கொட்டில்பாடு எஸ் துரைசாமி – வரலாற்றால் மறக்கப்பட்டுவிட்ட இம்மனிதரைக் குறித்து ஒரு ஆர்வத்துடன் தேடுகிறார் ஜோ தமிழ்ச்செல்வன். இந்திய தேசிய காங்கிரஸ் கட்சியின் குமரி மாவட்ட பிரிவின் முதல் செயலாளரும் தலைவருமாக இருந்தவர் இவர்… தொடர்ந்து திராவிட இயக்கங்கள் காமராஜருக்கு எதிராக கன்னியாகுமரி மாவட்டத்தில் மதவாத பிரச்சாரத்தை மேற்கொண்டன என்பது இதுவரை எவரும் வெளிக்கொண்டு வந்திராத ஒரு முக்கிய தகவல்…. இந்த நூல் ஒரு குறிப்பிட்ட சமுதாயத்தின் அல்லது ஒரு குறிப்பிட்ட தலைவரின் வரலாற்று நினைவுகளை மீட்டெடுக்கும் நூல் மட்டும் அல்ல. அதற்கு மேலாக பல தளங்களில் அது நம்முடன் உரையாடுகிறது….. நேசமணி “நீ யாரைப் பார்த்து பேசுகிறாய் தெரியுமா?” என்று கோபத்துடன் கேட்டார், அதற்கு தாணுலிங்க நாடார், “பள்ளியாடி அப்பாவு நாடார் மகன் நேசமணியைப் பார்த்து பொற்றையடி பரமார்த்தலிங்க நாடாரின் மகன் தாணுலிங்கம் பேசுகிறேன்.” என்றார். நேசமணியின் அடியாட்கள் தாணுலிங்க நாடாரைச் சூழ்ந்து கொண்டு தாக்க முற்பட்டார்கள்…
View More குமரி அன்னையின் மூக்குத்தி ஒளி