‘உண்மை வீட்டை விட்டுக் கிளம்புவதற்கு முன் பொய் ஊரைச் சுற்றி வந்து விடும்’ என்ற பழமொழி உண்டு. அது முற்றிலும் உண்மை என்பதைத்தான், தற்போது நாட்டின் பல பகுதிகளில் எதிர்க்கட்சிகளும் வன்முறையாளர்களும் இணைந்து நடத்தும் கலவரங்கள் காட்டுகின்றன. தேசம் முழுவதும் தற்போது பரபரப்பாகப் பேசப்படும் தேசிய குடிமக்கள் பதிவேடு (National Register of Citizens-NRC), குடியுரிமை திருத்தச் சட்டம் (Citizenship Amndment Act- CAA) ஆகியவை பற்றிய முழுமையான விவரங்கள் பலருக்கும் தெரிவதில்லை. அவர்களுக்காக, கேள்வி- பதில் வடிவில் தெளிவான விளக்கங்கள் இங்கே…
View More தேசிய குடிமக்கள் பதிவேடும் குடியுரிமை திருத்தச் சட்டமும்Tag: இந்திய வம்சாவளியினர்
இந்தியர்களின் வரலாற்று பிரக்ஞை – வி எஸ் நைபாலை முன் வைத்து
எனக்கு இந்தியா பெரும் மனக்காயம் அளித்தது. இந்தியா ஒரு போற்றிப் புகழப்பட்ட நாயகமான நாடு. அதே நாட்டின் பெரும் வறுமையிலிருந்துதான் என் முன்னோர்கள் 19-ஆம் நூற்றாண்டின் இறுதிகளில் தப்பித்து வெளியே ஓட வேண்டியிருந்தது. இந்த இரண்டு இந்தியாக்களும் வெவ்வேறாக இருந்தன.. என் சிறுவயதில் சரியான வார்த்தை தெரியாவிட்டாலும் இந்தியாவின் ‘பூரணத்துவம்’ (wholeness) என்ற விஷயத்தில் எனக்கு நம்பிக்கை இருந்தது. ஸ்பானியப் படையெடுப்பாளர்கள் முன்னால் மெக்ஸிக, பெரு கலாச்சாரங்கள் எப்படி ஒன்றுமே இல்லாமல் போனதோ அதுபோல் முஸ்லிம் ஆக்கிரமிப்பாளர்கள் முன்னால், இந்தியாவிலிருந்து வெகு தொலைவிலிருந்த எங்கள் காலனியில் பழமையானதும், சிதைந்து போகாததென்றும் நினைத்து நாங்கள் பல்வேறு விதமாக சிறந்த மரியாதை செலுத்தி வந்த எங்கள் தொன்மையான நாகரிகம் சிதைந்து போயிருந்தது; பாதி அழிந்து விட்டிருந்தது. அவர்கள் தொன்மையான கோயில்களுக்குச் சென்றார்கள். ஆனால் அக்கோயில்களைக் கட்டியவர்களுக்கிருந்த தன்னம்பிக்கை அவர்களுக்கு இல்லை. அவர்களால் நீண்டு நிலைத்திருக்கும் எதையும் கட்ட முடியாது.. பிரிட்டிஷ் காலனியாதிக்கத்துக்கு எதிரான சுதந்திரப் போராட்டம், பிரிட்டிஷ் வருகைக்கு முன்னால் இந்தியா சந்தித்த பேரழிவுகளை மறைத்து விட்டது. பேரழிவுகள் நடந்ததற்கான சாட்சியங்கள் மிக எளிதாக எல்லா இடங்களிலும் இருக்கின்றன. ஆனால் சுதந்திர இயக்கம் ஒரு மதம் போன்றிருந்தது; தான் பார்க்க விரும்பாத விஷயங்களை அது பார்க்கவில்லை..
View More இந்தியர்களின் வரலாற்று பிரக்ஞை – வி எஸ் நைபாலை முன் வைத்துஅமெரிக்க தேர்தல் 2012: ஒரு பார்வை – [3]
முதல் விவாதத்தின் பொழுது ஆரம்பம் முதலே ஒபாமா சுரத்தில்லாமல் இருந்தார். 6 கோடி பேர்களின் அபிமானத்தைப் பெறும் அற்புதமான ஒரு வாய்ப்பை தவற விட்டு விட்டார். ஆனால் அடுத்து நடந்த இரு விவாதங்களிலும் ஒபாமா சுதாரித்துக் கொண்டு தன்னை பலமாக நிலை நிறுத்திக் கொண்டார்… ஜனாதிபதி தேர்வு தவிர ஏராளமான தொகுதி சார்ந்த பிரச்சினைகளுக்கும் தேர்தல் வாக்குகள் மூலம் முடிவுகள் எடுக்கப் படும். எனவே, இங்கு ஓட்டுப் போடுவது என்பது பரீட்சைக்குச் செல்வது போல ஏராளமான கேள்விகளைப் படித்துப் புரிந்து தேர்வு செய்வதைப் போன்றது…. இந்தத் தேர்தலில் ஏராளமான இந்தியர்கள் பல்வேறு பதவிகளுக்காக போட்டியிடுகிறார்கள்….
View More அமெரிக்க தேர்தல் 2012: ஒரு பார்வை – [3]தமிழர்களின் கடல் கடந்த சோகம்: ஓர் ஆராய்ச்சி
வாசிக்கும் போது மனதில் கசப்பும் அவமானமும் ஊறுகிறது. தமிழின் பெயரில் கூத்தடிக்கும் அரசியல் கோமாளிகள் ஒருபக்கம், அரசியல் வைராக்கியத்துடன் இந்திய வம்சாவளியினர் நலனைப் பாதுகாக்கும் முதுகெலும்பும் அக்கறையும் அற்ற மத்திய அரசு மறுபக்கம், நம்மக்கள் படும் துயரை புறக்கணிக்கும் ஊடகங்கள் மறுபக்கம், இவை எதிலும் அக்கறையில்லாமல் இலவசங்களுக்கும் ஆயிரங்களுக்கும் ஜனநாயகத்தையே அடகு வைக்கும் மந்தையாக நாம் மறுபக்கம். என்று மடியும் இந்த அடிமையின் மோகம்?… இந்திய வம்சாவளியினர் குறிப்பாக தமிழர்கள் அயல்நாடுகளில் அனுபவிக்கும் அன்றாட வாழ்க்கை அவலங்களையும் காய்தல் உவத்தலின்றி முன்வைக்கும் முக்கியமான முயற்சி இது….
View More தமிழர்களின் கடல் கடந்த சோகம்: ஓர் ஆராய்ச்சி