கோவிலைச் சுற்றி வசிப்பவர்கள் வீட்டில் யாருக்கேனும் உடல் நிலை சரியில்லாமல் இருந்தால் கோவில் சார்பில் பூஜாரியும் வேறு சில பக்தர்களும் சேர்ந்து நோய்வாய்ப்பட்டவர் வீட்டுக்குச் சென்று விரைவில் உடல் நலம் பெற பிரார்த்தனை செய்கிறார்கள். கோவிலுக்கு அருகில் மருத்துவமனைகள் இருந்தால் அங்கும் சென்று பிரார்த்தனை செய்கிறார்கள். பக்தர்கள் தமது நேர்ச்சையின் ஓர் அங்கமாக கோவில்களில் சர்க்கரைப் பொங்கல், புளியோதரை, பொங்கல் போன்றவற்றைத் தருவதுபோல் அக்கம் பக்கத்து குழந்தைகளுக்கு அவரவர் வகுப்புக்கான பாட புத்தகங்கள், சிடிக்களை வாங்கித் தரலாம் என்று சுவாமி அம்பேத்கர் சொல்கிறார்… கோவில்கள் என்பவை கலப்புத் திருமணம் செய்துகொள்ள விரும்புபவர்களுக்கு அடைக்கலம் தரும் பாதுகாப்பு மையமாகத் திகழவேண்டும் என்கிறார். இது பெரிய பிரச்னையைக் கிளப்புகிறது. பக்தர்கள் குழுவில் இதனால் பெரும் விரிசல் விழுகிறது… நாத்திகர்கள் புதிதாக ஒரு கோரிக்கையை முன்வைக்கிறார்கள். ஏசு கிறிஸ்துவுக்கு சன்னதி கட்டவேண்டியதுதானே என்கிறார்கள். பக்தர்களிடம் அந்த விஷயம் கலந்தாலோசிக்கப்படுகிறது. செய்யலாம்தான். ஆனால், பதிலுக்கு சர்ச்சுகளில் சிவனுக்கும் விஷ்ணுவுக்கும் தனியாக ஒரு சன்னதி கட்ட அவர்கள் முன்வருவார்களா என்று கேட்கிறார்கள்…
View More சுவாமி அம்பேத்கர் [குறுநாவல்] – 4Tag: கலப்பு திருமணம்
ஜாதி அரசியலுக்கு தீர்வு என்ன? – 1
மீண்டும் கிளர்ந்தெழும் ஜாதிக் கலவரங்கள்… தமிழகத்தில் அவ்வப்போது ஜாதிக் கலவரங்கள் நடப்பது வாடிக்கையாகி…
View More ஜாதி அரசியலுக்கு தீர்வு என்ன? – 1