தேசத்தை புரிந்த அமைச்சர்கள் இருந்தாலும் கூட அவர்களும் தேர்ந்தெடுக்கப்படாத இந்த நிழல் அமைச்சரவையான என். ஏ.சி.க்குத்தான் அடிபணியும் நிலை… பொதுமக்களோடு சற்றும் தொடர்பில்லாத, அவர்களது அத்தியாவசியத் தேவைகளை சற்றும் புரிந்து கொள்ளாமல் அவர்களை அவமதித்து வந்த திட்டக் கமிஷன் துணைத் தலைவர் அலுவாலியா…எந்த நிலையிலும், பிரதமர் மன்மோகன்சிங் அதிகாரம் படைத்தவராக ஆகிவிடக் கூடாது என்று காங்கிரஸ் கட்சி பார்த்துக் கொண்டது. எனவே அவரையும் பொதுமக்களோடு தொடர்பற்றவாராகவே இருத்திவந்ததது. காங்கிரஸ் கட்சியின் அனைத்துத் தலைவர்களும் அவர் பலவீனமற்றவாராக இருப்பதையே விரும்பினர்… ” உலகு தழுவிய ஜிகாதிய பயங்கரவாதம் அல்ல, தேசமெங்கும் பரவியுள்ள பெரும்பாண்மை பயங்கரவாதமே இந்தியாவிற்கு ஆபத்து ” என ஜிகாதிகளுக்கு நற்சான்று வழங்கி ஹிந்துமக்களை பயங்கரவாதியாக சித்தரித்த ராகுல்…..
View More காங்கிரஸ் தோல்வி: சொல்லப்படாத நான்கு முக்கிய காரணங்கள்Tag: காங்கிரஸ் அரசு
பெட்ரோல் விலை உயர்வு – 2
இந்தியாவின் மொத்த எரிபொருள் தேவையில் சுமார் 74 விழுக்காடு வெளி நாடுகளில் இருந்து இறக்குமதி செய்யப் படும் அதே வேளை, மீதமுள்ள 26 விழுக்காடு இந்தியாவிலேயே கிடைக்கிறது. இவ்வாறு இந்தியாவில் கிடைக்கும் கச்சா எண்ணையை இந்திய அரசு தோண்டி எடுக்காமல் அதனையும் ரிலையன்ஸ், எஸ்ஸார் போன்ற தனியார் நிறுவனங்களுக்குத் தாரை வார்த்துள்ளது. இவற்றின் நெருக்குதலுக்குப் பணிந்தே, இனிமேல் பெட்ரோல், டீசல் விலையினைத் தனியார் நிறுவனங்களே நிர்ணயித்துக் கொள்ளலாம் என மத்திய அரசு அறிவித்துள்ளது.அன்றாடம் கஷ்டப் பட்டு கூலி வேலை செய்து பிழைக்கும் ஏழை மக்கள் பயன்படுத்தும் அத்தியாவசிய பொருட்களின் விலையை நிர்ணயிக்கும் பெட்ரோல் மற்றும் டீசலுக்கு தாறுமாறான வரிகள் என்பதோடு அதனை இனிமேல் நிர்ணயிப்பது தனியார் நிறுவனங்களின் கைகளில்!..
View More பெட்ரோல் விலை உயர்வு – 2பெட்ரோல் விலை உயர்வு – மத்திய அரசின் அடுத்த தாக்குதல்!
கடந்த இரண்டு ஆண்டுகளில் பதினோரு முறை பெட்ரோல் விலை உயர்ந்து விட்டது. அண்டை நாடுகளை விட ஏறக்குறைய நூறு சதவீதம் பெட்ரோல் விலை இந்தியாவில் தான் அதிகம். “இந்த நாட்டையும், நாட்டு மக்களையும் நாசமாக்காமல் ஓய மாட்டேன்” என சபதம் எடுத்துக் கொண்டு இருக்கும் சோனியா காங்கிரஸின் இன்னுமொரு பரிசு இது. கேளிக்கை, உற்சாக பானம், பெண்கள் என நடத்தப்படும் ஐபிஎல் போன்ற விளையாட்டுப் போட்டிகளுக்கு வருமான வரி விலக்கு அளிப்பதோடு, அரசு செய்யும் அனைத்து ஊதாரித்தனமான செலவுகளுக்கும் நிறுவனங்களுக்கு அளிக்கும் மானியங்களுக்கும் இந்தக் கடுமையான வரிகளையே அரசு சார்ந்திருக்க வேண்டியக் கட்டாயம் ஏற்படுகிறது.
View More பெட்ரோல் விலை உயர்வு – மத்திய அரசின் அடுத்த தாக்குதல்!