துயில் எழுப்புதலும், நீராட அழைத்தலும் இனிய ராகங்கள். வைகறையில் மானுடத்துக்கு இதைவிட இனிமை வேறு எதுவுமில்லை… அழகெல்லாம் உருகி நிற்கும் தடாகம் மணிவாசகக் கண்களில் இறைத் தடாகம் ஆகின்றது. ஆண்டாளின் இனிய பிரவாகம் காதல் வெள்ளம், பள்ளமடை திறந்த உணர்ச்சி வேகம்.. மாணிக்கவாசகரிடம் ஞானச்சிறகு விரிக்கும்; ஆண்டாளிடம் காதல் சிறகு விரிக்கும். இருவர்தம் பாவைப் பறவைகளும் ஆன்மவெளியில் பறக்கும் உயரங்களோ..
View More பாவைப் பாட்டுகள்: ஒரு முழுமைப் பார்வைTag: இறைத்துதி
பணிப்பொன்
ஐந்து இந்திரியங்களும் கைவிட்ட நிலையில் யார் கை கொடுப்பார்கள்? ஆண்டவன் ஒருவனே கைகொடுக்க முடியும். ஆனால் அந்த நேரம் ஆண்டவன் நாமத்தைச் சொல்லி அழைக்க முடியுமா? நல்ல நினவும் அறிவும் இருக்கும் போதே ஆண்டவன் நாமங்களைச் சொல்லிப் பழக வில்லை யென்றால் புலனடங்கி நினைவிழந்து பொறிகலங்கி கபம்அடைக்க நலம் நசிந்து நமன் வரும் வேளையிலா நாமம் சொல்ல முடியும்? அதனால் தான் ஆன்றோர்கள், நாம் நல்ல நிலையில் நினைவோடும் அறிவோடும் இருக்கும் போதே இறைவன் திரு நாமங்களைச் சொல்லிப் பழகிக் கொள்ள வேண்டும் என்று அறிவுறுத்துகிறார்கள்.
View More பணிப்பொன்