தேர்தல் களம்: இலவசங்கள் – எச்சில் இலை பிச்சை!

நடைபெற விருக்கும் தமிழக சட்டமன்ற தேர்தலை யொட்டி தமிழ் நாட்டு அரசியல் கட்சிகள் ஒன்றோடொன்று போட்டியிட்டுக் கொண்டு இலவசங்களை அறிவித்திருக்கின்றன. சென்ற தேர்தலில் எல்லோருக்கும் கலர் தொலைக்காட்சி பெட்டி என்றனர். அதே போல ஒவ்வொரு வீட்டுக்கும் தி.மு.க. அவற்றை வழங்கியதும் மக்களுக்கு இலவச அறிவிப்புகளில் நம்பிக்கை ஏற்பட்டு விட்டது. ரூபாய்க்கு ஒரு படி அரிசி நியாய விலைக் கடைகளில் என்றதும் அனைவரும் ஓடிப்போய் அந்த அரிசியை வாங்கிச் செல்கின்றனர். கடைகளில் அவர்கள் அரிசியை அளக்கும் போது பத்து கிலோ எடை சரியாக அளப்பதில்லை. அவசரத்தில் எட்டு அல்லது அதற்கும் குறைவான எடைக்கே அரிசியை அளந்து நம் பைகளில் கொட்டிவிடுகிறார்கள். நமக்கும் சரிதான் பத்து ரூபாய்க்கு இவ்வளவு அரிசி கிடைத்ததே பெரிது என்று முகம் மலர வீடு வந்து விடுகிறோம்.

இந்த முறை மக்களுக்குக் குறிப்பாக பெண்மக்களுக்கு அடித்தது யோகம். ஒவ்வொரு குடும்பத்துப் பெண்ணுக்கும் ஒரு மிக்சி அல்லது கிரைண்டர் என்றார் கருணாநிதி. பொறியியல் கல்வி படிக்கும் மாணவர்களுக்குப் பிந்தங்கிய அல்லது மிகவும் பின்தங்கிய பிற்படுத்தப் பட்டோர் ஆகிய சமூக மாணவர்களுக்கு இலவச மடிக் கணினியாம். அடே அப்பா! சாதாரணமாக இருபத்தி ஐயாயிரம் ரூபாய் விலையில் பொறியியல் மாணவர்கள் வாங்கி வைத்திருக்கும் அந்த கணினி இனி இலவசமா? பரவாயில்லையே! இனி தமிழக மாணவர்களுக்கு யோகம் தான் என்ற வியப்பு ஏற்பட்டது. இந்த இலவசம் அறிவிப்பு வந்த உடனே கழக உடன்பிறப்புக்களுக்குத் தாங்க முடியாத மகிழ்ச்சி. அடடா! என்னே தமிழகத்தின் பொற்காலம். தமிழகத்தில் இலவச மழை வெள்ளமாக அல்ல, சுனாமியாக அல்லவா வந்து கொட்டப் போகிறது என்ற பூரிப்பு. கூட்டங்கள் தோறும் பெருமை பேச்சு. தொலைக் காட்சி ஊடகங்களில் முகம் காட்டும் அரசியல் வாதிகள் முடியுமா மற்றவர்களால் எத்தனை வகை இலவசங்கள் என்று பூரிக்கிறார்கள். எங்கள் இலவசங்களே இந்தத் தேர்தலில் வெற்றியைத் தரும் என்கிறார் ஒரு அமைச்சர்.

logic_magic

இதற்கிடையே ‘கூத்துக்கிடையே பீத்து வந்தது’ என்பார்களே அதுபோல ஒரு கூத்தாடி, திரைப்படங்களில் நடித்து பாமர மக்கள் மத்தியில் பெயர் வாங்கிவிட்ட ஒரு ஆளுக்கு ‘இதுதாண்டா சா¢யான சந்தர்ப்பம்’ தனது சொந்தப் பழியைத் தீர்த்துக் கொள்ள என்று விஜயகாந்த் மீதிருந்த ஆத்திரத்தைத் தீர்த்துக் கொள்ள களம் இறங்கி விட்டார். அவர் திருவாரூ¡¢ல் கருணாநிதி கலந்து கொண்ட கூட்டத்தில் பேசுகிறார், ‘தண்ணி மேல ஓடற கப்பலுக்குத் தாண்டா கேப்டன், தண்ணிலே மிதக்கிறவனுக்கு எதுக்குடா கேப்டன்னு பேரு’ என்கிறார். கூட்டத்தில் மந்திரிகள் அழகிரி, துரை முருகன், தயாநிதி மாறன் போன்றவர்கள் மட்டுமல்லாமல் முதலமைச்சர் பதவி வகிக்கும் கருணாநிதியும் இந்த நகைச்சுவையை (அல்லது தரமற்ற விமரிசனமா?) ரசித்து வயிறு குலுங்க சிரிக்கிறார்கள். அவர்கள் பாணியில் இதனைச் சொல்ல வேண்டுமென்றால், “அட கேடுகெட்ட தமிழகமே, உன் ரசனையும், தரமும் இத்தனை கீழாகப் போக வேண்டுமா? பாமரனும் சரி, உயர்ந்த பதவியில் இருப்பவனும் சரி, இப்படி கேடுகெட்டப் பேச்சை ரசித்து சிரிப்பதில் வருத்தமோ அவமானமோ இல்லையா?” என்று கேட்கத் தோன்றுகிறது. சரிதான், தேர்தல் என்றால் எப்போதும் இப்படித்தான், இதில் புதிதாக என்ன இருக்கிறது என்று நினைக்கிறீர்களா? இல்லை, நாகாரிகத்தின் எல்லைக் கோட்டைத் தாண்டிவிட்ட அநாகரிகத்தின் உச்சம் இது.

2ஜி ஸ்பெக்ட்ரம் ஊழலில் உள்ளே இருக்கிறார் ஒரு முன்னாள் மந்திரி. அவருடைய தேட்டையில் பங்கு பெற்ற பலர் இன்று ஆடம்பரமாக உலா வருகிறார்கள். எவராவது வாயைத் திறந்து விடாமல் இருக்க என்னவெல்லாம் செய்ய வேண்டுமோ அத்தனையும் செய்யப் படுகின்றன. ஆக மொத்தம் கவிஞர் கண்ணதாசன் தனது “வனவாசத்திலும்” “நானும் அரசியல் வாதிகளும்” போன்ற புத்தகங்களில் எழுதியிருப்பதைப் போல அடிப்படை இல்லாத கற்பனை கொள்கைகளிலும், வெறுப்பு, எதிர்ப்பு அரசியலிலுமே வளர்ந்து வந்திருக்கிற இந்த இயக்கங்களிடமிருந்த எந்த வகையான ஆக்க பூர்வ நடவடிக்கைகளை எதிர்பார்க்க முடியும்?

ஜஸ்டிஸ் கட்சி, சுயமரியாதை இயக்கம், திராவிடர் கழகம், திராவிட முன்னேற்றக் கழகம், அண்ணா திராவிட முன்னேற்ற கழகம் என்று வாழையடி வாழையாக இவர்கள் குட்டி போட்டு வளர்ந்தாலும் அடிப்படையிலான வெறுப்புணர்ச்சியும், எதிர்ப்புணர்ச்சியும் காங்கிரசை அழிப்பதும், பிராமணர்களை எதிர்ப்பதும் என்பது தான். இந்தக் கொள்கை இவர்களுக்கு நல்ல பலனைக் கொடுக்கத் தொடங்கியதும் அதனையே இவர்கள் மிக உறுதியாகப் பற்றிக் கொண்டிருக்கிறார்கள்.

சரி! தி.மு.க.வின் கதைதான் தெரிந்தது ஆயிற்றே. எம்.ஜி.ஆர். தொடங்கி ஜெயலலிதாவில் வளர்க்கப்பட்ட அ.தி.மு.க. வின் நிலைப்பாடு என்ன? தி.மு.க. மிக்சி அல்லது கிரைண்டர் என்றால் அத்தோடு மின்விசிறி ஒன்றும் இனாம் என்கிறார்கள். பொறியியல் படிக்கும் பிற்படுத்தப்பட்ட, மிகவும் பிற்படுத்தப்பட்ட அல்லது தாழ்த்தப்பட்ட மாணவர்களுக்கு மடிக்கணினி என்றால், பதினொன்றாம் வகுப்புப் படிக்கும் மாணவர் முதல் அனைத்து மாணவர்களுக்கும் கல்லூரியில் படிக்கும் எல்லா துறை மாணவர்க்கும் கணினி இலவசம். 20 கிலோ அரிசி அட்டைதாரர்களுக்கு இலவசம், தாலிக்கு தங்கம் இலவசம், இன்னும் என்னென்னவோ? இப்படியே போய்க்கொண்டிருந்தால், திருமணமாகாத இளைஞர்களுக்கு புதிதாக ஏதாவது இலவசமாகக் கிடைக்குமோ என்னவோ தெரியவில்லை.
jcartoon

நாம் எங்கே போய்க்கொண்டிருக்கிறோம்? இப்படி அள்ளி வீசப்படும் இலவசங்கள் எல்லாம் யார் வீட்டுப் பணம். இந்தக் கட்சிகள் கொள்ளை அடித்து வைத்திருக்கும் பணத்திலிருந்து கொடுக்கிறார்களா. இல்லையே! அரசாங்கம் மக்கள் நலப் பணிக்காகச் செலவு செய்ய வேண்டிய இந்தப் பணத்தை, கண்ணை மூடிக் கொண்டு வாரியிறைக்க இவர்களுக்கு அதிகாரம் கொடுத்தது யார்? இலவசங்கள் கொடுப்பதை தடுக்க முடியாது என்று ஒரு நீதிமன்றம் தீர்ப்பு வேறு அளித்திருக்கிறது. தேர்தல் அறிக்கை என்ற பெயரில் உங்களுக்கு எல்லாம் இலவசம் என்றால் அது லஞ்சம் கொடுப்பது ஆகாதா? இதை கேட்க தேர்தல் கமிஷனோ அல்லது நீதிமன்றங்களோ ஏன் முன்வருவதில்லை.

இப்படிக் கொடுக்கும் இலவசங்களால் மக்கள் பிரச்சினைகள் தீர்க்கப்பட்டு விடுமா? மக்கள் பிரச்சினைகளின்றி வாழ்வார்களா. வேலையில்லா திண்டாட்டம் தீர்ந்து விடுமா? நாட்டில் புதிய தொழில்கள் உருவாக்கப்பட்டு விடுமா? உற்பத்தி பெருகி விடுமா? நாட்டில் பாலும் தேனும் பாய்ந்தோடுமா? நிச்சயமாக இல்லை. குந்தித் தின்றால் குன்றும் கரையும் என்பார்கள். இந்த இலவசங்கள் எத்தனை நாட்களுக்கு? இவர்கள் ஐந்து ஆண்டுகள் ஆளவேண்டுமென்பதற்காக மக்கள் வரிப்பணத்தை எடுத்து வாரி இறைத்து, “ஆற்றோடு போகிற தண்ணியை ஐயா குடி! அம்மா குடி!” என்று வீசுகிறார்களே, இதைத் தடுக்க வழியே இல்லையா? இந்த நாட்டில் நியாயம் உணர்ந்தவர்களே இல்லையா?

இந்தக் கும்பலோடு கும்பலாக காங்கிரஸ் கட்சி வேறு கூட்டுச் சேர்ந்து கொண்டு இலவசத்துக்கு இலவசமாகப் பிரச்சாரம் செய்கிறார்கள். ஒரு மத்திய அமைச்சர் வந்து இலவசங்கள் ‘கொடுக்க முடியும்’, அதற்கு போதிய நிதி வசதி இருக்கிறது என்று தூண்டிவிட்டுப் போகிறார். பொருளாதார நிபுணர்கள் இந்த மா நிலத்தின் பொருளாதார நிலைமை, வருமானம், செலவு இவை போக இதுபோன்ற இலவசங்களை வாரி இறைக்கப் போதிய நிதிவசதி உண்டா என்பதையெல்லாம் ஆராய மாட்டார்களா?

மக்கள் நல அரசு என்பது ஒரு சித்தாந்தம் உண்டு. அது எப்போது? இப்போது ஜப்பானில் நிகழ்ந்த பேரழிவு போன்ற நேரங்களில் மக்கள் ஒன்றுமே இல்லாமல் வெறுங்கையோடு தெருவில் நிற்கும் போது, இருக்க இடம், உடை, உணவு கொடுத்து அவர்களைக் குடியமர்த்துதல் ஒரு மக்கள் நல அரசின் கடமை. வேலை எதுவும் இல்லாமல் வீட்டில் தண்ட சோறு தின்று கொண்டு பெட்டிக் கடை வாயிலில் சிங்கிள் டீ கடனுக்கு வாங்கி உறிஞ்சிவிட்டு, ஒரு பீடியைப் பற்ற வைத்துக் கொண்டு ஆற்றங்கரை அரசமரத்தடியில் அமர்ந்து பத்திரிக்கையொன்றை விரித்து வைத்துக் கொண்டு வீண்கதை பேசும் வீணர்கள் கூட்டத்துக்கு இலவசங்களைக் கொடுத்தால் என்ன விளைவுகள் ஏற்படும்.

dinamali_madhi_cartoon_tn_election_freebies
நன்றி: தினமணி ‘மதி கார்ட்டூன்’

இதையெல்லாம் ஒருவரும் கவனிப்பதாகத் தெரியவில்லை. இவர்களால்தான் இலவசங்களைத் தர முடியும். இந்த இலவசத் திட்டங்களைப் பார்த்து காப்பி அடித்தது மற்றோன்று. அவரிடம் நம்பகத் தன்மை கிடையாது. என்றெல்லாம் பேசுவது தான் இந்த தேர்தலில் பிரச்சாரம். நாட்டின் தேவை, பொருளாதார நிலை, ஊழல்களால் நாட்டின் செல்வம் கொள்ளை அடிக்கப்பட்டது, அரசாங்கப் பதவிகளில் இருந்து கொண்டு ஊரை அடித்து உலையில் போடுவது, நியாயம் தவறிய அரசு நிர்வாகம், கொள்ளைகளைக் காப்பாற்ற உரிய இடத்தில் தங்களுக்கு வேண்டியவர்களைப் பதவி அமர்த்துதல், இவற்றைப் பற்றி, படித்தவர்களும் சரி, அரசியல் வாதிகளும் சரி, அதிகாரிகளும் சரி, நம்மைப் போன்ற மக்களும் சரி கவலைப் படுவதாகத் தெரியவில்லை. ஐயகோ! தமிழ் நாடே, உன்னைப் பார்த்து நாடே சிரிக்கிறது. என்று மாறும் இந்த அவல நிலைமை? மாறுமா? மாறாதா? மாற வழி உண்டா. உண்டு என்றால் அது என்ன வழி? நல்ல உள்ளம் படைத்த நேர்மையாளர்கள் தயை கூர்ந்து இவற்றுக்கு விடையளியுங்கள்.

23 Replies to “தேர்தல் களம்: இலவசங்கள் – எச்சில் இலை பிச்சை!”

  1. Pingback: Indli.com
  2. தேர்தலில் ஜெயித்தால் என்ன என்ன செய்வோம் என்பதை கட்சிகள் பட்டியலிட்டுச் சொல்லுவதை கட்டுப்படுத்தும் விதிமுறைகள் இப்போதைய நடைமுறையில் இல்லை என்று தேர்தல் கமிஷன் கூறிவிட்டது. அது எப்போதும் வர யாரும் விடப்போவதும் இல்லை. தமிழன் இனி கையேந்தித் தான் பிழைக்கணும்.

    வெளிநாட்டு வாழ் தமிழர்கள் ஓடோடி தாயகம் வந்து விடவும்
    https://www.virutcham.com/2011/03/வெளிநாட்டு-வாழ்-தமிழர்கள/

  3. //…என்று வாழையடி வாழையாக இவர்கள் குட்டி போட்டு வளர்ந்தாலும் அடிப்படையிலான வெறுப்புணர்ச்சியும், எதிர்ப்புணர்ச்சியும் காங்கிரசை அழிப்பதும்//

    சரி! காங்கிரசை அழிப்பதில் உங்கள் கருத்து என்ன? என் கருத்து அந்த கட்சியை வரலாற்றில் இடம் பிடிக்க வைக்க வேண்டும் என்பது…அதாவது அழிய வேண்டும் என்பது.

  4. இன்று இருப்பது காங்கிரஸ் அல்ல. இது கருணாநிதி காங்கிரஸ். நான் சொல்வது அன்றைய காங்கிரஸ். நாட்டுக்காக தியாகம் செய்த காங்கிரஸ். இன்றைய தங்க பாலு, பீட்டர் அல்பான்ஸ், யசோதா போன்றவர்கள் உள்ள காங்கிரஸ் அழிய வேண்டிய காங்கிரசே.

  5. கருநாநிதி களவாடுகிறது என்ற கோபத்தில் மக்கள் மற்றொரு கொள்ளைக்காரிக்குத்தான் வாக்குப் போடுவார்கள் என்றால்….

    பொதுஜனங்கள் வெள்ளாட்டு மந்தைகளை விட மந்த புத்தி உள்ளவர்கள் என்பது உறுதியாகும்.

    இந்தியா ஜனநாயக நாடாக மாறாதவரை மந்தை புத்தியோடுதான் மனிதர்கள் திரிவார்கள்.

  6. குஜராத் அரசாங்கம் உலகத்திலேயே இரண்டாவது சிறந்த அரசாங்கம் என சர்வதேச கௌன்சில் அறிவித்துள்ளது. பத்து வருடங்களுக்கு முன்னால் உலக வங்கியிடமிருந்து அம்பதாயிரம் கோடி ரூபாய் கடன் வாங்கியது. ஆனால் இன்று உலக வங்கியிடம் ரூபாய் லட்சம் கோடி செலுத்தியுள்ளது. குஜராத்தில் மதுக்கடை இல்லை. மின்வெட்டு இல்லை. இலவச திட்டங்களும் இல்லை. நூறு சதவீதம் பெண்கள் படித்துள்ளர்கள். அகில பாரத அளவில் பதினைந்து சதவீதம் ஏற்றுமதி குஜராதிடமிருந்து தான் டாட்டா ஹுண்டாய் போர்ட் ரிலையன்ஸ் ஹோண்டா தொழிற்சாலைகள் குஜராத்தில் உள்ளன. பாரதத்தில் முதல் மாநிலம் . பத்து வருடங்களில் சிங்கப்பூருக்கு இணையாக மாறும்.
    தமிழ்நாடு மாநிலமோ இன்னும் ஐந்து வருடங்களில் முதல் தர பிச்சைக்கார மாநிலமாக (கிரைண்டர் மிக்சி மின்விசிறி முதலியன இலவசமாக பெறுவதனால்) மாறும். சிந்தனை செய்யுங்கள் வோட்டு போடுங்கள் ( எனக்கு வந்த SMS லிருந்து )

  7. அனைவரும் பி ஜே பி க்கு வாக்களிக்க வேண்டும் … சரிதானே …. இன்னொரு நரேந்திர மோடி தமிழகத்துக்கு வேண்டும் … சரிதானே …
    கோயில்கள் அனைத்தும் குருக்கள் வசம் ஒப்படைக்க பட வேண்டும் … சரிதானே ….

  8. பொன் ராதாகிருஷ்ணனுக்கு அவரது தொகுதியில் மிகவும் ஆதரவு தெரிவிப்பவர்கள் கிறிஸ்துவர்கள்தான்.

    இதனை குமரி மாவட்டக்காரர்களே அறிவார்கள்.

    பொன் ராதாகிருஷ்ணனின் தலைமையில் தமிழ்நாட்டில் மின்சார தடை இல்லாத தமிழகம் உருவாகும்.

    கல்வி பரவலாகும்.

    தொழில் பெருகும். ஏழ்மை ஒழியும்.

    இன்னொரு மலேசியாவாக, சிங்கப்பூராக தமிழகம் ஜொலிக்கும்.

    அது ஜெயாவாலோ, கருணாவாலோ நடக்காது. பொன் ராதாகிருஷ்ணனின் தலைமையின் கீழ்தான் நடக்கும்.

    வாக்களிக்க வேண்டியது தமிழர்களின் கடமை.

  9. திரு.தஞ்சை வெ.கோபாலன்,
    இலவசங்களைப் பற்றி வருத்தப்படுவது தவிர நம்மால் ஆகக்கூடியது
    ஒன்றுமில்லை. இருந்தாலும் ஏதோ சிறிது உலக அறிவும், அடிப்படை
    பொருளாதார அறிவும் இருப்பதால் நாம் புலம்புகிறோம்.

    என்றாவது ஒரு நாள், (அடுத்த வருடமோ அல்லது 10 வருடங்கள் கழித்தோ)
    இந்த இலவசங்கள் நிறுத்தப்படும். பொருளாதாரத்தில் இதை
    Sustainability என்பார்கள். கண்டிப்பாக இவை நிறுத்தப்படத்தான்
    போகின்றன.

    அந்த நாளில் நாம் கிரேக்க வழியில் செல்ல வேண்டியிருக்கும். மிகவும்
    பரந்துபட்ட சிக்கன நடவடிக்கைகள், ஓய்வூதியம் தொடங்கி
    முதியோர்களின் மருத்துவ செலவுகள் வரையில் கொடூரமாகத் தோன்றும்
    பல நிகழ்வுகள் நடக்கும். அதற்கு எதிராக போராடும் தொழிலாளிகளின்
    பாட்சா பலிக்கவே பலிக்காது. சில நாட்கள் போராட்டம், பிறகு அதை
    ஏற்றுக்கொள்ள நேரும் யதார்த்தம் என்றுதான் வரும் காலம் இருக்கும்.

    அந்த நிலையை நாம் அடையாமல் இருக்க பிரிட்டனின் வழியே
    சிறந்தது. அத்தனை அரசாங்க அமைப்புகளிலும், பாதுகாப்பு தொடங்கி
    பி.பி.சி வரை 20 முதல் 30 சதவிகிதம் செலவில் சிக்கனம். கல்லூரி
    கட்டணமாக இருந்தாலும் சரி, சமூக அமைப்புகளுக்கு அளிக்கப்படும்
    கொடையாக இருந்தாலும் சரி, சிக்கனம்தான். 5 இலட்சம் அரசாங்க
    பணியிடங்கள் குறைப்பு. அதை எதிர்த்து நடக்கும் போராட்டங்கள்
    காலப்போக்கில் பிசுபிசுக்கின்றன.

    நாம் தமிழ்நாட்டில் பிரிட்டனைப் போன்று சிக்கனமாக இருந்து நம்
    வருங்கால சந்ததியினரை மானத்துடன் வாழ வைப்போமா? அல்லது
    கடன் தொகை அதிகமாகி கிரேக்கத்தைப் போல் பிச்சை எடுக்கப்
    போகிறோமா என்பதை காலம்தான் முடிவு செய்யும்.

    இந்த 2 குப்பைகளைப் போன்றே பா.ஜ.கவும் மடிக்கணிணியை அளிக்க
    முன்வந்துள்ளதுதான் இன்றைய கொடூரம்.

  10. prasath p

    \\ கோயில்கள் அனைத்தும் குருக்கள் வசம் ஒப்படைக்க பட வேண்டும் … சரிதானே ….\\

    உங்கள் பேச்சு கேனத்தனமாக உள்ளது. நீங்கள் சொல்வது எப்படி இருக்கிறது தெரியுமா? நம்ப திரு குவளை தீய சக்தி பேசுவது போலவே உள்ளது. கோயில் விசயத்துக்கும் இவர்கள் பேசுவதற்கும் என்ன சம்பந்தம். அப்படியே அவர்களுடன் போனால் தான் என்ன? கோயில் என்ன spectrum விநியோகம் செய்யும் இடமா? லட்சம் கோடி கிடைக்க?

    காலம் காலமாக 80 % கோயில்கள் தர்ம கர்த்தா என்ற அந்தத்த பகுதி சான்றோர்களால் தான் நடத்த படுகிறது. 70 % கோயில்கள் ஏதேனும் ஒரு குல அமைப்பிற்கு பாதியபட்டது. சும்மா லூசு தனமா உளறாதிங்க.

  11. @prasath p ….உங்கள் அனைத்து கேள்விகளுக்கும் விடை…”சரி”.

  12. பிரசாத்ஜி அவர்களுக்கு

    குஜராத் பற்றி சொன்னதும் பி ஜே பிக்கு வோட்டு அளிக்கணும் என்று
    தோன்றியதும் நரேந்திர மோடி அவர்கள் தேவை என்று சொன்னதும் சரி தான். தமிழ் நாட்டில் நாம் பெறும் ஒவ்வொரு இலவசத்துக்கு பின்னாலும் ஒரு குடிகாரன் குடும்பம் நாசமாகி உள்ளது தெரியுமா ? நமக்கு தேவையா அந்த பாவப்பட்ட இலவசங்கள் ? சிந்திப்போம் நல்லவருக்கே வாக்களிப்போம் இல்லையேல் வாக்குச்சாவடி சென்று யாருக்கும் வாக்களிக்க விருப்பமில்லை என்று பதிவு செய்வோம்.

  13. கோயில்கள் என்றுமே குருக்கள் வசம் இருந்ததில்லை. தமிழகத்தில் ஆயிரக்கணக்கான கோயில்கள் உள்ளன. ஒவ்வொரு கோயிலும் அந்தப்பகுதியில் உள்ள கிராம, அல்லது வட்டார தலைவரின் நிர்வாகத்தில் தான் இருந்துவந்தது. ஏனெனில் கோயில் நிர்வாஹம் மற்றும் திருவிழா நடத்து கிற செலவுகள் இவற்றை கிராம மக்களிடம் நன்கொடை வசூலித்து தான் , நடத்தி வந்தார்கள்.

    சிதம்பரம் கோயில் நிர்வாஹம் கூட தீட்சிதர்களின் கட்டுப்பாட்டில் சிறிதுகாலம் தான் இருந்து வந்துள்ளது. கழகங்களின் பொய் பிரச்சாரம் காரணமாக பிரசாத் போன்றவர்கள் தவறான கருத்து கொண்டுள்ளார்கள்.

    ஸ்ரீ ரங்கம் ரங்கநாதனையும் , சிதம்பரம் நடராஜனையும் வெடிவைத்து பிளக்கும் நாள் எந்நாளோ, அந்த நாளே பொன்னாள் என்று முழங்கியவர் தான் இந்நாள் மஞ்சள் துண்டு மாமுனிவர் ஒரு காலத்தில். அந்த வரலாறு பிரசாத் போன்றவர்களுக்கு தெரியாது.

    கடவுள் நம்பிக்கை, பக்தி இல்லாத நாத்திகர்கள் கோயில் சொத்தை சூறை ஆடுவதற்காக ,திமுக ஆட்சிகட்டிலில் ஏறியவுடன் கோயில்களில் தக்கார் ஆக நியமனம் பெற்றனர். பெரியார் திடலில் மோசடி பகுத்தறிவு வியாபாரி வீரமணி , சுவிசேஷ பிரச்சாரம் செய்து பணம் பண்ணுவது போல , இவர்களும் கோயில் சொத்தினை முழுவதுமாக சாப்பிட , எல்லாவிதமான பொய்களையும் சொல்லி வருகின்றனர்.

    பிரசாத் போன்ற நண்பர்கள் ஒன்றை சிந்திக்க வேண்டும். அனைத்து ஜாதியினரும் அர்ச்சகர்கள் ஆகவேண்டும் என்று பயிற்சி கொடுத்த கலைஞர் அரசு , பயிற்சி பெற்ற மாணவர்களை என் இன்னும் பனி நியமனம் செய்யவில்லை.? பாஜக ஆளும் பாட்னாவில் ஒரு கோயிலில் ஒரு தாழ்த்தப்பட்டவரை அர்ச்சகராக நியமனம் செய்துள்ளார் நிதீஷ் குமார். அவர் உண்மையான மனிதரா? கலைஞரா? சற்று சிந்தியுங்கள் நண்பரே.

  14. @sri hari
    ஐயா,
    ஏன் கோபம் …. கேனையன் மறுமொழி இடக்கூடாத ? கோவில்கள் யார்வசம் இருந்தால் என்ன ? நான் கூறியது பி ஜே பி யின் தேர்தல் வாக்குறுதிகளில் ஒன்று சரிதானே ……

  15. @prasath

    கேனயன் மறுமொழியிட்டால் கேனத்தனமாக இருக்கும். அப்ப கோவில்களை மொளலிகளிடமும், பாதரிகளிடமும் ஒப்படைத்து விடலாம் என்று சொல்கிறீர்களா. கடவுளே இல்லை என்னும் திக தான் அவா மட்டும் கோவில்களில் எப்படி லட்டு பிடிக்கலாம் என்று போராடுவது போல் உள்ளது நீங்கள் பேசுவது.

    நன்றாக படித்து பாருங்கள் பிஜேபி யின் தேர்தல் அறிக்கையை கோவில்களை குருக்கள் வசம் கொடுக்கவேண்டும் என்று எங்கும் சொல்லவில்லை. அவர்களின் சித்தாந்தப்படி அவாளோ தகுதிவாய்ந்த எவாளோ கோவில்களில் பூஜை செயவதை ஆதரிக்கித்தான் செய்கிறார்கள்.

  16. \\நன்றாக படித்து பாருங்கள் பிஜேபி யின் தேர்தல் அறிக்கையை கோவில்களை குருக்கள் வசம் கொடுக்கவேண்டும் என்று எங்கும் சொல்லவில்லை. அவர்களின் சித்தாந்தப்படி அவாளோ தகுதிவாய்ந்த எவாளோ கோவில்களில் பூஜை செயவதை ஆதரிக்கித்தான் செய்கிறார்கள்\\

    பாலாஜி ஐயா,

    உங்கள் பதில் நன்கு விவரமாக இருந்தது … எனது அறிவுக்கண்ணை திறந்து விட்டீர்கள் … இது ஒரு சரியான மூக்குடைப்பு(பிரசாத்திற்கு) … ஆனால் இந்து கோவில்களை நிர்வகிக்கவோ & பூஜை செய்யவோ குருக்களைவிட தகுதியான இந்துக்கள் எங்காவது இருக்கிறார்களா ? தயை கூர்ந்து மீண்டும் என் கண்ணை திறவுங்கள் …. சரிதானே ….

  17. பி பிரசாத் அவர்களே,
    குருக்கள் அல்லாதோர் நிர்வகிக்கும் தனியார் கோயில்கள் பல தமிழகத்திலே உள்ளது உங்களுக்கு தெரியாதா?

    இந்து எதிரிகளுக்கு அந்த தகுதி இல்லவே இல்லை, இப்போது அவர்களின் பிடியில்தான் கோயில்கள் உள்ளன அது நிச்சயம் அவர்களிடம் இருந்து பறிக்கப்பட்டு ஆன்மிக நம்பிக்கை உள்ளவர்களின் கையில் வரவேண்டும்.

    குருக்களாக இருப்பதால் ஒருவர் அந்த தகுதியை இழப்பதும் இல்லை, எந்த கோவிலிலாவது பரம்பரை தர்மகத்தாவாக குருக்கள் இருந்திருக்கிறாரா?

    அமைதிபடையில் சத்தியராஜ் (பகுத்தறிவாதி) சொல்லுவார் சாதியை கண்டுபிடித்தது மணி அடிக்கிறவர்கலாம்,ஆனால் அதனை பிடித்து கொண்டிருப்பது மந்திரிமார்கள் என்கிற உண்மையையும் சொல்லி இருப்பார்.
    சாதி உருவான கதை நமக்கு தெரியாது ஆனால் அதனை விடாமல் வளர்த்து வருவது அரசியல் வாதிகள் என்பதை நாம் நேரடியாகவே பார்க்கிறோம், ஏனென்றால் சாதி மறைந்து விட்டால் இவர்கள் பிசினஸ் படுத்து விடும்.

  18. @பிரசாத்:

    நன்றி அறிவு கண்ணை திறந்து பார்த்ததுக்கு. இந்து அறநிலையத்துறையின் கட்டுப்பாட்டில் உள்ள கோவில்களை தகுதி வாரியாக அதிக வருமானம் , மிதமான வருமானம் , குறைந்த வருமானம் தரும் கோயில்கள் என பிரித்துள்ளார்கள். கோயில்கள் இப்போது வருமானம் ஈட்டித்தரும் நிறுவனங்களாகி வெகுநாட்க்கள் ஆகின்றன. கோயில்களில் இருக்கும் EO களுக்கு இலக்கு நிர்ணயிக்கிறார்கள் . இந்த வருமானமெல்லாம் பகுத்தறிவு பேசும் கட்சிக்கு பாதி ஹஜ்ஜுக்கு புனித பயணம் அனுப்பும் அரசாங்கத்துக்கு மீதி.

    கோயிலில் உள்ளே உள்ள வருமானத்தை விடுங்கள் கோவில்களுக்கு இருக்கும் நிலம், வீடு, கடை வருமானம், பிரசாத கடை காண்ட்ராக்ட்….. இவை அத்தனையும் கட்சிகாரர்க்ளுக்கு பாத்யம் செய்து பல மாமாங்கங்கள் ஆகிவிட்டன. இதில் எத்தனை பேர் சரியாக கோயில்களுக்கு குத்தகை கட்டுகிறார்கள். இந்த கேள்விக்கு பதில் உங்களுக்கே தெரியும்.

    எத்தனையோ கோயில்கள் பாழடைந்த நிலையில் உள்ளன. ஒரு வேளை பூஜை நெய்வேத்யம் செய்யக்கூட வருமானம் இல்லாத கோயில்கள் உள்ளன. அந்த கோவில்களில் பணிபுரியும் குருக்களும், பட்டர்களும் தங்கள் கை பணத்தை செலவழித்து பூஜைகளை செய்பவர்கள் எத்தனையோ பேர்களை எனக்கு தெரியும். நிற்க

    தட்டில் விழும் காசை மட்டும் வைத்திக்கொண்டு வீடு கட்டி வாழும் குருக்களும் பட்டர்களும் சொற்ப்பமான பேர் இருக்கிறார்கள். தினப்படி வாழ்க்கையை ஓட்ட முடியாதவர்கள்களாகத்தான் அனேகம் பேர் இருக்கிறார்கள். அர்சகர்களாக படித்தவர்கள் பெரியார் சிலைக்கு மாலை போட்டு தங்கள் போராட்டத்தை தொடங்க்கினார்களே அந்த போராட்டம் வலுபெற்றால் 69% இடஒதுக்கீடு இங்கும் கொடுக்கப்படும். கவலைபடதீர்கள்.

    அவா ஒண்ணு அமெரிக்கா போறா இல்ல சமைக்கப்போறா.

    இதுக்கு மேல கண்ண தொறக்க முடியாது தொறந்தா இதுக்கு மேல தொறந்தா கண்ணு தெரிச்சு கீழே விழுந்திடும்.

  19. \\ இதுக்கு மேல கண்ண தொறக்க முடியாது தொறந்தா இதுக்கு மேல தொறந்தா கண்ணு தெரிச்சு கீழே விழுந்திடும்.\\

    என்னே ஒரு கண்டுபிடிப்பு … கலக்கிட்டேள் போங்கோ ….

    \\ அவா ஒண்ணு அமெரிக்கா போறா இல்ல சமைக்கப்போறா\\

    இதுக்கு அர்த்தம் புரியல தயை கூர்ந்து தொங்கி கொண்டு இருக்கும் என் கண் தேறிச்சு விழறதுக்கு முன்னால சொல்லணும் சரிதானே …

  20. எத்தனையோ கோயில்கள் பாழடைந்த நிலையில் உள்ளன. ஒரு வேளை பூஜை நெய்வேத்யம் செய்யக்கூட வருமானம் இல்லாத கோயில்கள் உள்ளன.

    What use to the public of TN if the ruined temples in remote places of the state are renovated with regular pujas?

    paalum thenum oodi ellaarum ellaamum pertru vaazha uthavuma?

    Balaaji, Open my eyes also 🙂

  21. மிக அழகாக விளககியிருக்கிருக்கிறார் கட்டுரை ஆசிரியர். தம் மக்கள் (குடும்ப மக்கள் ) ஏராள நிதி திரட்ட கருணை கொண்டு திட்டங்கள் தீட்டுவதால் தான் அவர் பெயர் கருணாநிதி என்றுள்ளது போலும். இலவசங்களுக்காக உள்ள ஏராள நிதியை இலவச குடி நீர், தரமான இலவச மருத்துவம், எல்லோருக்குமே தடையில்லா இலவச மின் சப்ளை, தரமான கல்விக் கூடங்கள், தரமான இலவச கல்வி, எங்கும் சுத்தம் சுகாதாரமுடன் கூடிய மேடு பள்ளமில்லா மின் விளக்குள்ள உலகத் தரமுள்ள சாலை வசதிகள், இன்ன பிற மக்களுக்காக, கட்சி, சாதி வேறுபாடின்றி, லஞ்ச லாவண்யமில்லா அரசாட்சி செய்ய எந்த வேட்பாளர்களால் முடியுமோ (அவர்கள் கட்சி சாரா தனி நபர்கலாயிருவ்தாலும் சரி), அவர்களையே ஆதரியுங்கள். இனி ஓட்டுக்காக லஞ்ச இலவசங்கள் வேண்டாம் என்று புறக்கணியுங்கள். நாடும், மக்களும் முன்னேறட்டும். அதற்கு ஒத்துழைப்பு தாருங்கள். பொறுத்தது போதும்.

  22. @செங்கதிர்

    கோவில்களை பரமரித்தால் பாலும் தேனும் ஓடி எல்லோரும் எல்லாம் பெற்று வாழ உதவும்.

    உங்கள் கண்ணையும் திறந்துட்டேன் போதுமா. 🙂

  23. //கோவில்களை பரமரித்தால் பாலும் தேனும் ஓடி எல்லோரும் எல்லாம் பெற்று வாழ உதவும்.

    உங்கள் கண்ணையும் திறந்துட்டேன் போதுமா. //

    சபாஸ் சரியான தீர்ப்பு …
    என் செருப்ப எங்க விட்டேன் தெரியல …
    அது என்தன கிலோமீற்றக்கு அந்தபக்கம் கெடக்கோ …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *