இத்தொடரில் என் மனதைத் தொட்ட ஒரு பாத்திரம் ஏகலைவன். கட்டைவிரலைக் கேட்டது அறமற்றசெயல் என்று துரோணர்மீது சாட்டப்பட்ட குற்றத்தை மறுதளிக்கிறான் அவன். “அவர் என்னைச் சீடனாக ஏற்றுக்கொண்டதால்தானே என்னிடம் குருதட்சிணை கேட்டுப் பெற்றுக்கொண்டார்? பொன், பொருள் எதுவும் தர இயலாத, வெறும் வேட்டுவனான என்னிடம் நான் தரக்கூடிய ஒன்றைத்தானே கேட்டிருக்கிறார். அப்படிப் பெற்றுக்கொண்டதால்தானே நான் அழியாப் புகழ் பெற்றேன்? எனவே, எனது குரு குற்றமற்றவர்!” என்னும்போது எனது கண்கள் பனித்துவிட்டன.
View More தர்மக்ஷேத்திரம் – டி.வி. தொடர் விமர்சனம்Tag: குருக்ஷேத்திரம்
புருஷ லட்சணம் [சிறுகதை]
சிகண்டி அத்தனை மலர்ந்த முகத்தை கிருஷ்ணன் ஒருவனிடம்தான் இது வரை கண்டிருக்கிறான். பீஷ்மர் புன்னகைத்து சிகண்டி இது வரை பார்த்ததே இல்லை, அவன் பார்த்ததெல்லாம் தீர்க்கமான பார்வையுடன் போரிடும், ஆணையிடும் பீஷ்மரைத்தான். இன்றோ பார்ப்பவரின் மனதையும் மலரச் செய்யும் மகிழ்ச்சியை அவர் முகத்தில் அவன் கண்டான்… சிகண்டியின் முகம் விகசித்தது. அவன் தலையை குனிந்துகொண்டான். ஆனால் அவன் கன்னம் பிரகாசிப்பதை அவனாலும் தடுக்க முடியவில்லை. அவன் தோள்கள் லேசாக குலுங்கின. பீஷ்மர் அவனையே நோக்கினார். பிறகு அவரும் சிரிக்க ஆரம்பித்தார். சிகண்டி வாயைப் பொத்திக் கொண்டு மேலும் சிரித்தான்….
View More புருஷ லட்சணம் [சிறுகதை]நிழல் [சிறுகதை]
முறிந்த தொடையிலிருந்து ஓடிய ரத்தம் சேற்றோடு கலந்து சிவப்புக் கம்பளத்தில் படுத்திருப்பதைப் போல துரியோதனன் கிடந்தான். அஸ்வத்தாமன் துரியோதனன் அருகே அமர்ந்து அவன் தலையை தன் மடியில் தாங்கிக் கொண்டான். கிருபர் ‘நான் சென்று பச்சிலைகள் கொண்டு வருகிறேன், கிருதவர்மரே, நீங்கள் எப்படியாவது ஒரு மருத்துவரைக் கண்டுபிடித்து அழைத்து வாருங்கள்!’ என்று பரபரத்தார்… ஒன்றும் புரியாத அஸ்வத்தாமன் முழந்தாளிட, துரியோதனன் தொன்னையிலிருந்து நீரை எடுத்து அஸ்வத்தாமன் தலையில் ஊற்றினான்.
கிருபரின் மார்புக்கூடு விரிந்தது. அவரது மூச்சு கொல்லன் துருத்தி போல பெரிதாக எழுந்தது. அவரது கன்னங்கள் ரத்தம் பாய்ந்து சிவந்தன… பாண்டவர் படைகளின் கூடாரங்களில் விளக்குகள் அணைந்துவிட்டிருந்தன. நட்சத்திரங்களின் மெல்லிய ஒளி மேகக் கூட்டத்தின் வழியே மங்கலாகத்தான் தெரிந்தது…
ரிஷிமூலம் [சிறுகதை]
கண்ணன் எதுவும் பேசவில்லை. சகுனியை மீண்டும் உற்று நோக்கினான். சகுனியால் கண்ணனின் கண்களை சந்திக்க முடியவில்லை. தன் பார்வையைத் திருப்பிக் கொண்டார். கண்ணன் ரகசியக் குரலில் “தெரியும்” என்றான். சகுனி இடி விழுந்தது போல திடுக்கிட்டார். அவரது கால்கள் நடுங்கின. தடுமாறிய அவரை கண்ணன் கைத்தாங்கலாக ஏந்திக் கொண்டான். அவரை ஒரு திண்டில் உட்கார வைத்து காலுக்கு ஒரு தலையணையையும் வைத்தான். சகுனியின் உடல் குளிர் ஜுரம் வந்தவனைப் போல நடுங்கிக் கொண்டிருந்தது. கண்ணன் ஒரு கிண்ணத்தில் பழச்சாறை ஊற்றி எடுத்து வந்து அவருக்கு புகட்டினான்….
View More ரிஷிமூலம் [சிறுகதை]வீரனுக்கு வீரன் [சிறுகதை]
தன்னை இழிவு செய்தவர்தானே, எப்படியாவது தொலைந்து போகட்டும் என்ற எண்ணம் இல்லை அந்த மாவீரனுக்கு. பீஷ்மரைக் கொல்வதற்காக வீரத்திற்கு இழுக்கு வரும் செயலையா அர்ஜுனன் போன்ற மாவீரன் செய்தான் என்ற மனக்குமுறல்தான் இருந்தது… கர்ணன் சிறிது சிந்தித்தான். என்னதான் தன்னை இகழ்ந்து பேசியிருந்தாலும், மாவீரரான பீஷ்மப் பாட்டனாரிடம் வாழ்த்துப் பெற்ற பின்னரே போரை வழிநடத்த வேண்டும் என்ற அவா அவனுள் எழுந்தது. தவிரவும், தன் மனதில் புழுவாகக் குடைந்து கொண்டிருக்கும் ஒரு கேள்விக்குப் பதிலை அவரிடமிருந்துதான் தெரிந்து கொண்டாக வேண்டும் என்ற விருப்பமும் அவனை அம்புப் படுக்கையில் கிடக்கும் பீஷ்மப் பாட்டனாரிடம் நடத்திச் சென்றது…
View More வீரனுக்கு வீரன் [சிறுகதை]