செம்மொழி விருதுகள்: சில கேள்விகள்

மூலம்: டாக்டர் எஸ்.கல்யாணராமன்
தமிழில்: அரவிந்தன் நீலகண்டன்

Asko Parpola
Asko Parpola

ஆய்வாளர் அஸ்கோ பர்போலாவுக்கு செம்மொழி மாநாட்டில் விருது வழங்கப்பட்டுள்ளது. ஆய்வாளர் ஐராவதம் மகாதேவன் அவரது வாழ்நாள் பங்களிப்புக்காக கௌரவிக்கப்படுகிறார். வாழ்த்துக்கள்.

இருவருமே சிந்து-சரஸ்வதி பண்பாட்டின் இலச்சினைகளின் சித்திர உருக்களின் பொருளை வெளிக்கொணர்வதில் கடுமையாக உழைத்தவர்கள். முக்கியமான முன்னகர்வுகளை கொண்டு வந்தவர்கள். அடிக்கடி ஊடகங்களில் அறிவியல் பூர்வமான அணுகுமுறையை முன்னிறுத்துபவர்கள். இவர்கள் இத்தகைய ஒரு முக்கிய பொதுவிழாவில் பாராட்டப்படுவது நிச்சயமாக மகிழ்ச்சி அளிக்கும் விஷயம்தான்.

ஆனால் சில கேள்விகள் எழுவதை தவிர்க்க முடியவில்லை.

இந்த செம்மொழி மாநாட்டை நடத்துவோர் ஆரிய படையெடுப்புக் கோட்பாட்டை நம்புகிறவர்கள். சிந்து சமவெளிச்சின்னங்களுக்கும் இன்றைய தமிழ் மக்களுக்கும் மட்டுமேயான ஒரு பண்பாட்டுத் தொடர்ச்சியை ஆதரிப்பவர்கள். பாரதத்தின் தமிழரல்லாத பிற மக்களுக்கும் சிந்து சமவெளி பண்பாட்டுக்குமான தொடர்பை மறுப்பவர்கள். அது மட்டுமல்ல; அவர்கள் செம்மொழி, தனி மொழி என முன்னிறுத்தும் தமிழர் பண்பாடு சங்ககால கட்டத்தைச் சேர்ந்ததெனக் கூறும் இவர்கள் இது ஆரிய (அதாவது வேத பண்பாட்டு) தொடர்பற்ற ஒரு தனித்தமிழ் பண்பாடு என்று பிரச்சாரம் செய்து வருபவர்கள். இந்த நிலைப்பாட்டையெல்லாம் பிரச்சார தளத்துக்கு கொண்டு செல்லும் விதமாக செம்மொழி மாநாட்டு முத்திரையை இவர்கள் அமைத்திருக்கின்றனர். சிந்து-சரஸ்வதி பண்பாட்டு இலச்சினைகளை தமிழ் செம்மொழி மாநாட்டுக்கு இந்த நிலைப்பாடுகளின் அடிப்படையில் பயன்படுத்தியுள்ளனர்.இந்த இலச்சினையை வடிவமைத்த குழுவில் ஐராவதம் மகாதேவனும் உள்ளார் என்பது மிகவும் வேதனையாக விஷயம்.

இனவாத,அரசியல் பிரச்சார அடிப்படையில் சிந்து-சரஸ்வதி முத்திரைகள் பயன்படுத்தப் படுவதற்கு, தன் வாழ்நாள் முழுவதையும் இந்த ஆராய்ச்சிக்கே அர்ப்பணித்த அறிஞரான மகாதேவன் மௌனமாக துணை போகிறார்  ஏன்? இதுதான் அடிப்படையாக எழக்கூடிய கேள்வியாகும்.

அஸ்கோ பர்போலாவின் ஆய்வு முடிவுகளை ஐராவதம் மகாதேவனும், ஐராவதம் மகாதேவனின்
ஆய்வு முடிவுகளை அஸ்கோ பர்போலாவும் ஒத்துக் கொள்வதில்லை – இருவருமே சிந்து-சரஸ்வதி பண்பாட்டு இலச்சினைகள் திராவிட மொழியைக் கொண்டிருப்பதாக சொன்னாலும், இருவருமே இன்னும் அதிசயிக்கத் தக்க விதத்தில் ஆரிய படையெடுப்பு/புலப்பெயர்வு கோட்பாடுகளை அந்த பதங்களைக் கூட விடாமல் பயன்படுத்திக் கொண்டிருந்தாலும்- என்பதையும் இங்கு சிந்திக்க வேண்டும்.

indus_one_horn_animal_sealஅஸ்கோ பர்போலா சிந்து-சரஸ்வதி சமவெளி இலச்சினைகளில் இருக்கும் மீன் போன்ற சித்திர எழுத்துருவை “மீன்” என்று சொல்லி அதனை விண்மீன்களைக் குறிப்பதாகக் கூறுகிறார். அறுமீன் -கார்த்திகை என்றெல்லாம் அவர் சிந்து-சரஸ்வதி இலச்சினைகளை கருதுகிறார். எனவே பசுபதி என அறியப்படும் புகழ்பெற்ற யோகநிலைக் கடவுள் வருணனைக் குறிப்பிடுவதாக இருக்கலாம் என்றும் சொல்லுகிறார் (1).

உண்மைதான். உதாரணமாக அகநானூற்றில் “அறுமீன்” குறித்து தலைவி பேசுகிறாள் (2). புறநானூற்றுப் பாடலில் “மீன்திகழ் விசும்பில்” எனக் கூறுவதைப் பார்க்கிறோம் (3). “மாஇரு விசும்பில் பல்மீன் ஒளி கெட ஞாயிறு” தோன்றியதைக் குறித்து பதிற்றுப்பத்தில் பார்க்கிறோம் (4). பின்னர் சிலப்பதிகாரத்தில் அருந்ததி “வடமீன்” எனக் குறிப்பிடப்படுவதையும் பார்க்கிறோம்.(5)

விண்மீன்களை மீன் எனச் சொல்லும் தமிழர் பண்பாட்டை சிந்து-சரஸ்வதி பண்பாட்டுடன் இணைக்கும் அஸ்கோ பர்போலாவின் பார்வை சரியானதாக இருக்க வாய்ப்பிருக்கிறது. அத்துடன் மற்றொரு விஷயத்தையும் நாம் கணக்கில் எடுக்க வேண்டியுள்ளது. விண்மீன்களை மீன்களாகப் பார்ப்பதுடன் தொடர்புடைய விஷயம் வானைப் பெருங்கடலாகக் காண்பது. இந்த மையமான உருவகம் வேத இலக்கியத்திலிருந்து தான் வருகிறது என்று கல்வெட்டு ஆய்வாளர் எஸ்.ராமச்சந்திரன் அறுதியிட்டுக் கூறுகிறார். வருணனின் இரு தொடைகளும் பூவுலகக் கடலாகவும் ஆகாயக் கடலாகவும் கூறப்படுவதை அவர் சுட்டிக் காட்டுகிறார் (6). ஆக, அஸ்கோ பர்போலா எதைத் தமிழரின் தனித்துவமாகச் சுட்டிக் காட்டுகிறாரோ அது உண்மையில் வேதப் பண்பாட்டுக்கும் பொருந்துவதாக அமைகிறது.

இப்பண்பாட்டுத் தொடர்ச்சி பேணப்படுவது வெறும் மொழியினால் மட்டுமல்ல, வேத நெறியினாலும்தான். எனவே அந்த வேத நெறியை கீழ்மையாகப் பேசி மறுக்கக் கூடிய ஒரு அரசியலின் அடிப்படையில் அந்த இலச்சினைகள் பயன்படுத்தப் படுவது சரியானது தானா?

அத்துடன் அஸ்கோ பர்போலா சில விசித்திர நம்பிக்கைகளை கொண்டவராக இருக்கிறார். ஆரிய படையெடுப்பு இரண்டு அலைகளாக நடந்தது; அதில் முதல் அலை ஆரியர்களுடன் இரண்டாவது அலை ஆரியர்கள் மோதியது ஆரிய-தஸ்யு போராட்டங்களாகக் காட்டப்படுகிறது என்றெல்லாம் சொல்லியிருக்கிறார். ஆனால் அறிவியல் பூர்வமான மரபணுவியல் ஆராய்ச்சிகள் பர்போலாவின் ஆரியப் படையெடுப்புக் கோட்பாடுகளை ஆதரிக்கவில்லை என்பதை ஆராய்ச்சியாளர்கள் தெளிவு படுத்தியிருக்கிறார்கள் (7).

மகாதேவன்
Mahadevan

அடுத்ததாக ஐராவதம் மகாதேவனுக்கு வரலாம்.

இவருடைய நிலைப்பாடோ  இன்னும் விசித்திரமாக இருக்கிறது. இவர் மிகத் தெளிவாகவே சிந்து-சரஸ்வதி பண்பாட்டின் அடையாளமென கருதத்தக்க ஒற்றைக் கொம்பு விலங்கு இலச்சினையை ரிக்வேத சோம பானச்சடங்கு மூலமாக விளக்குகிறார். வேதப் பண்பாட்டின் மையமாக அமைந்த இந்த அம்சம் படையெடுத்து வந்த ஆரியர்களால் இங்கு இருந்த திராவிடர்களிடமிருந்து பெறப்பட்டதாம். அவர் மேலும் சொல்லுகிறார்: “இந்த விஷயத்தில் நான் தனி ஆள். ஹரப்பா பண்பாட்டின் திறவுகோல் வேதத்தன்மை. அதன் மொழியோ திராவிட மொழி ” (8).

தனது வாழ்க்கையையே சிந்து சமவெளி இலச்சினைகளை விளக்கிட செலவழித்த மகாதேவன், ஹரப்பா பண்பாடு வேதப் பண்பாடு என்று சொல்வதை கொஞ்சமும் இலட்சியம் செய்யாமல் ஒரு இனவாதச் சட்டகத்தில் அந்த பண்பாட்டின் வரலாற்றை விளக்கி அதனை இன்றைய அரசியலுடன் முடிச்சு போடக்கூடியவர்களிடம் எவ்விதம் ஒரு முணுமுணுப்பும் இல்லாமல் விழா மதிப்பு பெறுகிறார்?

ஒருவேளை இவரது முடிவுகளை அவர்கள் ஏற்றுக்கொண்டார்களா அல்லது அவர்களின் அரசியலுக்கு முன் இவரது ஆராய்ச்சியும் அறிவியல் பார்வையும் சமரசம் செய்து கொண்டனவா? மிகவும் மனவேதனை அளிக்கும் இந்த கேள்விகள் எழும்பாமல் இல்லை.

சங்கத் தமிழ்ப் பண்பாடு வேதப் பண்பாடே

’தமிழர் பண்பாடு என்பது எஞ்சிய பாரதப் பண்பாட்டிலிருந்து தனிப்பட்டது’ என்றும், ’வேதப் பண்பாடு ஆரியப் பண்பாடு’ என்றும் சொல்லப்படுகிறதே, அதற்கு என்ன ஆதாரம் இருக்கிறது? சங்க இலக்கியம் முழுக்க வேதத்தையும் வேள்வியையும் போற்றக்கூடியதாக அல்லவா உள்ளது?

நன்று ஆயந்த நீள் நிமிர்சடை
முதுமுதல்வன் வாய் போகாது
ஒன்று புரிந்த ஈர்-இரண்டின்
ஆறு உணர்ந்த ஒரு முதுநூல்

என புறநானூறு வேதத்தைப் போற்றுகிறது (9).

நற்பனுவல் நால் வேதத்து
அருஞ்சீர்த்திப் பெருங்கண்ணுறை
நெய்ம் மலி ஆவுதி பொங்கப் பல்மாண்
வீயாச் சிறப்பின் வேள்வி முற்றி:
யூபம் நட்ட வியன்களம் பலகொல்

என புறநானூறு வேத வேள்வியைப் போற்றுகிறது (10).

கடவுள் நிலைய கல்ஓங்கு நெடுவரை
வடதிசை எல்லை இமயம் ஆக
தென்அம் குமரியொடு ஆயிடை அரசர்

என பதிற்றுப்பத்து பாரத தேசத்தின் பண்பாட்டு ஒற்றுமை குறித்து பேசுகிறது (11).

ஆனால் பழந்தமிழரின் ஆன்மிகப் பண்பாட்டின் இந்த மைய அச்சுக்கள், பழந்தமிழரை பாரதப் பண்பாட்டுச் செழுமையுடன் இணைக்கும் இப்பாவுகள் – காட்டப்பட்டனவா இம்மாநாட்டில்? வலியுறுத்தப்பட்டனவா? அட, சொல்லவாவது பட்டனவா எவராலேனும்? இல்லையே!

இந்நிலையில் இந்த அறிவிற் சிறந்த இரண்டு சான்றோர்களிடமும் ஒரு கேள்வி மட்டுமே கேட்கப் பட வேண்டியதாக உள்ளது. சான்றோரின் பெருங்குணங்களை கடலுள் மாய்ந்த இளம்பெருவழுதி சொல்லும் போது “பழி எனின் உலகுடன் பெறினும் கொள்ளலர்” என்று கூறுகிறான். ஆனால் இன்று தமிழர் பண்பாட்டை திரித்துக் காட்டும், பொதுச்சொத்தை வீணடிப்பதாகவே காட்சியளிக்கிற மாநாடு எனும் பெயரில் நடத்தப் படுகிற ஒரு கேளிக்கை கூத்தடிப்பில் பாராட்டப்படுவது உண்மையிலேயே பாராட்டப்படுவதுதானா? இக்கேள்விக்கான பதிலை உங்கள் மனசாட்சிக்கே விட்டுவிடுகிறேன்.

நெடிய மொழிதலும் கடிய ஊர்தலும்
செல்வம் அன்று; தன் செய்வினைப் பயனே;
சான்றோர் செல்வம் என்பது, சேர்ந்தோர்
புன்கண் அஞ்சும் பண்பின்
மென்கட் செல்வம் செல்வம் என்பதுவே.
(நற்றிணை)

சான்றுகள்:

(1) Asko Parpola, Meeting the challenge of Indus Script : https://www.harappa.com/script/parpola16.html
(2) அகநானூறு: 141:6-8
(3) புறநானூறு: 25:1
(4) பதிற்றுப்பத்து. 64:12-13
(5) சிலப்பதிகாரம்: புகார் காண்டம்
(6) அதர்வ வேதம் 4:16
(7) Hemphill & Christensen: The Oxus Civilization as a Link between East and West: A Non-Metric Analysis of Bronze Age Bactrain Biological Affinitie, paper read at the South Asia Conference, 3-5 November 1994, Madison, Wisconsin; p. 13. (Quoted in Elst)
(8) https://www.harappa.com/script/mahadevantext.html
(9) புறநானூறு: 166:1-4
(10) புறநானூறு 15:17-21
(11) பதிற்றுப்பத்து 43:6-9

dr_kalyanaraman_sarasvati_riverகட்டுரை ஆசிரியர் டாக்டர் எஸ்.கல்யாணராமன் பொருளாதார, நிர்வாக  நிபுணராகப் பணியாற்றி ஓய்வு பெற்றவர். பணி ஓய்வுக்குப் பின்னர்  தனது விரிவான எழுத்துக்கள் மூலம் சிந்துவெளி மற்றும் வேதகால நாகரீகம் குறித்து, குறிப்பாக மண்ணுக்குள் மறைந்துவிட்ட சரஸ்வதி நதி குறித்து பரந்துபட்ட விழிப்புணர்வை ஏற்படுத்தி வருகிறார்.  ரிக்வேத இலக்கியம்,  அகழ்வாராய்ச்சிகள், செயற்கைக்  கோள் புகைப்படங்கள் ஆகிய பல்வேறு ஆதாரங்களின் துணைகொண்டு சரஸ்வதி நதி பற்றி   Sarasvati என்ற  பெருநூலை  (ஏழு தொகுதிகள்) எழுதியிருக்கிறார்.  சரஸ்வதி நதி ஆய்வு மையம் (Sarasvati Nadi Shodh Prakalp) என்ற அமைப்பினையும் நடத்தி வருகிறார்.

89 Replies to “செம்மொழி விருதுகள்: சில கேள்விகள்”

  1. நன்றி! மாநாட்டின் குளறுபடிகள் கொஞ்சம் நஞ்சம் அல்ல! தமிழர்கள் விழிப்பது தான் எப்போதோ!

  2. திரு அரவிந்நீலகண்டன் அவர்களுக்கு
    தமிழ் மண்ணில் விவேகானந்தரின் வீரமுழக்கம் என்ற புத்தகத்தின் பின் அட்டையில் உள்ள ஒரு செய்தி. இதை சற்றுவிளக்கிகூற வேண்டுகிறேன்.
    “சென்னை மாநிலத்தில் தமிழர்கள் வாழ்ந்துவருகிறார்கள். அவர்களின் நாகரீகம் மிகமிகபழமையானது. யூபிரட்டஸ் நதிக்கரையில் மிகப் பழங்காலத்தில் பரவியிருந்த பெருநாகரீகம் இந்ததமிழர்களில் ஒரு பிரிவினராகிய சுமேரியர்கள் பரப்பியதே. இவர்களது ஜோதிடமும் அறநெறியும் நீதிநெறியும் ஆசாரங்களும் தான் அசிரிய பாபிலோனிய நாகரீகங்களுக்கு அடிப்படை. இவர்களின் புராணங்களே கிறிஸ்தவர்களின் பைபிளுக்கு மூலம். இவர்களின் மற்றொரு பிரிவினர் மலபார் கரை ஓரத்தில் வாழ்ந்து அற்புதமான எகிப்திய நாகரீகத்தை உருவாக்கினர்
    சுமேரியர்கள் என்று யாரை குறிப்பிடுகிறார் ?
    மலபார் கரை ஓரத்தில் வாழ்ந்தவர்கள் யார் ?
    எகிப்திய நாகரீகத்தை உருவாக்கினர் – அதற்கான அடையாளங்கள் என்ன ?

  3. எனக்கு வந்த ஒரு கடிதம்
    அன்பர்களுக்கு.,
    டாக்டர் ஊ.வே. சுவாமிநாத ஐயர் இல்லை என்றால் இன்று தமிழ் இலக்கியங்கள் இல்லை. ஒரு காலத்தில் தமிழ் இலக்கியங்கள் அழியும் நிலையில் இருந்தபோது, மிகவும் சிரமப்பட்டு கிராமம் கிரமமாக அலைந்து பட்டி தொட்டிகளில் எல்லாம் தேடி ஓலை சுவடிகளை சேகரித்து இவர் நமக்கு அளிதிராவிட்டால் இன்று கொண்டாடும் செம் மொழி இல்லாமல் போயிருக்கும். இவரை புறக்கணித்து மகாநாடு நடத்துவது தமிழ் அன்னையை அவமதிப்பதற்கு ஒப்பாகும். ஒவ்வொரு தமிழனும் அவருக்கு கடன்பட்டிருக்கிறான்…. அவர் செய்த பாவம் ஐயராக பிறந்துவிட்டார். இதுபற்றி எடுத்துரைக்க எந்த தமிழ் அறிஞருக்கும் தைர்யமில்லை. ….எல்லாம் ஜால்ரா கூட்டங்கள். என்ன செய்ய……. சினிமா கூட்டம் தான் தமிழ் என்றாகிவிட்டது … எல்லாம் நமது தலை விதி …… மெல்ல தமிழ் இனி சாகும் ? என்ற பாரதியின் சந்தேகம் எனக்கும் எழாமல் இல்லை …. !!!

  4. இந்தத் தமிழ்ச் செம்மொழி மாநாடே கருணாநிதி குடும்பமும் தீமுக காரர்களும் ரொம்ப நாளாக போர் அடித்ததனால் ஒரு பொழுது போக்கு வேண்டும் என்று கேட்டதால் பல நூறு கோடிகள் செலவு செய்து அவர்களுக்கு காண்பிக்கும் ஒரு சின்ன ஷோ.
    இவ்வளவு பேர்களையும் அழைத்து விருதுகள் கூட கொடுத்திருக்க வேண்டாம்.
    கருணாநிதி குடும்பத்தில் உள்ளவர்கள் எல்லோருக்குமே ஒவ்வொரு விருது கொடுத்து அவர்கள் முன்னோர்கள் தான் அகநானுறு, புறநானுறு எல்லாம் எழுதினார்கள் ,அவர்கள் முன்னோர்கள் மட்டும்தான் முதல் முதலில் லெமூரியாக் கண்டத்தில் தோன்றினார்கள் என்று ஆய்வுக் கட்டுரைகள் வெளியிட்டிருக்கலாம்.

    இரா.ஸ்ரீதரன்

  5. தமிழக முதல்வர் கருணாநிதியின் ஆரம்ப காலத்தில் புறநானூற்றுப் பாடலை மையமாக வைத்து எழுதிய வசனங்களால்தான் முன்னிலைக்கு வந்தார். மஹா மகோபாத்தியாய உ.வே சுவாமிநாத ஐயர் அவர்கள் தஐறுத் தெருவாகச் சென்று பிச்சை எடுக்காத குறையாக ஒவ்வொருவரிடமும் ஓலைச்சுவடிகளைக் கெஞ்சிக் கேட்டு புறநானூற்றை இன்றைய தமிழில் வடித்து வைக்காவிட்டால், நமது “முத்தமிழ் அறிஞர்” எப்படி அறிஞர் ஆகியிருப்பார்?
    கண்ணகிக்குச் சிலை வடித்தவர் சிலப்பதிகாரம் கிடைத்தவிதத்தை யாரால் கிடைத்தது என்பதை மறந்து விட்டாரே?
    நேற்று அவரது மாநாட்டு உரையில் பிஷப் கால்டுவெல்லைப் புகழ்ந்து பேசினார். ஆனால் வெறுமனே “அகநானூறு, புறநானூறு போன்ற கடைச்சங்க இலக்கியங்கள் கிடைத்ததன் பயனாக, ஈராயிரம் ஆண்டுகளுக்கு முந்தைய தமிழ் நமக்கு கிடைத்தது. தொல்காப்பியம் கிடைத்ததால், மூவாயிரம் ஆண்டுகளுக்கு முந்தைய தமிழ் நமக்கு கிடைத்தது” என்று கூறி உ.வே.சா. என்ற “மூன்றெழுத்துக்கள்” தம் வாயில் வராது பார்த்துக்கொண்டார்.
    தமிழுக்குச் செம்மொழி என்ற அந்தஸ்து எப்படிக் கிடைத்தது என்பது பற்றி விரிவாகப் பேசியவர், தமக்குத் தமிழ் அறிஞர் என்ற அந்தஸ்து எதனால் எப்படிக் கிடைத்தது என்பது பற்றிச் சிந்தித்துப் பார்க்க வேண்டும்.

  6. செந்தமிழ் மாநாட்டில் முதல்வரின் “தமிழுக்குச் செம்மொழி என்ற அந்தஸ்து எப்படிக் கிடைத்தது” என்பது பற்றிய உரை (தினமலரில்) இங்கே காண்க.

    https://tamil.dinamalar.com/wctc_detail.asp?id=24996

  7. உ வே சா ஐயராகப் பிறந்ததாலும் இப்போது இருந்து மு கா வுக்கு ஜால்ரா போட்டிருந்தால் கட்டாயம் ‘கவனிக்கப்’ பட்டிருப்பார்.
    இல்லையென்றால் அவர் பனை ஓலைச் சுவடிகளையெல்லாம் தேடித் தேடி நெருப்பில் போட்டு விட்டார், எனவே அவர் தமிழ் விரோதி என்று முத்திரை குத்தப்பட்டிருப்பார்.
    ஐயர் வாலி நன்றாக கவனிக்கப் படுகிறார் .
    ஏனென்றால் அவர் ‘சிங் சக் ‘ கும்பலில் உள்ளார் .

    இரா.ஸ்ரீதரன்

  8. https://thiruchchikkaaran.wordpress.com/2010/04/01/indians-and-india/

    நைல் ஆற்று நாகரீகம், மஞ்சள் ஆற்று நாகரீகம், இதை எல்லாம் விட பழைமையான நாகரீகம் சிந்து சமவெளி நாகரீகம் என்றால், அவர்களை 5000 வருடங்களுக்கு முன்பு விரட்டி அடித்ததாகக் கூறப் படும் ஆரிய சமுதாயம், கைபர் போலன் கனவாய் வழியாக வருமுன் சுவிட்சர்லாந்திலே இருந்தார்கள் என்றால், கைபர் போலன் கனவாய் வழியே அந்த சமுதாயம் இந்தியாவுக்குள் நுழையும் வரையிலே, அந்த சமூகத்தின் சுவிட்சர்லாந்து வரலாறு அல்லது ருஷியா வரலாறு அல்லது மத்திய ஆசிய வரலாறு ( 5000 வருடங்களுக்கு முந்தைய வரலாறு), ஏன் பதிவு செய்யப் படவில்லை

    ஆரியர்கள் ருஷியாவிலே இருந்து வந்தார்கள், மத்திய ஆசியாவிலே இருந்து வந்தார்கள், சுவிட்சர்லாந்திலே இருந்து வந்தார்கள் என்கிறார்களே, நல்லா கவனிங்க,

    அலெக்சாந்தரைப் போல, பாபரைப் போல ஒரு அரசன் தன் படையுடன் மட்டும் வரவில்லை. முழு சமூகமாக குயவர்கள், தச்சர்கள், நெசவாளர்கள், சலவைத் தொழிளாளிகள், மருத்துவர்கள், சமையல் காரர்கள், பாடகர்கள், புலவர்கள், சேனாதிபதிகள், அமைச்சர்கள் உள்ளிட்ட மிகப் பெரிய சமூகம் இடம் பெயர்ந்து உள்ளது என்று கூறப் படுகிரதே,

    அப்படியானால் அந்த சமுதாயம் உருவாக பல ஆயிரம் ஆண்டுகள் ஆகியிருக்குமே, அப்படி அவர்கள் சமூகமாக உருவெடுத்த நிலப் பிரதெசம் எது? ருஷியாவா? மத்திய ஆசியாவா? ருஷியாவிலோ, மத்திய ஆசியாவிலோ ஆரியர்கள் பல்லாயிரம் வருட காலம் வாழ்ந்து ஒரு சமூகமாக உருவான வரலாறு, உலக வரலாற்றின் பக்கங்களில் இல்லையே!

  9. நல்ல கட்டுரை. இந்த பித்தலாட்டக்காரர்கள் இதையே கூறி மக்களை குழப்புகிறார்கள். பல காலமாகவே ஆரியன் திராவிடன் என்று பல பொய்கள். நாமும் மௌனமகவே இருக்கிறோம்! இதை எதிர்த்து நல்ல விவாத அரங்கத்தை அமைத்து உண்மையை பலரறிய ஆராய வேண்டும். எந்த பொய் சொன்னாலும் உடனே பலத்த எதிர்ப்பும் விவாதமும் செய்ய வேண்டும். நிபுணர்களை அழைக்க வேண்டும். பித்தலாட்டக்காரர்கள் அவர்களுக்கு சாதனையான நிபுணர்களை மட்டும் அழைப்பார்கள். இது அரசியல். எதிர்காலத்தில் பிரிவினைக்கு இப்போதே அடி போடுகிறார்கள் எத்தர்கள். மக்கள் மூளையை வெகு காலமாகவே சலவை செய்கிறார்கள்.
    உடனே பத்திரிகையாகட்டும் தொலைக்காட்சியாகட்டும் எல்லா வகையிலும் எதிர்க்கவேண்டும்

    ஆபத்தான பொய் பிரச்சாரம். இன வெறி வளர்க்க மேலும் மேலும் பாடு படுகிறார்கள்

    தமிழ் என்ற முக மூடி அணிந்து இன வெறி பரப்புகிறார்கள்

    நாம் மௌனமாக இருப்பது பேராபத்து!

  10. மாநாட்டை ஆதரிப்பவர்கள் எல்லாம் தனக்கு ஒரு ஆதாயம் இருக்கும் பட்சத்தில் யார் எக்கேடுகெட்டுப் போனாலும் பரவாயில்லை என துதிப் பாடிக் கொண்டிருக்கிறார்கள்.
    [[கருத்துரையாளர்களுக்கு: சாதிப் பெயர்களைச் சொல்லி இந்த தளத்தை கலங்கப் படுத்தாதீர்கள். பின் நமக்கும் அவர்களுக்கு வித்யாசமில்லாமல் போகும் ]]

  11. உ வே சா என்ற மாபெரும் மனிதரைப் பற்றி மு க குறிப்பிடாதது ஆச்சரியம் இல்லை
    அவர் குணம் அப்படி .த்வேஷம் என்ற வார்த்தைக்கு உருவம் அவர்.
    ஆனால் ஒரு மனிதன், அவன் என்னதான் அரசியல் செய்யட்டும்
    எவ்வாறு இப்படி மனம் அறிந்து உண்மைக்கு மாறாக இருக்க முடிகிறது?
    மனசாட்சி துளியும் அற்று, நெஞ்சில் உண்மையின் சுவடு கடுகளவு கூட இல்லாமல்,இவ்வளவு கிராதகத் தனமாக ஒரு மனிதன் இருக்க முடியுமா?
    ஆச்சர்யம்தான்!

    இரா.ஸ்ரீதரன்

  12. ஆதாயத்திற்காக அக்கிரமத்துக்கும் ,பொய்களுக்கும் துணை போகும் அறிஞர்கள் என்று கூறப் படுபவர்கள் ‘இடிப்பாரை இல்லா ஏமரா மன்னன் கெடுப்பாரும் இன்றிக் கெடும்’ என்ற குறளை நினைவில் வைக்க வேண்டும்.

    ‘மன்னனும் நீயோ ,வள நாடும் உன்னதோ’ என்று ஒரு அகந்தை பிடித்த மன்னனையே சாடிய அவ்வையை மறந்து விட்டார்கள்

    இரா.ஸ்ரீதரன்

  13. அட விடுங்கள் செம்மொழி எனும் தகுதியை அதிகாரபூர்வமாக அளித்து கையெழுத்திட்ட அப்துல்கலாமையே மறந்துவிட்டார்கள். மறக்கவில்லை வேண்டுமென்றே புறக்கணித்துவிட்டார்கள். இவர்கள் தமிழ் தாத்தாவை நினைத்து அவர் பெயரில் ஏதாவது அரங்கம் பெயரை போட்டு அதில் கமிசன் கொள்ளை அடித்தால் அந்த தமிழ் தாத்தாவுக்குத்தான் அவமானம். அம்மட்டில் அவமானப்படுத்தாமல் விட்டார்களே அந்த அளவுக்கு இவர்களுக்கு தமிழ் மீது அக்கறை இருக்கிறது.

  14. If the original habitat of the ‘aryan’s were to be Switzerland or Russia or whatever, why is their literary compositions like the rig veda etc,.only extant in India and not elsewhere?

  15. இன்றைய தினமலரிலிருந்து சில கருத்துக்கள்
    தமிழகத்திற்க்கும், தமிழுக்கும் பெருமை சேர்த்தது தேவாரம், திருவாசகம், நாலாயிரதிவ்வியபிரபந்தம், பெரிய புராணம் போன்ற பக்தி சமய இலக்கியங்கள் ஆகும். தஞ்சையில் நடந்த உலக தமிழ் மாநாட்டில் 108 ஓதுவார்கள் அரையர்களைக்கொண்டு பாசுரமும், தேவாரமும் பாடி மாநாடு நடத்தப்பட்டடுது. தற்பொழுது நடந்த மாநாட்டில் இவர்களுக்கு அழைப்பு இல்லை. சமய பக்தி இலக்கியங்கள் குறிப்பாக விலக்கப்பட்டது ஏன் ?
    தமிழில் அர்சனை என்று ஆர்பாட்டங்கள் நடத்தியவர்கள், ஓதுவாருக்கு அளிக்கும் மாத சம்பளம் ரூபாய் 70/- , ஒருபட்டை சோறு தினமும். ஆனால் சிதம்பரத்தில் ஆர்ப்பாட்டம் செய்த ஆறுமுகசாமிக்கு மாதசம்பளம் ரூ 3000/- . ஏன் இந்த பாரபஷ்சம். அரசு இதில் கவனம் செலுத்தாதது ஏன் ? ஆண்மிகம் இல்லாத அரசியல் ஒர் உயிர் இல்லா உடலுக்கு சமம். இது பண்பாட்டை நிச்சயம் வளர்க்காது பாயைபிராண்டும் வேலையைதான் செய்யும் அதுதான் இன்று நடக்கிறது
    இறைவனை துதிப்பவர்களுக்கு அவமரியாதை செத்துமடியும் அற்பபதர்களை துதிப்பவரகளுக்கு ஆராதனை. வாழ்க தமிழரின் தன்மானம் ஸெல்புரெஸ்பெக்ட்

  16. நான் அரவிந்தன் நீலகண்டன் அய்யா அவர்களின் பரம ரசிகன். எனக்கு இங்கு மறுமொழிகள் எழுதியிருக்கும் நண்பர்களைப்போல அவ்வளவாகத் தெரியாது. இருப்பினும் ஆரிய/திராவிட வாதத்தைப்பற்றி, அதிலும் குறிப்பாக ‘தமிழ் விரோதி’ போல இன்று தி.க., தி.மு.க., ம.தி.மு.க., நாம் தமிழர் பொய்யர்களால் சித்தரிக்கப்படும் சக்கரவர்த்தித் திருமகன் இராமனைப் பற்றி ஒரு சில கேள்விகளைக் கேட்க விரும்புகிறேன்:-

    இராமன் இராவணனைக் கொன்றதை ஆரியர்கள் திராவிடர்கள் மீது படையெடுத்ததாக உளரும் மடையர்கள் இராமனை ஆரியன் என்றும் இராவணனை திராவிடன் என்றும் கூறுகிறார்கள். ஆனால், இராமன் “எப்பொழுது வாழ்ந்தான், எந்த பொறியியல் கல்லூரியிலிருந்து பட்டம் வாங்கினான்” என்று கேட்கிறார்கள். இராமன் ஆரியன், இராவணன் திராவிடன், ஆரிய-திராவிட போர் உண்மை, ஆனால் இராமன் வெறும் கட்டுக்கதை. இதற்குப் பெயர் பீ-அறிவு!!

    அப்படியே இலங்கையில் வாழ்ந்ததால் இராவணன் திராவிடன், வடக்கிலிருந்து வந்த ‘ஆரியன்’ இராமன் கொன்றுவிட்டான் என்கிறார்கள். அப்படிஎன்றால் எனக்கு ஒரு ஐயம்- சூரபதுமனும் இலங்கையை ஆண்ட அசுர மன்னன்தானே. அவனைக் கொள்ள ‘தமிழ் கடவுளான’ முருகன் கயிலையிலிருந்து (வடக்கு) படையெடுத்து வந்தானே. அப்படியென்றால் முருகனும் ஆரியனா????

  17. ராமன் யாராக இருந்தால் என்ன?
    நமக்கு அவன் முப்பத்து முக்கோடி தேவர்களின் தலைவன்
    சாட்சாத் ஸ்ரீமன் நாராயணன்
    ஹிந்து மக்கள் யுக யுகமாக ஆராதிக்கும் புருஷோத்தமன்.

    அவன் பாதம் பட்ட இடங்களில் இ்ன்றும் அவன் விட்டுச் சென்ற சுவடுகள் உள்ளன.
    இன்றும் சித்ரகூடம் உள்ளது, பஞ்சவடி உள்ளது,அயோத்தி உள்ளது,மிதிலை உள்ளது, திருப்புல்லணை உள்ளது,ராம சேது உள்ளது,வாலி நோக்கம் உள்ளது,ராமநாதபுரம் உள்ளது, ராம ஈஸ்வரம் உள்ளது.
    இன்னும் ஆயிரக் கணக்கான இடங்கள் உள்ளன
    காஷ்மீர் முதல் கன்னியாகுமரி வரை லட்சக் கணக்கான மக்கள் அவன் பெயரையும், அன்னை சீதையின் பெயரையும் காலம் காலமாகத் தாங்கி வாழ்ந்தனர் , வாழ்கின்றனர்.

    திக காரனும், திமுக காரணம் யார் ராமனுக்கு பிறப்பு சான்றிதழ் கேட்பது?
    ஜீசசுக்கு கேட்பார்களா, முஹம்மதுக்கு கேட்பார்களா?

    நாம் இதற்கெல்லாம் பதில் சொல்லிக் கொண்டிருக்க வேண்டியதில்லை .

    எல்லாவற்றையும் விடுங்கள். கோடிக்கணக்கான மக்கள் புனிதம் என்று நினைக்கும் ஒன்றை இவர்கள் யார் கேள்வி கேட்பது?

    ஊரார் சொத்தை உலையில் போடும் இந்த கேடு கேட்ட மனிதர்களுக்கு, தந்தை சொல்லே மந்திரம் என்று அரியணை வேண்டாம், முடி வேண்டாம் ,சொத்து வேண்டாம், நாடு வேண்டாம் .அரசாட்சி வேண்டாம் என்று மரவுரி தரித்து வெங்கானகம் ஏகிய அந்த மாபெரும் மனிதக் கடவுளை பற்றிப் பேச இந்த என்ன அருகதை இருக்கிறது?

    இரா.ஸ்ரீதரன்

  18. செம்மொழி மாநாட்டின் நிறைவு நாளான இன்று ஒலிபரப்பான பட்டிமன்றம் ரசிக்கும்படி இருந்தது. மறைக்கபடவேண்டியவை என்று ஒதிக்கியவை பற்றியெல்லாம் பேச்சாளர்களால் பேசாமல் கட்டுபடுத்த முடியவில்லை. இதை அனுமதி்த்தற்க்கு கலைஞருக்கு நிச்சியம் நன்றி சொல்லவேண்டும்.. கனியம்பூங்குன்றனாரின் ”யாதும் ஊரே யாவரும் கேளீர்” என்ற பாடலின் சில தலைப்புக்களை எடுத்துக்கொண்டு சொற்பொழிவு ஆற்றினார்கள். எல்லா பேச்சாளர்களின் பேச்சும் ரசிக்கும்படி இருந்தது. அதில் காஸ்பர் அவர்கள் நன்கு உரையாற்றினார். பர்வீண்சுல்தானவி்ன் உரை மிகவும் ரசிக்கும்படி இருந்தது எப்படி இப்படி என்று பொறாமையாகவும் இருந்தது. வாழ்க தமிழ் !! வளர்க தமிழ் !!!

  19. இந்தச் செம்மொழி மாநாடே கிறித்தவ சர்ச் தமிழ் நாட்டின் ஹிந்து வேர்களை கொத்தி பாய்ச்சும் முதல் வாளி வெந்நீர் என்று தோன்றுகிறது. கொஞ்சம் கொஞ்சமாக தமிழர்களை மூளைச் சலவை செய்து ஹிந்து தர்மத்திலிருந்து அவர்களைப் பிரித்து ஒரு பக்கம் கிறித்தவத்துக்கு மதம் மாற்றி மறுபக்கம் அக்கிரமக்கார, தேச துரோக அரசியல்வாதிகளின் துணையுடன் ,ஸ்ரீ லங்கா மற்றும் பல இடங்களில் செய்தது போல் உள்நாட்டுக் கலகம், சண்டை இதற்கெல்லாம் ஆயத்தம் செய்து பாரதத்தை சிதைக்கும் அவர்களின் நீண்ட கால திட்டத்துக்கு ஆரம்ப ஒத்திகையோ எனத் தோன்றுகின்றது.

    நம் மக்கள் மற்றும் தேசியவாதிகள் மிக மிக எச்சரிக்கையுடன் இருக்க வேண்டிய நேரம் வந்து விட்டது.
    நம் தாய் நாட்டை எப்பாடு பட்டாவது இந்த அபாயத்திலிருந்து மீட்க வேண்டும்.
    இல்லை என்றால் விலை மதிப்பில்லாத, கொட்டிக் கொட்டிக் கொடுத்தாலும் கிடைக்காத சமயமும் ,கலைகளும், கலாச்சாரமும் மொழியும் அது சார்ந்த இலக்கியங்களும் மொத்தமாக அழிந்து விடும்.

    இர்ர்.ஸ்ரீதரன்
    .

  20. படித்த ஹிந்துக்களில் பலர் புகழுக்கும், பட்டங்களுக்கும், மற்றவர்களின் புகழுரைக்கும் அடிமையாவது வேதனை.
    ஒரு அயோக்யன், ஒரு படித்த, ஹிந்துவுக்கு ஒரு பட்டமோ, விருதோ கொடுத்தால் புளகாங்கிதம் அடைத்து அவன் அதை வாங்க ஓடுகிறான்
    கொடுப்பவன் எப்படிப்பட்டவன்,அவன் தர்மத்தை அனுசரித்து நடப்பவனா, நல்ல நடத்தை உடையவனா ,நமது தாய் நாட்டின் மீது பற்று வைத்திருப்பவனா , அதற்கு த்ரோஹம் நினைக்காதவனா , ஊழலும் அக்கிரமும் செய்யாதவனா , அஹம்காரமும், மமதையும் பிடித்து தன்னை எல்லோரும் தலையில் தூக்கி வைத்து ஆட வேண்டும், இல்லை என்றால் அவர்களை வாயில் வந்த படி தூற்றுபவனா என்று பார்ப்பதில்லை.
    இது படித்தவர்களுக்கு அழகா?

    இரா.ஸ்ரீதரன்

  21. //சங்க இலக்கியம் முழுக்க வேதத்தையும் வேள்வியையும் போற்றக்கூடியதாக அல்லவா உள்ளது?//
    இங்கே வேதம் என்பது வடமொழி வேதமா? அல்லது தமிழ் வேதமா?
    தமிழ் முதல் சங்கம் சிவபெருமனாலும் முருகனாலும் நடத்தப்பட்டது, இதை பற்றி நம் சங்கப்பாடல்களில் செய்திகள் உள்ளன. தொல்க்கபியர் காலத்திற்கு முன்பே அகத்தியரால் ‘அகத்தியம்’ செய்யப்பட்டுள்ளது. ‘அகத்தியம் பற்றி குறிப்புகள் தான் உள்ளன, அது கிடைக்கவில்லை.

    என் கருத்து என்னவென்றல், தமிழ் வேதம் என்று ஒன்று இருந்திருக்க வேண்டும், அது காலப்போக்கில் மறைந்து இருக்க வேண்டும். நமது சங்க இலக்கியங்கள் கூறுவதும் தமிழ் வேதமாக இருக்கலாம்.

    பலரும் தமிழ் மொழியையும் அதன் தொன்மையையும் பாராட்டும் பொது ‘வடமொழியை’ பற்றியும் கூறவேண்டும் என எதிர் பார்க்கின்றனர்.

    வடமொழியை இந்து தர்மத்தின் வேத மொழியாக ஏற்றுக்கொண்டால் அது இந்து தர்மத்திற்கு செய்யும் இழுக்கு.

    Somasundaram

  22. இந்த செம்மொழி மாநாட்டில் ‘பக்தி இலக்கியங்கள்’ பற்றி அதிகம் பேசப்படாதது மிகவும் வேதனைக்குரிய செய்தி.

    அதும், நான் அறிந்த வரை ‘திருஞானசம்பந்தர்’ தன்னை தமிழ் ஞானசம்பந்தன் என நூறுக்கும் மேற்ப்பட்ட இடத்தில் படுகின்றார். அதையே சுந்தரரும் ‘நாலும் இன்னிசையால் தமிழ் பரப்பும் ஞானசம்பந்தன்’ என பாடுகின்றார். தமிழ் வளர்த்த சான்றோர்களில் ‘திருஞானசம்பந்தர்’ முன்னிலை படுத்தி இருந்து இருக்க வேண்டும், அதை பற்றி ஒரு செய்தியும் பேசப்படாதது மிகவும் வேதனைக்குரியது.

    ஆனால் சமயத்தை தவிர்த்து பார்த்தல் இந்த செம்மொழி மாநாடு தமிழ் மொழிக்கு தேவையானது தான். இது தமிழ் மொழியை சற்று வளர்க்க செய்யும்.

  23. மறைவாக நமக்குள்ளே பழம் கதைகள் பேசியே வாழ்ந்து வருகிறோம். புற நானூறுக் கதைகளை இன்னும் எத்தனை நூற்றாண்டுகள் சொல்லிக் கொண்டிருப்பார்கள். மயிலாடுதுறை ரயில் நிலையத்தில் என்னுடைய பால்ய நண்பரொருவரைப் பார்த்தேன். தரையில் ஒரு துண்டை விரித்து அழுக்கு சட்டை வேட்டி அணிந்திருந்தவர் என்னைப் பார்த்தவுடன் ஓடிவந்து கட்டிக் கொண்டார். என்ன செய்தி என்றேன். எனக்கு வரவேண்டிய சொத்துக்களுக்காக நீதிமன்றத்தில் வழக்கு நடக்கிறது. அது வந்துவிடும். பிறகு என்னைப் பிடிக்கவே முடியாது என்றார். எனக்குத் தெரிந்து கடந்த நாற்பது ஆண்டுகளாக இவர் அப்படியேதான் சொல்லிக் கொண்டிருக்கிறார். இன்றைய புதிய செம்மொழியாளர்கள் இன்னும் புறநானூறு கனவிலேயே வாழ்கிறார்கள். இடைக்கால இலக்கிய வகையில் கம்பன், வில்லி, ஆழ்வார்கள், நாயன்மார்கள் இவர்கள் இல்லாவிட்டால் தமிழின் இன்றைய கதி என்ன? தமிழுக்கு எதிரிகளான சமணம் பவுத்தம் இவைகளின் கை ஓங்கி இருந்தபோது ஆழ்வார்களும், நாயன்மார்களும் தமிழைத் தூக்கிப் பிடித்துக் காப்பாற்றினார்கள். திருஞானசம்பந்தர் உயிரைப் பணயம் வைத்து சமணர்களுடன் போராடினார். அவர்கள் இல்லாவிட்டால் தமிழ் அழிந்திருக்கும். சமய இலக்கியங்களை இவர்கள் இலக்கியங்களாகவே கருதவில்லை போலிருக்கிறது. ஒரே தமிழன், ஒரே இலக்கியம், அந்த இலக்கியமும் தமிழனும் ஒரே ஆசாமி. இந்த முகஸ்துதிதான் இன்று சோறு போடும். இது காலிக்கு மன்னிக்கவும் வாலிக்குத் தெரிந்திருக்கிறது. நமக்கெல்லாம் தெரியவில்லையே.

  24. இந்தியாவில் நீதி, நியாயம், தர்மம் எல்லாம் அழிந்துவிட்டன. இன்றைய செய்தி:- இராமச்சந்திரபுற மடத்தின் (சிருங்கேரி மடத்தின் ஒரு கிளை) சுவாமிஜியை இழிவுபடுத்த அவரைப்போலவே ஒரு ஆள் ஒரு பெண்ணிடம் தனிமையில் இருப்பதை சுவாமிஜிதான் அப்படி செய்தார் என்று மக்களை ஏமாற்ற ஒரு செக்ஸ் சீ.டி யை உருவாக்கிய நான்கு பேர் கைது. அதில் ஒருவர் ராஜீவ் ஆதி என்ற காங்கிரஸ் இளைஞர் அணி தலைவர். முழுவதும் படியுங்கள்:-

    https://www.ndtv.com/news/cities/fake-sex-cd-racket-to-defame-bangalore-godman-busted-28818.php

  25. விருது வாங்கிய யாருமோ அல்லது சாமி-மாமி கதை பேசிய ஜால்ரா பக்கெட் கவின்ஞரோ இதை சொன்னதா தெரியவில்லை – நானும் விருது வாங்க தயார் ஆகிறேன்

    தமிழ் எங்களை வாழ வைத்து கொண்டிருக்கிறது
    தமிழை நமது முதல்வர் (மட்டுமே) வாழ வைத்து கொண்டிருக்கிறார்

    எனக்கு தான் அடுத்த பரிசு அய்யா

  26. நடந்து முடிந்த செம்மொழி மாநாட்டில் நான் விரும்பிக்கேட்ட உரை திரைக்கலைஞர் திரு. சிவக்குமார் அவர்களுடையது,100% நன்றாக இருந்தது என்று சொல்ல ஆசை. புறநானூற்றில் ஆரம்பித்து கம்பராமாயணம் வரை அருமையாகக் கையாண்டார். தீண்டாமை மற்றும் சாதிக்கொடுமைகள் பற்றி பேசியவிதம் நன்று.
    பின்னர் ஒரு திரைப்படவசனத்தை ஒப்பித்து தாராளமாகவே “முக” துதி செய்தார் என்பதாலேயே 100 மதிப்பெண்கள் போடமுடியவில்லை. பகுத்தறிவாளரான கலைஞர்(!) கருணாநிதியின் முன் தன்னை இறைநம்பிக்கையுடையவன் என்று ப்ரகடனம் செய்தார். பாராட்டுகிறோம். ஆனால் கோயிலுக்குப் போவதில்லை என்று சொல்லி அதற்கு ஒருகாரணமும் சொன்னார். திருப்பதியில் ஒரு சாதாரண மனிதன் தரிசனம் செய்ய தரும தரிசனத்தில் மூன்று மணி நேரம் முதல் மூன்று நாட்கள் ஆகிறபோது விஐபி தரிசனம் என்கிற பெயரில் காட்டேஜில் தங்கி குளிக்காமல் கூட வருகிறவனுக்கு சிலநிமிடங்களிலேயே கோவிலின் உள்ளே செல்லமுடிகிறது என்பது எவ்வளவு வேதனைக்குரிய விஷயம் என்றார். அது சரியே. ஆயினும் தமிழக அறநிலையத்துறை நிர்வகிக்கும் திருவரங்கம், மதுரைமீனாட்சி, பழனி, திருத்தணி, திருப்பரங்குன்றம்,திருச்செந்தூர், திருவல்லிக்கேணி பார்த்தசாரதி, திருவண்ணாமலை கோவில்களின் கட்டணவரிசை,சிறப்புக்கட்டணவரிசை, இலவச தரிசனம் என வகைப்படுத்தி இருப்பதை நீக்கவேண்டும் என அவர் முதல்வருக்கு(பெரியாரின் நெஞ்சில் தைத்த முள்ளான அனைவரும் அர்ச்சகர் ஆக முடியாத நிலையை சட்டம் கொண்டுவந்து ”முடியும்” என்று முள்ளை அகற்றிய) வேண்டுகோள் விடுத்திருக்கலாம் ஆனால் அவர் கோவிலுக்குச் செல்வதில்லை எனவே இது பற்றி தெரிய நியாயமில்லை. இராமவிரோதியான முக முன் ராமாயாணம் சொன்ன அவருக்கு வாழ்த்துக்கள்.

  27. ஒத்துகொள்ள மாட்டிங்களே தமிழர் பண்பாடு என்று சொன்னால். ஆரியத்தை கலக்கணும் அதில். கட்டுரையாளரின் எழுத்தே காட்டி கொடுத்துவிட்டது இவர் யார் என்று இதில் போட்டோ வேறு போடனுமா..ஒரு மொழி வாழ்வது அதனை பயன்படுத்தும் சாதாரண மக்களால். இலக்கியங்களால் அல்ல. நிறைய இலக்கியங்கள் இருந்தும் வடமொழி செத்துப்போனதற்கு பேச ஆள் இல்லாததே காரணம். ஆதலால் பாரதியின் “தமிழ் இனி மெல்ல சாகும்” ஆசை நிறைவேறாது. இன்னும் ராமன் கத பேசிகிட்டு ராமன் பாலம்னு சொல்லிக்கிட்டு சேது திட்டத்தை தடுப்பதை விட்டு விட்டு தமிழ்நாட்டுக்கு விசுவாசமாய் இருங்கள்.

  28. Sun, Jun 27 08:30 PM

    Coimbatore, June 27 (IANS) People who have studied Tamil will be given preference in government jobs, Tamil Nadu Chief Minister M. Karunanidhi said Sunday at the World Classical Tamil Conference.

    ‘Preference will be given in government jobs to those who have studied Tamil. The government will soon come out with a law,’ Karunanidhi said in his valedictory address at the conference held in this textile city.

    He also called upon the central government to declare all the state languages as official languages and start with the Tamil language.

    Urging the central government to take action to permit use of Tamil in the Madras High Court, Karunanidhi requested the centre’s assistance in setting up Rs.100 crore fund for carrying out research activities in Tamil.

    He also said the central government should provide research assistance for Tamil researchers as it does for Sanskrit.

    Demanding the central government to carry out deep sea research on the coasts of Poompuhar and Kanyakumari in Tamil Nadu, he asked the centre to set up the National Institute of Epigraphy in the state as nearly 60,000 of the 100,000 stone inscriptions found in India are in Tamil.

    Announcing that a lesson on classical Tamil will be included in the syllabus of schools and colleges in the state, he said Tamil literary works will be translated in other Indian languages and similarly the literary works of other languages will also be translated in Tamil.

    He said World Classical Tamil Conference will henceforth be held at regular intervals.

    The government will come out with a handbook on Tamils across the world, he added.

    Thanking residents of Coimbatore for their hospitality extended during the five-day conference, Karunanidhi said a flyover at an outlay of Rs.100 crore will be built near the conference venue.

    Referring to the division of the landscape into five types in the Sangam literature – Kuruji (mountainous), Mullai (forest), Marudham (farm land), Neithal (coastal, seashore) and Pallai (desert, wasteland), Karunanidhi added: ‘A bio-diversity park with plants that would grow in the five types lands will be set up in the state with the advice of M.S.Swaminathan.’

    He said Tamil is the only language that was present in spoken and written form more than 1,500 years before Christ.

    ‘English got its first written letter in 7 AD while for German it was 8 AD. The French language to its first written scrip in 9 AD and the Italian language in 10 AD,’ he said.

    Delivering the presidential address, union Finance Minister Pranab Mukherjee said: ‘Tamil people have contributed for enrichment of Indian culture. The Tamil Internet conference will help in development of unicode further.’

    Reiterating that there is all the justification for Tamil to be given the classical status, Mukherjee said the United Progressive Alliance (UPA) government is proud to have done that.

    Union Home Minister P.Chidambaram said: ‘A language would survive only when people use it while conversing and new books are written.’

    Releasing the commemorative stamp on the World Classical Tamil Conference union Minister for Communications and Information Technology A. Raja said: ‘This is the first time in the history of India a special stamp is released for a language.’

    Source:- https://in.news.yahoo.com/43/20100627/836/tbs-study-tamil-to-get-jobs-karunanidhi.html

    He says Tamil is the only language that was spoken and written more than 1500 years before Christ. It is very well known that Sanskrit is also as old as Tamil and that too was spoken and had numerous works during the time mentioned by him. He also gives the time period of origin of scripts of European languages like English, French, Italian and German. But it is very well known that Sanskrit is much older than all these languages. The one question remains to be asked is:- “How long will he continue this habit of fooling people and holding them in the limits of his ‘Dravidian Maya’?”. Why no scholar dares to challenge his ‘authoritative and knowledgeable’ words?

  29. சிவகுமார் சொல்வதில் நியாயம் இருக்கிறது என்றே வைத்துக் கொள்வோம்
    ஆனால் இதையெல்லாம் வளர்ப்பதே அரசியல் வாதிகள் தானே?
    உதாரணமாக ஒரு கோயிலுக்கு குடமுழுக்கு நடக்கிறது என்று வைத்துக் கொள்வோம்
    அப்போது யாருக்கு முக்யத்துவம் கொடுக்கப் படுகிறது?
    ஹிந்து மதத்தை இழிவு படுத்தும் ஒரு கட்சியைச் சேர்ந்த துறை அமைச்சர் அங்கு வருகிறார் ‘ பராக், பராக்’ என்று கூவாத குறையாக மக்களைத் தள்ளிவிட்டு அவர் அல்லவா கோபுரத்தின் மீது ஏற்றப்படுகிறார்?

    அதே போல் ஒரு கோயிலுக்கு ஒரு அமைச்சர், ஏன் ஒரு எம் எல் ஏ வந்தால் கூட தரிசனம் நிறுத்தப் படுகிறதே?
    அதை சிவகுமார் மாற்றச் சொல்வதுதானே?

    நாம் அல்லது நம் சமுதாயம் எல்லா விஷயங்களிலும் இதே நியாயத்தை கடை பிடித்தால் சிவகுமார் சொன்னது நடக்கும்
    உதாரணமாக , திமுக ஒரு அரசியல் கட்சி.
    ஆனால் அதில் இன்று ஒரு குடும்பத்தை சேர்ந்தவர்கள் மட்டுமே முதல்வராகவும் தலைமைப் பொறுப்பிலும் வர முடியும் என்ற நிலை ஏன்?
    இதுவும் தவறில்லையா?

    மனிதர்கள் தன்னைத் தவிர மற்றவர்கள் எல்லோரும் நியாயமாக நடப்பதில்லை என்று நினைக்கிறார்கள் .
    இதுதான் இன்றைய பிரச்னை.
    குறிப்பாக நாம நாட்டில் இது மிகவும் அதிகம்.
    ஏனென்றால் இங்கு சட்டத்துக்கும் பயம் இல்லை ,தர்மத்துக்கும் பயம் இல்லை .
    மற்ற நாடுகளில் குறைந்த பட்சம் சட்டம் எல்லோருக்கும் சமமாக இருக்கிறது
    ஆனால் நாம் ஒரு பக்கம் ஆன்மிகம், கோயில் என்று பேசிக்கொண்டு அன்யாயம் செய்கிறோம், மறு பக்கம் ‘ஆளைச் சொல், நான் சட்டத்தை சொல்கிறேன்’ என்ற நிலையில் சட்டத்தை துஷ்ப்ரயோகம்செய்கிறோம்.
    இதற்கு அரசியல் வாதிகள் தானே கரணம்?
    இதைச் சொல்லும் மனோ தைர்யம் சிவகுமாருக்கு வேண்டாமா?

    மேலும் செம்மொழி மாநாட்டில் இதைப் பற்றிப் பேச வேண்டிய தேவை என்ன?
    ஏதோ ஒரு வார்த்தை கோவிலைத் திட்டினால் கருணாநிதிக்கு மகிழ்ச்சி என்பதாலா?

    ‘ தன்னெஞ்சறிவது பொய்யற்க பொய்த்தபின்
    தன்நெஞ்சே தன்னைச் சுடும்’

    இரா.ஸ்ரீதரன்

  30. As much as I love Tamil, I willl have to accept the fact that Sanskrit is older than Tamil and is the mother of all Indian languages.It is also more vesatile as Tamil lacks alphabets for appropriate pronounciation for certain words.Sanskrit is the mother and Tamil is the eldest daughter in the Indian language family.Let us all not get paranoid about Tamil as this ignorant MK does. After all, language is nothing but a tool for communication.

  31. தமிழ்த் தாத்தா உவேசா, தமிழுக்குப் பெரும் தொண்டு புரிந்த வ.வே.சு ஐயர், வையாபுரிப்பிள்ளை உள்ளிட்ட பேரறிஞர்கள் பற்றி ஒன்றும் பேசப் படவில்லை. தமிழ் வரலாற்றைத் திரித்த கால்டுவெல், ஜியு போப் ஆகிய மிஷநரிகளுக்குப் புகழாரம் சூட்டப் பட்டுள்ளது. மாநாடு என்ற பெயரில் மக்களின் வரிப் பணம் வீணடிக்கப் பட்டுள்ளது மட்டுமல்ல, கிறிஸ்தவ, இனவாத சக்திகள் தமிழ் என்ற பெயரில் தங்கள் மனிதவிரோத கொள்கைகளை அரங்கேற்ற இன்னொரு படிக்கல்லாக இந்த மாநாடு அமைந்து விட்டிருக்கிறது..

  32. // என் கருத்து என்னவென்றல், தமிழ் வேதம் என்று ஒன்று இருந்திருக்க வேண்டும், அது காலப்போக்கில் மறைந்து இருக்க வேண்டும். நமது சங்க இலக்கியங்கள் கூறுவதும் தமிழ் வேதமாக இருக்கலாம்.//

    ஐயா சோமசுந்தரம் அவர்களே, பொய்க் கற்பனையை விடுத்து நிஜத்துக்கு வாருங்கள்.

    சங்க இலக்கியங்களில் வேதம் என்பது வெறும் ஒற்றைச் சொல்லால் மட்டும் குறிப்பிட்டப் படவில்லை. ரிக்,யஜுர்,சாமம், அதர்வணம் என்று நான்காக உள்ளது, ஆறு அங்கங்களை உடையது (”ஈர் இரண்டின் ஆறு” என்று இந்தக் கட்டுரையில் உள்ள மேற்கோளே கூறுகிறது), அந்தணர் மூன்று தீ வளர்த்து ஓதுவது, வேள்விச் சடங்கில் தொடர்புடையது இப்படிப் பற்பல ஏராளமான விவரங்களுடன் குறிப்பிடப் படுகிறது. சங்க இலக்கியங்களில் பற்பல இதிகாச, புராண வரலாறுகளும் குறிப்பிடப் படுகின்றன, சம்ஸ்கிருத மொழி, இமயமலை,கங்கை ஆறு பற்றிய பல குறிப்புகளும் உள்ளன. இது பற்றி உங்களுக்கு அறிந்து கொள்ள உண்மையிலேயே ஆர்வம் இருந்தால் சிறந்த ஆய்வாளர் சண்முகம் பிள்ளை அவர்கள் எழுதியிருக்கும் “சங்கத் தமிழர் வழிபாடும் சடங்குகளும்” (உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம் வெளியீடு) என்ற நூலைப் படியுங்கள்.

    இந்திய தேசியத்திற்கும், இந்துமதத்திற்கும் எதிரான, எந்த ஆதாரமுமில்லாத இனவாத பாசிஸ்டுகளின் திரிபுகளை வரலாறாக எண்ணி ஏமாற வேண்டாம். மொழிப்பற்று என்ற பெயரில் தேவையில்லாத துவேஷ உணர்வை வளர்த்துக் கொள்ள வேண்டாம்.

  33. ராமா அவர்களுக்கு

    சமஸ்கிருதமும் தமிழும் வெவ்வேறு மொழிக் குடும்பத்தைச்சார்ந்தவை. சமஸ்கிருதம் சில மொழிகளுக்குத் தாய். தமிழ் சில மொழிகளுக்குத் தாய்.

    சமஸ்கிருதத்தைப்போலவே தமிழிலும் சில தனித்துவ எழுத்துக்கள் உண்டு.
    ழகரம் ஒரு உதாரணம். சில மொழிகள் உச்சரிப்பில் சிறப்புடையன. சில இலக்கணத்துக்குச் சிறப்புடையன. நடுநிலையாளர் இது உயர்வு இது தாழ்வு என்று கூறுவதில்லை.

    மொழி என்பது வெறும் கருத்துப் பரிமாற்றத்துக்கான கருவி மட்டும் அல்ல. அது ஒரு பாரம்பரியத்தின் அடையாளம். பண்பாட்டின் சின்னம். மக்களைப் பிணைக்கும் பாலம். இப்படி எத்தனையோ பல உபயோகங்கள் அடங்கியது.

    அதனால்தான் இன்னமும் சமஸ்கிருதததப் போற்றுபவர்களும் தமிழைப் போற்றுபவர்களும் தத்தம் நிலைகளில் உறுதியாக இருக்கிறார்கள்.

  34. Nothing is lost. Hindus can organize their own meet. We cannot be at the mercy of fanatics with an agenda.

    By law, no one can prevent a meet by Hindus to highlight the role of Hindu religion in Tamil and other issues

    These conferences are taken over by anti-Hindus led by MK and others

    Hindus have to organize. No need to keep quiet

  35. திரு சோமசுந்தரம் அவர்களே,

    நீங்கள் உண்மைக்கு மாறான சில விஷயங்களைச் சொல்லி உள்ளீர்கள். சமஸ்கிருத வேதம் – தமிழ் இரண்டிற்கும் உள்ள தொடர்பு பற்றிய உங்கள் கருத்து ஏன் உண்மையாக இருக்க முடியாது என்பதை சங்க நூல்களிலிருந்து எனக்குத் தெரிந்த ஆதாரங்களை வைத்து நிரூபிக்கிறேன்.

    உங்கள் point-ஐ மாத்திரம் address செய்கிறேன். தயவு செய்து காழ்ப்புணர்ச்சியாலோ, சமயவாதத்திற்கோ இதை நான் எழுதுவதாக யாரும் நினைக்க வேண்டாம்.

    // என் கருத்து என்னவென்றல், தமிழ் வேதம் என்று ஒன்று இருந்திருக்க வேண்டும், அது காலப்போக்கில் மறைந்து இருக்க வேண்டும். நமது சங்க இலக்கியங்கள் கூறுவதும் தமிழ் வேதமாக இருக்கலாம்.//

    இதற்கு ஏதேனும் சான்று உண்டா? இல்லை என்றால் இது தேவையற்ற, ஆதாரமில்லாத speculation. சங்க இலக்கியங்களிலும், அதற்குப் பிற்காலத்தில் வந்த சிலப்பதிகாரம் முதலிய காப்பியங்களிலும், “வேதம்” என்று கூறப்படுவது சமஸ்கிருத வேதமே என்பதற்குப் பல சான்றுகள் உண்டு. தெரிந்தவற்றை இடுகிறேன்:

    (௧) பரிபாடல் மூன்றாம் பாடலில்:

    “விதியின் மக்களும்,
    மாசு இல் எண்மரும், பதினொரு கபிலரும்,
    தா மா இருவரும்,”

    என்று சமஸ்கிருத வேதத்தில் உள்ள பன்னிரு ஆதித்தர், எட்டு வசுக்கள், பதினொரு உருத்திரர்கள், இரண்டு அஸ்வினி தேவதைகளும் கூறப்பட்டன.

    (௨) அதே பாடலில் த்ரயுமாலை, “தீயினுள் தெறல் நீ; பூவினுள் நாற்றம் நீ … அனைத்தும் நீ; அனைத்தின் உட்பொருளும் நீ ஆதலின்” என்று கூறியிருப்பது – இது “அந்தர்யாமித்வம்” என்னும் வேத கொள்கையே. பிருஹதாரன்யக உபநிஷத்தும் சுபால உபநிஷத்தும் அந்தர்யாமி பிராம்மனத்தில் இதைக் கூறும்.

    (௩) அதே பாடலில், திருமாலை “பிறவாப் பிறப்பு இலை; பிறப்பித்தோர் இலையே:” என்று கூறியிருப்பது – இது, “அஜாயமானோ பஹுதா விஜாயந்தே” என்னும் புருஷ சூக்தத்தை அப்படியே தமிழாக்கம் பண்ணப்பட்டது.

    (௪) அதே பாடலில், “ஆயிரம் விரித்த கைம் மாய மள்ள! பதினாயிரம் கை முதுமொழி முதல்வ! நூறாயிரம் கை ஆறு அறி கடவுள்!” என்று திருமாலைக் கூறியிருப்பதும், “சஹாச்ற சீர்ஷா புருஷ” என்னும் புருஷ சூக்த மந்திரத்தின் தமிழாக்கமே.

    (௫) தென்புலத்தார் என்று சொல்லப்படும் பித்ருக்களுக்கு பிண்டம் வைத்து கர்மா செய்வது வைதிக முறை. இதையே புறநானூற்றில் 9-ஆம் பாடலில், “தென்புலம் வாழ்நர்க்கு அருங்கடன் இறுக்கும் பொன்போற் புதல்வர்ப் பெறாஅ தீரும்” என்று கூறப்பட்டது.

    (௬) திருவள்ளுவர் அந்தணர்களை “அறுதொழிலர்” என்று கூறியுள்ளார் (“ஆபயன் குன்றும் அறுதொழிலோர் நூன்மரப்பர் காவலன் காவான் எனின்.” – குறள் 560, பொருட்பால் – அரசியல் – கொடுங்கோன்மை). இந்தியாவில் எங்கு போய்க் கேட்டாலும் சமஸ்கிருதம் ஓதும் அந்தணர்களும் ஆறு தொழில்களைக் கூறுவர்: வேதம் கற்றல், கற்பித்தல், வேள்வி செய்தல், செய்வித்தல், தானம் பெறுதல், தருதல். மனுவும் இதை “ஷண்ணாம் து கர்மாணாம் அஸ்ய” என்று கூறியுள்ளார் (மனு X.75) !

    (௭) தைத்திரீய நாராயண வல்லியானது (தைத்திரீய ஆரண்யகம் X.xi.12), திருமாலை “நீல மழைமேகத்தின் நடுவில் தங்க நிற மின்னற் கோடி போன்ற திருவுருவை உடையவன்” என்று சமஸ்கிருதத்தில் ஒதிற்று. சமண மதத்தவராக இருந்த போதிலும், இளங்கோ இதையே சிலப்பதிகாரம் மதுரைக்காண்டத்தின் காடுகாண் காதையில் திருமலையப்பனைப் பாடும்பொழுது, அக்காதையின் 45-48 ஆம் வரிகளில்:

    “மின்னுக்கோடி யுடுத்து விளங்குவிற் பூண்டு
    நன்னிற மேகம் நின்றது போலப்
    பகையணங் காழியும் பால்வெண் சங்கமும்
    தகைபெறு தாமரைக் கையி னேந்தி”

    என்று பாடுகிறார். முன்கூறிய தைத்திரீய நாராயண வல்லியின் மந்திரங்களின் பொருள் பதிந்து, மேகத்து நடுவில் மின்னற்கொடி போன்று ‘பளீச்’ என்று உள்ளது சிலப்பதிகாரத்திலேயே!

    இதையும் தவிர சமஸ்கிருத வேத-இதிகாச-புராணங்களில் சொல்லப்பட்ட கதைகளான திருமால்-கண்ணன் பற்றிய புராணக் குறிப்புகளும், முருகப்பிரான் பற்றிய செய்திகளும், சிவபெருமான் திரிபுரம் எரித்த கதையும், அகலிகை கௌதமரிடம் சாபம் பெற்றதும், முதலிய பல கதைகளும் அப்படியே உள்ளது.

    ஆகையால், “மறை; அந்தணர்;” என்று கூறியிருப்பது எல்லாம் சமஸ்கிருத மறையையும் அதை ஓதும் அந்தனரையும் குறிப்பதே என்பது அனைவர்க்கும் விளங்கும்.

    //
    வடமொழியை இந்து தர்மத்தின் வேத மொழியாக ஏற்றுக்கொண்டால் அது இந்து தர்மத்திற்கு செய்யும் இழுக்கு.
    //

    சமஸ்கிருதத்தை எற்பதனால் தமிழுக்கு ஒரு இழுக்கும் வராது. தமிழும் சமஸ்கிருதமும் இரு கண்கள் என்றே தொல்காப்பியர் முதலாகக் காலம் காலமாகக் கூறப்படும் உண்மை.

    சைவ-வைணவ பாகுபாடின்றி தமிழர் அனைவரும் இரு மொழிகளையும் இரு கண்களாகக் காலங்காலமாக ஏற்றுக் கொண்டு வந்தனர். பெரியாழ்வார் சமஸ்கிருத வேதம் ஓதிய வேதியர் என்றே கேள்விப்படுகிறோம். திருமங்கை ஆழ்வார், “செந்திறத்த தமிழோசை வடசொல் ஆகி… அந்தணர் மாட்டு அந்தி வைத்த மந்திரத்தை” (திருநெடும் தாண்டகம் – 4) என்று வேதம் திவ்வியப்பிரபந்தம் இரண்டையும் சேர்த்து புகழ்ந்துள்ளார். சைவத் திருமுறைகளிலும் இப்படி உண்டு என்று தான் கேள்விப்பட்டுள்ளேன்.

  36. அளவுக்கு மிஞ்சினால் அமுதமும் நஞ்சு .
    யாருக்கும் அதிக பட்சம் அவர்களது நான்கு தலைமுறைக்கு மேல் தெரியாது.
    ஆயிரக்கணக்கான ஆண்டுகளுக்கு முன் நம் முன்னோர்கள் யார் யாருக்கு உறவு என்பது யாருக்குத் தெரியும்.?
    அப்படி இருக்கும் பொது யார் திராவிடன் யார் ஆரியன்?
    இதெல்லாம் ஏமாற்று வேலையே
    இரா.ஸ்ரீதரன்

  37. பலே சகோதரர் கந்தர்வன் அவர்களே! பலே!! உங்களைப்போன்ற பலர் இன்று இந்து சமூகத்திற்குத் தேவை. வேதங்கள், புராணங்கள், ஸ்மிருதிகள் மட்டும் அறியாமல் தமிழ் சங்க இலக்கியங்களும் நன்கு கற்றுள்ளீர்களே! மேலே, மது என்று ஒருவர் மது அருந்தியவர் போல உளறியிருக்கிறாரே, அதை நீங்கள் பார்க்கவில்லையா? தொடரட்டும் உங்கள் பணி!

    ஒரு சிறு சந்தேகம், கந்தர்வர்கள் எனும் ஒரு இனம் இருந்தாலும், கந்தர்வன் என்பது விராட பர்வத்தில் அஞ்ஞான வாசத்தின்போது, சகாதேவன் வைத்துக் கொண்ட பெயர்தானே??

  38. Mr Uma shankar, I love Tamil language and my knowldge of Sanskrit is minimal. My comments are based on discussion with my father in law whose father was the first to transalte Valmiki Ramayana into Malayalam. He is well versed in Tamil/Sanskrit. Also, my beliefs are based on discussion/arguments with my father(deceased) who used to run a Sanskrit school.Like you,in vain, I used to defend Tamil being pure and uncorrupt and older than Sanskrit. The truth is, Sanskrit is the oldest language known to mankind. You cannot get any more ancient than our Vedas, all written in Sanskrit.Plus there are umpteen Sanskrit origin Tamil words. Let us even take the Sanskrit hater”s DMK’s slogan and their flag- Udhaya Suriyan.( Sanskrit) Dravida is a Sanskrit word. Karuna Nithi are Sanskrit words.There is no denying of the fact that Sanskrit is the mother of all Indian languages.Tamil is part of this family.It never stood apart from it’s mother in the past.This does not take anything away from my mother tongue Tamil, who I consider is as great as Sanskrit, even with it’s all limitations.I feel our generation has been brain washed by this DK/DMK mob into believing that Sanskrit is Aryan/Parpan language.Let us all get over this paranoia about our languages bcause this can bring only divisions in the society and the country. Let us treat it for what it is- a medium of communication.

  39. To Rama
    // I willl have to accept the fact that Sanskrit is older than Tamil and is the mother of all Indian languages.It is also more vesatile as Tamil lacks alphabets for appropriate pronounciation for certain words.Sanskrit is the mother and Tamil is the eldest daughter in the Indian language family //
    This is absolutely wrong information. There is strong theory to sport this statement.

    திரு ஜடாயு அவர்களுக்கு,
    தங்களின் கட்டுரைகள் பல படித்து மகிழ்ந்து உள்ளேன். நான் சந்தேகிப்பது //நமது சங்க இலக்கியங்கள் கூறுவதும் தமிழ் வேதமாக இருக்கலாம் ?//. இதை திராவிடம் என கருத வேண்டாம்.

    தமிழ் வேதமும் வட மொழி வேதமும் ஒரே கருத்தை சொல்லி இருக்கலாம். ஏனென்றல் அவற்றின் நோக்கம் ஒன்றாக இருக்கலாம்.

    //சங்க இலக்கியங்களில் பற்பல இதிகாச, புராண வரலாறுகளும் குறிப்பிடப் படுகின்றன, சம்ஸ்கிருத மொழி, இமயமலை,கங்கை ஆறு பற்றிய பல குறிப்புகளும் உள்ளன.//
    இதிகாசம் மற்றும் புராண வரலாறுகள் நம் இந்து மதத்திற்கு பொதுவானவை. அவைகளை பற்றி எந்த நூலும் கூறலாம். புராணம் என்றால் அது சம்ஸ்கிருத மொழியில் தான் வந்து இருக்க வேண்டும் என கருதுவது தவறு.

    பண்டைய தமிழ் நாட்டில் வேதமகா கருதுவது எது என பலர் அறிந்தும் எழுதியும் வருகின்றனர். இதற்க்கு ஆதரமாக சங்க இலக்கியங்களையும் சைவ திருமுறைகளையும் காட்டுகின்றனர்.
    நான் அறிந்தவரை, சைவ திருமுறைகளில் எங்கும் ‘ரிக்,யஜுர்,சாமம், அதர்வணம்’ என நான்கும் கூறப்படவில்லை. சில திருமுறை பாடல்களில் அதர்வணம் என்ற சொல் வருகின்றது.

    திருவாசகத்தின் திருப்பள்ளியெழுச்சி பாடலில்
    ” இன்னிசை வீணையார் யாழினர் ஒருபால்
    இருக்கொடு தோத்திரம் இயம்பினர் ஒருபால்
    துன்னிய பிணைமலர்க் கையினர் துவள்கையர் ஒருபால் …”
    வரும் இருக்கொடு என்பதற்கு ரிக் என்றும் கொள்ளலாம்.

    மற்றபடி எனக்கு தெரிந்த வரை திருமுறைகளில் வரும் வேதம் என்பது ‘ரிக்,யஜுர்,சாமம் அதர்வணம்’ அக இருக்க வாய்ப்பு இல்லை.

  40. திரு கந்தர்வன்
    //நீங்கள் உண்மைக்கு மாறான சில விஷயங்களைச் சொல்லி உள்ளீர்கள். சமஸ்கிருத வேதம் – தமிழ் இரண்டிற்கும் உள்ள தொடர்பு பற்றிய உங்கள் கருத்து ஏன் உண்மையாக இருக்க முடியாது என்பதை சங்க நூல்களிலிருந்து எனக்குத் தெரிந்த ஆதாரங்களை வைத்து நிரூபிக்கிறேன். //
    நானும் எனக்கு தெரிந்தவற்றை தான் கூறுகின்றேன். இதில் கழ்ப்புணர்ச்சி இல்லை.
    //இதையும் தவிர சமஸ்கிருத வேத-இதிகாச-புராணங்களில் சொல்லப்பட்ட கதைகளான திருமால்-கண்ணன் பற்றிய புராணக் குறிப்புகளும், முருகப்பிரான் பற்றிய செய்திகளும், சிவபெருமான் திரிபுரம் எரித்த கதையும், அகலிகை கௌதமரிடம் சாபம் பெற்றதும், முதலிய பல கதைகளும் அப்படியே உள்ளது.//
    புராணங்களும் தத்துவங்களும் வடமொழியில் தான் இருக்க வேண்டும் என்பது இல்லை. அவைகள் மொழி கடந்தவை.

    //
    (௩) அதே பாடலில், திருமாலை “பிறவாப் பிறப்பு இலை; பிறப்பித்தோர் இலையே:” என்று கூறியிருப்பது – இது, “அஜாயமானோ பஹுதா விஜாயந்தே” என்னும் புருஷ சூக்தத்தை அப்படியே தமிழாக்கம் பண்ணப்பட்டது.

    (௪) அதே பாடலில், “ஆயிரம் விரித்த கைம் மாய மள்ள! பதினாயிரம் கை முதுமொழி முதல்வ! நூறாயிரம் கை ஆறு அறி கடவுள்!” என்று திருமாலைக் கூறியிருப்பதும், “சஹாச்ற சீர்ஷா புருஷ” என்னும் புருஷ சூக்த மந்திரத்தின் தமிழாக்கமே.
    //
    நீங்கள் கூறுவதை பார்த்தல் நம்முடைய நாயன்மார்களும் ஆழ்வார்களும் பாடியது எல்லாம் வட மொழி தமிழாக்கம்!
    இதுவும் தவறான கூற்று ஆகும்.
    இப்படித்தான் ஒருவர் கூறினார், திருமூலர் அருளிய திருமந்திரமும், மெய்கண்டார் அருளிய சாத்திரங்களும் வட மொழியில் இருந்து எழுதப்பட்டது.
    அதனால் தான் கூறுகின்றேன் இந்து தருமத்தை மொழியுடன் இணைத்து கூறத்திர்கள்.

  41. திரு சோமசுந்தரம் அவர்களே,

    //
    நீங்கள் கூறுவதை பார்த்தல் நம்முடைய நாயன்மார்களும் ஆழ்வார்களும் பாடியது எல்லாம் வட மொழி தமிழாக்கம்!
    இதுவும் தவறான கூற்று ஆகும்.
    //

    “ஆழ்வார்கள், சமஸ்கிருத வேதத்தை தமிழ் செய்தவர்” என்று தான் ஆழ்வார்கள் சித்தாந்தைப் பின்பற்றும் வைணவர்கள் கூறுவர். நம்மாழ்வாரை “வேதம் தமிழ் செய்த மாறன்” என்று தான் போற்றுகின்றனர். இது முற்றிலும் உண்மை என்பதே ஆழ்வார்களைப் பின்பற்றுவோர் கொள்கை.

    இதில் சிறிதளவும் தவறு ஒன்றும் இல்லை, தமிழுக்கும் இழிவு ஒன்றும் இல்லை. இன்னும் சொல்லப்போனால், ஆழ்வார்களைக் கொண்டாடும் வைணவர்கள் “சாகை சாகையாக சமஸ்கிருத வேதத்தில் மறைத்து வைக்கப்பட்ட விழுப்பொருளை தெள்ளத் தெளிவாக எளிய தமிழில் தந்துள்ளனர்” என்று 4000 பிரபந்தத்தைப் போற்றுவர்.

    திருமங்கை மன்னர் திருநெடும் தாண்டகத்தில், “தமிழோசை வடசொல் ஆகி” என்று தமிழ் பிரபந்தத்தை வடமொழி வேதத்திற்கு முன்பு வைத்துப் புகழ்ந்து பாடுகிறார்.

    நாயன்மார்களின் திருமுறைகள் எப்படி என்பது எனக்குத் தெரியாது – அதில் எனக்குச் சிறிதளவும் பரிச்சயம் இல்லை. சமஸ்கிருதத்திற்கும், சமஸ்கிருத வேதத்திற்கும் சைவர்கள் என்ன இடம் கொடுத்துள்ளார்கள் என்பது பற்றிய குறிப்பு ஏதேனும் அவர்கள் நூல்களில் இருந்தால், அதை சைவப் பெருமக்கள் இங்கு எடுத்து அனைவர்க்கும் விளக்குவது நன்று.

  42. சோமசுந்தரம் அவர்களிடம் அன்புடன் சில கேள்விகளைக் கேட்கிறேன்:

    // புராணங்களும் தத்துவங்களும் வடமொழியில் தான் இருக்க வேண்டும் என்பது இல்லை. அவைகள் மொழி கடந்தவை. //

    இதற்கு ஆதாரம் என்ன? எந்த மொழியில் எந்த புராணத்தில், சங்க காலம் முதலாக இதே கதைகள் அப்படியே உள்ளன?

    பெரியபுராணம், கந்தபுராணம், தல புராணங்கள் – இவற்றைத் தவிர தமிழில் எந்த நூலும் புரானமாகக் கொண்டாடப்படுவதில்லை. இவற்றில் முதல் இரண்டும் 10-ஆம் நூற்றாண்டிற்குப் பிறகு சேக்கிழார், காச்சியப்பா சிவாச்சாரியார் முறையே பண்ணியவை என்பதை அன்னூல் ஓதும் சைவர்களே ஒத்துக் கொள்ளுவர்.

    ஆதாரம் இல்லாமல் “இப்படி இருக்கலாம், அப்படி இருக்கலாம்” என்று கூறுவது எல்லாம் எதற்கும் உதவாத speculation மட்டுமே.

    நீங்கள் சொல்ல வருவது என்ன? சமஸ்கிருத வேதத்தையும் சமஸ்கிருத புராணங்களையும் தமிழர்கள் ஆதரிக்கக் கூடாது என்பதா? அப்படி ஆதரித்தால் தமிழுக்கு தீங்கு இழைப்பது என்று நினைக்கிறீர்களா?

    சமஸ்கிருத வேதத்தை அடிப்படையாகக் கொள்ளாத, அல்லது சமஸ்கிருத வேதத்திற்கு independent-ஆன சித்தாந்தம் ஹிந்து மதத்தில் உண்டு என்று நீங்கள் நிறுவப் பார்க்கிறீர்கள்.

    அப்படி ஒரு இயக்கம் இருக்கலாம், அதை யாரும் எதிர்க்கவில்லை. ஆனால், எனக்குத் தெரிந்த வரையில் இது “வேதாந்தம்” என்று கூறப்படும் மதங்களில் கிடையாது. வேதாந்தத்திற்கு அடிப்படை பிரம்ம சூத்திரம், உபநிடதங்கள், பகவத் கீதை, வேதம், வால்மீகி ராமாயணம், வியாசர் மகாபாரதம், பதினெண் புராணங்கள், இவையே. இவற்றின் மூல நூல்கள் சமஸ்கிருதத்தில் தான் உள்ளன என்பதை எல்லா வேதாந்த மடங்களும் ஒப்புக் கொண்டவையே. போய்க் கேட்டுப் பாருங்கள்.

    வைணவ மதத்தில் பாஞ்சராத்ர, வைகானச ஆகம நூல் எல்லாம் சமஸ்கிருதம் தான்.

    சைவ ஆகமங்கள் எல்லாம் சமஸ்கிருதத்தில் தான் உள்ளது. எந்த சைவ ஆதீனத்தையும் கேட்டுப் பாருங்கள். சைவத்திற்கு தமிழ்த் திருமுரைகளுடன், சிவபெருமான் இயற்றிய சைவ ஆகமங்கள் தானே அடிப்படை? இரண்டையும் பிரிப்பானேன்?

    தமிழ் நாட்டின் சைவ கோயில்கள் எனக்குத் தெரிந்த வரையில் சமஸ்கிருத ஆகமங்களின் வழி தான் கட்டப்பட்டுள்ளன. திருமால் ஆலயங்களும் சமஸ்கிருத பாஞ்சராத்ர, வைகானச ஆகமங்களை அடிப்படையாகக் கொண்டு தான் இயங்குகின்றன.

    //
    தமிழ் வேதமும் வட மொழி வேதமும் ஒரே கருத்தை சொல்லி இருக்கலாம். ஏனென்றல் அவற்றின் நோக்கம் ஒன்றாக இருக்கலாம்.
    //

    “தமிழ் வேதம்” என்று தனியாக இருந்ததற்கு என்ன ஆதாரம்? எந்த இடத்திலாவது “தமிழ் சொற்கள் கொண்ட மந்திரங்களை வேள்வியில் ஓதினர்” என்று உள்ளதா? அப்படி இருந்த “தமிழ் வேதம்” எப்படி திடீர் என்று யார் கண்ணுக்கும் படாமல் மறைந்தது?

    ஆதாரம் இல்லாமல் எதை வேண்டுமானாலும், “இப்படி இருந்திருக்கலாம், அப்படி இருந்திருக்கலாம்” என்றெல்லாம் சொல்ல முடியும்; ஆனால் அது பயனற்றது.

  43. //
    பலே சகோதரர் கந்தர்வன் அவர்களே! பலே!! உங்களைப்போன்ற பலர் இன்று இந்து சமூகத்திற்குத் தேவை. வேதங்கள், புராணங்கள், ஸ்மிருதிகள் மட்டும் அறியாமல் தமிழ் சங்க இலக்கியங்களும் நன்கு கற்றுள்ளீர்களே! மேலே, மது என்று ஒருவர் மது அருந்தியவர் போல உளறியிருக்கிறாரே, அதை நீங்கள் பார்க்கவில்லையா? தொடரட்டும் உங்கள் பணி!
    //

    உங்கள் ஈரச் சொற்களுக்கு நன்றி.

    எனக்கு எதிலும் தேர்ச்சி இல்லை. எல்லாம் பாகவதோத்தமர்கள், ஆச்சாரியார்கள், பகவான் கிருபையாலே. நான் கூறியது எல்லாம் அவர்கள் வாக்கிலிருந்து எடுத்தவை. பெருமையும் அவர்களுக்கே சேரும்.

    //
    ஒரு சிறு சந்தேகம், கந்தர்வர்கள் எனும் ஒரு இனம் இருந்தாலும், கந்தர்வன் என்பது விராட பர்வத்தில் அஞ்ஞான வாசத்தின்போது, சகாதேவன் வைத்துக் கொண்ட பெயர்தானே??
    //

    மகாபாரதத்தில் அவ்வளவு தேர்ச்சி எனக்குக் கிடையாது. கந்தர்வன் என்று வைத்துக் கொண்டது – சாப வசப்பட்ட “ஹூஹூ” என்ற கந்தர்வன், கஜேந்திரன் என்னும் பாகவதனின் காலைப் பிடித்ததனால் அந்த சாபத்திலிருந்து உய்ந்தான் என்ற செய்தி ஸ்ரீமத் பாகவதத்தில் உள்ளது. அதை நெஞ்சிற்கொண்டே இந்த nickname பெயரை வைத்துக் தேர்வு செய்தேன்.

  44. திரு ராமா அவர்களே

    நிச்சயமாக நான் எங்கும் தமிழ் தொன்மையானதா சமஸ்கிருதம் தொன்மையானதா என்பது பற்றிக் கருத்து எதுவும் கூறவில்லை. அதுபோலவே மொழித் தூய்மை, பிறசொல் கலப்பின்மை என்பதிலும் கருத்து ஏதும் கூறவில்லை. நான் மறுத்தது தமிழும் சமஸ்கிருதமும் ஒரே மொழிக்குடும்பம் என்றும், சமஸ்கிருதத்திலிருந்து தமிழ் பிறந்தது என்று தாங்கள் கூறியதை மட்டுமே.

    நிச்சயமாக தமிழும் சமஸ்கிருதமும் ஒரே மொழிக்குடும்பத்தைச் சேர்ந்தன அல்ல. மொழிக்குடும்பம் என்பதற்குப் பல முக்கியமான ஒற்றுமைகள் தேவை. இவை இந்த இரு மொழிகளிடம் இல்லை. மொழியின் கட்டமைப்பு, பேச்சுவழக்கில் உள்ள தன்மை, இலக்கணக் கட்டமைப்பு போன்றவைகளில் தமிழும் சமஸ்கிருதமும் வேறுபடுகின்றன. எனவே இவை இரண்டும் ஒரேகுடும்பத்தைச் சேர்ந்தவை அல்ல என்பது மொழியியல் ஆராய்ச்சியாளர்களின் முடிவு.

    மொழிக்குடும்பம் என்றால் என்ன என்பதை இங்கே காணலாம்:
    https://en.wikipedia.org/wiki/Language_family

    திராவிட மொழிக்குடும்பம் என்ற சொல்லாக்கத்தை முதலில் பயன் படுத்தியவர் கால்டுவெல். அவர் இச்சொல்லை குமரிலபட்டரின் தந்த்ரவார்த்திகையிலிருந்து எடுத்துக் கையாண்டதாக இந்த விக்கிப் பக்கம் கூறுகிறது.
    https://en.wikipedia.org/wiki/Dravidian_languages

    கால்டுவெல் ‘திராவிட’ என்ற சொல்லைப பயன்படுத்தியதால் மட்டுமே தமிழுக்கு சமஸ்கிருதம் அன்னையாகிவிடுமா என்ன? இதை மேலும் மேலும் கூறிவந்தால், தெக்கண மொழிக்குடும்பம் என்றோ அல்லது லெமூரிய மொழிக்குடும்பம் என்றோ கூற ஆரம்பித்து விட்டால் அது தமிழைத் தொன்மையாக்கிவிடுமா என்ன?

    தமிழின் தொன்மையும் சரி, சமஸ்கிருதத்தின் தொன்மையும் சரி, இரண்டுமே சரியாக இன்னும் நிர்ணயம் செய்யப்படவில்லை என்பதே சரியான கருத்து. தமிழின் அகத்தியம் தொன்மையானது என்ற கருத்து நிலவுகிறது ஆனால் அது கிடைக்கவில்லை, அதன் தொன்மையும் தெரியாது. ரிக்வேதத்தின் தொன்மையும் அப்படியே. இப்படியிருக்க எம்மொழி தொன்மைத்து என்று யாரும் அறுதிபடக்கூறமுடியாது என்பதே உண்மை.

  45. சமஸ்க்ருதத்தை வடமொழி என்று சொல்வதே தவறு.
    எது வடக்கு? எது தெற்கு?
    அப்படிப் பார்த்தால் தெலுங்கு வடமொழியா?
    மலையாளம் மேற்கு மொழியா ?
    சிங்களவர்களுக்கு தமிழ் வடமொழியா?
    சன்ஸ்க்ருத் என்ற சொல்லுக்கே கலாச்சாரம் என்பது பொருள்.
    உயர்ந்த கலாச்சாரத்தைப் பேசுவதால் அதற்கு அப்பெயர்.
    அந்தப் பெயரில் சொல்வதே சரி.
    இதைச் சொல்லும் ஒருவர் தமிழுக்கு விரோதி அல்ல.

    தமிழ் தமிழ் என்று தம்பட்டம் அடித்துக்கொள்ளும் கழக கும்பலில் பெரும்பலனவர்களுக்கு நல்ல தமிழ் எழுதவோ, பேசவோ தெரியாது
    அவர்களின் குழந்தைகள் காண்வெண்டுகளில் படித்தவர்கள் .படிப்பவர்கள்

    சம்ஸ்க்ருதம் நன்கு கற்றவர்களால் தமிழை மேலும் சிறப்பாக கற்க முடியும், பேச முடியும்
    பாரதியார், சூரியநாராயண சாஸ்திரியார் இவர்களைப் போல் பலர் இரு மொழிகளிலும் புலமை பெற்றவர்களை இருந்தனர்
    இரா.ஸ்ரீதரன்

  46. இப்போது தமிழ் ,தமிழ் என்று குதிப்பவர்கள் ஒருவர் கூட நல்ல தமிழ் நூலை எழுதினதில்லை
    கம்ப ரசம் போன்ற மிக ‘உயர்ந்த’ நூல்களைத்தான் எழுதி உள்ளனர்.
    உண்மையிலேயே தமிழ் வளர்த்த கம்பனும்,ஒட்டக்கூத்தனும்,ஜெயங் கொண்டாரும்,அவ்வையும்,வில்லிபுத்தூராரும் , ஆழ்வார்களும், நாயன்மார்களும்,இராமலிங்க வள்ளலாரும்,அருணகிரிநாதரும்,சேக்கிழாரும்,பாரதியும்,திருமூலரும்,அகத்தியரும்,தொல்காப்பியரும்,பணம் சேர்க்கவில்லை .
    பதவிக்காக அலையவில்லை.

    அல்லது தமிழ் வளர்த்தால் பட்டம் கிடைக்கும், பெட்டி கிடைக்கும் என்று நினைக்கவில்லை
    அவர்களின் உள்ளத்தின் ஆழத்திலிருந்து எழுந்த அவர்களின் ஆன்மாவின் நாதம்தான் அவர்களின் தமிழ்.
    அவர்களுக்கு எந்த கெட்ட எண்ணமும் இல்லை.
    தூய்மையான மனத்திலிருந்தே நல்ல தமிழ் எழும்.
    இரா.ஸ்ரீதரன்

  47. வேதத்தை அப்படியே தமிழில் மொழி பெயர்க்கவில்லை
    ஏனென்றால் வேதம் என்பதே ‘எழுதாக் கிளவி’ என்று எழுது வடிவம் கொடுக்கப் படாதது .
    மேலும் அதில்பொருள் அன்றி ஓசைக்கும் பெரும் முக்யத்துவம் உண்டு.
    ஆனால் வேத சாரத்தைப் பலர் தமிழில் கொடுத்துள்ளனர்
    நாலாயிர திவ்யப் பிரபந்தத்தில் இடம் பெற்றுள்ள பெரிய திருமொழியை இயற்றிய பெரியாழ்வார் ‘வேதம் தமிழ் செய்த மாறன்’ என்று சிறப்பிக்கப் பட்டுள்ளார்.
    இரா.ஸ்ரீதரன்

  48. R.Sridharan,

    ///நாலாயிர திவ்யப் பிரபந்தத்தில் இடம் பெற்றுள்ள பெரிய திருமொழியை இயற்றிய பெரியாழ்வார் ‘வேதம் தமிழ் செய்த மாறன்’ என்று சிறப்பிக்கப் பட்டுள்ளார்.///

    திருவாய்மொழியை இயற்றிய நம்மாழ்வார், ‘வேதம் தமிழ் செய்த மாறன்’ என்று சிறப்பிக்கப் பட்டுள்ளார்.

  49. சிவபெருமானே முதற்ச் தமிழ்ச் சங்கத்தின் தலைவர் என்பது தெரிந்ததே .கீழ்க் கண்ட திருவிளையாடர்ப் புராண கடவுள் வாழ்த்துப் பாடலால் இதை நாம் அறியலாம்.

    கண்ணுதற்ப் பெருங்கடவுளும் கழகமோடமர்ந்து
    பண்ணுறத் தெரிந்தாய்ந்த இப்பசுந்தமிழ்
    ஏனை மண்ணிடைச் சில இலக்கண வரம்பிலா மொழி போல்
    எண்ணிடைப் படக் கிடந்ததா என்னவும் படுமோ

    கண்ணுதல்- நுதல் கண் – நெற்றிக் கண்
    ஆகவே தமிழ் மொழி ஹிந்துக் கடவுளின் தலைமையில், ஆயிரக் கணக்கான ஹிந்து சமய ஞானிகளாலும், புலவர்களாலும், சான்றோர்களாலும் . இப்போது கூத்தடிக்கும் இவர்களுக்கும் தமிழுக்கும் எந்த தொடர்பும் இல்லை.
    இரா.ஸ்ரீதரன்

  50. கழகத் தலைவர் தன வாழ் நாளில் ஒரு நாள் கூட தேசியம் என்ற வார்த்தையை உதட்டளவில் கூட உதிர்த்ததில்லை
    அதுவே அவரின் உள்ளக் கிடக்கையை உணர்த்துகிறது

    சர்ச்சுக்கும் அதுதான் வேண்டும்.
    அதனால் தான் இருவரும் ஒண்ணுக்குள் ஒண்ணாக இருக்கின்றனர்.
    அதனால் தான் கால்டுவெல்லும், போப்பும் கம்பனையும், சேக்கிழானையும், திருமூலரையும் விட மேதாவிகள் என்பது போல் பேசப்பட்டது .
    அதனால் தான் மறந்து போய் கூட தமிழின் அடி நாதமாக விளங்கும் ஹிந்து சமய நூல்களை குறிப்பிடவில்லை

    ஸ்பெயின் நாட்டிலிருந்து சென்ற மிஷனரிகள் இவ்வாறுதான் தென்னமெரிக்காவில் இருந்த ஹிந்து சமயத்தை ஒத்த மாயா ,இன்கா நாகரிகங்களையும், அவர்களின் விலை மதிப்பில்லா கலைப் பொக்கிஷங்களையும், நூல்களையும் அழித்தனர்.
    இப்போது அந்த நாடுகள் தங்களின் தனி அடையாளத்தை இழந்து முகமற்ற ஏராளமான கிறித்தவ நாடுகள் போல் உள்ளன.
    அந்த நாகரிகங்களின் சுவடுகள் இல்லை,அதன் நினைவுகள் இல்லை .

    நமக்கு அது ஏற்படாமல் காக்க வேண்டும்.

    இரா.ஸ்ரீதரன்

  51. Shri Umashankar,pray tell me, where did all these Tamil Sanskrit words originate? Sanskrit was the original Indian language, was in widespread usage all over India including Dravidam region.( Dravida region had been mentioned in Mahabharatha.) I am not aware of ANY Indian language which is totally and completely devoid Sanskrit words.
    The results of divisions in our nation caused by various languages are plain to see.( eg; Tamilians getting a raw deal in Bangalore, problem of Biharis in Mumbai) Biggest mistake ever by the Government following independece is creating states based on languages. For a starter, we Tamils would have been spared from this corrupt, ignonminious DMK rule !!!!!!!!
    For Malayalle, Malayalm is the greatest language, for Kannadigas, Kannada is the greatest and so on. The common thread that unite us Indians is Hinduisim and it’s culture and Sanskrit. There is no denying of this fact.

  52. திரு காந்தர்வன் அவர்களுக்கு,
    நான் கூறுவது அனைத்தும் நடு நிலையோடு சிந்தியுகள். வடமொழி தான் நமது மதம் என்று என்னும் நிலையை விட்டு சிறிது நேரம் மறுமொழிகளை படிக்க வேண்டுகின்றேன்.

    //“தமிழ் சொற்கள் கொண்ட மந்திரங்களை வேள்வியில் ஓதினர்” என்று உள்ளதா? அப்படி இருந்த “தமிழ் வேதம்” எப்படி திடீர் என்று யார் கண்ணுக்கும் படாமல் மறைந்தது?//
    தமிழ் வேதம் என்பது வேள்வியில் ஓதுவர்தர்க்கு மட்டுமில்லாமல் பக்தி நெறிக்கும் இருந்திருக்கலாம். நம்மிடம் பல பழங்கால நூல்கள் இல்லை, அதற்காக அவைகள் இல்லை என கருதமுடியுமா?

    நான் அறிந்தவரை, சைவ திருமுறைகளில் எங்கும் ‘ரிக்,யஜுர்,சாமம், அதர்வணம்’ என நான்கும் கூறப்படவில்லை. சில திருமுறை பாடல்களில் சாமம் ஓதினான் என்ற சொல் வருகின்றது.

    நமது பாடல்களில் நன்கு வேதம் என்று தான் உள்ளன் மற்றபடி அவற்றின் பெயர்கள் எங்கும் ஒன்றாக கூறப்படவில்லை.

    நான் இவ்வாறு எழுதுவதிற்கு ஒரே நோக்கம், நம் கோவில்களிலும் இல்லங்களிலும் தமிழ் பாசுரங்களை பாடியும் படிவித்தும் இறைவனை மனதார அனைவரும் வழிபட வேண்டும் என்பது தான். வட மொழியை போற்றியாதல் நாம் நம் ஆலயங்களை சாதாரண மனிதனிடமிருந்து பல நூற்றாண்டுகள் பிரிதுவிட்டோம், இது கூட ஆகாமிய மதக்கரர்களால் செய்யப்பட்டவையாக இருக்கலாம்.

  53. To Rama,
    //where did all these Tamil Sanskrit words originate? Sanskrit was the original Indian language, was in widespread usage all over India including Dravidam region.( Dravida region had been mentioned in Mahabharatha.) I am not aware of ANY Indian language which is totally and completely devoid Sanskrit words.//
    I think it is not proper to write a reply to your words, since you did not aware of Tamil Language history and heritage.

    Do you know what is the period of Mahabharatha? There are evidences that Tamil poets were lived this region before and during the Mahabharath period. There were some kings in this region, who helped the Duriothana and Pandava senai’s. They were help them in various ways, like, food, medicine, first aid..,

    You can write any thing about Sanskrit, but donot underestimate about our language Tamil. No living language have these many collection of songs about our Hindu or any other religion. Tamil is language of Bakthi. In fact, from this region only the Bakthi movement reached all places in our Bharatha Kandam (including, Pakisthan, Bangeladesh, Birma..,)

  54. அந்த காலத்தில் தென் இந்தியாவோடு உறவாடிய வட மொழி பிராகிருதம் ஆகும். பின்னர் தான் சமஸ்கிருதம் வந்தது. வட மொழி என்ற சொல் நமது பழைய இலக்கியங்களில் காணப்படும் சொல். அது சமஸ்கிருதம் அல்லது பிராகிருதம் ஆகிய மொழிகளை குறிக்கிறது. வட சொல் என்று தொல்காப்பியம் அந்த மொழிகளை பொதுவாக குறிக்கிறது. இதில் இருந்தே சமஸ்கிருதம், பிராகிருதம் ஆகியன தென் இந்தியாவுக்கு அந்நிய மொழிகளாக இருந்தன என்பது விளங்கும். சங்க காலத்தில் இருந்த அறிஞர்கள் வட சொல்லில் இருந்த இலக்கியங்கள் , மறைகள், சடங்குகள் ஆகியவற்றை அறிந்து இருந்தார்கள் என்பதை அஸ்கோ பர்போலா போன்ற அறிஞர்கள் ஒப்புக்கொள்கிறார்கள் .ஆனால் தமிழ் தனித்துவம் கொண்டது . தொல்காப்பியம் தனித்துவம் கொண்டது. திராவிட மொழிக்குடும்பத்தை சேர்ந்த மொழிகள் வேறானவை.

  55. திரு ராமா அவர்களே
    வேற்று மொழிச் சொற்கள் கலப்பு என்பது எல்லா மொழிகளிலும் உண்டு. ஒரு மொழியில் சிலவேற்று மொழிச் சொற்கள் கலந்துவிட்ட காரணத்தினாலேயே அது பிந்தைய மொழியிலிருந்து பிறந்த மொழி ஆகிவிடாது. உதாரணமாக தமிழின் “கட்டுமரம்” (catamaran) குண்டர் (goonda) போன்ற சொற்கள் ஆங்கிலத்தில் இன்று பயன்படுத்தப்படுவதால், தமிழ் ஆங்கிலத்தின் தாய் ஆகி விடாது. நான் முன்னரே கூறியபடி பல முக்கியத் தகுதிகளை கவனத்தில் கொள்ளாது ஹிந்துமதம் சார்ந்த வேத இலக்கியங்களையே மட்டும் கவனத்ஹ்டில் கொண்டு தமிழின் தொன்மையையும், மொழி முதலையும் அனுமானித்தல் மொழி ரீதியாகவும் மத ரீதியாகவும் விபரீதத்தில்தான் கொண்டு விடும். இன்னும்சொல்லப் போனால் இத்தகைய அணுகுமுறைதான் கால்டுவேல்லுக்கும் ஜி.யு.போப்புக்கும் தேவசகாயத்துக்கும் வீரபாண்டியனுக்கும் வீரமணிக்கும் கருணாநிதிக்கும் ஊட்டச்சத்து. அதை கவனமாகத் தவிர்க்க வேண்டும்.

    மொழி என்றுமே வெறும் கருத்துப் பரிமாற்றத் தளம் மாத்திரமாக ஆக முடியாது. மொழி மனிதனோடு பலதரப்பட்ட நிலைகளில் பின்னிப் பிணைந்தது. கிறித்துவம் வளர ஒரு முக்கியக் காரணம் பைபிளையும், ஆராதனையையும் உலகின் பலவேறு மொழிகளில் செய்(த)வதுதான். இறைவனுக்கு எல்லா மொழியும் தெரியும். ஆனால் பெரும்பாலான மனிதர்களுக்கோ தத்தம் தாய் மொழி மட்டுமே தெரியும்.

  56. 1. தமிழ் சமஸ்கிருதத்திலிருந்து வந்ததல்ல. சமஸ்கிருதம் பிராகிருதம் தமிழ் உட்பட பாரத மொழிகள் அனைத்தையும் உள்வாங்கி உருவாக்கப்பட்ட ஒரு செயற்கை மொழி. எனவே அது அனைவருக்கும் சொந்தமானது.
    2. வேதங்கள் சந்த மொழி. சமஸ்கிருதம் இதனைச்சார்ந்தே நிற்கின்றது.
    3. வேதங்கள் அனைவருக்கும் சொந்தமானவை. வேத மொழியில் “திராவிடக்குடும்பச் சொற்கள்” அடிநீரோட்டமாக உள்ளதாக அஸ்கோ பர்போலா போன்றவர்களே ஏற்றுக்கொள்வர். இந்த மொழிக் குடும்ப வேறுபாடு எந்த அளவு அறிவியல்பூர்வமானது என்பது தெரியாத நிலையில் வேதமும் அவற்றின் கருத்தியலும் நிச்சயமாக தென்னிந்திய மக்களுக்கும் சொந்தமானவை என்றே கொள்ள வேண்டும்.
    4. வேதங்களின் கருத்தியலும் சங்க இலக்கியங்களின் கருத்தியலும் ஒன்றுதான் என்பது தமிழர்கள் வேதங்களை மொழி பெயர்த்தார்கள் என கொள்ள முடியாது. தமிழர்களே வேத ரிஷிகளாக இருந்திருக்க வாய்ப்புண்டு. தமிழர்கள் தமிழில்தான் மந்திரங்களை கொடுத்திருக்க வேண்டுமென எந்த கட்டாயமும் இல்லை.
    5. தமிழ் உலகின் முதல் மொழி என்பதற்கு எந்த ஆதாரமும் இல்லை. இந்த “முதல் மொழி” என்கிற கருத்தாக்கமே தவறானது. பல மொழிகள் மானுட சமுதாயத்தில் ஒருங்கிணைந்து தோன்றியிருக்க வேண்டும் தனித்தனி மொழி அடையாளங்கள் கிமு முதலாயிரம் ஆண்டுகளிலிருந்து கூட கொஞ்சம் கொஞ்சமாக இறுக்கமடைந்திருக்கலாம். இதையெல்லாம் கணக்கில் எடுக்காமல் பேசுவது தவறான சட்டகங்களுக்குள்ளேயே நம்மை சூடடிக்கும் மாடுகளாக சுழல வைக்கிறது.

  57. ஹிந்துப் பெயரில் விஷமம் செய்யும் சில கிறித்தவர்களை நாம் கண்டு கொள்வோம்.
    இங்கு பிராமணர்களுக்கும் , மற்ற ஹிந்துக்களுக்கும் எந்த பகையும் இல்லை.
    இப்போது ஹிந்துகளுக்குள் கலப்பு மணங்களும் நிறைய காணப் படுகின்றன.
    எல்லா ஹிந்துக்களுக்கும் ஒரே சுடுகாடுதான். ஆனால் கிறிஸ்தவர்களுக்கு அப்படியா?
    ஆர் சீ க்கு ஒன்று எஸ் சீ கிறிஸ்டியனுக்கு ஒன்று என்று புதை காடு கூட பிரிக்கப் பட்டுள்ளது.
    மேலும் பிராமணர்களும் மற்றவர்களும் ஒரே சாமிகளைத்தான் கும்பிடுகிறார்கள் .அவர்களுக்கும் ராமசாமி, கிருஷ்ணசாமி என்று பெயர் உள்ளது. மற்றவர்களுக்கும் உள்ளது.
    காஷ்மீர் முதல் கன்னியாகுமரி வரை இப்படித்தான்.
    பிராமணர்களுக்கும் குல தெய்வம் உள்ளது ,மற்றவர்களுக்கும் உள்ளது.
    வருடம் ஒரு முறையாவது தங்கள் ஊர் கிராமம் சென்று எல்லை தெய்வத்துக்கு பொங்கல் படைப்பது போன்றவைகளை பிராமணர்களும் செய்கின்றனர். மற்றவர்களும் செய்கின்றனர்.
    எல்லோரும் முன்னோர்களுக்கு திவசம் செய்கின்றனர்.
    ஏன், பூணூல் கூட எல்லோருக்கும் ஒவ்வொரு கட்டங்களில் உண்டு.
    அந்தக் காலத்தில் பணிகள் வரையறுக்கப் பட்டதால், உலக நன்மைக்காக யாகம் இவைகளைச் செய்ய வேண்டி இருந்ததால் பிராமணர்கள் சொத்து சேர்ப்பது கூடாது, மன்னனே அவர்களுக்கு வேண்டிய பொருள் உதவியைச் செய்வான் என்றஇருந்தது
    மேலும் ஹிந்து மதத்தில் மட்டும் தான் பூசாரி வர்க்கம் புலால் உண்ணாதவர்கள்
    தெய்வப் பணி செய்பவர்கள் புலால் உண்ணக் கூடாது என்று இருந்ததால் தான் அதற்குள்ள கட்டுப் பாடுகள் தேவையாக இருந்தது
    அது அப்படியே வழக்கத்தில் வந்துள்ளது
    மேலும் எல்லோரும் அப்படி இருந்தால் நாட்டைக் காப்பது யார் என்பதால் மற்றவர்கள் புலால் உண்பவர்களாக இருந்தனர்
    அதிலும் பலர் -இராமலிங்க வள்ளலார் போல ஞான மார்கத்தை கடை பிடித்து புலாலை ஒதுக்கினர்.
    ஒருவர் அத்தகைய அனுஷ்டானங்களை இப்போது கடைப் பிடித்து தாரளமாக பூசாரியாக ஆகட்டும்
    பெரும்பாலான கோயில்களில் கால் கடுக்க நின்றாலும் பத்து ரூபாய் கூட கிடைக்காது
    இதை ஒருவர் விரும்பி வந்தால் வரட்டும்

    இப்போதும் எல்லா அம்மன் கோயில்கள், கிராமக் கோயில்களில் பிராமணர் அல்லாதவர்கள் பூசாரிகளாக இருக்கிறார்கள்

    இதை பெரிதாக ஊதி விடும் கிறித்தவர்கள், மத மாற்றம் செய்து, உள் நாட்டுக் கல்கம் விளையும் , நாட்டை உடைக்கலாம் என்று ‘ஜொள்ளு’ விட்டுக் கொண்டு இருக்கிறர்கள்.

    இரா.ஸ்ரீதரன்

  58. சமஸ்கிருதமானது பிராகிருதம், தமிழ் உட்பட இந்திய மொழிகள் அனைத்தையும் உள்வாங்கி உருவாக்கப்பட்ட ஒரு செயற்கை மொழி என்பது ஓரளவுக்கு உண்மையாக இருக்கலாம். ஆனால் வட இந்தியாவில் இருப்பவர்கள் குறிப்பாக சம்ஸ்கிருத அறிஞர்கள் மற்றும் இந்து கலாச்சார தேசியம் பேசும் ஆர் எஸ் எஸ் காரர்கள் இதை அங்கே ஏன் வெளிப்படையாக சொல்ல மறுக்கிறார்கள். ஏற்க மறுக்கிறார்கள்?. தமிழின் தனித்தன்மையை இவர்கள் ஏன் ஒப்புக்கொள்ள மறுக்கிறார்கள். பா ஜா க ஆட்சியில் தமிழுக்கு செம்மொழி தகுதியை ஏன் அதிகாரப்பூர்வமாக தரவில்லை?. இவர்கள் தமிழுக்கு செம்மொழி தகுதியை கொடுக்கவில்லை என்பதால் இவர்கள் தான் கெட்டார்கள். தமிழ் கெடவில்லை. செம்மொழி தகுதியை அதிகாரபூர்வமாக பெறாமல் இருக்கவில்லை. பா ஜா க ஆட்சியில் வடமொழி வளர்ச்சிக்காக எவ்வளவோ பணத்தை ஒதுக்கினார்கள். அதே பாணியில் தமிழுக்காக ஒரு சிறு அளவிலாவது அவர்கள் நிதி ஒதுக்கினார்களா?. ஏன் தமிழில் ஆராய்வதற்கு எதுவும் இல்லை என்று நினைத்துவிட்டார்களா?. கருணாநிதி போன்ற தமிழ் நாட்டு அரசியல்வாதிகள் தங்களை விடவும் புத்திசாலிகள் இல்லை என்று முரளி மனோகர் ஜோஷி போன்ற ஆட்கள் நினைத்து விட்டார்களா? . மேலும் சமஸ்கிருதம் என்னும் வடமொழி தமிழ், பிராகிருதம் போன்ற பழைய மொழிகளை உள்வாங்கி உருவான ஒரு செயற்கை மொழி என்பதை நீலகண்டன் போன்றோர் சம்ஸ்கிருத மாநாடுகளில் போய் சொல்வார்களா? மேலும் சமஸ்கிருதம் தமிழில் இருந்து பல விடயங்களை உள்வாங்கி உருவானதால் தமிழ் தனித்தன்மை இல்லாத மொழியாக மாறி விடுமா என்ன?.

  59. பெரியசாமி அய்யா, தமிழிலிருந்துதான் சமஸ்க்ருதம் பிறந்தது என்றால், ஏன் திராவிட இயக்கத்தவர்கள் காலம் காலமாக சமஸ்க்ருதத்தை வெறுக்கிறார்கள் என்று கொஞ்சம் சொல்லுங்களேன்! நாங்களெல்லாம் முட்டாள்கள், எங்களுக்கு எதுவும் தெரியாது, நீங்கள் கற்றுக்கொடுத்தால் கேள்விகள் எதுவுமின்றி ஒப்புக்கொள்வோம் (என்ன செய்வது நாங்கள் மூடநம்பிக்கை உள்ளவர்கள், கேள்வி ஞானமற்றவர்கள்; பகுத்தறிவற்றவர்கள்!)

  60. தமிழ் மொழிக்கும் சமஸ்கிரதத்துக்கும் மொழி அடிப்படையில் எந்த தொடர்பும் கிடையாது.

    ஆனால் சமய அடிப்படையில், பண்பாட்டு அடிப்படையில், சமூக அடிப்படையில் தமிழ் மொழிக்கும் சமஸ்கிரதத்துக்கும் தொடர்பு உண்டு. மொழி அடிப்படையில் இரண்டுக்கும் தொடர்பு இருந்தால் இந்தி பேச என்னைப் போனறவர்கள் திணற வேண்டியதில்லை.

    ஹிந்தி, குஜராத்தி, பெங்காலி, மராட்டி , ஒரியா போன்ற மொழிகளின் அடிப்படை சமஸ்கிரதமே.

    சமஸ்கிரதம, பிராகிருதம், உருது, அரபி, பார்சி மொழிகளை கலந்து உருவாக்கப் பட்டதுதான் ஹிந்தி மொழி.

    துவம் (you) என்ற சமஸ்கிரதம் து என்று ஹிந்தி ஆனது.
    த்வ (two) என்பது தோ ஆனது.

    ஆனால் தமிழ் மொழியில் ஒலி முற்றிலும் , முற்றிலும் மாறுபட்டது. you என்பதை நீ என்றும், two என்பதை இரண்டு என்றும் அழைக்கிறோம். மலையாள , கன்னட, தெலுங்கு, ஒரிய மொழிகளும் எண்ணிக்கைக்கு தமிழின் ஒலி அடிப்படையிலான, ஒக்க, ஒக்கட்ட, இருடு… இந்த மாதிரியாக அழைக்கிறோம்.

    Water என்பதை சமஸ்கிரதத்தில் ஜலம் என்கிறார்கள்,

    தமிழில் நீர், தெலுங்கில் நீலு , மலையாளத்தில் வெள்ளம்.

    எனவே தமிழுக்கும், சமஸ்கிருதத்துக்கும் மொழி அளவில் பெரும் வேறுபாடு உண்டு. ஆனால் தமிழ் சமுதாயம் இந்து மத அடிப்படையிலான சமுதாயம், தமிழர் வழி பட்ட கடவுள்களை வட இந்தியரும் வழி பட்டுய் கடவுள்களை வழி பட்டு வந்தனர், தமிழ் சமுதாயம் வேள்விக்கு வடமொழியை உபயோகப் படுத்தி இருக்கிறது. வேள்விக்கு முக்கியத்துவம் குடுத்த வட இந்தியர்களிடம் முழுமையாக உருவ வழிப்பாட்டில் அதிக கவனம் செலுத்த வைத்தது தமிழரே.

    தமிழர்கள் முக்கியத்துவம் கொடுத்து வழிபட்ட சுப்பிரமணியர் வழி பாடு, மாலவன் வழி பாடு ஆகியவற்றை சேர நாட்டுத் தமிழரான ஆதி சங்கரர் வடக்கிலேயும் இந்திய முழுவதுக்கும் பிரபலப் படுத்தினார். ஆதி சங்கரரின் தத்துவம் ஞானத்தின் மூலமே விடுதலை , இரண்டற்ற அத்வைதம் ஆகியவனவாக இருந்தாலும் அந்த நிலையை அடைய அவர் சிறந்த முறையாக கூறியது, கடவுள் வழிபாடே, குறிப்பாக உருவழிபாடே.. பஜ கோவிந்தம் ..!

    இந்து மதம் வட மொழி என்று கூறப் படும் சமஸ்கிருதத்தையோ, அல்லது வேறு எந்த மொழியையோ நம்பி இல்லை. இந்து மதம் உண்மையைத் தன் அடித்தளமாகக் கொண்டுள்ளது.

    “உண்மையே வெல்லும்” என்ற உண்மையின் அடிப்படையிலேயே உண்மையைத் தேடும் வழியே இந்து மதம்.

    உண்மையை உயிருக்கு புரிய வைப்பதன் மூலம், அந்த உயிரை இருட்டில் இருந்து வெளிச்சத்திற்கு அழைத்து சென்று, உயிரை அடிமை நிலையில் இருந்து விடுதலை நிலைக்கு உயர்த்துவதே இந்து மதத்தின் நோக்கம்.

    தமிழில் இந்து மதத்தின் எல்லா உண்மைகளும் சிறப்பாகக் கூறப்பட்டுள்ளன. இன்னும் சொல்லப் போனால், சமஸ்கிருதத்தையும் மிஞ்சிய வகையில் இந்து மதத்தின் உண்மைகள், தமிழிலும், பிற திராவிட மொழியிலும் உண்டு!

    இந்தியாவைப் பொருத்த அளவில் ஆன்மீகம் என்பது, மனிதனின் அறிவை உயர்த்தி, அவன் உயிரை விடுதலை அடையச் செய்வது என்பதுதான்!
    உண்மை – அதை எந்த மொழியில் சொன்னாலும் அது (உண்மை) ஒன்றாகத்தான் இருக்க முடியும்!

    “உலகம் உருண்டையானாது” என்று சொன்னாலும், “EARTH IS ROUND” என்று
    சொன்னாலும், பொருள் ஒன்றுதான்!

    மனித உயிர் பற்றீய ஆராய்ச்சியில் கிருட்டிணர்,

    ” கதாஸூன், அகதாஸூன், ந அனுசோசந்தி பண்டிதா” -என்று கூறியுள்ளார்.
    “சான்றோர் இங்கே இருப்பவர்களைப் பற்றீயோ, இறந்தவர்களைப் பற்றீயோ எண்ணிக் கலங்குவதில்லை” என்று பொருள்!

    அதையே பட்டினத்தார்
    ” செத்த பிணத் தருகே இனிச் சாம்பிணம் கத்துதையோ ” என்று பாடியுள்ளார்!

    “காம்பிணங்கும் பணைத்தோளார்க்கும் பொன்னுக்குங் காசினிக்கும்
    தாம்பிணங்கும் பலஆசையும் விட்டுத்தணித்துச் செத்துப்
    போம்பிணம் தன்னைத் திரளாகக் கூடிப் புரண்டினிமேற்
    சாம்பிணம் கத்துதையோ ? என்செய்வேன் தில்லைச்சங்ககரனே”.

    மேலும் கிருட்டிணர்,

    “நத்வே வாஹம், ஜாது நாசம், ந த்வம் னேமே ஜனாதிபா” என்றும்,

    “வாசாம்சி ஜீர்ணானி யதா விஹாய

    நவானி க்ருஹ்ணாதி நரோபராணி

    ததா சரீராணி விஹாய ஜீர்ணான்

    யன்யானி ஸ‌ம்யாதி நவாணி தேஹீ ” என்றும்,

    கூறியுள்ளதையே பட்டினத்தார்,

    “அன்னை எத்தனை எத்தனை அன்னையோ?

    அப்பன் எத்தனை எத்தனை அப்பனோ?

    பின்னை எத்தனை எத்தனை பெண்டீரோ?

    பிள்ளை எத்தனை எத்தனை பிள்ளையோ?

    முன்னை எத்தனை எத்தனை சன்மமோ?

    மூடனாயடி யேனும றிந்திலேன்,

    இன்ன மெத்தனை யெத்தனை சன்மமோ?

    என்செய் வேன்? கச்சியேகம்ப நாதனே? ”

    என்று பாடியுள்ளார்!

    எனவே எந்த மொழியில் சொன்னாலும், உண்மை ஒன்றுதான்.

    எந்த மொழியில் சொன்னாலும் உண்மை ஒன்றுதானே- பின்ன என்னதுக்கு சம்ஸ்கிருதம் படிக்க வேண்டும் என்று கேட்கலாம். சில விஷயங்கள் ஒவ்வொரு மொழியில் தெளிவாக சொல்லப் பட்டு உள்ளன!

    உதாரணமாக, “எழுமின், விழிமின் குறி சேரும் வரை நில்லாது செல்மின்” என்ற வாக்கியம் சம்ஸ்கிருத வாக்கியமான, “உத்திஸ்டத, ஜாக்ரத, ப்ராப்யவரான் நிபோதித” என்ற வட மொழி வாக்கியத்தின் மொழி பெயர்ப்பு. இதில் குறிப்பிடப்பட்டுள்ள, ” ஜாக்கிரத” என்ற வார்த்தையை தமிழில் “விழிமின்” என்று எழுதியுள்ளனர். ஆனால், இந்த வார்த்தை “ஜாக்கிரத” மிக முக்கியமானது. “ஜாக்கிரத” என்ற வார்த்தையால் உணரப்படும் ஜாக்கிரதை, “விழிமின்” “என்ற வார்த்தையால் உணரப்படுமா- என்பது சந்தேகம்!”ஜாக்கிரதை”யை கைவிட்டு விட்டதால் தான், இன்றைக்கு மக்கள், ஆன்மீக விஷயத்தில் ஏமாந்து நிற்கின்றனர்!

    எனவே பிற மொழியில் சிறிது புலமை பெறுவது தவறு இல்லை.

    “எண்ணிய எண்ணியாங்கு எய்துவர் எண்ணியார்

    திண்ணியர் ஆகப் பெறின்”

    இதை மூல மொழியான தமிழ் மொழியில் பயிலும் போது கிடைக்கும் “திண்ணியம்” மொழி பெயர்ப்பில் கிடைக்காது என்பது அறிந்ததே.

    ஆனால் யாரையும் வட மொழி பயிலச் சொல்லி கட்டாயப் படுத்தவில்லை. கட்டாயப் படுத்துவது என்பது இந்து மதத்தில் இல்லை. வடமொழி அறியாமலேயே இந்து மதத்தைப் நன்கு புரிந்து கொள்ளவும், சிறப்பாக பின்பற்றவும் முடியும்.

  61. My surname is Krishnan. I will be very annoyed if someone calls me ( Mr Tirichikaran, for ex,as above calling Lord Krishna as Kritinan ) Kritinan. Krishnan is not Kritininan. If so, it shows the limitation of Tamil or some sort of phobia in using appropiate letters.
    Is there a Tamil word for Athma? No transilation please.

  62. //
    Water என்பதை சமஸ்கிரதத்தில் ஜலம் என்கிறார்கள்,

    தமிழில் நீர், தெலுங்கில் நீலு , மலையாளத்தில் வெள்ளம்.

    எனவே தமிழுக்கும், சமஸ்கிருதத்துக்கும் மொழி அளவில் பெரும் வேறுபாடு உண்டு.
    //

    இந்த எடுத்துக்காட்டின் காரணத்தாலே இது செல்லாது. சம்ஸ்கிருதத்திலும் ‘நீர’ என்றால் தண்ணீர். ‘நீரஜ தள நயன’ என்றால் ‘தாமரைக் கண்ணன்’ என்று பொருள். ‘நீர + ஜ’ = நீரிலிருந்து தோன்றியது. இது எனக்குத் தெரிந்த LKG சமஸ்கிருதம்.

    //
    வேள்விக்கு முக்கியத்துவம் குடுத்த வட இந்தியர்களிடம் முழுமையாக உருவ வழிப்பாட்டில் அதிக கவனம் செலுத்த வைத்தது தமிழரே.
    //

    இந்த தகவலுக்கு என்ன ஆதாரம்? வடக்கிலும் தொன்மையான பல க்ஷேத்திரங்கள் உண்டு. பக்தியை ஒரு மார்கமாக revive செய்த ராமானுஜர் முதலியோர் தமிழ்நாட்டவர் என்பது வேறு தகவல்.

    //
    தமிழர்கள் முக்கியத்துவம் கொடுத்து வழிபட்ட சுப்பிரமணியர் வழி பாடு, மாலவன் வழி பாடு ஆகியவற்றை சேர நாட்டுத் தமிழரான ஆதி சங்கரர் வடக்கிலேயும் இந்திய முழுவதுக்கும் பிரபலப் படுத்தினார்.
    //

    இப்படி இருக்க வாய்ப்பில்லை. ஆதி சங்கரரின் குருவிற்கும் குருவான கௌடபாதர் வடக்கத்தியவரே. அவர் வடக்கே பதரிநாத் க்ஷேத்திரத்தில் ஸ்ரீமன்னாரயாணனை நோக்கித் தவம் புரிந்து அவனருளால் வேதாந்த ஞானம் பெற்றார் என்று பிராசீன அத்வைதியரான ஆனந்தகிரி (13/14-ஆம் நூற்றாண்டு) ‘மாண்டுக்ய-உபநிஷத்-காரிகா-பாஷ்ய-டீகையில்’ தெரிவிக்கிறார். மேலும், பிராசீன சமஸ்கிருத நூல்களிலேயே விஷ்ணு-நாராயணன்-வாசுதேவன் என்னும் திருமாலும், ஸ்கந்தனும் உண்டு. எனக்குத் தெரிந்தவை – மகாபாரதம், ராமாயணம் இவற்றில் சிவபெருமான் மகனாகிய ஸ்கந்தன் பற்றிய தகவல்கள் பல உண்டு.

  63. பா ஜ க அரசை குறை சொல்வது இருக்கட்டும்
    இங்கு தமிழ் தமிழ் என்று ஏமாற்றும் அரசியல்வாதிகள் என் இவ்வளவு மெட்ரிக் பள்ளிகளை அனுமதித்துள்ளனர்?
    இந்தியாவிலேயே மெட்ரிக் பள்ளிகள் எண்ணிக்கை தமிழ் நாட்டில் தான் மிக அதிகம்
    தமிழ் பெரும்பாலான பள்ளிகளில் ஒரு படமாகவே இல்லை
    பள்ளிகளை வைத்து கொள்ளை அடிக்கிறார்கள்
    அரசியல்வாதிகளுக்கு பங்கு போவதால் கண்டு கொள்வதில்லை
    ஆனால் தமிழ் தமிழ் என்று மக்களை ஏமாற்றுகிறார்கள்
    இந்தியாவின் மற்ற மாநிலங்களில் அவர்கள் தாய் மொழியை படிக்கிறார்கள், முக்யத்துவம் கொடுக்கிறார்கள்.

    மதரசாக்களுக்கு கோடி கொடியாக அள்ளிக் கொடுக்கிறர்கள் ( சமீபத்திய சான்று-பீகார்)
    அது ஹிந்து விரோதிகளுக்கு சரி
    அனால் சமஸ்க்ருதத்துக்கு கொடுக்க கூடாது!
    நல்ல நியாயம்
    இரா.ஸ்ரீதரன்

  64. பிற மொழிகளில் சிறிது என்ன நன்றாகவே புலமை பெறலாம்
    அதனால் நம் அறிவு செழிக்கும், மனம் விரிவடையும்
    வாலறுந்த நரி போல் திறமை அற்றவர்கள் தான் பிற மொழிகள் மேல் வெறுப்பை கிளப்புகிறார்கள்
    பிற மொழிகளை கற்பதால் தமிழ் மேல் உள்ள பற்று குறையாது

    இரா.ஸ்ரீதரன்

  65. கழக அரசியல் வாதிகளுக்கு தமிழ்ர்கள் குண்டு சட்டியில் குதிரை ஒட்டுபவர்களாக இருந்தால்தான் அவர்களின் பிழைப்பு நடக்கும்
    அதனால் இந்த மாதிரி போலியாக தமிழ் தமிழ் என்று நாடகம் ஆடுகின்றனர்
    அவர்களுக்கு ஒன்றும் தமிழ் மீது பெரிய பற்றோ புலமையோ இல்லை
    அவர்களுக்கு வேண்டியது பதவி,பணம்
    மேலும் அவர்களுக்கு நாட்டை முன்னேற்ற வேண்டும், மக்களின் வாழ்க்கைத் தரம் உயர வேண்டும்,என்றெல்லாம் உயர்ந்த நோக்கம் கிடையாது
    உயர்ந்த இலட்சியங்கள் எதுவும் கிடையாது
    அவர்கள் மிகச் சாதரணமான எண்ணங்கள் கொண்டவர்கள்
    ஐநூறு ரூபாய் பெறுமான டி வீ, அடுப்பு, தேர்தலின் போது ஐநூறு ,ஆயிரம் லஞ்சம் இந்த மாதிரி கீழ்த்தரமான விஷயங்களைத் தாண்டி அவர்களால் சிந்திக்க முடியாது.
    என் பெருவாரியான மக்கள் அரசாங்கம் போடும் பிச்சையைத் தாண்டி வாழ்வில் முன்னேறக் கூடாதா?
    அவர்களுக்கு வாழ்வில் உயர்ந்த லட்சியங்கள் இருக்கக் கூடாதா ?
    ஒரு அரசு அதற்கான உந்து சக்தியாக இருக்க வேண்டாமா?

    இப்படியே காலம் காலத்துக்கும் மக்கள் ரேஷன் கடையில் நின்று புழுத்த அரிசியை வாங்க வேண்டும்; பேருந்துகளில் மக்கள் விலங்குகள் போல் அடைந்து கொண்டு பயணம் செய்யவேண்டும். அரசு அலுவலகங்களில் வெட்கம் கெட்ட தனமாக எதற்கெடுத்தாலும் லஞ்சம் கேட்டால் மக்கள் பயந்து கொண்டே கொடுக்க வேண்டும், ஒரு குற்றம் நடந்தால் கூட காவல் நிலையத்தில் புகார் கொடுக்க முடியாது. அடிப்படை கட்டமைப்பு வசதிகளான சாலை, கழிவு நீர் சாக்கடை முதலியவை பல இடங்களில் இல்லை அல்லது மிக மோசமாக் உள்ளன. விலை வாசி வகை தொகை இல்லாமல் இது வரை காணாத முறையில் உயர்ந்து
    கொண்டே போகிறது. கல்வித் துறையில் பெரும் கொள்ளை நடக்கிறது. முன்பெல்லாம் ஒரு ஐயாயிரம் ரூபாய் மாத சம்பளம் வாங்குபவர் கூட சொந்தமாக வீடு கட்ட முடியும். ஆனால் இன்று மாதம் ஐம்பதாயிரம் வாங்கினாலும் முடியாது. இது அரசியல் வாதிகள் மற்றும் கறுப்புப் பண முதலைகள் நிலத்தில் பெரும் முதலீடு செய்ததால். மருத்துவம், மருந்துகள் சாதாரண மனிதர்களுக்கு எட்டாக் கொம்பாகப்போய் விட்டது.
    அரசியல் கட்சிகள் டி வீ,செய்தித் தாள்கள், திரைப்பட தயாரிப்பு- விநியோகம், கல்வித் துறை இந்த வியாபாரங்களை நேரடியாக செய்கின்றனர்
    மேலும் சாப்ட்வேர்,விமான கம்பெனி போன்ற பெரும் தொழில்களில் முதலீடு, சிங்கபூர் போன்ற நாடுகளில் முதலீடு, பங்கு வர்த்தகத்தில் முதலீடு , சுவிஸ் வங்கியில் பணம் பதுக்கல் இவைகளை மறை முகமாகநடத்துகின்றனர்
    இதையெல்லாம் திசை திருப்ப எதாவது பர பரப்பான உணர்ச்சியைத் தூண்டும் விஷயங்களை அவ்வப்போது மக்களிடையே ஏறிகின்றனர்.

    பாவம் ,அப்பாவி படித்த மக்கள் .அதைப் பற்றி ஓயாமல் பேசுவார்கள்.
    படிக்காத ஏழை மக்கள் செக்கு மாடுகள் போல் உடல் நோக உழைப்பார்கள்
    அதற்குள் அரசியல் வாதிகள் மேலும் பல கோடிகளை ‘கை நூல்’ அடிப்பார்கள்.

    அவர்கள் இந்திய மக்களைப் பற்றி, அதுவும் தமிழர்களைப் பற்றி எவ்வளவு நன்றாகத் தெரிந்து வைத்திருக்கிறார்கள்

    இரா.ஸ்ரீதரன்

  66. திரு பாலாஜி அவர்களே

    ///பெரியசாமி அய்யா, தமிழிலிருந்துதான் சமஸ்க்ருதம் பிறந்தது என்றால், ஏன் திராவிட இயக்கத்தவர்கள் காலம் காலமாக சமஸ்க்ருதத்தை வெறுக்கிறார்கள் என்று கொஞ்சம் சொல்லுங்களேன்! ///

    சாதியம். உயர் சாதி, மேல் சாதி, கீழ் சாதி, தீண்டத் தகாத சாதி என்ற பாகுபாடுகள். இன்னமும் முழுமையாக ஒழியவில்லை.

  67. திரு பாலாஜி அவர்களே

    தமிழும் சமஸ்கிருதமும் வெவ்வேறு மொழிக்குடும்பத்தைச் சேர்ந்தவை என்று முன்னரே சொன்னேன். இரண்டுக்கும் தாய் மகள் உறவில்லை. என்பதே எனது கருத்து. மொழி ஆராய்ச்சியாளர்கள் கருத்தும் கூட.

  68. திராவிடச்சான்றோர் பேரவை சமீபத்தில் செம்மொழி தமிழ்ச்சமய கருத்தரங்கு ஒன்றை நடத்தியது. கட்டுரைகள் புத்தகமாக வெளியிட்டுள்ளார்கள். அதில் மொழிகளின் பிறப்பை பற்றி ” நான் மறை நாவன் நற்றமிழ்” என்ற தலைப்பில் டாக்டர் (V.K.S) சிவசக்தி பாலன் எழுதியுள்ள மிக அருமையான கட்டுரையிலிருந்து சில செய்திகள்.
    ”எழுத்தறிவித்தவன் இறைவன்” என்று இந்து வேதங்கள் மட்டுமே முழங்குகின்றது. சிவன் தஷ்சிணாமூர்த்தியாய் கயிலால மலையில் எழுந்தருளி கல்லால மரத்தின் அடியில் பாரதத்தை பார்த்தபடி தெற்க்கு நோக்கி பதிநான்கு விஷயங்களை சனகாதி முனிவர்களுக்கு எடுத்துரைத்தார்
    ரிக், யஜூர், சாம, அதர்வண – வேதங்கள் நான்கு
    அறம், பொருள், இன்பம், வீடு – வாழ்வியல் தத்துவங்கள் நான்கு
    சிட்சை, வியாக்கரணம், சந்தஸ், நிருக்தம், ஜோதிடம், கல்ப்பம் – 6 வேத அங்கங்கள்
    சிட்சை என்பது – மொழியின் எழுத்துக்கள் உருவானவிதம் உச்சரிப்பு
    வியாக்கரணம் – மொழியின் இலக்கணம்
    சந்தஸ் – செய்யுள் இயற்றி அதை இசை வடிவில் அளிப்பது
    நிருத்தகம் – வேர் சொல், பெயர் சொல், வினை சொல் பற்றியது

    இதைப்பற்றி தெள்ள தெளிவாய் தேவாரத்திலிருந்தும் திருவாசகத்திலிருந்தும் திருமந்திரத்திலும் திருக்குறளிலும் பாரதியார் பாடலிலும் நிறைய பாடல்களை ஆசிரியர் மேற்கோள்காட்டியுள்ளார்

    பாரதத்தி்ன் 18 மொழிகள் ஆதி சிவன் அருளியதே. இம்மொழி அனைத்திலும் புலமைபெற்றவர்களே பண்டிதர்கள்.

    ”செப்பு மொழி பதினெட்டுடையாள் – எனிற்
    சிந்தனை யொன்றுடையாள் (பாரதி)

    சிவபெருமான் ஆக்ஞை படி நக்கீரன், கபிலன், பரணன் முதலான 48 கடைச்சங்க புலவர்கள் நான்கு வர்ணத்தலும் தோன்றி பாரத தேசமெங்கும் சுற்றி 18 மொழி புலவர்களையும் தம் புலமையால் வென்றனர். அதன்பின் மதுரையில் சிவபெருமான் தானே ஒர் புலவனாய் தோன்றி அவர்களை கடைச்சங்க புலவர்களாய் சேகர பாண்டியன் அவையில் அறிமுகப்படுத்தினார் என்று திருவிளையாடல் புராணம் கூறுகிறது.

    ஆதியில் இறைவனிடமிருந்து ”ஓம்” என்னும் நாத பிரம்மமே முதலில் வெளிப்பட்டது. அந்த ஓம் என்ற சொல்லின் அதிர்வு அலைகளே ஆகாயத்தை விரிவு செய்து 1008 அண்டங்களை உருவாக்கியது. அதிலிருந்துதான் பாரத மொழிகள் தோன்றின. ஓங்கார மந்திரத்தின் அ-உ-ம் என்ற ழூன்றும்தான் உலகில் உள்ள அத்தனை படைப்புக்களுக்கும் ஆதார சக்தியாகும்

    (அ – சிவம் ) ( உ – சக்தி ) ( ம் – மாயை )

    தனிமையில் நிசப்தமான சூழலில் கண்ணைமூடி உதடு அசையாமல் ”ஓம்” என்று ஓதிப்பாருங்கள். அந்தஒலி நம்நெஞ்சின் ஆழத்திற்கு அப்பாலும் ஒலிப்பதை உணரமுடியும். இந்த சக்தி உலகின் வேறு எந்த மொழி சொல்லுக்கும் கிடையாது. இப்படியாக ஒர் எழுத்தை உச்சரிக்கும்பொழுது அதனால் ஏற்படும் அதிர்வுகளின் விளைவுகளை நமது வேதங்கள் துல்லியமாக எடுத்துரைக்கின்றன.

    சரஸ்வதியின் வடிவமான 51 எழுத்துக்கள் ஆதியாய் எண்ணி வழிபடும் மரமபு நம் பாரதத்தில் வெகுகாலமாய் உள்ளது.

    வானில் எழுந்த 51 எழுத்துக்களில் மானிடர்களின் நாவண்மைக்கேற்ப பாமரமக்களாலும் எளிதில் உச்சரிக்க தகுந்த நாவிலிருந்து எழும் உச்சரிப்புக்களை உடைய எழுத்துக்களை மட்டும் தேர்ந்தெடுத்து இறைவன் உருவாக்கி தந்த மொழியே தமிழ் மொழியாகும். அது 12 உயிர் எழுத்தும் 18 மெய் எழுத்தும் ஆகும். எனவேதான் ராமாயணம் எழுதிய வால்மீகி தமிழை மானிட பாஷைஎன்கிறார்.

    வானில் தோன்றிய 51 எழுத்துக்களின் அனைத்து ஒலிகளையும் சமமானதாக ஏற்று அருளிச்செய்ததே சமிஸ்கிருதம் என்னும் வேத மந்திரங்கள் ஆகும்

    திரு மூலரின் திருமந்திரம் சமிஸ்கிருத வேதஒலிக்கு இணையான தமிழ் வேத மந்திரமாகும்.

    ஆனால் இன்று போலி தமிழ் சிந்தனையாளர்கள் தமிழ் சமிஸ்கிருதம் முதலான ஏனைய பழம்பெரும் 18 மொழிகளையும் வேறுபடுத்தி காழ்புணர்ச்சியை புகுத்தி மக்கள் மனதில் நஞ்சை வார்த்து பாரத ஒருமைபாட்டிற்க்கு ஊறு செய்து கொண்டிருக்கிறார்கள்

    வேண்டுகோள் – இந்த கட்டுரையை அனுமதி பெற்று தமிழ் இந்து முழுமையாக வெளியிடவேண்டும் என்று தாழ்மையுடன் வேண்டிக்கொள்கிறேன். இந்த புத்தகத்தின் நகல் கிடைக்கும் இடம் ”திராவிடச் சான்றோர் பேரவை ” 103/68 கல்லூரி சாலை நங்கநல்லூர் – சென்னை – 600 114

  69. சமஸ்கிரதத்தில் water என்பதைக் குறிக்க ஜலம் என்கிற வார்த்தையே உபயோகப் படுத்தப் படுகிறது. நீர் என்கிற வார்த்தையை சமஸ்கிரதத்தில் water என்பதைக் குறிக்க உபயோகப் படுத்தவில்லை. தமிழிலும் இதர தமிழ் அடிப்படையிலான மொழிகளிலும் நீர் என்பது பெருமளவில் உபயோகப் படுத்தப் பட்டு உள்ளது.

    ” நீரின்றி அமையாது உலகு. வானின்றி அமையாது ஒழுக்கு”.

    எனவே நீர் என்பது தமிழில் இருந்தே சமஸ்கிரதத்துக்கு சென்று இருக்கிறது. கட்டு மரம் என்பதை ஆங்கிலேயர் katamaraan என்று எடுத்துக் கொண்டது போலவே, நீர் என்பதும் தெற்கில் இருந்தே சென்ற சொல்.

    நீரஜ என்ற சொல் தாமரை மலரையே குறிக்கிறது என சொல்வர் . தென்னிந்தியாவில் பிறந்து சமஸ்கிருதத்தில் சிறந்த புலமை பெற்ற பண்டிதர்கள் இந்த சொல்லை உருவாக்கி சமஸ்கிரதத்துக்கு அறிமுகப் படுத்தி இருக்க கூடும்.

    தென்னிந்திய புலவர்கள் தங்கள் பாடலில் இந்த சொல்லை அதிகம் உபயோகப் படுத்துவார்கள்.

    தியாகராசர் கோரின கோர்கே கொனசா ககனே நீரஜா நயன நீ தாரிணி கனி , ரா ரா மா இன்டிதாகா, என்று வா ராமா இல்லத்தினுள் என்று பொருளில் பாடியுள்ளார், சமஸ்கிரதத்தில் கிரஹா என்றால் என்று பொருள். Home என்பதற்கு தமிழிலோ “இல்லம்”, தெலுங்கிலோ “இண்டி”. ஆனால் சமஸ்கிரத்திலோ கிரஹ என்பதாகும். . தமிழில் இருந்து சென்ற சொல்லை வைத்து தீட்டிய மரத்திலேயே குறி பார்க்கிறார்கள்.

    எண்ணிக்கையைக் குறிக்கும் ஒன்று , இரண்டு , மூன்று…. ஒக்க , இரவை … இந்த வார்த்தைகள் சமஸ்கிரதத்தில் இருந்து வந்தனவா? மூலம் காட்ட முடியுமா?

  70. தமிழ் மொழியின் சிறப்பை, தொன்மையை அறியாமல் அதன் மீது காழ்ப்புணர்ச்சி செலுத்துவது தவறு.

    இந்தியாவின் முதல் மொழி தமிழ் மொழியே. இதை நான் சொல்லவில்லை. குஜராத்தில் உள்ள அருங்காட்சியகத்தில் மொழி பகுதியில் கல்வெட்டு சான்று காட்டி தமிழ் இந்தியாவின் முதல் மொழி என்று எழுதி வைத்து உள்ளனர்.

    பேச்சு, எழுத்து இரண்டும் இருந்தால்தான் அது மொழி (Language) ஆகும். வெறும் பேச்சு மட்டுமே இருப்பது dialect என்றே அழைக்கப் படும்.

    மொழி வெறியின் காரணமாக சிலர் தமிழை இழிவு படுத்த நினைக்கின்றனர்.

    தமிழருக்கு மொழி உயிர் போனறது என்று தெரிந்தும், அந்த மொழி செம்மையும் தொன்மையும் , தனித் தன்மையும் வாய்ந்தது, வேறு எந்த மொழி உதவியும் இல்லாமலே தமிழ் மொழி தானே உருவாகி வளர்ந்தது என்பதை பரிதிமால் கலைங்கர் உள்ளிட்ட சான்றோர் நிரூபித்தும், முற்றிலும் வெவ்வேறான சொற்கள் இருப்பது உள்ளாங்கை நெல்லிக் கனி போல விளங்கியும் உள்ளது.

    இந்த நிலையிலும் தமிழ் நாட்டில் இந்து மதத்திற்கு பின்னடைவு உருவாக்கும் வகையில் தமிழுக்கு எதிராக பேசி, தமிழர்களுக்கு கோபத்தை உண்டு பண்ணி , அதனால் இந்து மதமே கெட்டாலும் பரவாயில்லை, நமக்கு மொழி வெறியே முக்கியம் என்று தமிழுக்கு எதிரான மொழிக் காழ்ப்புணர்ச்சியை செலுத்தி மகிழும் சிலர் அப்படி செயல் படுவது,

    “மகன் செத்தாலும் பரவாயில்லை , மருமவ தாலி அறுத்தா சரி” என்று நினைக்கும் சில மாமியார்கள் உண்டு என்று கிராமங்களில் சொல்வது போலவே செயல் படுவதாக அமையக் கூடும்.

  71. Is there any Tamil Literature older than Vedas?If so,please name one. Opinions of so and so do not carry the same weight as hard facts, viz name of such literature.
    Where is the evidence that “Graha”, apparently a Tamil word “!!!! migrated” to Samiskritham? Why not the other way? Dravida region mentioned in Mahabharatha proves that Sanskrit was in wide spread use in Dravida region and the culture was the same as rest of India. Feeding the army of the warring factions by Dravida King proves just that and nothing else. This is not an evidence to show the antiquity of Tamil over Sanskrit.

  72. கிரஹா என்பது தமிழில் இருந்து போனது என்று சொல்லவில்லை. கிரஹா என்கிற வார்த்தைக்கும் இல்லாம் இண்டி போன்ற தமிழ் குடும்ப வார்த்தைகளுக்கும் எந்த தொடர்பும் இல்லை என்பதை சுட்டி காட்டுகிறோம்.

    “நீர்” என்பது தான் தமிழில் இருந்து சென்றது என்று சொல்கிறோம், அதில் இருந்து நீரஜா உருவாக்கி விட்டு அப்படியே திருப்பி சமஸ்கிரததைடம் இருந்து போனது என்று சொல்கின்றனர்.

    வேதங்கள் பழமையானதாக இருக்கட்டுமே. தமிழிலே பல நூல்கள் கிடைக்காமலே போய் விட்டன. இங்கே தமிழ் மொழி ஆர்வலர் யாரும் சமஸ்கிரத்துக்கும் தமிழுக்கும் போட்டி உண்டாக்கவில்லை.

    தமிழ் மொழி சமஸ்கிரதமொழி ஆகிய இரண்டும் இந்திய நாட்டின் இரண்டு தனித் தன்மையான மொழிகள் என்கிற உண்மையை என்றே சொல்லுகிறோம்.

    தமிழ் , சமஸ்கிரதம் இரண்டும் வெவ்வேறு மொழிக் குடும்பங்கள்.

    சமஸ்கிரதத்தை தூக்கி தமிழின் தலையில் வைக்க வேண்டியதில்லை.

    நாங்கள் சமஸ்கிரத மொழியையோ, ஹிந்தி மொழியையோ வெறுக்கவோ, சிறுமைப் படுத்தவோ விரும்பவில்லை. ஆனால் அவற்றைக் கட்டாயப் படுத்தி பேசு என்றால், எப்படி பேச முடியும். இல்லாததைக் கொண்டா, கல்லாத்தைப் பாடு என்றால் எப்படி பாட முடியும்?

  73. மகா பாரதத்தில் தமிழ் நாட்டைப் பற்றிய குறிப்பு எதுவுமே இல்லை என்றால் கூட அதனால் தமிழ் சமுதாயம் தொன்மை இல்லை என ஆகி விடாது. மஹா பாரதம் முழுக்க முழுக்க வட இந்தியப் பகுதில் நடை பெற்ற நிகழ்வு.

    இராமர் தென்னிந்தியா வந்து இருக்கிறார். ஆனால் அவர் வனவாசம் மேற்கொண்டதால் மக்கள் குடி இருக்கும் பகுதி எதற்கும் போகாமல், சமூகமாக நாட்டில் வசிக்கும் எந்த ஒரு மனிதரின் உதவியையும் பெறாமல் இருக்க வேண்டும் என்ற விதிப் படி இருந்ததால் அவர் தமிழக மன்னர்களை அணுகவில்லை.

    காட்டிலே துறவியாக இருந்த சபரி என்னும் சேர நாட்டு தமிழ் பக்தை அன்போடு குடுத்த கனிகளை ஏற்றுக் கொண்டவர். அந்த பகுதியே இப்போது சபரி மலை என வழங்கப் படுகிறதோ என்றும் சிலர் கருத்து தெரிவித்து உள்ளனர்.

    பரிணாம வளர்ச்சியில் குரங்கில் இருந்து மனித நிலைக்கு மாறும் கால கட்டத்தில் காட்டில் இருந்த வானரங்கள், இராமரின் சிறப்பை உணர்ந்து அவருடைய பணியில் தங்களை ஈடு படுத்திக் கொண்டன.

    வட இந்தியர்கள் இராமரை காட்டுக்கு அனுப்பிய போது வெறுமனே அழுது விட்டு ஓய்ந்தனர்.

    தென்ன்னிந்தியயாவிலோ, – மக்கள் கூட வேண்டாம், நாங்களே போதும் என வானரங்கள் சிறப்பாக செயல்பட்டு இராவணனின் இடுப்பை ஒடித்தன. தென் இந்திய வானரங்களின் பண்பாடும், சுயநலம் அற்ற செயல் பாடுமே, வானரங்கள்ளே இந்த அளவுக்கு என்றால் தமிழ்
    மக்கள் சமுதாயத்தின் சிறப்பை சொல்லவும் வேண்டுமோ ?

  74. திரு ராமா அவர்களே

    ஒரு மொழியின் தொன்மையை வெறும் இலக்கியங்களால் மட்டுமே நிர்ணயிக்க முடியாது. இலக்கியமும் இலக்கணமும் பிறப்பதற்கு முன்னரே மொழி பிறந்துவிடுகிறது. தமிழின், சமஸ்கிருதத்தின் தொன்மை இன்னமும் சரியான முறையில் நிர்ணயம் ஆகவில்லை என்பதே உண்மை.

    இது போக நான் முன்னரே சொல்லியிருக்கிறேன். அதையே மீண்டும் சொல்கிறேன்.

    ///நான் முன்னரே கூறியபடி பல முக்கியத் தகுதிகளை கவனத்தில் கொள்ளாது ஹிந்துமதம் சார்ந்த வேத இலக்கியங்களையே மட்டும் கவனத்தில் கொண்டு தமிழின் தொன்மையையும், மொழி முதலையும் அனுமானித்தல் மொழி ரீதியாகவும் மத ரீதியாகவும் விபரீதத்தில்தான் கொண்டு விடும். இன்னும்சொல்லப் போனால் இத்தகைய அணுகுமுறைதான் கால்டுவேல்லுக்கும் ஜி.யு.போப்புக்கும் தேவசகாயத்துக்கும் வீரபாண்டியனுக்கும் வீரமணிக்கும் கருணாநிதிக்கும் ஊட்டச்சத்து. அதை கவனமாகத் தவிர்க்க வேண்டும். //

    சாதியம் இன்னமும முழுமையாக ஒழியாத சூழலில் இந்த முயற்சி ஏற்படுத்திய விபரீதமே இன்றைய திராவிட கழகமும் திராவிடக் கட்சிகளும். இவற்றுக்கான வித்து சாதியம், இறைக்கப்பட்ட நீர், தமிழை பின்னிலை செய்து சமஸ்கிருதத்தை முன்னிலை செய்ய எடுக்கப்படும் முயற்சிகள். ‘சமஸ்கிருதத்தில் இருக்கும் சொல்லுக்குச் சமமான சொல் தமிழில் இல்லை’ என்பதை நிரூபிப்பதைவிட முக்கியமானது “ஹிந்து மதத்தில் உள்ள அனைவரையும் அரவணைத்துச் செல்லுதலே” என்பதை நாம் எல்லாரும் உணரவேண்டும். அதைவிடுத்து ‘சமஸ்கிருதம்தான் தொன்மையானது,’ ‘சமஸ்கிருதத்திலிருந்துதான் தமிழ் பிறந்தது,’ ‘சமஸ்கிருதம் தேவ பாஷை தமிழ் மனித பாஷை’ என்றெல்லாம் சொல்லிகொண்டிருந்தால், சாதீயத்தால் ஏற்கனவே புண்பட்டிருக்கும் தாழ்த்தப்பட்ட, பிற்படுத்தப்பட்ட சமுதாயத்தைச் சார்ந்தவர்கள் தாங்கள் தனிமைப் படுத்தபபடுவதாகவும், ‘மேலும் தங்களை ஒடுக்குவதற்கான முயற்சி இது’ என்றும் நினைக்கிறார்கள் என்பதே உண்மை. இதைப் புரிந்து கொள்ளுதல் அவசியம். ஹிந்து மதம் சார்ந்த எந்த ஒரு விவாதத்திலும் தாழ்த்தப்பட்ட இன்னும் சொல்லப்போனால் அடிமைப்படுத்தப்பட்ட (ஆப்பிரிக்க நீக்ரோ அளவுக்கு இல்லாவிட்டாலும்) நமது ஹிந்து சகோதரர்களின் பார்வையில் அவற்றை நோக்காவிட்டால் அவர்களை நம்முடன் ஹிந்துக்களாக நிறுத்திக்கொள்வது இயலாதது ஆகிவிடும் என்பதை உணரவேண்டும். வெறுமனே சமஸ்கிருதத்தின் மீதும் வேதங்களின் மீதும் இருக்கும் உணர்வு பூர்வமான ஆர்வம் மாத்திரம் மனதில் இருந்தால் போதாது. தாழ்த்தப்பட்ட மக்களின் உணர்வுகள் முன்னேறிய மக்களின் உணர்வுகளை விடவும் முக்கியமாக இருக்கும் கால கட்டம் இது. இதை கவனத்தில் கொள்ளாமல் லத்தீனம், ஹீப்ரு, ஆங்கிலம் இவற்றை எல்லாம் விட்டுவிட்டு ஒவ்வொரு வட்டார மொழியிலும் ஆலயவழிபாடு செய்யும் கிரித்துவத்துக்குப் போகிறார்களே என்று அழுவதிலோ, ஆவேசப்படுவதிலோ பயனில்லை.

    நமது தாழ்த்தப்பட்ட ஹிந்து சகோதரர்களின் பார்வையில் பிரச்சினைகளை அணுகுதல் என்பது நமக்கு இருக்கும் கடமை என்பதை நாம் புரிந்து கொள்ளவேண்டும். வெறுமனே நம் பார்வையிலேயே அணுகுவதைத் தவிர்க்கவேண்டும்.

  75. Mr Tirichikaran’s comments are divisive. Why get paranoid about Tamil?The fact of the matter is Tamil is a great language and no one is denying of that fact. But, why, oh why, diminish the people of Ayodhya? Lord Rama left his people in the forest in the early hours of the morning to avoid them following Him. Also, this theory monkey evolving to man is not absolute,final one. There is this talk about missing link and all that.
    Sorry about this cut/paste business, but it makes it easy for readers to read/acknowldge the greatness of Sanskrit

    Alain Danielou (1907-1994) son of French aristocracy, author of numerous books on philosophy, religion, history and arts of India and perhaps the first European to boldly proclaim his Hinduness. He settled in India for fifteen years in the study of Sanskrit. He had a wide effect upon Europe’s understanding of Hinduism.

    He has observed:

    “The creation of Sanskrit, the “refined” language, was a prodigious work on a grand scale. Grammarians and semanticists of genius undertook to create a perfect language, artificial and permanent, belonging to no one, that was to become the language of the entire culture. Sanskrit is built on a basis of Vedic and the Prakrits, but has a much more complex grammar, established according to a rigorous logic. It has an immense vocabulary and a very adaptable grammar, so that words can be grouped together to express any nuance of an idea, and verb forms can be found to cover any possibility of tense, such as future intentional in the past, present continuing into the future, and so on. Furthermore, Sanskrit possesses a wealth of abstract nouns, technical and philosophical terms unknown in any other language. Modern Indian scholars of Sanskrit culture have often remarked that many of the new concepts of nuclear physics or modern psychology are easy for them to grasp, since they correspond exactly to familiar notions of Sanskrit terminology.”

    (source: A Brief History of India – By Alain Danielou p. 57-58). Refer to French version of this chapter – Le Sanscrit – By Dharma Today.

  76. Ok, let me ask this. Is there any literature or book elder to Tholkaappiyam available in written format? Tholkaappiyam is the eldest written document available in Indian languages.

    Sanskrit , though very rich in heritage, rich in literature, palyed a vital role shaping indian culture… did not have a script. Now they use Devanakari script for both Hindhi and sanskrit.

    Hence if any one want to compare sanskrit, well they can caomapre it with “|THULU” language, which is also a dialect, definitely sanaskrit is elder to thulu.

    But you can not compare Sanskrit with tamil, because sanskrit lacks script.

    Probabaly thats the reason, the sanskrit almost not used by anyone now.

    Nobody speaks sanaskrit in day today life today!

    So if any one wants to improve sanskrit, they have to ask the North indians to speak Sanskrit, they wont listen, they shall speak in Hindhi only.

    Thats why they are coming and teasing us.

  77. உமாசங்கர் அய்யா,

    //சாதியம். உயர் சாதி, மேல் சாதி, கீழ் சாதி, தீண்டத் தகாத சாதி என்ற பாகுபாடுகள். இன்னமும் முழுமையாக ஒழியவில்லை.//

    இதற்கும் சமஸ்க்ருதத்தின் மேலுள்ள வெறுப்பிற்கும் என்ன தொடர்பு? சமஸ்க்ருத இல்லக்கியங்களில் சாதி பாகுபாடுகளில்லை என்றாலும் இவர்கள் சமஸ்க்ருதத்தை வெறுக்கத் தான் செய்வார்கள். ஏனென்றால், சமஸ்க்ருதம் ‘படையெடுத்து வந்து தங்கள் தமிழை அழித்த ஆரியர்கள்’ மொழி என்று இவர்கள் நம்புகிறார்கள். ஏன் தமிழ் இலக்கியங்களில் சாதிகள் பற்றி குரிப்புகளில்லையா? சங்க இலக்கியங்களில் நான்கு வர்ணங்கள் குரிப்பிடப்பட்டுள்ளனவே. திருக்குறளில் அந்தணர்கள் பற்றி குறிப்புகள் உள்ளனவே (இதனால்தான் ஈ.வே.ரா. தொல்காப்பியம், திருவள்ளுவர் மற்றும் கம்பனை துரோகிகள் என்று சொன்னாரோ என்னவோ?). “மனுஸ்மிருதி, மனுஸ்மிருதி” என்று கிழி கிழியென்று கிழிக்கும் வீரமணி, தன் மகனே தவறு செய்திருந்தாலும் தண்டனை வழங்கிய உத்தமபுருஷர் மனுநீதிச் சோழனுக்கு எதனால் அப்பெயர் வந்தது என்று சொல்லமுடியுமா? வேதங்களில் இருந்து தமிழ் வார்த்தைகள் இருக்கின்றன, எனவே தமிழ் சமஸ்க்ருதத்தைவிட தொன்மையானது என்று ஆதாரமற்று பிதற்றும் கருணாநிதியை ‘மனிதன்’ என்ற வார்த்தை எப்படி தோன்றிற்று என்று விளக்கச் சொல்லுங்களேன்! பிரம்மாவால் படைக்கப்பட்ட மனுவிலிருந்து ஒட்டுமொத்த மனித இனம் தோன்றியதால் மனுஷன் என்ற பெயர் ஏற்பட்டு, அதுவே மருவி மனிதன் என்றாயிருக்கலாம். (மன்னிக்கவும், தமிழ் வார்த்தைகள் சமஸ்க்ருதத்தில்லுள்ளது என்று கூறும்பொழுது, அதன் vice versa வையும் கூறவேண்டியுள்ளது). ஆதாரமில்லாமல், தமிழ், பிராகிருதம் போன்ற மொழிக்கூருகளைக் கொண்டு சமஸ்க்ருதம் படைக்கப் பட்டது என்று சொல்லும்பொழுது, என் எண்ணங்களையும் நான் ஆதாரமில்லாமலே தருவது எந்த விதத்திலும் தவறில்லை என்றெண்ணுகிறேன்.

    தமிழ் சமஸ்க்ருதத்திலிருந்து பிறந்ததல்ல என்பதையும், சமஸ்க்ருதம் தமிழ் இரு மொழிகளும் வெவ்வேறு மொழிக் குடும்பங்களைச் சேர்ந்தவை என்பதை நான் அறிவேன். ஆனால் அதேபோன்று சமஸ்க்ருதம் தமிழிலிருந்து தோன்றியது என்று சொன்னவர்களை நீங்கள் ஏன் கண்டிக்கவில்லை? தமிழ் தொன்மையானதா, அல்லது சமஸ்க்ருதம் தொன்மையானதா என்பதை நான் எப்பொழுதுமே எண்ணியதில்லை. இரு மொழிகளையும் (ஏன் எல்லா மொழிகளையும்) நான் மதிக்கிறேன். எனக்கு சமஸ்க்ருதம் தெரியாது, தமிழ் எனது தாய்மொழியுமல்ல. ஆனால், சமஸ்க்ருதம், தமிழ் இவற்றிற்குப் பின்னரே எனது தாய்மொழியை விரும்புகிறேன். ஒரு வார்த்தை சமஸ்க்ருதம், தமிழ் இரு மொழிகளிலும் பொதுவாகக் காணப்பட்டால், அது முதலில் சமஸ்க்ருதத்தில் வந்தது, பின்னர் தமிழர்கள் காபி அடித்துவிட்டார்கள்; இல்லை முதலில் தமிழில் தான் வந்தது, வடவர்கள் காபி அடித்துவிட்டார்கள் என்று சொல்வதைவிட மதியீனம் வேறெதுவுமில்லை. நான் சொன்ன ‘மனிதன்’ உதாரணத்தையும் இந்த அடிப்படயிலயே வைக்கிறேன். மனு என்ற வார்த்தையிலிருந்து மனுஷன் வந்தது, அதிலிருந்து மனிதன் என்றானது; இல்லையேல் மேற்படி திரு.சோமசுந்தரம் அவர்கள் கூறியதுபோல தமிழ் வேதம் என்று ஒன்று இருந்திருக்கவேண்டும், என்பது போல தமிழில் ஒரு மனு இருந்திருக்கவேண்டும். அந்த பெயரிலிருந்து மனிதன் எனும் வார்த்தை தோன்றியிருக்கவேண்டும். ‘மனுநீதி’ என்று ஒரு நூல் தமிழில் இருந்திருக்கவேண்டும், அதனாலே மனுநீதிச் சோழன் என்று அம்மனனுக்குப் பெயர் வந்திருக்கவேண்டும் என்று கூறினால் வீரமணி மற்றும் கருணாநிதிக்கு மனுநீதியின் மேலும், சாதியத்தின் மேலிருக்கும் வெறுப்பும் போய்விடும். ஈ.வே.ரா மீண்டும் மண்ணில் தோன்றினால் எவ்வளவு மகிழ்ச்சி அடைவார்களோ, அவ்வளவு மகிழ்ச்சி அடைவார்கள்!

    அடுத்தது வர்ணாஸ்ரமம் சமஸ்க்ருத இலக்கியங்களில் மட்டுமே இருப்பதுபோல எழுதியிருந்தீர்கள். சங்க நூல்களிலேயே வர்ணங்கள் பற்றி குரிப்பிருப்பதாக இந்த தளத்திலேயே நான் படித்திருக்கிறேன். ஆழ்வார்கள், நாயன்மார்கள் எல்லோரிலும் நான்கு வர்ணத்தவர்களும் இருந்தனர். அதேபோல சமஸ்க்ருத இலக்கியங்களிலும் மூன்றாம், நான்காம் வர்ணத்தவர்கள் முதல் வர்ணத்தவராக ஆனா குறிப்புகளும் உண்டு. இன்னும் சொல்லப்போனால் மதங்க முனி என்பவர் அவர்னராக (ஹரிஜன்) பிறந்து தவத்தின் மேன்மையாக அந்தணரானார் என்று இராமாயணம் கூறுகிறது. இவரது சீடரே சபரி மாதா. இராமாயணத்தை இயற்றிய வால்மீகி முனிவர் முன்னாளில் ரத்னாகர் என்ற பெயருடைய திருடர் என்பதும் பில் ஆதிவாசி என்பதும் தெரியவருகிறது.

    திருக்குறள் 25 நீத்தார் பெருமையில் “ஐம்புலன்களை அடக்கியவன் vaanavar thalaivan இந்திரனுக்கு ஒப்பானவன்” என்று கூறப்பட்டுள்ளது. வேதங்களில் இந்திரன் வெகுவாக போற்றப்பட்டிருந்தாலும் இதிகாசங்களிலும் புராணங்களிலும் இந்திரனின் செல்வாக்கு பல மடங்கு குறைந்துவிட்டது. இதற்க்கு காரணம் இந்திரணன் செய்த தவருகளான கவுதமர் மனைவி அகலிகையை ஏமாற்றியது, தர்மநெறிப்படி ஆண்டுவந்த பிரகலாதன் பிள்ளை விரோச்சணனை கொன்றது போன்ற காரங்கள் சொல்லப்பட்டுள்ளன. இன்று எவரும் இந்திரனை வணங்குவதில்லை, தான் செய்த பாவங்களுக்கு மன்னித்தருளுமாறு காலையில் சூரியதேவனையும், மாலையில் நீர்தெய்வமான வருணனையும் வேண்டுகிறார்கள் அந்தணர்கள். அதேபோல சங்க இலக்கியங்களில் வேந்தன் என்று போற்றப்படும் இந்திரன் பின்னாளில் என்ன ஆனான் என்றே தெரியவில்லை.

    இதிலிருந்தே வடவர்களும், தமிழர்களும் ஒரே கலாசாரத்தை பின்பற்றினார்கள் என்பதை நாம் உணரவேண்டும். இதிலிருந்து அதுவந்ததா இல்லை அதிலிருந்து இது வந்ததா எனும் கேள்வி “கோழியிலிருந்து முட்டை வந்ததா, முட்டையிலிருந்து கோழி வந்ததா” எனும் கேள்விக்கு ஒப்பாகும்.

    இதற்குமேல் இந்த விவாதத்தில் கலந்துக்கொள்ள நான் விரும்பவில்லை. புறமுதுகுகாட்டி ஓடும் கோழை என்று சொன்னாலும் எனக்குக் கவலையில்லை.

    நன்றி,
    பாலாஜி.

  78. //Is there any Tamil Literature older than Vedas?//
    வேதங்கள் எழுதப்படவில்லை, அவைகள் பேச்சு வழக்கிலே இருந்தன. அது மகரிஷி வியாசரால் தொகுக்கப்பட்டது. மகரிஷி வியாசரின் காலத்தை ஒரளவுக்கு கணித்து உள்ளனர். கி.மு.3500-300 , இதுவும் முறைப்படி நிரூபிக்கப்படவில்லை!. ஆனால் அவருடைய காலத்தில் வாழ்த்த முனிவர் ‘திருமூலர்’. மகரிஷி வியாசரும், திருமூலரும் சம காலத்தவர்கள் என்பது திருமந்திர பாடல்களில் இருந்து அறியலாம்.

  79. இங்கு வாதம் செய்யும் முறையைப் பார்த்தல் ஹிந்து விரோதிகள் மகிழ்ச்சிக் கடலில் மூழ்குவார்கள்.
    இத் தளத்தின் பெயர் தமிழ் ஹிந்து என்பதால் தமிழும் முக்கியம், ஹிந்து சமயமும் முக்கியம்.
    அதே நேரத்தில் ஹிந்து சமயம் சார்ந்த சம்ஸ்க்ருதமும் மற்ற எல்லா பாரத மொழிகளும் முக்கியம்
    ஹிந்து சமயம் தாய் என்றால் மொழிகள் குழந்தைகள் என்று வைத்துக் கொள்ளலாம்
    அகவே எல்லா மொழிகளிலும் உள்ள நமது கலாச்சாரம்,சமயம் சார்ந்த விஷயங்களை தெரிந்து கொள்வோமே.
    மூத்த குழந்தையாக இருந்தால் என்ன ,இளைய குழந்தையாக இருந்தால் என்ன , தாய்க்கு எல்லோரும் ஒன்றுதானே.
    ‘செப்பு மொழி பதினெட்டுடையாள் ,எனிற் சிந்தனை மொய்ம்புற ஒன்றுடையாள்’
    என்று மகாகவி நம் பாரதத் தாயைப் போற்றியதை நினைவு கூர்வோம்.

    இரா.ஸ்ரீதரன்

  80. தமிழுக்கு உருப்படியாக பல நல்ல விஷயங்களை பாஜக அரசு -குறிப்பாக முரளி மனோகர் ஜோஷி-செய்திருக்கிறார். அதனை தனிக்கட்டுரையாகவே பார்க்கலாம். ஆனால் ஜோஷி கருணாநிதியை விட புத்திசாலியா என்றால் நிச்சயமாக கிடையாது. கருணாநிதி போல இனவெறியையும் மொழி வெறியையும் தூண்டிவிட்டு தானும் தன் குடும்பமும் வாழ செம்மொழி என்கிற பெயரில் குத்தாட்டமும் கூத்தாட்டமும் தற்புகழ்ச்சியையும் போட்டு கட்சிக்கு நிதி வளர்ப்பதையும் குடும்ப அரசியல் செய்வதையும் ஒரு அறிவியலாகவே செய்கிற திறமை முரளி மனோகர் ஜோஷி என்கிற மனிதருக்கு சுட்டுப் போட்டாலும் வராது, அந்த விஷயத்தில் ஜோஷிக்கு புத்தி இல்லை. கருணாநிதி மகா மேதை. ஆனால் தமிழை இதைவிட ஈனத்தனமாக எவரும் பயன்படுத்த முடியாது.

  81. திரு பாலாஜி அவர்களே

    இங்கு நடப்பது கருத்துப் பரிமாற்றம் மட்டுமே. யாரும் வெல்வதும் இல்லை. யாரும் தோற்பதும் இல்லை. வெல்வதும் வாழ்வதும் ஹிந்து மதமாக இருக்கட்டும் என்ற நோக்கில்தான் நானும் நீங்களும் இன்னபிறரும் மறுமொழி செய்கிறோம். இதையும் இயக்குபவன் என்னிலும் உங்களிலும் இன்ன பிறரிலும் உள்ள பரமன்தான் என்பதில் நாம் அனைவரும் ஒன்றாகத்தான் இருக்கிறோம். எனவே புறமுதுகும் இங்கே இல்லை, வெற்றிக் களிப்பும் இங்கே இல்லை.

    ஈ.வே.ராவோ, வீரமணியோ, கருணாநிதியோ, இன்னபிறரோ பொருட்டல்ல. நமது தாழ்த்தப்பட்ட ஹிந்து சகோதரர்களே கவனத்தில் கொள்ளப்பட வேண்டியவர்கள். அவர்களது உணர்வுகளே நெஞ்சில் இருத்தப்பட வேண்டியது. இதை மட்டுமே நான் சொல்கிறேன். நமது மக்கட்தொகையில் 30 சதவிகிதம் இருக்கும் இவர்களை மனதில் கொள்ளவேண்டியது நமது கடமை. சமஸ்கிருதத்தை முன்னிறுத்த வேண்டும் என்ற வேகம் இருப்பவர்கள் வெறும் மூன்று சதவிகிதமே என்பதையும் கவனத்தில் கொள்ளவேண்டும். இடையிலே இருக்கும் 67 சதவிகித மக்களில் கூட மிகப்பெரும்பான்மையினர் தத்தம் தாய் மொழியின்பால் தான் பற்றுடன் இருப்பார் என்பது தெள்ளத் தெளிவு. ஆக கிட்டத்தட்ட 90 சதவிகிதத்தினரின் உள்ளக் கிடக்கைக்கு எதிராக என்ன செய்துவிடமுடியும்? இதை நன்கு உணர்ந்ததால்தான் ஈ.வே.ராவும், வீரமணியும், கருணாநிதியும், இன்னபிற அரசியலாரும் இந்தப் பிரச்சினையில் உறுதியாக இருக்க முடிகிறது. ஒரு வகையில் அவர்கள் தங்கள் முன்னால் இருக்கும் பார்வையாளர்கள் (audience) விருப்பபட்டபடி, அவர்களை மகிழ்விக்க இந்த நாடகத்தை நடத்துகிறார்கள் (playing to the gallery). அவ்வளவுதான். இதைப் புரிந்துகொண்டு, நீரோட்டத்தின் அடி வீச்சுக்குத் (under-current) தக்கபடி நடந்துகொண்டு நமது மதத்தைக் காக்கும் காலகட்டம் இது. இந்தச் சூழலில், ‘இது வேதமதம் மட்டுமே’, ‘வேதத்தை மீறி ஹிந்துமதம் இல்லை’ என்றெல்லாம் சொல்வதும் கூட விபரீதத்தில்தான் முடியும்.

    சாதியத்தை ஒழிக்கவேண்டிய கட்டாயத்தில் இருக்கும் கால கட்டத்தில் அதைவிட முக்கியத்துவம் குறைந்த விஷயங்களில் ஒதுங்கி இருப்பதே சிறந்த அறிவுடைமை ஆகும் என்பதுதான் எனது தாழ்மையான கருத்து.

  82. திரு பாலாஜி அவர்களே

    ///ஆனால் அதேபோன்று சமஸ்க்ருதம் தமிழிலிருந்து தோன்றியது என்று சொன்னவர்களை நீங்கள் ஏன் கண்டிக்கவில்லை? ///

    யாரும் யாரையும் கண்டிக்கமுடியாது. எனது மறுமொழிகளில் தங்களைக் கண்டிக்கும் தோரணையாகத் தங்களுக்குத் தோன்றியிருந்தால் வருந்துகிறேன். நான் தெள்ளத்தெளிவாக தமிழும் சமஸ்கிருதமும் எந்த நேரடித் தொடர்பும் அற்றவை என உறுதிபடக் கூறியிருக்கிறேன்.

  83. The six most ancient languages in the world are Sanskrit, Tamil, Hebrew, Arabic, Greek and Latin. All these six are classical languages as well. Of these six classical languages Tamil and Sanskrit are the two classical languages, which flourished in India since very ancient times.

    Sanskrit is the foundation of Hinduism. In fact, it can be said without fear of contradiction that without Sanskrit, there is no Hinduism. The four Vedas and the Upanishads, the Brahma-Sutra written by Veda Vyasa, the two epics Ramayana and Mahabharata and the Bhagavad-Gita which forms part of the Mahabharata are all in Sanskrit. There are numerous devotional works and hymns in Sanskrit
    .
    Sanskrit literature is one of the richest in the world. The number of standard works in Sanskrit is mind-bogging and runs into several hundreds.

    Sanskrit is a veritable storehouse of knowledge and there are standard text-books in it in all faculties or disciplines including science, technology, mathematics, astrology, astronomy, botany, medicine etc. So, it is not as if Sanskrit is literature alone, including devotional literature and nothing else.

    If there is any Indian language which is equal to Sanskrit it is Tamil only and not any other Indian language for that matter. Sanskrit is a match for Tamil. Conversely, Tamil is a match for Sanskrit in grandeur and greatness.

    There is already a verse of yore in Tamil:”Aariyamum Senthamizhum aaraindu idaninidu, seeriyadu enDronDraich chepparidaal, Aariyam Vedam uDaittu, Thamizh Tiruvalluvanaar odu kuraTpaa uDaitthu.”
    = Since it it is difficult to conclude which between Sanskrit and Tamil is better, even after assiduous research, it is better to say that Sanskrit has Vedas (because of which it is great) and Tamil has the ThirukkuraL of TiruvaLLuvar (because of which it is great).

    Saint Tirunaavukkarasar, was not a brahmin but has penned the subtleties of Vedic texts in simple Tamil. So did Tirumangai and Tirumazhisai Alwars. The devotional works of these are recited with utmost reverence in all temples, whose priests are brahmins.
    Vedanta Desikar, wrote that only after studying the ‘pasuram’s of Azhvar poets, he could discern the inner meanings of several vedic mantras. Appar Swamigal has candidly ruled for ever the nature of Shiva as “Aariyan kaNDaai, Thamizhan kanDaai, vaDamozhiyum thenmozhiyum aanaan kaNDaai”, = Thou art the Aryan, the Tamilian, the embodiment of both Sanskrit and Tamil.

    RGK

  84. தமிழும் சம்ஸ்க்ருதமும் , சிவபெருமானால் முறையே அகத்தியருக்கும், பாணினிக்கும் வழங்கப்பட்டன என்று சொல்லப்படுகிறது -அவை சில ஒற்றும்மைகள் இருந்தும் distinct மொழிகள் தான் -ஆனாலும் சகோதர மொழிகள் -எது, அக்கா , எது தங்கை என்பதும் முக்கியமில்லை.
    சம காலத்தில் வளர்ந்து வந்தவையாக இருக்ககூடும். இரண்டும் நம் முன்னோர்கள் விட்டுச்சென்ற செல்வங்களே.
    ஆரியமும் [ இங்கு இனத்தை குறிப்பதல்ல] செந்தமிழும் நம் இரு கண்களே.
    உயர்வு தாழ்வு, எது தொன்மை உடையது என்றெல்லாம் பார்த்தால் நஷ்டம் நமக்கே.
    இரண்டு மொழிகளும் திண்மை உடைய மொழிகள். காக்கப்பட வேண்டியவை.இவை இன்றி சமயத்தை அடுத்த தலைமுறைக்கு கொண்டு செல்ல இயலாது. சாதா துண்டு [அல்லது சட்டை] போட்ட நமக்கு கிடைத்த கொடை இவை இரண்டும் . இப்போதைக்கு அரசியல் செய்ய சிலருக்கு உதவுகிறது .
    அன்புடன்
    சரவணன்

  85. தமிழ் அனைத்திற்கும் தாய் மொழி என்பதில் தமிழராய் பிறந்தவா் யாதொரு
    ஆட்சேபனையும் கொள்ள இடமில்லை. “அம்மா“ என்ற சொல் கன்று தன் தாயாகிய பசுவை அழைத்த ஒலியிலிருந்து ஆதி தமிழா் கற்றச் சொல் இவை ஒன்றே தமிழ் இயற்கையிலிருந்து தோன்றிய மொழி என்பதற்கு சான்றாய்த் திகழ்கையில் தமிழ் ஆாிய மொழியாகிய சமஸ்கிருதத்திற்கு மூலமொழியாகத் திகழ்ந்தது என்பதை முழுமனதுடன் ஏற்றுக் கொள்ளலாம்
    அன்புடன்
    அ.ஜெயரோஜா

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *