வள்ளலாரும் இந்துமதமும்: ஓர் எதிர்வினை

ஜோதி அருள் இராமலிங்க வள்ளல் பெருமான் இந்து என்கிற பெயரை பயன்படுத்தியது மட்டுமல்ல. ஆரியர் எனும் பெயரையும் இனவாதம் மறுத்து அதன் பாரம்பரிய பண்பாட்டு ஆன்மிக பொருளில் பயன்படுத்தியிருக்கிறார்..வள்ளல் பெருமான் இந்த ஐம்பத்தாறு தேசங்களென்பது பௌராணிக சொல்லாடல் என்று சொல்வதோடு நில்லாமல் பாரதமே சிவயோக பூமி என்கிறார். தமிழின் பெருமைகளை சொல்லுமிடத்து அதுவே ரிக் யஜுர் சாம வேத த்ரயத்தின் பொருளனுபவத்தை அளிக்க வல்லது என்கிறார். வள்ளலாரின் தமிழ் மொழி குறித்த அருளுபதேசம் பாரதியின் வரிகளுக்கு தக்க விளக்கமாக அமைகின்றது..

View More வள்ளலாரும் இந்துமதமும்: ஓர் எதிர்வினை

போதிசத்வரின் இந்துத்துவம் – 1

பாபா சாகேப் அம்பேத்கரை ஒரு இந்துத்துவ சார்புடையவராக சொல்வது போல கடும் கண்டனத்துக்கு ஆளாகக் கூடிய விசயம் வேறெதுவும் ‘மதச்சார்பற்ற’ இந்தியாவில் இருக்க முடியாது… அந்த கண்டனங்களுக்கு அப்பால், அம்பேத்கரின் ஒட்டுமொத்த சமூக-தத்துவ சிந்தனைகளின் அடிப்படையில், அவரது மனமண்டலத்தில் இந்துத்துவம் குறித்த கருத்துகள் நேர்மறையாகவும் எதிர்மறையாகவும் எப்படி அறிந்து கொள்ளப்பட்டன என்பதைக் காண்பதே இக்கட்டுரைத் தொடரின் நோக்கம்… ’பிரதியெடுக்க இயலாத பண்பாட்டு ஒற்றுமை’ என பாரதத்தின் பண்பாட்டு ஒருமையை அம்பேத்கர் குறிப்பிடுகிறார்.. இந்து சீர்திருத்த போராளிகளான வீர சாவர்க்கர், சுவாமி சிரத்தானந்தர் ஆகியோரிடம் மிக்க அன்பும் வெளிப்படையாக பாராட்டும் மனமும் கொண்டிருந்தார் பாபா சாகேப்…. ”இஸ்லாமுக்கோ கிறிஸ்தவத்துக்கோ மதம் மாறுவது ஒடுக்கப்பட்ட மக்களை தேசியத்தன்மை இழக்க வைத்துவிடும்” என்கிறார். அம்பேத்கர் ஹிந்து சிவில் சட்டத்தின் வரைவில் இந்துக்களை வரையறை செய்யும் போது வீர சாவர்க்கரின் வரையறையின் தாக்கத்தையே அதில் காண்கிறோம்…

View More போதிசத்வரின் இந்துத்துவம் – 1