1925ல் வீர சாவர்க்கருக்கும் கிலாஃபத் இயக்கத் தலைவர்களில் ஒருவரான ஷவுக்கத் அலிக்கும் இடையே நடந்த இந்த உரையாடல் முக்கியமானது. இந்த 2021ம் ஆண்டில் தாலிபானின் எழுச்சியை இந்திய முஸ்லிம்களில் கணிசமானவர்கள் வரவேற்றுள்ளனர் என்ற செய்தியின் பின்னணியில் வாசித்தால் இது நமக்குப் பல விஷயங்களை உணர்த்துகிறது. உரையாடல் நடந்தபடியே வருமாறு… “நேற்று வரை எல்லோரும் நல்லவரே என்று எங்கள் வீட்டுக் கதவுகளைத் திறந்து வைத்திருந்தோம். உலகின் வேறு பகுதியிலிருந்து வந்த திருடர்கள் எங்கள் சொத்தைக் கொள்ளையடித்து விட்டனர். இன்று புத்தி வந்து, சற்றே ஜாக்கிரதையாக வீட்டைப் பூட்டுகிறோம். சில கொள்ளையர்கள் வந்து, “நாங்கள் பல காலமாகக் கொள்ளையடித்து வந்துள்ளோம். நீங்கள் வீட்டைப் பூட்டுவது அநியாயம். இது நம் உறவை பாதிக்கும்” என்றால் நாங்கள் என்ன சொல்வது? அப்படிப்பட்ட அபாயகராமான உறவை முறிக்க வேண்டிய நேரம் இது… ”
View More வரலாற்றின் பாடங்கள்: வீர சாவர்க்கர் – ஷவுக்கத் அலி உரையாடல்Tag: கிலாபத்
கிலாபத் கனவுகள்…
இவ்வாறு பயிற்சியில் ஈடுபட்டிருக்கும் நபர் ஹாஜா பக்ருதீன் உஸ்மான் அலி. இவர் 2007 இல் கடலூரில் பயிற்சி ஒன்றுக்கு வந்திருப்பதாக கூறப்படுகிறது. கடலூர்? நினைவிருக்கலாம் 2004 இல் கடலூரில்தான் மனிதநீதி பாசறையின் அடிப்படைவாத முகாம்களை காவல்துறை வெளிக்கொண்டு வந்தது. … சென்னை கல்லூரி இளைஞர்கள் கிலாபத் கனவுகளுடன் மூளை சலவை செய்து வெளிநாட்டு ஜிகாத்களுக்கு அனுப்பப்படுவதும் அவர்கள் பயிற்சி பெற்ற ‘முஜாகிதீன்களாக’ இந்தியா திரும்பி இங்கே ஜிகாதி கிலாபத் வைரஸ்களை பரப்புவதும் மிகவும் சீரான நெடுநாள் திட்டத்தின் பகுதியாகும்.
View More கிலாபத் கனவுகள்…போதிசத்வரின் இந்துத்துவம் – 1
பாபா சாகேப் அம்பேத்கரை ஒரு இந்துத்துவ சார்புடையவராக சொல்வது போல கடும் கண்டனத்துக்கு ஆளாகக் கூடிய விசயம் வேறெதுவும் ‘மதச்சார்பற்ற’ இந்தியாவில் இருக்க முடியாது… அந்த கண்டனங்களுக்கு அப்பால், அம்பேத்கரின் ஒட்டுமொத்த சமூக-தத்துவ சிந்தனைகளின் அடிப்படையில், அவரது மனமண்டலத்தில் இந்துத்துவம் குறித்த கருத்துகள் நேர்மறையாகவும் எதிர்மறையாகவும் எப்படி அறிந்து கொள்ளப்பட்டன என்பதைக் காண்பதே இக்கட்டுரைத் தொடரின் நோக்கம்… ’பிரதியெடுக்க இயலாத பண்பாட்டு ஒற்றுமை’ என பாரதத்தின் பண்பாட்டு ஒருமையை அம்பேத்கர் குறிப்பிடுகிறார்.. இந்து சீர்திருத்த போராளிகளான வீர சாவர்க்கர், சுவாமி சிரத்தானந்தர் ஆகியோரிடம் மிக்க அன்பும் வெளிப்படையாக பாராட்டும் மனமும் கொண்டிருந்தார் பாபா சாகேப்…. ”இஸ்லாமுக்கோ கிறிஸ்தவத்துக்கோ மதம் மாறுவது ஒடுக்கப்பட்ட மக்களை தேசியத்தன்மை இழக்க வைத்துவிடும்” என்கிறார். அம்பேத்கர் ஹிந்து சிவில் சட்டத்தின் வரைவில் இந்துக்களை வரையறை செய்யும் போது வீர சாவர்க்கரின் வரையறையின் தாக்கத்தையே அதில் காண்கிறோம்…
View More போதிசத்வரின் இந்துத்துவம் – 1[பாகம் -17] இஸ்லாமும் இந்திய தேசியமும் – அம்பேத்கர்
‘பாரத்’ என்ற சொல்லில் அம்பேத்கருக்கு அலாதியான பிரியமும் அன்பும் இருந்தது. அதனால்தான் தன்னுடைய வார இதழுக்கு ‘பகிஷ்கிரித் பாரத்’ என்று பெயரிட்டார்… தலித்துகள் தேசியக் கண்ணோட்ட இயல்பை வளர்த்துக்கொண்டு இதர சமூகத்தினரின் மற்றும் கட்சியினரின் பரிவைச் சம்பாதிக்க வேண்டும்…இஸ்லாமின் இரண்டாவது குறைபாடு அது ஸ்தல தன்னாட்சி முறையிலிருந்து மாறுபட்ட ஒரு சமூக தன்னாட்சி முறையாக அமைந்திருப்பதாகும். ஒரு முஸ்லிம் தான் வாழும் நாட்டின் மீதன்றி, தான் கடைப்பிடிக்கும் சமயத்தின்மீது விசுவாசம் கொண்டிருக்கிறான்…. முஸ்லீம் ஆட்சியை விட பிரிட்டிஷ் ஆட்சியே மேல்: உண்மையில், தீவிர சமயவெறி கொண்ட முஸ்லீம்கள் ஆட்சி செய்யும் ஒரு நாட்டில் முஸ்லீம் சமய உட்பிரிவினர் பாதுகாப்பாக இருக்க முடியாது….
View More [பாகம் -17] இஸ்லாமும் இந்திய தேசியமும் – அம்பேத்கர்