நாள்சென்றதும், பாதிரி வீட்டுப் பூசையறையில் ஏசுவின் படமொன்றை மாட்டச்சொன்னார். இதை விரும்பாவிடினும், பாதிரியின் வேண்டுதலுக்கிணங்க, அவ்வீராங்கனையின் கணவரும், தந்தையும் வீட்டுப் பூசையறையில் ஏசுவின் படத்தை மாட்ட இடங்கொடுத்தார்கள். பிறகு, பாதிரி இந்துத் தெய்வங்களின் படங்களை அங்கிருந்து நீக்கும்படி கேட்டுக்கொண்டார். ஆனால், அக்குடும்பம் அதற்கு எதிர்ப்புத் தெரிவித்தது. நாங்கள் உடனே குறுக்கிட்டோம்..
விடுதலையடைந்த இலங்கையில் இந்து இனம், கோவில்களின்மீது பவுத்தர்களின் தாக்குதல் நடப்பது இயல்பான ஒன்றாக ஆகிவிட்டது. அதிலும், 1972ல் இலங்கைச் சட்ட அமைப்பு அமுலுக்கு வந்து, இந்துசமயத்திற்கு மேலாகப் பவுத்தசமயத்திற்கு சிறப்பிடம் வழங்கப்பட்டவுடன் இத்தாக்குதல்கள் அதிகமாகின….
Tag: கிளிநொச்சி
ஈழத்து வன்னிச் சிவாலயங்கள்
இலங்கையின் வன்னி பகுதி மேற்கே மன்னாரையும் கிழக்கே திருகோணமலையையும் எல்லையாகக் கொண்டது. இவ்விரு எல்லைகளிலும் தேவாரப்பாடல் பெற்ற திருத்தலங்களான திருக்கேதீஸ்வரம், திருக்கோணேஸ்வரம் ஆகியவை உள்ளன… இலங்கையைப் போர்த்துக்கேயர்கள் கைப்பற்றியபோது, அவர்கள் கிறிஸ்தவ மதத்தைப் பரப்புவதற்காகவும், இந்துத் திருக்கோயில்களில் நிறைந்திருந்த செல்வங்களைக் கொள்ளையடிப்பதற்காகவும் இந்துக் கோயில்கள அனைத்தையும் இடித்துத் தரைமட்டமாக்கினார்கள்… கண்டியில் அரசுசெய்த ஜெயதுங்க வரராசசிங்கன் என்னும் மன்னனின் கனவில் கோணேஸ்வரப் பெருமான் தோன்றி தாம் உறைவதற்கு ஏற்றதான கோயிலை செந்நெல் விளையும் வயல்கள் சூழ்ந்த தம்பலகாமத்தில் அமைக்குமாறு கூறி மறைந்தார். இன்றும் இக்கிராமத்தில் இக்கோவில் சிறப்புடன் விளங்குகின்றது….
View More ஈழத்து வன்னிச் சிவாலயங்கள்