ஒரு உடல் நலன் இல்லாத அதிகார வெறி பிடித்த மர்மமான ஒரு பெண்மணிக்கு ஏன் தமிழ் நாடு வாக்களிக்க வேண்டும்? சிந்தியுங்கள். ஜெயலலிதாவுக்கு இன்றைய தேவை ஓய்வும், மருத்துவ சிகிச்சையும், பயிற்சிகளும், மருந்துகளுமே அன்றி நிச்சயமாக முதல்வர் பதவி கிடையாது. அதற்கான அருகதையுடையவர் அவர் கிடையாது என்பதை மீண்டும் மீண்டும் நிரூபித்து வருகிறார். அவருக்குத் தேவையான ஓய்வை அளியுங்கள்… தமிழ் நாட்டில் முக்கியமான இந்துத் தலைவர்கள் பலரும் கொடூரமான முறையில் வெட்டிக் கொல்லப் பட்டார்கள். ஆம்பூரில் இஸ்லாமிய பயங்கரவாதிகள் பெரும் கலவரம் நடத்தி போலீஸ்காரர்களைக் கடுமையாகத் தாக்கி பெண் போலீஸ்காரர்களை மான பங்கப் படுத்தினர். இது எதையும் கண்டு கொள்ளாமல்இஸ்லாமிய பயங்கரவாதம் தமிழ் நாட்டில் வேர் விட்டு வளர அனுமதி அளித்து வைத்திருக்கிறார் ஜெயலலிதா. ஓட்டுக்காக இவர் அனுமதித்திருக்கும் பயங்கரவாதம் நாளைக்கு ஒட்டு மொத்தத் தமிழ் நாட்டையே அழித்து விடக் கூடியது. நீங்களும் உங்கள் மனைவி குழந்தைகளும் குண்டு வெடித்துச் சிதறும் அபாயம் தமிழ் நாட்டைச் சூழ்ந்துள்ளது. ஊழல் மலிந்த நீர், மின்சாரம், கல்வி, பாதுகாப்பு,சாலை, வேலை என்று அனைத்து துறைகளிலும் மெத்தனமும் செயலின்மையும் ஊழல்களும் மலிந்த ஜெயலலிதா அரசு உடனடியாக நீக்கப் பட வேண்டும்…
View More தமிழக தேர்தல் 2016: ஒரு வேண்டுகோள் – 2 (வேண்டாம் அ.தி.மு.க)Tag: இலவசங்கள்
கம்யூனிசமும் சோஷலிஸமும் களேபரங்களும் – 7
ஹிந்து பத்திரிகை மட்டுமல்ல, இடதுசாரி நிபுணர்கள் மட்டுமல்ல, பொதுவாகவே கருணைக் காவலர்களாக தங்களை முன்னிறுத்த விழையும் பல அதிகாரிகளும் நிபுணர்களும் பொருளாதார ஏற்றதாழ்வு என்பது ஒரு இயற்கை நியதி என்ற பச்சையான உண்மையை ஏற்க மறுக்கின்றனர். இருப்பவர்களிடமிருந்து அதிக வரிவசூல் செய்வதன் மூலம், இல்லாதவர்களுக்கு வசதிகளை அளித்துவிட முடியும் என்று துடிக்கின்றனர்… பட்ஜெட் பற்றாக்குறைகளை எவ்வாறு எதிர்கொள்வது என்பதை ஆராய, பா.ஜ.க அரசு திரு.விஜய் கெல்கார் தலைமையில் ஒரு குழுவை அமைத்தது…5 இலட்சம் கோடிகளை பற்றாக்குறையாக மாற்றி விட்டது ஓட்டுவங்கி அரசியல் நடத்தும் தற்பொழுதைய அரசு… இந்தியாவில் அமலில் உள்ள இரண்டு பிரம்மாண்டமான மானிய திட்டங்களான 100 நாள் வேலைத் திட்டத்தையும், உணவுக்கான மானியங்களையும் ஒருசேர நோக்குவதே சரியான வழியாக இருக்கும்…
View More கம்யூனிசமும் சோஷலிஸமும் களேபரங்களும் – 7கம்யூனிசமும் சோஷலிஸமும் களேபரங்களும் – 6
உண்மையான ஏழை மக்களுக்கு, அவர்களை ஏழ்மையிலேயே வைத்திருக்கப் பயன்படும் அனைத்து மானியங்களும் பிரயோஜனமில்லாத மானியங்களே!… எந்த அளவிற்கு பொதுநலன் இருக்க வேண்டும் என்பதில் உயிரியலாளர்களிடையே விவாதம் நடக்கிறது. குடும்ப அளவிலா, நாட்டின் அளவிலா, இன அளவிலா, மொத்த மனித அளவிலா அல்லது அனைத்து உயிர்களின் அளவிலா?…. எங்கள் மாவட்டத்தில் மொத்தமாக 10,15 கிராமங்கள் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டிருக்கலாம். ஆனால் அனைவர்க்கும் இழப்பீடு வழங்கப்பட்டது…. ஒரு உதாரணத்திற்காக, திருபாய் அம்பானியின் விதவை மனைவியையும், என் தாயாரையும், என் வீட்டில் வேலை செய்யும் மூதாட்டியையும் அவதானிக்கலாம்….
View More கம்யூனிசமும் சோஷலிஸமும் களேபரங்களும் – 6கம்யூனிஸமும் சோஷலிஸமும் களேபரங்களும் – 1
இந்த கட்டுரையில் கம்யூனிஸத்தை முழுமையாக எதிர்த்து எழுதப் போகிறேன். ஆனால் பொதுவுடைமையின் சில கூறுகளாவது மனித சமூகம் உள்ளவரை எல்லா நாடுகளிலும் கடைபிடிக்கப்படும் என்ற எதார்த்தத்தை உணர்கிறேன்… 1990க்கு பிறகு, வாலை சுருட்டிக் கொண்டிருந்த கம்யூனிஸ்டு அரக்கன், நன்றாகவே நாக்கை நீட்டிக் கொண்டு,வேட்டைக்கு வெளிக் கிளம்பி விட்டான்… இடதுசாரி பொருளாதார கொள்கையை அனுசரித்தவர்களே, சந்தை பொருளாதாரத்தின் பயன்களைக் கண்டவுடன், தங்கள் சிந்தனைகளை மாற்றிக்கொள்கிறார்கள்…
View More கம்யூனிஸமும் சோஷலிஸமும் களேபரங்களும் – 1தேர்தல் களம்: பாஜக தலைவர் பொன்.ராதாகிருஷ்ணன் பிரத்யேக பேட்டி
கருணாநிதிக்கு ஒரே மாற்று ஜெயலலிதா தான் என்ற சிந்தனை மக்களிடம் இருப்பதாக நான் நினைக்கவில்லை. ஆனால், இந்தச் சித்திரத்தை ஊடகங்கள் உருவாக்குகின்றன… பாஜக சிறுபான்மையினரை வெறும் வாக்குவங்கியாகக் கருதவில்லை. பெரும்பான்மையினர் ஆதிக்கம் செலுத்த வேண்டும் என்று பாஜக கூறவில்லை; அதே சமயம் தாழ்வாக நடத்தப்படக் கூடாது என்றே கூறுகிறது…பாஜக, மீனை இலவசமாகக் கொடுக்குமாறு கூறுவதில்லை; மீன் பிடிக்க கற்றுத் தருவதையே பாஜக நோக்கமாகக் கொண்டுள்ளது.
View More தேர்தல் களம்: பாஜக தலைவர் பொன்.ராதாகிருஷ்ணன் பிரத்யேக பேட்டிதேர்தல் களம்: இலவசங்கள் – எச்சில் இலை பிச்சை!
இப்படிக் கொடுக்கும் இலவசங்களால் மக்கள் பிரச்சினைகள் தீர்க்கப்பட்டு விடுமா? . இந்த இலவசங்கள் எத்தனை நாட்களுக்கு? இவர்கள் ஐந்து ஆண்டுகள் ஆளவேண்டுமென்பதற்காக மக்கள் வரிப்பணத்தை எடுத்து வாரி இறைத்து, “ஆற்றோடு போகிற தண்ணியை ஐயா குடி! அம்மா குடி!” என்று வீசுகிறார்களே, இதைத் தடுக்க வழியே இல்லையா? இந்த நாட்டில் நியாயம் உணர்ந்தவர்களே இல்லையா?
View More தேர்தல் களம்: இலவசங்கள் – எச்சில் இலை பிச்சை!