அண்மையில் ஐடி நிறுவனம் ஒன்று, பத்தாம் வகுப்பு, பனிரெண்டாம் வகுப்பு முடித்த மாணவர்களுக்கு புரோகிராமர் வேலை என்று விளம்பரம் செய்திருந்தார்கள். அதில் ஆச்சரியமான உண்மை ஒன்று இருக்கிறது. கணினித் துறையில் புரோகிராமராக நுழைய அந்தக் கல்வியே போதும் என்பதுதான்… தரமற்ற கல்வி ஒரு சுமை. இங்கே கல்வி என்பது பாடப்புத்தகம், அதனைச் சொல்லிக் கொடுக்கும் ஆசிரியர் இரண்டையும் குறிக்கிறது. இந்தக் கல்விமுறை ஒரு மாணவனுக்குச் சிந்திக்கும் திறனையோ, தன்னம்பிக்கையையோ, தேர்வில் வெற்றி பெற வேண்டிய உழைப்பையோ ஊக்கப்படுத்துவதாகவே இல்லை… ஒரு மாணவர் தனக்கு எந்தக் கல்வித் துறையில் ஆர்வம் என்று எண்ணிப் பார்த்து அதற்காகவெல்லாம் உழைப்பது இல்லை. அப்படி ஒரு குறிக்கோளை அவருக்கு யாரும் சொல்லித் தருவதும் இல்லை, ஊக்கப்படுத்துவதும் இல்லை, தானாகக் கண்டடைவதும் இல்லை. எது சுலபம், எதில் ஏமாற்றலாம் என்பதை நோக்கியே மாணவர்களும் இருக்கிறார்கள்…
View More நமது கல்வித் துறையில் பத்து குறைகள்Tag: கல்வி வளர்ச்சி
தமிழகத்தில் மாற்றுக் கல்வி: புத்தக அறிமுகம்
எளிய மக்களுக்கு மட்டுமல்ல மெத்தப் படித்தவர்களுக்கும் கூட இந்த இரண்டு கல்வி முறைகளில் தனியார் கல்வியே உயர்ந்தது என்ற எண்ணம் இருக்கிறது. அதற்கு முக்கிய காரணம், கல்வி என்பது நல்ல வேலையைப் பெற்றுத் தரும் கருவியாக மட்டுமே பார்க்கப்படுகிறது…. இந்தப் புத்தகத்தில் தமிழகத்தின் 9 முன்னணி கல்விச் சிந்தனையாளர்கள் தமது கருத்துகளை, அனுபவங்களைப் பகிர்ந்துகொண்டிருக்கிறார்கள். இவை ‘ஆழம்’ இதழில் தொடர் பேட்டியாக வெளியாகின. தாய் மொழி வழிக் கல்வி, அருகமைப் பள்ளி, மனனத்தை ஒரு துணை வழியாக மட்டுமே பயன்படுத்துதல், தேச – சமூக நலன் சார்ந்த கல்வி, மாணவர்களின் தனித் திறமைகள், விருப்பங்களுக்கு போதிய வாய்ப்பு என கல்வியின் அடிப்படைகளாக சிலவற்றை முன்வைத்திருக்கிறார்கள். ஒட்டு மொத்த சமூகமும் இவர்கள் முன் வைக்கும் சிந்தனைகளுக்கு எதிர் திசையில் ராட்சச வேகத்துடன் நகர்ந்துவருகிறது… எண் சாண் உடம்புக்கு சிரசுதானே பிரதானம். தமிழகக் கல்வி நல்ல நிலையை அடையவேண்டுமென்றால், இந்தச் சொற்பச் சிறுபான்மையினர் தமிழ்க் கல்வியின் சிரசாக வேண்டும்…
View More தமிழகத்தில் மாற்றுக் கல்வி: புத்தக அறிமுகம்விவேகானந்தர்-150வது ஜயந்தி இலவச கல்வித் திட்டம்
கன்யாகுமரி விவேகானந்தா பாலிடெக்னிக் கல்லூரி இதனை அறிவித்துள்ளது. விவரங்கள் கீழே..
View More விவேகானந்தர்-150வது ஜயந்தி இலவச கல்வித் திட்டம்மோடியின் குஜராத் – நூல் மதிப்புரை
இந்தியாவின் 51வது குடியரசு தினத்தன்று ஏற்பட்ட நிலநடுக்கம் குஜராத்தின் கட்ஜ் பகுதியை மையமாகக் கொண்டிருந்தது. தெருக்களில் ஊர்வலமாக தேசபக்திப் பாடல்களைப் பாடிக்கொண்டு தேசியக்கொடி ஏற்றுவதற்காக பள்ளிக்கூடம் சென்று கொண்டிருந்த 250 மாணவர்கள் உட்பட சுமார் 20000 பேர் இந்த நிலநடுக்கத்தால் கொல்லப்பட்டனர். கட்ச் பகுதியிலிருந்து 250 கி.மீ தூரத்தில் உள்ள அகமதபாத்தில் கூட நூற்றுக்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டனர் என்றால் அதன் பாதிப்பை சற்று நினைத்துப் பாருங்கள். ஆனால் குஜராத் அசரவில்லை. பெரும்பாலான கிராமங்கள் இரண்டே ஆண்டுகளில் சீரமைக்கப்பட்டன.
இன்று உலகின் பல பகுதிகளில் பேரிடர் அழிவுகள் ஏற்பட்டால் அவர்கள் மறுசீரமைப்பு பணியை ஆரம்பிப்பதற்கு முன் குஜராத்திற்கு வருகை தருகிறார்கள், கட்ச் பகுதியில் எப்படி மறுசீரமைப்புப் பணிகள் திட்டமிடப்பட்டன, நடைமுறைப்படுத்தப்பட்டன போன்ற விவரங்களை அறிந்து கொள்கிறார்கள். மோடியின் வித்தையை மின்சாரம் , விவசாயம் , குடிநீர் , சுகாதாரம் , உள்கட்டமைப்பு என்று பல்வகையாகத் தொகுத்துக் கொடுத்திருக்கிறார் சரவணன் தங்கதுரை.
View More மோடியின் குஜராத் – நூல் மதிப்புரை