தேசிய குடிமக்கள் பதிவேடும் குடியுரிமை திருத்தச் சட்டமும்

‘உண்மை வீட்டை விட்டுக் கிளம்புவதற்கு முன் பொய் ஊரைச் சுற்றி வந்து விடும்’ என்ற பழமொழி உண்டு. அது முற்றிலும் உண்மை என்பதைத்தான், தற்போது நாட்டின் பல பகுதிகளில் எதிர்க்கட்சிகளும் வன்முறையாளர்களும் இணைந்து நடத்தும் கலவரங்கள் காட்டுகின்றன. தேசம் முழுவதும் தற்போது பரபரப்பாகப் பேசப்படும் தேசிய குடிமக்கள் பதிவேடு (National Register of Citizens-NRC), குடியுரிமை திருத்தச் சட்டம் (Citizenship Amndment Act- CAA) ஆகியவை பற்றிய முழுமையான விவரங்கள் பலருக்கும் தெரிவதில்லை. அவர்களுக்காக, கேள்வி- பதில் வடிவில் தெளிவான விளக்கங்கள் இங்கே…

View More தேசிய குடிமக்கள் பதிவேடும் குடியுரிமை திருத்தச் சட்டமும்

பாகிஸ்தானின் மத அரசியல்

பாக்கிஸ்தானிலே அகமதியாக்கள் எனப்படும் ஒரு பிரிவினர் சட்டப்படி அவர்களை முஸ்லீம்கள் என சொல்லிக்கொள்ள முடியாது. சொன்னால் சிறைத்தண்டனையிலே இருந்து தூக்கு வரை உண்டு… பாக்கிஸ்தான் அரசியலமைப்பு சட்டத்திலேயே முஸ்லீம்கள் மட்டும் தான் பிரதமர், ஜனாதிபதி, ராணுவ தளபதி போன்ற பதவிகளுக்கு வரமுடியும் என இருக்கிறது. பாக்கிஸ்தான் அரசியலமைப்பு சட்டம், குற்றவியல் சட்டம் என எல்லாவற்றிலும் முஸ்லீம் சட்டங்களை பின்பற்றியே இருக்கிறது. ஹுடூட் சட்டம் என முஸ்லீம் மத சட்டத்தை முழுமையாக பின்பற்ற வழிசெய்யும் சட்டம் தனியே உண்டு… விபத்திலே இந்துக்களோ சீக்கியர்களோ கிறிஸ்துவர்களோ இறந்தால் சவப்பெட்டியை தனியே வைத்து காபிர் என அடையாளமிடுவது தான் பாக்கிஸ்தானிய வழக்கம். எல்லா கட்சிகளுமே தீவிரவாத கட்சிகளாக மதவாத அமைப்புகளாக இருக்கும்போது எதற்கு தனியே தீவிரவாத கட்சிகள் தேவைப்படும்?…

View More பாகிஸ்தானின் மத அரசியல்

நெருக்கடி நிலை யாருக்கு?

தனது தோல்வியை ஏற்ற பிரதமர் இந்திரா, 1977 மார்ச் 21-இல் நெருக்கடி நிலையை விலக்கிக் கொள்வதாக அறிவித்தார். ஜனநாயகம் மீண்டது. மக்களின் அடிப்படை உரிமைகள் மீளக் கிடைத்தன. அந்த அடித்தளம் மீது நின்றுகொண்டுதான் இப்போது நாம் பேச்சுரிமை, எழுத்துரிமை, கருத்துரிமைகள் குறித்து முழங்குகிறோம். வரலாற்றிலிருந்து பாடம் கற்காதவர்கள் முட்டாள்கள். நாட்டுக்கு துயரமான அனுபவத்தை அளித்த காங்கிரஸ் கட்சியின் கொடிய முகத்தை உணர்ந்த பலர் இப்போது பல்வேறு அரசியல் கட்சிகளாக இருக்கிறார்கள். இன்றைய பாரதீய ஜனதா கட்சி, நெருக்கடி நிலையைக் களையப் போராடிய சக்திகளுள் தலையாயது. 25 ஆண்டுகால தொடர்ந்த முயற்சிகள் அதனை அதீத பலமுள்ள மத்திய ஆளும் கட்சியாக்கி இருக்கின்றன. ஆனால், 1975-77-இல் இந்திராவின் எதேச்சதிகாரத்திற்கு எதிராகப் போராடிய பிற அரசியல் கட்சிகளின் தற்போதைய நிலை என்ன?…..

View More நெருக்கடி நிலை யாருக்கு?

இந்திய மதப்பிரிவினை சட்டம் = பண்பாட்டு அழிவு ? – 2

சராசரி மக்கள் தொகை வளர்ச்சியை விடவும் அதிகமாக,1991 முதல் 2001 வரையிலான காலகட்டத்தில், கிறிஸ்தவர்களின் எண்ணிக்கை உயர்ந்துள்ளது. ஏன் இவ்வளவு பயங்கரமாக அதிகரித்துள்ளது?… வரும் ஆண்டுகளில் 30வது சட்டப் பிரிவு விளைவிக்கும் தாக்கம் பெரும்பான்மையினரின் முன்னேற்றத்திற்கான வாசல்களைக் கொஞ்சம் கொஞ்சமாக மூடிக் கொண்டே வரப் போகிறது.இது ஏதோ கற்பனையான ஊகம் அல்ல. நோபல் பரிசு பெற்ற பொருளாதார நிபுணரின் கோட்பாடு சார்ந்த ஆய்வினால் உறுதிப்படுத்தப் பட்டு, சரியான தவல்களின் அடிப்படையில் கூறப்படும் அறிவுபூர்வமான விளக்கம்…

View More இந்திய மதப்பிரிவினை சட்டம் = பண்பாட்டு அழிவு ? – 2

இந்திய மதப்பிரிவினை சட்டம் = பண்பாட்டு அழிவு ? – 1

கிறிஸ்தவர்களைப் பொறுக்கி எடுத்து முன்னேற்றுவதற்காக இந்திய மக்களின் வரிப்பணம் மானியமாக செலவாகிக் கொண்டிருக்கிறது… வளர்ந்துவரும் ஒரு நவீன தேசம் தனது குடிமக்களின் ஒரு பிரிவினருக்கு எதிராக, அதுவும் பெரும்பான்மையினருக்கு எதிராக இப்படி பாரபட்சமாக நடந்து கொள்வது என்பது நினைத்துப் பார்க்க முடியாத விஷயம்.. இந்திய மக்கள் தொகையில் 2.3 சதவீதம் (2001 சென்சஸ் படி) உள்ள கிறிஸ்தவர்கள், இந்தியாவிலுள்ள 22 சதவீதம் கல்வி நிறுவனங்களைத் தங்கள் கட்டுப் பாட்டில் வைத்துள்ளார்கள். அதாவது தங்கள் எண்ணிக்கையைப் போல 10 மடங்கு கல்வி நிறுவனங்கள்…

View More இந்திய மதப்பிரிவினை சட்டம் = பண்பாட்டு அழிவு ? – 1

காங்கிரசும் கந்தனின் கல்வி வேலைவாய்ப்புக் கனவுகளும் – 2 [இறுதிப் பகுதி]

[எழுதியவர்: ஓ.பி. குப்தா, ஐ.எஃப்.எஸ் (ஓய்வு)] சிறுபான்மைக் கல்வி நிறுவனங்கள் எந்தப் பல்கலைக் கழகத்துடன் வேண்டுமானாலும் தங்களை இணைத்துக்கொள்ளலாம். அதற்கு அவர்களுக்கு முழு உரிமை அளிக்கப்பட்டுள்ளது. இந்தச் சட்டத்தை ஐக்கிய முற்போக்கு கூட்டணியில் அங்கம் வகிப்பவர்கள் மட்டுமல்லாமல் பகுஜன் சமாஜ், சமாஜ்வாடி கட்சியைச் சேர்ந்தவர்களும் ஆதரித்தார்கள், இடதுசாரிகளும் ஆதரித்தார்கள். இதை பாரதிய ஜனதாவும், சிவசேனையும் கடுமையாக விமர்சித்தன. முஸ்லிம் கல்வி நிறுவனம், உதாரணமாக ஜார்க்கண்டில் உள்ள ஜும்ரீத் அலியா என்ற சிறுபான்மைக் கல்வி நிறுவனம் எந்த மத்திய பல்கலைக்கழகத்துடனும் தனது விருப்பம் போல தன்னை இணைத்துக் கொள்ளலாம். மத்திய பல்கலைக்கழகத்திலிருந்து அந்தக் கல்வி நிறுவனத்தில் பயிலும் மாணவர்கள் பட்டம் பெற முடியும். அவர்களுக்கு வேலை வாய்ப்பு கிடைப்பதும் சுலபமாகும். வெளியிடங்களிலும் இதைக் காட்டி உயர்ந்த நிலைக்குச் செல்ல முடியும்.

ஆனால் அந்தப் பகுதியைச் சேர்ந்த ஹிந்து மாணவரால் அப்படி…

View More காங்கிரசும் கந்தனின் கல்வி வேலைவாய்ப்புக் கனவுகளும் – 2 [இறுதிப் பகுதி]

காங்கிரசும் கந்தனின் கல்வி வேலைவாய்ப்புக் கனவுகளும் – 1

[எழுதியவர்: ஓ.பி. குப்தா, ஐ.எஃப்.எஸ் (ஓய்வு)]. உங்கள் பார்வைக்கு 7 முக்கிய புள்ளிவிவரங்களைச் சமர்ப்பிக்கிறேன். ஹிந்து வாக்காளர்கள் தங்களது குழந்தைகள் மற்றும் பேரக் குழந்தைகளை இரண்டாம்தரக் குடிமக்களாக மாற்ற அவர்கள் அக்கறையின்றி வாக்களித்து வரும் முறைதான் காரணம் என்பதை இந்தப் புள்ளிவிவரங்களே மெய்ப்பிக்கின்றன. குறிப்பாக நன்கு படித்த ஹிந்துக்களின் பார்வைக்கு இந்தப் புள்ளிவிவரங்களைச் சமர்ப்பிக்கிறேன். ஏனெனில் இவை அதிர்ச்சி அளிப்பவையாக உள்ளன. ஆனால் இதைப்பற்றி நன்கு படித்த ஹிந்துக்களுக்குச் சரியாக தெரியாமல் இருக்கிறது. இதற்கு ஊடகமும் ஹிந்துக்களின் நலனில் உண்மையான அக்கறையற்ற அரசியல்வாதிகளும் காரணம் என்று சொல்வதைவிட…

View More காங்கிரசும் கந்தனின் கல்வி வேலைவாய்ப்புக் கனவுகளும் – 1