தொடர்ந்து கிறிஸ்துவப் பள்ளிகளிலும், ஹாஸ்டல்களிலும் இந்து மாணவிகள் மர்மமான முறையில் மரணிக்கிறார்கள் என்பதான செய்திகள் வந்து கொண்டே இருக்கின்றன. ஊடகங்கள் இதை கண்டு கொள்ளாது. அவற்றின் வாய் முழுக்க மாட்டிறைச்சி. நம் குழந்தைகளுக்காக நாம்தான் பேச வேண்டும். இந்திய அரசின் சிறுபான்மை சலுகை என்கிற பெயரில் நடத்தப்படும் கல்விப் பாரபட்சக் கொள்கையின் (educational apartheid) கோர விளைவுதான் இது. அரசு கேள்வி கேட்க முடியாது. நாங்கள் சிறுபான்மையினர் என்று ஓமலூர் சுகன்யா கொலை விவகாரத்தில் பிஷப் பதிலளித்தது நினைவிருக்கிறதா? சென்னை ரஞ்சனி, ஓமலூர் சுகன்யா, புதுவை அனந்த வள்ளி, என்று தொடர்கிற வரிசையில் உசிலம்பட்டியின் சிவசக்தியும் சேர்ந்திருக்கிறார்….
View More கிறிஸ்தவப் பள்ளியில் மாணவி சிவசக்தி பலி: தொடரும் அவலம்Tag: ஊடக மௌனம்
ஊடகங்களும் மாற்றங்களும்: அ.நீ உரை
திருப்பூரில் ஆகஸ்டு-15 அன்று அறம் அறக்கட்டளை நிகழ்த்திய கருத்தரங்கில் ஊடகங்கள் குறித்து அரவிந்தன் நீலகண்டன் உரை நிகழ்த்தினார். பல சிந்தனைக்குரிய கருத்துக்களை அந்த உரையினூடாக அவர் தெரிவித்தார். போபால் விஷவாயு விபத்து காலத்தில் இந்திய ராணுவ வீரர்களுடன் களத்தில் இறங்கி பாதிக்கப் பட்டவர்களுக்கு உதவிய இயக்கம் ஆர் எஸ் எஸ் மட்டுமே. அப்போதைய செய்தித் தாள்களில் கூட அந்த விஷயம் வெளிவந்தது. ஆனால் அதற்கான எந்த சான்றுகளும் அந்த இயக்கத்திடம் இல்லை என்பதைக் குறிப்பிட்டு ஆவணப்படுத்துதல் எவ்வளவு முக்கியம் என்பதை விளக்கினார். பின்னர் மேற்கத்திய எழுத்தாளர் ஒருவரால் போபால் விபத்து குறித்த விவரணங்கள் எவ்வாறு திரிக்கப் பட்டன என்பதையும் கூறினார்…. தமிழகத்தில் ஒடுக்கப் பட்டவர்களுக்கு ஈவேராவின் இயக்கம் எந்த விதத்திலும் உதவவில்லை; இந்தியாவிலேயே முதன் முதலில் உடுப்பி மாநகராட்சியில் மனிதக் கழிவை அகற்றுவதை தடைசெய்து சட்டம் இயற்றியது பாரதிய ஜனதா கட்சி தான் – இத்தகைய அரிய தகவல்களை எடுத்துரைத்தார்… இந்த 20 நிமிட உரை முழுவதையும் கீழ்க்கண்ட வீடியோக்களில் காணலாம்…
View More ஊடகங்களும் மாற்றங்களும்: அ.நீ உரைஏசுவுக்கான இந்து நரபலிகள்
சம்பவ தினத்தன்று காலையில் ஸ்கூல் ப்ரேயரின்போது பைபிள் வாசகங்களைச் சரியாகச் சொல்லாததற்காக சகமாணவிகள் முன் அவளது வகுப்பாசிரியை அவளைப் பிரம்பால் அடித்திருக்கிறார். பிறகுத் தலைமை ஆசிரியையிடம் வேறு தண்டிப்பதற்காக அழைத்துச் சென்றிருக்கிறார். அங்கு என்ன நடந்ததென்று தெரியவில்லை…
View More ஏசுவுக்கான இந்து நரபலிகள்இரு பெண்களின் கதை
ஜூலியா ராபர்ட்ஸ்களின் பேட்டிகளில் போகிறபோக்கில் அவர்கள் காட்டும் ஒரு வரி அங்கீகாரங்களால் அல்ல; ஊடக ஒளிவட்டங்கள் விழாத பல இலட்சம் பங்காரம்மாக்கள் அறத்துக்காகப் படும் வேதனைகளாலும் கண்ணீர் வெள்ளங்களாலும் தான் ஹிந்து தர்மம் வாழ்ந்து கொண்டிருக்கிறது…. படித்த ஹிந்துக்கள், ஹிந்து உணர்வாளர்கள், அத்தகைய ஹிந்துக்களாக நாம் இருக்கிறோமா என்பதை அறிந்திட காலம் உருவாக்கிய ஒரு முரண் சோதனைதான் ஜூலியா ராபர்ட்ஸின் பேட்டியும் பங்காரம்மாவின் போராட்டமும்.
View More இரு பெண்களின் கதைதமிழர்களின் கடல் கடந்த சோகம்: ஓர் ஆராய்ச்சி
வாசிக்கும் போது மனதில் கசப்பும் அவமானமும் ஊறுகிறது. தமிழின் பெயரில் கூத்தடிக்கும் அரசியல் கோமாளிகள் ஒருபக்கம், அரசியல் வைராக்கியத்துடன் இந்திய வம்சாவளியினர் நலனைப் பாதுகாக்கும் முதுகெலும்பும் அக்கறையும் அற்ற மத்திய அரசு மறுபக்கம், நம்மக்கள் படும் துயரை புறக்கணிக்கும் ஊடகங்கள் மறுபக்கம், இவை எதிலும் அக்கறையில்லாமல் இலவசங்களுக்கும் ஆயிரங்களுக்கும் ஜனநாயகத்தையே அடகு வைக்கும் மந்தையாக நாம் மறுபக்கம். என்று மடியும் இந்த அடிமையின் மோகம்?… இந்திய வம்சாவளியினர் குறிப்பாக தமிழர்கள் அயல்நாடுகளில் அனுபவிக்கும் அன்றாட வாழ்க்கை அவலங்களையும் காய்தல் உவத்தலின்றி முன்வைக்கும் முக்கியமான முயற்சி இது….
View More தமிழர்களின் கடல் கடந்த சோகம்: ஓர் ஆராய்ச்சி