கடந்த ஒராண்டில் ஏறத்தாழ 23,500 கிலோ மீட்டருக்கும் மேல் பாரதம் முழுக்க என் பயணம் விரிந்தது. இதன் கலாச்சார வளமையும், நாகரீகமும், தொன்மையும், அறிவு செழித்து பல்கி பெருகி விரிந்த இடங்களையும், இயற்கை அன்னையின் பெருங் கருணையையும், பண்பாட்டு உச்சங்களையும், கவின் கலையின் பிரமிப்புகளையும், வரலாற்றுத் தடங்களையும், தருணங்களையும், மட்டுமின்றி பாரதத்தின் ஒருமித்த பேருருவை கண்டடைந்த பெருமித கணங்களை பதியத் துவங்குகிறேன்…. தமிழ் மொழியின் தோற்றம் வளர்ச்சி பரவல் பற்றி ஆராயும் மானுடவியலாளர்கள், மொழியியல் வல்லுனர்களுக்கு தமிழக கலிங்க உறவுகளும் ஹாத்தி கும்பா கல்வெட்டுகளும் மிகப்பெரிய புதையலாகும்… பெரிய மெளரிய வம்ச சக்ரவர்த்திகளாலேயே வெற்றி கொள்ள முடியாத தீரமிக்க தமிழ் மன்னர்களை திரை செலுத்த வைத்தது தன்னுடைய மிகப்பெரிய சாதனை என காரவேலர் இந்தக் கல்வெட்டில் தெரிவிக்கிறார்….
View More பாரத தரிசனம்: நெடும்பயண அனுபவம் – 1Tag: ஐராவதம் மகாதேவன்
செம்மொழி விருதுகள்: சில கேள்விகள்
தனது வாழ்க்கையையே சிந்து சமவெளி இலச்சினைகளை விளக்கிட செலவழித்த மகாதேவன், ஹரப்பா பண்பாடு வேதப் பண்பாடு என்று சொல்வதை கொஞ்சமும் இலட்சியம் செய்யாமல் ஒரு இனவாதச் சட்டகத்தில் அந்த பண்பாட்டின் வரலாற்றை விளக்கி அதனை இன்றைய அரசியலுடன் முடிச்சு போடக்கூடியவர்களிடம் எவ்விதம் ஒரு முணுமுணுப்பும் இல்லாமல் விழா மதிப்பு பெறுகிறார்?… பழந்தமிழரின் ஆன்மிகப் பண்பாட்டின் இந்த மைய அச்சுக்கள், பழந்தமிழரை பாரதப் பண்பாட்டுச் செழுமையுடன் இணைக்கும் இப்பாவுகள் – காட்டப்பட்டனவா இம்மாநாட்டில்? வலியுறுத்தப்பட்டனவா? (மூலம்: டாக்டர் எஸ்.கல்யாணராமன்)
View More செம்மொழி விருதுகள்: சில கேள்விகள்