட்டளை,…
View More திருப்பூர்: ஐ.ஏ.எஸ் பயிற்சி துவக்க விழா!இராமாயண அறம் – ஜடாயுவின் உரை
தர்மம் என்றால் என்ன என்ற அறிமுகத்துடன் ஜடாயு தனது உரையைத் தொடங்கினார். பிறகு இராமாயணம், மகாபாரதம் ஆகிய இரு பெரும் இதிகாசங்களின் அறம் குறித்த பார்வைகள் எப்படி இணைந்தும் வேறுபட்டும் உள்ளன என்பது பற்றிக் குறிப்பிட்டார். வாலி வதம், குல தர்மம் – ஸ்வதர்மம் – உலக தர்மம், சீதையின் அறம் ஆகிய புள்ளிகளைத் தொட்டுச் சென்றது அவரது உரை. சுலோகங்களையும், கம்பராமாயணப் பாடல்களையும் இடையிடையே மேற்கோள் இட்டுப் பேசினார். உரையின் வீடியோ பதிவு கீழே..
View More இராமாயண அறம் – ஜடாயுவின் உரைதிருப்பூர்: விஜயதசமி விழா, சிறப்பு சொற்பொழிவுகள்
அறம் அறக்கட்டளை, திருப்பூர் நடத்தும் நிகழ்ச்சிகள்: காலை – எழுத்தறித்தவில் (வித்யாரம்பம்) விழா. மாலை – சொற்பொழிவுகள். ஜெயமோகன், அரவிந்தன் நீலகண்டன், ஜடாயு, பேரா. கனகசபாபதி, ஏ.பார்த்திபன் மற்றும் நகர பிரமுகர்கள் கலந்து கொள்கின்றனர் .. அழைப்பிதழ் கீழே. அனைவரும் வருக!
View More திருப்பூர்: விஜயதசமி விழா, சிறப்பு சொற்பொழிவுகள்