பொதுவாக ஒரு விஷயம் சொல்லப்படுகிறது: ‘இந்தியர்களுக்கு வரலாற்று அறிவு கிடையாது’. ஆனால் சிறிது ஆராய்ந்து பார்த்தால் உண்மை அப்படி அல்ல என்பது விளங்கும். பாரதவாசிகளாகிய நமக்கு ஒற்றை வரலாறு கிடையாது. மேற்கத்திய வரலாற்றில் வெற்றி அடைந்தவனின் வரலாறு மட்டுமே சொல்லப்படும். ஆதிக்க சக்திகளாக விளங்கிய மன்னர்களின் மத பீடங்களின் வரலாறே பத்தொன்பதாம் நூற்றாண்டு வரை ஐரோப்பிய வரலாறாக அமைந்தது. அத்தகைய ஒற்றை வரலாறு பாரதத்துக்கு உண்டா என்றால் இல்லை என்றே சொல்லிவிடலாம். ஆங்கிலேய அறிவியக்க ஆதிக்கம் இந்தியாவில் ஏற்பட்ட பிறகுதான் அத்தகைய ஒற்றைப்படை வரலாறுகள் எழுதப்பட்டன. வின்ஸெண்ட் ஸ்மித் முதல் நீலகண்ட சாஸ்திரிகள் வரை அத்தகைய ஒற்றைத்தன்மை கொண்ட வரலாற்றை நமக்கு அளித்தவர்களே. நம் கல்வி நிலையங்களில் இன்று நமக்கு நம் வரலாறாக சொல்லிக் கொடுக்கப்படுவது இந்த ஒற்றைச் சட்டக அடிப்படையில்தான்.
ஆனால் பாரதத்தில் ஒவ்வொரு சமுதாயக்குழுவும் அந்தந்த சமுதாயக்குழுவின் வரலாற்று நினைவுகளை அழியாமல் பாதுகாத்து வந்துள்ளது. பள்ளுகளாகவும் தெம்மாங்குகளாகவும் வில்லுப்பாட்டுகளாகவும், கிராம குல தெய்வங்களின் தொன்ம கதைகளாகவும் அந்த வரலாற்று நினைவுகள் ஐதீகப்புனைவுகளுடன் பாதுகாக்கப்பட்டு தலைமுறை தலைமுறைகளாக கடத்தப்பட்டு வந்துள்ளன. ஏன் வரலாற்றுடன் ஐதீகப்புனைவுகள் கலக்கப்பட்டன? எந்த ஒரு வரலாற்று நிகழ்ச்சியிலும் வளமடைந்தவர்களும் இருப்பார்கள் வெற்றி பெற்றவர்களும் இருப்பார்கள், பாதிக்கப்பட்டவர்களும் இருப்பார்கள், தோல்வி அடைந்தவர்களும் இருப்பார்கள். வரலாற்று நினைவுகள் பெருமிதங்களும் கசப்புகளும் நிரம்பியவை. வரலாற்றின் பெருமிதங்களை நினைவு கூர்பவர்கள் அவற்றின் கசப்புகளுக்கும் பொறுப்பேற்க வேண்டும். ஆனால் வரலாற்று கசப்புகளை தக்கவைத்து கொண்டே சென்றால் இறுதியில் அது வெறுப்பின் விஷமாக மாறி சமூக நல்லிணக்கத்தை அழித்துவிடும். உதாரணமாக இரண்டாயிரம் ஆண்டுகளாக வரலாறு என்கிற பெயரில் ஐரோப்பாவில் யூதர்கள் மீது வளர்க்கப்பட்ட வெறுப்பை சுட்டிக்காட்டலாம். ஆனால் இந்திய சமூகக்குழுக்களின் வரலாற்று நினைவுகளான நாட்டுப்பாடல்களில், சடங்குகளில் இருக்கும் தொன்ம ஐதீக பரிமாணம் இந்த வெறுப்பை பெருமளவு அழித்துவிடுகிறது.
இன்று இந்த சமூகக்குழு வரலாறுகள் சொல்லப்படும் விதம் அடையும் மாற்றம் முக்கியமானது. இன்றைக்கும் ஆதிக்க சக்திகளாக ஆங்காங்கே விளங்குகிறவர்கள் ’இதுதான் உன் வரலாறு’ என அனைத்து சமுதாயக் குழுக்களுக்குமான பொது கதாநாயகர்களையும் வில்லன்களையும் சிருஷ்டித்து வரலாற்றைக் கையளித்துக் கொண்டிருக்கின்றனர். ஆனால் நம் பாரம்பரியத்தின் நீட்சியாக உருவாகும் வரலாற்றறிஞன் அவனே தேடி சென்று தன் சமுதாயத்தின் தன் முன்னோரின் தன் பிராந்தியத்தின் வரலாற்றை அதன் அத்தனை அம்சங்களுடனும் பதிவு செய்கிறான். வரலாறு இன்றும் காலவெள்ளத்தில் ஓடிக்கொண்டிருக்கிறது. வரலாற்று நிகழ்வுகளும் நினைவுகளும் நம் இன்றைய செயல்பாடுகளை நிர்ணயிக்கின்றன. பாதிக்கின்றன. வழி நடத்துகின்றன. எனவே அவற்றை நாம் அறிந்து கொள்வது அவசியமாகிறது. அத்தகைய சமூக வரலாறுகள் அந்தந்த பிராந்தியம் சார்ந்து மீட்டெடுக்கப்படுவதும் பதிவு செய்யப்படுவதும் அவசியமாகின்றன. அத்தகைய ஒரு வரலாற்றாசிரியராகவே ஜோ தமிழ்செல்வன் விளங்குகிறார்.
லூர்தம்மாள் சைமன் குறித்த ஆராய்ச்சியின் போது அவருக்கு கொட்டில்பாடு எஸ் துரைசாமி குறித்த ஒரு சிறிய துப்பு கிடைக்கிறது, அதன் அடிப்படையில் அவர் வரலாற்றால் மறக்கப்பட்டுவிட்ட இம்மனிதரைக் குறித்து ஒரு ஆர்வத்துடன் தேடுகிறார். இந்திய தேசிய காங்கிரஸ் கட்சியின் குமரி மாவட்ட பிரிவின் முதல் செயலாளரும் தலைவருமாக இருந்தவர் இவர். இந்திய தேசிய விடுதலை போராட்ட வீரரும் குமரி மாவட்டத்தை தமிழகத்துடன் இணைக்கும் போராட்டத்தில் முக்கிய இடம் பெற்றவருமாக இவரது ஆளுமையை ஜோ தமிழ்செல்வன் வெளிப்படுத்துகிறார். அத்துடன் அந்த காலகட்டத்தின் பல சாதிய மதவாத அரசியல் செயல்பாடுகள் வெளிப்படுத்தப்படுகின்றன. மனதிற்கு கஷ்டத்தை அளிப்பவையாக அவை அமைந்தாலும் அவற்றை முதன் முதலாக வெளிக் கொண்டு வர அசாத்திய தைரியமும் நேர்மையும் தேவை. குமரி மாவட்டத்தில் இன்று ஆதிக்க சக்திகளாக விளங்குவோரால் உருவாக்கப்பட்டுள்ள சில பிம்பங்கள் உடைத்தெறியப்படுகின்றன. இது பலருக்கு உவப்பான விஷயமாக அமையாது.
இந்த வரலாற்று வெளிப்பாடு குமரி மாவட்ட மீனவ சமுதாயத்தினை மேல் தூக்கி பிடிக்க அந்த சமுதாயத்தைச் சேர்ந்த ஒருவரால் எழுதப்பட்டது என எளிதாக சொல்லி இதை புறக்கணிக்க முயலலாம். ஆனால் இந்த நூலை ஒருவர் படித்தால் அதற்கான மிக சிறிய மிக நுண்ணிய வாய்ப்பு கூட இல்லை என்பதை உணரலாம். மிகுந்த நேர்மையுடன் ஜோ தமிழ்செல்வன் இதுவரை மறக்கடிக்கப்பட்ட வரலாற்று சம்பவங்களை வெளிக் கொணர்கிறார். இதில் எந்த ஒரு சமுதாயத்தைச் சார்ந்தவர்களின் பெயரும் இருட்டடிப்பு செய்யப்படவோ அதை விட முக்கியமாக அவர்களின் பங்களிப்பு குறைத்து மதிப்பிடப்படவோ இல்லை.
இன்னும் சொன்னால் இதில் ஒரு அகில இந்திய தலைவரான காமராஜரின் கூர்த்த மதியும் எந்த அளவு சமரசமில்லாத நேர்மையுடன் மக்கள் பிரச்சனைகளை அவர் அணுகினார் என்பதும் வெளியாகிறது. குமரிமாவட்டம் தமிழகத்துடன் இணையும் அந்த நாளில் கூட காமராஜர் ‘இனி உங்களுக்கு அதிகாரமும் பதவியும் வாரி வழங்குவோம்’ என புகழாரங்கள் சூட்டவில்லை. பிற மாவட்டங்களுடன் ஒப்பிடுகையில் நீங்கள் முன்னேறி இருப்பதால் தமிழ்நாட்டில் பிற மாவட்டங்களுக்கே முன்னுரிமை தரப்படும் என தெளிவாக சொல்கிறார். பசப்பு வார்த்தைகள் பேசாமல் இத்தகைய நேர்மையுடன் நேர்பட பேசும் ஒரு தலைவர் அண்மைக் கடந்த காலத்தில் நம்மிடையே வாழ்ந்திருக்கிறார்.
லூர்தம்மாள் சைமனுக்கும் துரைசாமி அவர்களுக்கும் ஏற்பட்ட ஒரு கருத்து முரண் குறித்து ஜோ தமிழ்செல்வன் சொல்லியிருக்கும் அத்தியாயம் முக்கியமானது. தமிழ்நாட்டில் ஏறக்குறைய எல்லா சமுதாயக்குழுக்களிலும் தம்மை அரச பரம்பரையினர் என சொல்ல தரவுகள் இருக்கும். இந்தியாவில் நிலவிய அரச முறை ஐரோப்பிய அரச அமைப்பினை போன்றதன்று. இங்கு பெருமளவுக்கு சமூகக்குழுக்களுக்கு சுதந்திரம் இருந்தது. சாதியக் கட்டுப்பாடுகளுக்கு அப்பால் பிராந்திய நிர்வாகத்தில் இந்த சுதந்திரம் நிலவியது. எனவே ஒவ்வொரு சமுதாயக் குழுவும் தன்னை அரசர் என சொல்வதை முழுமையாக வரலாற்றுப் பிழை என கருத முடியாது. ஆனால் இன்று அது அடக்குமுறையையும் சாதிய வெறியையும் வெளிக்காட்டுவதற்கான ஒரு அருவெருப்பான பெருமையாக வடக்க்கு மற்றும் மத்திய தமிழ்நாடுகளில் காண்கிறோம். ஜனநாயக மாற்றத்தில் ஒரு சமுதாயக்குழு முன்வைக்க வேண்டியது இந்த பழம் பெருமையை அல்ல அதன் ஜனநாயக பிரதிநிதித்துவத்தையே என்பதை துரைசாமி அவர்கள் உணர்ந்திருந்திருக்கிறார். எனவே தம்மை அரச பரம்பரையினர் என பதியாமல் முக்குவர் என பதிய வேண்டுமென்று லூர்தம்மாள் சைமனை எதிர்த்து கோரிக்கை வைத்து வெற்றியும் பெறுகிறார் துரைசாமி அவர்கள். ‘அரசர் குலத்தை முக்குவர் குலமாக மாற்றியது முக்குவர்களுக்கிடையே இருக்கும் ஏற்றத்தாழ்வுகளைக் களைவதற்கான’ முயற்சி என மிகச்சரியாக ஜோ தமிழ்செல்வன் கணிக்கிறார்.
அரசு மருத்துவமனையை விரிவுபடுத்த லூர்தம்மாள் சைமன் முயன்ற போது அதனை நாகர்கோவிலின் ஒரு முக்கிய தனியார் மருத்துவர் எதிர்ப்பதுடன் அதற்கு பழிவாங்க கத்தோலிக்க சமுதாயத்தைச் சேர்ந்த மற்றொருவரை லூர்தம்மாள் சைமனுக்கு எதிராக நிற்க வைத்த சதி ஆச்சரியமளிக்கிறது. அதில் துரைசாமி அவர்கள் காமராஜரின் வழிகாட்டலில் லூர்தம்மாள் சைமனுக்காக செயல்பட்டது அதற்கான காரணங்கள் முக்கியமானவை. தொடர்ந்து திராவிட இயக்கங்கள் காமராஜருக்கு எதிராக கன்னியாகுமரி மாவட்டத்தில் மதவாத பிரச்சாரத்தை மேற்கொண்டன என்பது இதுவரை எவரும் வெளிக்கொண்டு வந்திராத ஒரு முக்கிய தகவல். அப்போது காமராஜருக்கு எதிராக மிகக்கடுமையாக பல்முனைத் தாக்குதல் பிரச்சாரங்கள் மேற்கொள்ளப்பட்டதை ஜோ தமிழ்செல்வன் விவரிக்கிறார். இன்றைய மதவாத பிரச்சாரங்களின் ஒட்டுமொத்த வடிவத்தை அன்றைக்கே காண முடிகிறது.
1969 தேர்தலில் இந்த சாதி-மத பிரிவினை வாதங்களுக்கு அப்பால் தேசிய ஜனநாயக மக்கள் நல உணர்வுடன் துரைசாமி செயல்படுகிறார். வாக்குகள் சாதி மத அடிப்படையில் சிதறிய போதும் துரைசாமி எனும் மீனவ கத்தோலிக்க சமுதாய தலைவர் ஒருவரின் தேசிய பார்வையால் காமராஜர் வெற்றி பெறுகிறார். திராவிட மாயையால் தமிழ்நாடே இருளில் வீழ்ந்த காலகட்டத்தில் குமரிமாவட்டம் குமரி அன்னையின் மூக்குத்தி ஒளியாக ஒற்றை ஒளிக் கீற்றை தமிழகத்துக்கு அளித்த தருணம் அது. என்றென்றைக்கும் குமரி மாவட்டத்துக்கு வரலாற்றில் இடம் தந்த தருணம் அது. அதற்கான முதன்மை காரணமாக அமைந்தவர் கொட்டில்பாடு எஸ்.துரைசாமி அவர்களே. இன்றைய மீனவ சமுதாயம் மட்டுமல்ல ஒட்டுமொத்த குமரிமாவட்டமே படித்துக் கொள்ள வேண்டிய ஒரு சிறப்பான பாடத்தை இங்கு ஜோ தமிழ்செல்வன் நம் முன் வைக்கிறார்.
ஆக இந்த நூல் ஒரு குறிப்பிட்ட சமுதாயத்தின் அல்லது ஒரு குறிப்பிட்ட தலைவரின் வரலாற்று நினைவுகளை மீட்டெடுக்கும் நூல் மட்டும் அல்ல. அதற்கு மேலாக பல தளங்களில் அது நம்முடன் உரையாடுகிறது. ஒரு இந்திய குடிமகனாக, குமரி மாவட்ட மண்ணின் மைந்தனாக, மறைக்கப்பட்ட வரலாற்றை மீட்டெடுக்கும் ஒரு சிறந்த முயற்சியாக, வரலாற்று ஆவணமாக, என இந்த நூல் நமக்கு அளிக்கும் பல தள ஒளிவீச்சுகள் இந்நூலை சமகால வரலாற்று பதிவுகளின் வரிசையில் முக்கியமானதாக ஆக்குகிறது. ஜோ தமிழ்செல்வனுக்கு குமரிமாவட்டமும் தமிழகமும் நன்றிக்கடன் பட்டுள்ளன.
(”குமரிக்காங்கிரஸின் தந்தை கொட்டில்பாடு எஸ்.துரைசாமி” நூலுக்கு எழுதிய முன்னுரை)
நூலிலிருந்து சில பகுதிகள்
கிறிஸ்தவர்களின் ஆதிக்கத்தை விரும்பாத நாயர் சேவா சங்கத் தலைவர் மன்னத்து பத்மநாபனும், எஸ்.என்.டி.பி யோகத்தின் தலைவரான சங்கரும் இணைந்து இந்துக்களை ஒருங்கிணைப்பதற்காகவும் இந்துக்களை மதமாற்றம் செய்வதைக் கண்டித்து எதிர்ப்பு தெரிவிப்பதற்கும் ‘இந்து மகா மண்டலம்’ என்கிற அமைப்பை 1950 இல் உருவாக்கினர். ஏராளமான நாயர்களும் ஈழவர்களும் இதில் இணைந்தனர். குறிப்பாக திருவிதாங்கூர் தமிழ்நாடு காங்கிரஸ் கட்சியைச் சார்ந்த வழக்கறிஞர் தாணுலிங்க நாடாரும், இந்திய தேசியக் கட்சியைச் சார்ந்த இந்து நாடார்கள் சிலரும் இந்த அமைப்பில் உறுப்பினர்களாக இணைந்தனர். இதனால் இந்த அமைப்பு புத்துருவம் பெற்றது. இவ்வமைப்பில் திருவிதாங்கூர் தமிழ்நாடு காங்கிரஸ் கட்சியைச் சார்ந்த தாணுலிங்க நாடார் துணைத் தலைவராகத் தேர்வு செய்யப்பட்டார். தாணுலிங்க நாடாரைத் துணைத்தலைவராகத் தேர்வு செய்வதற்கு காரணம் அவர் இந்து நாடார்களை கிறிஸ்தவத்துக்கு கட்டாய மதமாற்றம் செய்யும் தவறான போக்கை குமரி மாவட்டத்தில் எதிர்த்து வந்தார். பலவேளைகளில் அதனைத் தட்டிக் கேட்கவும் தயங்கவில்லை.
புரோட்டஸ்டண்ட் சபைகளின் ஆதிக்கத்தால் இந்து நாடார்கள் மதமாற்றம் செய்யப்படுவதனைக் கண்டு பொறுக்க முடியாமல் சட்டமன்ற உறுப்பினர் ஸ்ரீ.வி.தாஸ் அவர்கள் உதவியுடன் கரும்பாட்டூரில் இந்து குழந்தைகளுக்காக ஸ்ரீ கிருஷ்ணா ஆரம்பப் பள்ளியை தாணுலிங்க நாடார் தொடங்கினார். ஒவ்வொரு இந்து ஊரிலும் பஜனை நடத்தச் சொல்லியும் இந்து மதத்தின் ஆன்மிகத்தை அறிய வழி வகை செய்தும் ஊக்கப்படுத்தினார். இந்து மதத்தின் மீதிருந்த பற்றே தாணுலிங்க நாடார் அவ்வமைப்பில் சேர முக்கியமான காரணமாக இருந்தது….
1950 இல் நாகர்கோவில் வாட்டர் டேங்க் ரோட்டில் உள்ள யோசப் என்பவர் வீட்டில் திருத்தமிழர் இயக்கத்தின் கூட்டம் நடைபெற்றது. கூட்டத்தில் நேசமணி தாணுலிங்க நாடாரைப் பார்த்து “யோவ் தாணுலிங்க நீர் திருவிதாங்கூர் தமிழ்நாடு காங்கிரசில் செயற்குழு உறுப்பினராக இருந்து கொண்டு எந்த முறையில் கேரளா ஹிந்து மிஷன் துணைத் தலைவராகவும் இருக்க முடியும்?” என்று கேட்டார். அதற்கு தாணுலிங்க நாடார், “உமக்கு எப்படி திருவிதாங்கூர் தமிழ்நாடு காங்கிரஸிலும் கிறிஸ்தவ காங்கிரஸிலும் பதவி வகிக்க முடியுமோ அப்படித்தான் எனக்கும்.” என்று பதிலளித்தார். நேசமணி “நீ யாரைப் பார்த்து பேசுகிறாய் தெரியுமா?” என்று கோபத்துடன் கேட்டார், அதற்கு தாணுலிங்க நாடார், “பள்ளியாடி அப்பாவு நாடார் மகன் நேசமணியைப் பார்த்து பொற்றையடி பரமார்த்தலிங்க நாடாரின் மகன் தாணுலிங்கம் பேசுகிறேன்.” என்றார். நேசமணியின் அடியாட்கள் தாணுலிங்க நாடாரைச் சூழ்ந்து கொண்டு தாக்க முற்பட்டார்கள். (பக்.56-7)
மத்தியாசுக்கு ஆதரவாக மு.கருணாநிதி பிரச்சாரம் செய்த போது ‘விருதுநகரில் விலைபோகாத மாடு வடசேரி சந்தைக்கு வந்திருக்கிறது, பல்லைப் பிடிச்சுப் பார்த்து வாலைப் பிடிச்சு பார்த்து ஓட்டு போடுங்கள் என்றார். மத்தியாசுக்காக இரண்டு மாதங்கள் தொடர்ந்து நாகர்கோவிலில் தங்கி பிரச்சாரம் செய்தார். … காமராசரை தோற்கடிப்பதற்காக பல்வேறு உக்திகளைக் கையாண்டார். “ஒருவர் வந்த நாடார். மற்றொருவர் சொந்த நாடார். ஒருவர் சிவனை வணங்குகிறவர். மற்றொருவர் சிலுவையை வணங்குகிறவர். இந்த மாவட்ட மக்கள் நன்கு படித்தவர்கள் எனவே சொந்த நாடாருக்கு வாக்களியுங்கள்.” என்றார். ,,, காமராசருக்கு எதிராக பல்வேறு நபர்களும் கட்சிகளும் தொடர்ந்து சாதி ரீதியாகவும் மத ரீதியாகவும் பிரச்சாரம் செய்தனர். ‘தட்சிண நாடார் கட்சி’ காமராசருக்கு எதிராக, ‘விருதுநகர் நாடார்கள் நமது சாதியைச் சார்ந்தவர்கள் அல்ல. அவர்கள் நம்மிடமிருந்து பெண் கொள்வதில்லை’ என தென்றல் எனும் தினசரி நாளிதழ் மூலம் அக்டோபர் 8 1968 அன்று ஒரு அறிக்கையை வெளியிட்டது. ‘கிறிஸ்தவ நாடார் கூட்டமைப்பு’ சார்பில் இந்தியன் எக்ஸ்பிரஸ் சனவரி 2 1969 அன்று ஒரு செய்தியை வெளியிட்டது. அதில் ‘இந்த தொகுதியில் பாதிக்கு மேற்பட்டோர் கிறிஸ்தவ நாடார்கள். எனவே இத்தொகுதி கிறிஸ்தவர்களுக்குரியது. ஒரு கிறிஸ்தவரை தேர்ந்தெடுக்க வேண்டியது கிறிஸ்தவர்களின் கடமையாகும்.’ என குறிப்பிட்டு மத்தியாசுக்கு ஆதரவாக பிரச்சாரத்தில் ஈடுபட்டிருந்தது. அதே எக்ஸ்பிரஸ் பத்திரிகையில் தட்சண நாடார் கட்சியின் சார்பில் ஒரு பிரசுரம் வெளியிடப்பட்டிருந்தது. அதில் ‘விருதுநகர் நாடார்கள் எவரேனும் கிறிஸ்தவராக மாறிவிட்டால் சமூகத்தை விட்டே விலக்கி விடுவார்கள். அவர்கள் வேறு சாதி. நம்மை சரி சமமாக கருதவே மாட்டார்கள். எனவே மருத்துவர் மத்தியாசுக்கு வாக்களியுங்கள். விருதுநகர் காமராசருக்கு அல்ல’ எனக்கூறி தட்சண நாடார் கட்சி காமராசருக்கு எதிராக வேலை செய்தது.
காமராஜ் நாடாரை எதிர்த்து நிற்பவர் யார்? மத்தியாஸ் நாடார்தான் நிற்கிறார் என கருணாநிதி பேசிய செய்தி 23 டிசம்பர் 1968 இல் தினதந்தியில் வெளிவந்தது. ‘காமராசர் நேசமணியின் அரசியல் வாழ்வை நாசம் செய்தார்’ என நேசமணியின் சகோதரரின் பேட்டி டிசம்பர் 10 1968 மாலை முரசு இதழில் வெளியானது…. காமராசர் இந்தியை வரவேற்கிறார் எனவே அவருக்கு வாக்களிக்காதீர்கள் என முஸ்லீம் லீக் கட்சியிலுள்ள இஸ்மாயில் சாகிப் அவருக்கு எதிராக பிரச்சாரம் செய்தார்…. மத்தியாசுக்காக கருணாநிதி, நெடுஞ்செழியன், தினத்தந்தி பத்திரிகை நிறுவனர் ஆதித்தனார், தமிழரசுக் கழகம், முஸ்லீம் லீக், திராவிட கழகம் என பல கட்சிகள் வேலை செய்தன. இது போதாதென்று எம் ஜி ஆர் ரசிகர்களை காமராசருக்கு எதிரான பிரச்சாரத்தில் இறக்கி விட்டனர். பிரச்சாரத்தில் முக்கியமாக சாதி மத உணர்வுகள் தூண்டிவிடப் பட்டன. கொட்டில்பாடு எஸ் துரைசாமியின் தேர்தல் பிரச்சார நுணுக்கத்தைப் பார்த்த காமராசர் கொட்டில்பாடு எஸ் துரைசாமியிடம் ‘நீ தேர்தல் பிரச்சாரத்துக்கு வந்த பிறகுதான் எனக்கு தெம்பாக இருக்கிறது’ என கூறினார். பொதுக் கூட்டங்களுக்கு முக்கியத்துவம் தராமல் காமராசர் கிராமம் கிராமமாக சென்று பிரச்சாரங்கள் செய்தார். காமராசரைக் குறித்த அத்தனை விமர்சனங்களுக்கும் கொட்டில்பாடு எஸ்.துரைசாமியே பதிலடி தந்தார்.
கிருஸ்தவ நாடார்களில் பெரும்பான்மையோர் மருத்துவர் மத்தியாசுக்கு வாக்களித்தனர். இந்து நாடார்களில் பெரும்பான்மையோர் காமராசருக்கு வாக்களித்தனர். முஸ்லீம்களில் பெரும்பான்மையோர் கம்யூனிஸ்ட் கட்சி வேட்பாளர் திரு.அலிக்கு வாக்களித்தனர்.கொட்டில்பாடு எஸ்.துரைசாமியின் அபார முயற்சியினால் மீனவர்கள் பெரும்பான்மையோர் காமராசருக்கு வாக்களித்தனர். 8 சனவரி 1969 அன்று வாக்குகள் எண்ணப்பட்ட போது காமராசர் 1,28,201 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார். காமராசரை பெரும்பான்மை வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற வைத்த பெருமை மீனவ மக்களுக்கே உண்டு என்றால் அது மிகையாகாது. ஆம்! தேர்தலின் மூலம் காமராசருக்கு மகுடம் சூட்டிய பெருமை கொட்டில்பாடு எஸ்.துரைசாமி ஒருவருக்கே உண்டு.
[ பக்.141-4]
குமரிக்காங்கிரஸின் தந்தை கொட்டில்பாடு எஸ்.துரைசாமி
- ஆசிரியர்: ஜோ. தமிழ்ச்செல்வன்
- பக்கங்கள்: 184
- கிடைக்குமிடம்: வேதா புத்தக நிலையம், நாகர்கோவில்.
- அலைபேசி: 8903252895, 8695911069
- விலை: ரூ.130/-
குமரி அன்னையின் மூக்குத்தி ஒளி என்ற கவித்துவமான தலைப்பில் ஒரு நூல் விமர்சனத்தையும் அந்த நூலாசிரியரின் அறிமுகத்தோடு நமக்கு அளிக்கிறார் அரவிந்தன் நீலகண்டன். இதன் பெரும்பான்மையான தகவல்கள் அதிசயிக்கத்தக்க வகையில் இன்றைக்கும் பொருந்தும்படியாக இருக்கிற தகவல்களாக இருக்கின்றன. இன்றைக்கு 90 அகவை நிறைந்த கருணாநிதி அன்றைக்கு எவ்வாறு ஓர் அப்பழுக்கற்ற தேச பக்தருக்கு பொய்களாலும் புனைசுருட்டுகளாலும் வஞ்சகம் செய்தார் என்பதை இக்கட்டுரை உள்ளங்கை நெல்லியாக தெளிவாக்குகிறது.
// தமிழ்நாட்டில் ஏறக்குறைய எல்லா சமுதாயக்குழுக்களிலும் தம்மை அரச பரம்பரையினர் என சொல்ல தரவுகள் இருக்கும். இந்தியாவில் நிலவிய அரச முறை ஐரோப்பிய அரச அமைப்பினை போன்றதன்று. இங்கு பெருமளவுக்கு சமூகக்குழுக்களுக்கு சுதந்திரம் இருந்தது. சாதியக் கட்டுப்பாடுகளுக்கு அப்பால் பிராந்திய நிர்வாகத்தில் இந்த சுதந்திரம் நிலவியது. எனவே ஒவ்வொரு சமுதாயக் குழுவும் தன்னை அரசர் என சொல்வதை முழுமையாக வரலாற்றுப் பிழை என கருத முடியாது. ஆனால் இன்று அது அடக்குமுறையையும் சாதிய வெறியையும் வெளிக்காட்டுவதற்கான ஒரு அருவெருப்பான பெருமையாக வடக்க்கு மற்றும் மத்திய தமிழ்நாடுகளில் காண்கிறோம்.//
அசைக்க முடியாத உண்மை. ஆண்ட பரம்பரை என்று பிதற்றுவதெல்லாம் வெறும் கூச்சல்.
பெருந்தலைவர் காமராஜரை தோற்கடிக்க அசிங்கமான தொழில் செய்த கருணாநிதியுடன் இந்திரா காங்கிரஸ் காரர்கள் கூட்டு சேர்ந்து அரசியல் செய்தனர். எனவே இந்திரா காங்கிரஸ் காரர்கள் எவ்வளவு கேவலமான பிறவிகள் என்பது கவனிக்கத்தக்கது.
கொட்டில்பாடு எஸ் துரைசாமி அவர்களின் குடும்பம் அவர் காமராஜருக்கு பாடுபட்ட ஒரு மிக முக்கிய காரணத்துக்காகவே பல்லாண்டு சீருடனும் சிறப்புடனும் வாழ எல்லாம் வல்ல இறைவனை பிரார்த்திக்கிறேன்.
தம்பி அரவிந்தன் நீலகண்டன் அவர்கள் எவ்வளவோ மிக சிறந்த ஆய்வுகளை செய்து, நல்ல அற்புதமான கட்டுரைகளை தமிழ் ஹிந்துவுக்கு வழங்கி உள்ளார். இருப்பினும் இந்த கட்டுரை ஒரு மணி மகுடம் ஆகும்.
ஜோ தமிழ்செல்வனுக்கு குமரிமாவட்டமும் தமிழகமும் நன்றிக்கடன் பட்டுள்ளன என்று அரவிந்தன் தெரிவித்துள்ளார். தமிழ் கூறும் நல்லுலகம் முழுவதுமே( தமிழர்கள் உலகில் பல நாடுகளில் வாழ்ந்து வருவதால் ) திரு ஜோ தமிழ் செல்வனுக்கு நன்றிக்கடன் பட்டுள்ளது என்பதே உண்மை.
இதயம் தொட்ட இந்த நூல் ஆய்வினை வெளியிட்ட தமிழ் ஹிந்துவுக்கு நம் நன்றிகள்.
பெரியவர் தாணுலிங்க நாடார் , கொட்டில்பாடு எஸ் துரைசாமி, ஜோ தமிழ் செல்வன் ஆகியோரின் சிறந்தபணி என்றும் நிலைத்து நின்று, நினைவில் கொள்ளப்படும். இந்த கட்டுரை தமிழகம் முழுவதும் விநியோகிக்க படவேண்டும். காமராஜரின் உண்மை தொண்டர்கள் , சோற்றில் உப்பிட்டு உண்ணுபவராக இருந்தால், கருணாநிதியின் நிழலுடன் கூட சேரமாட்டார்கள்.
கருணாநிதி திருந்தாத ஜென்மம்.
இந்திரா கட்சியினர் ஆவது இனி திருந்துவார்களா ?
நமக்குத் தெரியாத பல வரலாற்றுச் செய்திகள் இங்கு சொல்லப்பட்டுள்ளன. நேசமணி தெரியும் தாணுலிங்கம் தெரியும். ஆனால் உள்ளே இவ்வளவு விவரங்கள், சாதிச் சண்டைகள், மதவெறி, இஸ்லாமியர் ஒன்றுபட்டு ஒரு அலிக்கு ஓட்டு போட்டது…. கருணாநிதியின் ஓலங்கள், காங்கிரஸ் கட்சியின் இன்றைய அவலம், வெட்கம் கெட்டத் தனம்……நினைவிருக்கிறதா, ஒரு காங்கிரஸ் காரர் தான் காமராஜரின் வரலாறு எழுதி அதை வெளியிடத் தகுந்தவர் கருணாநிதி தான் என்று வெளியீட்டு விழா நடத்தியது, பீட்டர் அல்ஃபோன்ஸோ 3ம் தேதி கருணாநிதி புகழ் பாடியது…….என்ன சொல்ல.தர்மங்கள்மாறிவிட்டன. நன்றி அரவிந்தனுக்கும் அவர் நம் வீட்டு வாசலுக்கு வந்து அறிமுகப்படுத்தும் துரைசாமி, ஜோ தமிழ்ச் செல்வனுக்கும்.
‘தமிழனத் தலைவர்’ தேவை ஏற்படின் சாதீயத்தலைவராகவும் மாறிவிடுவார் என்பதை ‘பளிச்’செனக்காட்டுகிறது.சந்தர்ப்பவாத அரசியல் செய்வதில் அவருக்கு நிகர் அவரேதான்.
சாதி வெறியர்களும், மதவெறியர்களும் தான் கருணாநிதி அவர்களின் பின்னர் அணிவகுப்பார்கள். கலைஞரை துதிபாடி ஆலவட்டம் வீசியவர்கள் பலர் அத்தகையோரே. காமராஜருக்கு எதிராக கருணாநிதி அவர்கள் 1969-ல் கொள்கைப்போராட்டம் எதுவும் நடத்தவில்லை. மாறாக , ஸ்தாபன காங்கிரஸ் கட்சியின் செல்வாக்கு வளர்ந்துவிட்டால், மீண்டும் ஆட்சியை காமராஜர் பிடித்துவிட்டால், பதவி தன் கையை விட்டு போய்விடுமே என்ற அச்சத்தில் தான் வாழ்வை நகர்த்தினார். ஏனெனில் அவர் ஒரு பதவிப்பித்தர் மட்டுமே. மேலும் திமுகவுக்கு கொள்கை என்று எதுவும் கிடையாது. திராவிடநாடு, இந்திஒழிப்பு, ஆரியர் எதிர்ப்பு, பார்ப்பனர் எதிர்ப்பு என்பதெல்லாம் , உதவாத சரக்கு என்பதை வெளிப்பட சொல்லாமல் , ஒவ்வொரு காலக்கட்டத்தில் அந்த இயக்கத்தால் கைவிடப்பட்டன. கடவுள் எதிர்ப்பு , அல்லது நாத்திகம் என்பதும் திகவிலிருந்து திமுக பிரிந்தவுடனேயே, ஒன்றே குலம் ஒருவனே தேவன் என்று ஆகிவிட்டது. எனவே கருணாநிதி அவர்கள் நடத்திய அரசியல் ஒரு கொள்கை அரசியல் அல்ல. கொள்ளை அரசியல் என்று வேண்டுமானால் சொல்லலாம். பொதுச்சொத்தை எப்படி சூறை ஆடலாம் என்பதனை, அவருக்கு பின் வந்த பல அரசியல்வாதிகளும் அவரை பார்த்து தான் , விஞ்ஞான பூர்வமான ஊழல் செய்யும் கலையை பயின்றனர்.
ஆனால் கருணாநிதி 1996-2001 காலக்கட்டத்தில் நல்ல ஆட்சிதான் வழங்கினார். தனியாக திமுக 2001-ல் போட்டியிட்டிருந்தால் , நிச்சயம் வென்றிருக்கும். எல்லா ஜாதிக்கட்சி தலைவர்களையும் சேர்த்துக்கொண்டு , கூட்டணி அமைத்தார்.அன்றே அவர் தோல்விக்கு அவரே அஸ்திவாரம் போட்டுக்கொண்டார். அண்ணா, எம் ஜி ஆர் பெரியார் , காமராஜர் ஆகிய தலைவர்கள் பெயரில் மாவட்டங்களும், அரசு பஸ் போக்குவரத்து கழகங்களும் இருக்ககூடாதாம் இருந்தால் ஜாதிக்கலவரம் வருமாம். ஆனால் இதே தலைவர்கள் பெயரில் பல்கலைக்கழகங்கள் மட்டும் இருக்கலாமாம். அதனால் ஜாதி கலவரம் வராதாம். இந்த பித்தலாட்டமான செயலை பார்த்து, குப்பனும் சுப்பனும் அப்போதே இவர் ஆட்சிக்கு ஆப்பு வைத்து விட்டான். ஆனால் 2004-லே மத்திய அரசில் அவர் சேர்ந்தபின்னர் , டூஜீ – ஒரு கடல் சுனாமி போல வந்து 2011-ல் அவர் கட்சியை சுருட்டி விட்டது. காமராஜர் உயிருடன் இருந்தபோது, அவரது கட்சி வளர்ந்து மீண்டும் ஆட்சியை பிடிக்க கூடாது என்று எல்லா தகிடு தத்த வேலைகளையும் செய்தார். அதே போல, எம் ஜி ஆர் தனிக்கட்சி கண்ட 1972- அக்டோபருக்கு பின்னர், தூக்கமின்றி அலைந்து , எம் ஜி ஆரை எப்படியாவது அரசியலில் இருந்து விரட்டிவிடவேண்டும் என்று தலைகீழாய் முயன்றார். கருணாநிதி அவர்கள் ஒரு பச்சை சந்தர்ப்பவாதி தான்.
ஜூலை-1979-ல் , தஞ்சை பாராளுமன்ற இடைத்தேர்தலின் போது இரத்தக்காட்டேரி இந்திரா.
செப்டெம்பர்- 1979- ல் – நேருவின் மகளே வருக, நிலையான ஆட்சி தருக.
பிப்ரவரி -1998-ல் பாஜக , பாம்புகள், பண்டாரங்கள், பரதேசிகள்.
1999- ல் பாஜக ஆட்சி கவிழ்ந்து , மீண்டும் பாராளுமன்ற தேர்தல் வந்தவுடன் பாஜகவுடன் கூட்டு சேர்ந்துகொண்டார்.
பீட்டர் அல்போன்சு காங்கிரஸ்காரர் என்று நீங்கள் தவறாக புரிந்துகொண்டால் அதற்கு யார் என்ன செய்வது ? இப்போதைய காங்கிரஸ் கட்சி இரண்டு பிரிவாக உள்ளது, ஒன்று கருணாநிதி குடும்பத்துக்கு ஆலவட்டம் தூக்கும் பிரிவு. இன்னொன்று மூன்றாவது அணி, முப்பதாவது அணி என்று சொல்லிக்கொண்டு எவனாவது ஏமாந்தவன் தொடையில் கயிறு திரிக்கலாமா என்று , கூட்டணிக்காக வேறு கட்சிகளை நாடி அலையும் பிரிவு. சுயமாக தனியாக நின்று கட்சியை நடத்தும் தலைவர்கள் யாரும் அந்த கட்சியில் இல்லை. ஏனெனில் சீனாவுக்கு நம் நாட்டு நிலத்தை தாரை வார்த்துவிட்டு , வாய் மூடி மௌனமாக இருக்கிறார்கள். வரும் தேர்தலில் காங்கிரசும், காங்கிரசுடன் கூட்டணி சேரும் எந்த கட்சியும் தமிழ் நாட்டில் ஜாமீன் தொகையை திரும்ப பெறாது. உண்மையான காமராஜின் தொண்டர்கள் இன்றைய காங்கிரசில் இல்லை.
காமராஜர் கல்வி கூடங்களை திறந்தார். மு.(ட்டாள்). கருணாநிதி alias தட்சணாமூர்த்தி கள்ளு கடைகளை திறந்தார். இன்று கோடி கணக்கில் தன வாரிசுகளுக்கு சொத்து சேர்த்து வைத்துள்ள இவர்தான் அன்று “ஏழை பங்காளர் வாழும் மாடி வீட்டை பாருங்கள்” என்று பொய் போஸ்டர் அடித்து ஊரை ஏமாற்றினார். நாகர்கோவிலில் நடந்த இடைதேர்தலில் காமராஜர் போட்டி இட்டபோது “விருது நகரில் விலை போகாத மாடு நாகர்கோவிலில் நாடக மாடுகிறது” என்று “பண்பாளர்” அண்ணா பேசினார். “காமராஜ் பிளான்” என்று கூறி பதவியினை விட்டு விலகினார். ஆனால் 90 வயதாகினாலும் தலைவர் பதவியினை விட்டு விலகமருக்கிறார். ஒருவேளை திமுக வெற்றி பெற்றிருந்தால் இவர்தான் CM .ஆகா இருந்திருப்பார். 50 பேர் கொண்ட ஆபீஸ் னை கட்டிக்காக்கும் ஒரு அரசு ஊழியர்க்கு 58 வயதானால் மூளை சுறுசுறுப்பு குறைகிறதாம்! ஆனால் ஒரு மாநிலத்தை கட்டிக்காக்கும் ஒரு 90 வயதாகும் ஒருவருக்கு மூளை உற்சாகமாக இருக்கிறதாம்! KINGMAKER ஆக இருந்து இந்திராவை PM ஆக்கிய காமரஜருக்கே எதிராக மாறி கட்சியினை உடைத்தவர்தானே EMERGENCY புகழ் இந்திரா. இப்படி காமராஜருக்கு எதிராக இருந்த கருணா இந்திரா 1971இல் கூட்டணி அமைத்தனர். அந்த இந்திரா வழி வந்தவர்கள் தான் இன்றைய காங்கிரெஸ் காரர்கள். நல்லவர்கள் போல் வேஷம்போடும் நாசகாரர்கள். நரகாசூரர்கள். போலி மதவாதிகள்.அவர்கள் தீவிரவாதிகளின் வால் பிடிப்பவர்கள். அவர்களின் கைகளில் நாடுசிக்கிகொண்டு சின்னாபின்னமாகி கொண்டிருக்கிறது. இந்த நாடு என்னாகுமோ! கடவுள்தான் காப்பாற்றவேண்டும்.
//மத்தியாசுக்கு ஆதரவாக மு.கருணாநிதி பிரச்சாரம் செய்த போது ‘விருதுநகரில் விலைபோகாத மாடு வடசேரி சந்தைக்கு வந்திருக்கிறது, பல்லைப் பிடிச்சுப் பார்த்து வாலைப் பிடிச்சு பார்த்து ஓட்டு போடுங்கள் என்றார். //
கருணாநிதியின் அரசியல் நாகரிகம் யாருக்கும் வாய்க்காது.
பச்சை தமிழன் காமராஜரைப்பற்றி வந்தேறி கருணாநிதி ,
“விருதுநகரில் விலை போகாத மாடு ” என்று சொன்னது இங்குள்ள இன்றைய இந்திரா காங்கிரஸ் கட்சிக்காரன் எவனுக்காவது உறைக்கிறதா ? அப்படி உறைத்திருந்தால், 1979-முதல் பலமுறை திமுகவினருடன் கூட்டணி விஷம் அருந்தி , காங்கிரசை நடைபிணம் ஆக்கி இருப்பார்களா ? காமராஜரின் வாழ்க்கை வரலாற்றை வெளியிட கருணாநிதி தான் பொருத்தமானவர் என்று சொன்ன அந்த காங்கிரஸ் கட்சி அரசியல்வாதி என்ன மனித இனத்தை சேர்ந்தவர் தானா என்று அனைவரும் கேட்கிறார்கள். காலம் ஒரு நாள் மாறும் . தேசீய கட்சிகளின் கைக்கு விரைவில் ஆட்சி வரும்.தெளிவான கொள்கையோ, செயல்திட்டமோ இல்லாத திக, திமுக ஆகிய தற்குறிகளால் தான் , தமிழகம் இன்று மின்சாரம் , காவிரி தண்ணீர் , கச்சத்தீவு என்று ஒவ்வொன்றாக இழந்து தவிக்கிறது.1-9-1972 முதல் கலைஞர் வழங்கிய சாராயம் தமிழனை அழித்துவிட்டது. தமிழன் அழிந்த பின்னர் தமிழ் எப்படி வாழும் ? ஒரு வேளை இதுதான் இவர்களின் பகுத்தறிவோ ? தன்னுடைய மகன்கள் , மகள்கள் மற்றும் பேரன்பேத்திகள் வாழ்வுக்காக , தமிழ் நாட்டில் வாழும் தமிழினத்தையும், இலங்கையில் வாழ்ந்த தமிழினத்தையும் ஒரு சேர அழித்த , புண்ணியவானைப்பற்றி என்ன சொல்வது ?
1971 தேர்தலோடு தமிழகத்தில் காங்கிரஸ் குழி தோண்டிபுதைக்கப்பட்டது ………….அந்த ” காரியத்தை ” முன் நின்று நடத்தியவர் இந்திராகாந்தி என்றால் , அவரின் சுயநலத்தை கபடமாக பயன்படுத்திய கருணாநிதியும் ஒரு முக்கிய காரணம்……காமராஜர் , நிஜலிங்கப்பா , பிரம்மானந்த ரெட்டி போன்ற மூத்த தலைவர்களை வீழ்த்தும் வெறியில் இருந்த இந்திராவுக்கு மத்தியில் கிடைக்கும் எம்பிகள் மட்டுமே முக்கியமாக தெரிந்தனர்…….ஒரு எம் எல் ஏ சீட் கூட கொடுக்காமல் எம்.பி சீட் மட்டுமே கொடுத்து காங்கிரசை உறவாடிக்கேடுத்தார் கருணாநிதி……
கருணாநிதி காலை நக்கிப்பிழைக்கும் பீட்டர் அல்போன்ஸ் போன்ற அல்லக்கைகளுக்கு காமராஜரின் பெயரை உச்சரிக்கக்கூட தகுதி கிடையாது……..
இக்கட்டுரை எனக்கு குழப்பத்தைத் தருகிறது.
//மிகுந்த நேர்மையுடன் ஜோ தமிழ்செல்வன் இதுவரை மறக்கடிக்கப்பட்ட வரலாற்று சம்பவங்களை வெளிக் கொணர்கிறார். இதில் எந்த ஒரு சமுதாயத்தைச் சார்ந்தவர்களின் பெயரும் இருட்டடிப்பு செய்யப்படவோ அதை விட முக்கியமாக அவர்களின் பங்களிப்பு குறைத்து மதிப்பிடப்படவோ இல்லை.//
யார் மறைத்தார்கள் அல்லது எவரால் மறக்கடிக்கப்பட்டது? வரலாற்றாய்வாளர்கள் ஏன் எழுதவில்லை இவ்வளவு காலம்? அவர்களை எவரேனும் தடுத்தனரா? இப்போது ஜோ தமிழ்ச்செல்வனை ஏன் தடுக்கவில்லை?
இப்படி எவரேனும் வரலாற்றாய்வு எழுதினால் அதை பிறர் தடுக்கமுடியுமா? ஒரு தலைவரைப்பற்றி வரலாற்றாய்வு எழுதினால், அவர் வரலாற்றை அறிய விழைவோர் ஒன்று சேர்ந்து வெளியிடலாமே? வெளியிட்டிருக்கலாமே?
மிகுந்த பீடிகையுடன் ஏதோ ஒரு சதித்திட்டம் நடந்து வரலாறு மறைக்கப்பட்டிருக்கிறது என்கிறார்! அத்திட்டத்தையும் சேர்ந்து விளக்கியிருந்தால் குழப்ப்மிருக்காது.
மற்றொன்று நூல நாயகரைப்பற்றி. அவர் என்ன சாதி? அவரும் மீனவரா? மீனவர்களில் இந்துக்களும் இருப்பதுண்டா குமரிமாவட்டத்தில். அம்மாவட்டக்காரரான கட்டுரையாசிரியர் சொன்னால் நன்றி.
தேர்தல் பிரச்சாரத்தில் பலர் பலவிதமாகப் பேசுவது பெரிய விசயமில்லை. கருநாதியும் மற்றவர்களும் தேர்தலில் தங்கள் வேட்பாளருக்குத்தான் பேசுவார்கள். ஜோ தமிழ்ச்செல்வன் அப்படி பேசக்கூடாதென்கிறாரா? மேலும், அப்படி பேசுவதற்கு ஒரு வரை முறை இருக்கவேண்டுமென்கிறாரா?
அப்படியெல்லாம் நம் நாட்டில் கிடையாது சார்! எதிர்க்கட்சி வேட்பாளரைத் தோற்கடிக்க எதையும் பிரச்சாரம் பண்ணலாம் என்பது நம் நாட்டு தேர்தல் தர்மம். அதன்படி காமராஜர் விருதுநகரில் விலைபோகாத மாடு என்பது ஒரு சாதாராணமான சொற்றொடர் அதை இதைவிட கடுமையான தேர்தல் பிரச்சாரங்களோடு ஒப்பிடும்போது.
அரசியலில் இன்றைய எதிரிகள் நாளைய நண்பர்கள் என்பதுதான் தர்மம். கருநாநிதிக்கு காங்கிரசுக்காரர்கள் சாமரம் வீசுவது இன்றைய காலகட்டத்தில் சரி. 50 ஆண்டுகளுக்கு முன் எம அன்றைய தலைவ்ரைத் திட்டினார் எனவே அவருடன் சேர மாட்டோம் என்று கட்சி நடாத்தமுடியாது. கட்சியை மூடிவிட்டு வேறு வேலை தேடவேண்டியதுதான். அரசியல் வேறு. அதைப் புரிந்து கொள்ளுங்கள்.
இம்மாவட்டத்தில் பிறந்து இம்மாவட்டத்திலேயே வாழும் நுண்மான் நுழைபுலம் மிக்கவரான கட்டுரையாளரே துரைச்சாமியைப்பற்றி ஆய்வு செய்து எழுதியிருக்கலாமே? இப்படி பலரின் – அவரின் சொல்லின்படி – மறக்கடிக்கட்டப்பட்ட வரலாறுகளை வெளிக்கொணரலாமே?
ஜோ தமிழ்ச்செல்வன் ஒரு மீனவர். அவர் இன்னொரு மீனவரைப்பற்றி – துரைச்சாமியும் அவங்க ஜாதியாக இருந்தால் – அதுவும் தம் மாவட்ட மீனவரைப்பற்றி எழுதியிருப்பது கருநாநிதி அண்ணாத்துரையின் சுயசரிதையை எழுதுவது போலாகும். ஜோவைத் தவிர அரவிந்தன் நீலகண்டன் போன்றோர் எழுதியிருந்தால் துரைச்சாமியின் சரிதை நமபகத்தனமையை மேலும் பெற்றிருக்கும்.
ஜோவைக்குறை சொல்லவில்லை. தமக்குத்தாமே திட்டம் வரலாறு எழுதுவதில் இருப்பது பொதுவாக ஏற்றுக்கொள்ளப்படுவதில்லை என்பது என் தாழ்மையான அபிப்பிராயம்.
இன்னொன்று சொல்லி முடிக்கலாம். ஜோவின் நூலிலிருந்து போடப்பட்டவை ரொம்ப பழைய கதைகள். எல்லாருக்கும் தெரிந்தவையே. அம்மாவட்டம் மற்றும் நெல்லை தூத்துக்குடி மாவட்டக்காரர்களுக்கு 1967 தேர்தலில் நாகர்கோயிலில் என்ன நடந்தன என்று தெரியும். வேறு எதையாவது அரவிந்தன் நீலகண்டன் போட்டிருக்கலாம் என்பது என் தாழ்மையான அபிப்பிராயம்.
” எதிர்க்கட்சி வேட்பாளரைத் தோற்கடிக்க எதையும் பிரச்சாரம் பண்ணலாம் என்பது நம் நாட்டு தேர்தல் தர்மம். “-
” ஜோவின் நூலிலிருந்து போடப்பட்டவை ரொம்ப பழைய கதைகள். எல்லாருக்கும் தெரிந்தவையே.”
– ( Tamil on June 7, 2013 at 9:44 pm ).
எல்லோருக்கும் தெரிந்தவை அல்ல. கன்னியாகுமரி மாவட்டக்காரர்களில் சிலருக்கு தெரிந்திருக்கலாம். அதுவும் பழைய தலைமுறையினருக்கு. இன்றைய தலைமுறையினரில் யாருக்கும் தெரிய வாய்ப்பு மிக குறைவு.
எதிர்க்கட்சி வேட்பாளரை தோற்கடிக்க என்னவேண்டுமானாலும் பேசலாம் என்பது நம் நாட்டு தர்மம் அல்ல. சிலர் வஞ்சகமான பொய் பேசுகிறார்கள் என்பதால் அது தர்மம் ஆகாது. தமிழ் நாட்டில் கலைஞர் 1-9-1972 முதல் ஆரம்பித்து வைத்த இனிய சாராயக்கடைகளில்சுமார் 50 சதவீத மக்கள் குடிக்க ஆரம்பித்து விட்டார்கள் என்பதால் அது ஒரு தர்மம் ஆகிவிடாது. கூட்டமாக எது செய்தாலும் அது தர்மம் ஆகிவிடாது.
அரவிந்தன் நீலகண்டன் அவர்கள் இந்த நூலின் விமரிசனத்தை செய்திருக்காவிட்டால், காமராஜர் கன்னியாகுமரி பகுதி தமிழ் நாட்டில் சேர்க்கப்பட்டபோது , எவ்வளவு தெளிவாக அந்த தலைவர்களிடம் பேசியிருக்கிறார், எவ்வித பொய்யான வாக்குறுதிகளோ, ஏமாற்றுவித்தைகளோ இல்லாமல் , நேரடியாக யதார்த்தத்தை சொல்லி , என்பது பெரும்பான்மையோருக்கு தெரியாது போயிருக்கும்.
மேலும் கிறித்தவ மத வெறியர்கள் மதவாத அடிப்படையில் டாக்டர் மத்தியாசுக்கு ஓட்டுப்போடுவதை கடமையாகவும், காமராஜுக்கு அவர் இந்து நாடார் , சிவனை கும்பிடுபவர் என்றும் சொல்லி, பிரச்சாரம் செய்தபோது, அதே கிறிஸ்தவ மீனவர் இனத்தை சேர்ந்தவர்கள் , அந்த பிரச்சாரம் செய்தவர்களை மீறி, பெருந்தலைவர் காமராஜருக்கு பெருமளவில் வாக்களித்து , வெற்றிபெற செய்தனர் என்பது , ஏறக்குறைய அவசரநிலை முடிந்து , 1977- பாராளுமன்ற தேர்தல் நடந்தபோது , சர்வாதிகார இந்திரா தோற்கடிக்கப்பட்டு , ஜனநாயகம் வென்றது போன்ற ஒரு வெற்றியே ஆகும்.
இந்த தகவல் இளைய தலைமுறைக்கு சொல்லப்பட்டால் தான், நம் நாட்டு மக்கள் பிரிவினை வாத, மத வாத , ஜாதிவாத , மொழிவாத சக்திகளுக்கு துணைபோகிறவர்கள் அல்ல என்ற வலுவான உண்மை, அவர்கள் மனதில் பதிந்து , நம் ஜனநாயகத்தை மேலும் வலுப்படுத்தும். மற்ற மதங்கள் ஜனநாயகத்தை விரும்பாதவை. நம் இந்துமதம் பல ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்னரே, குடவோலை முறைமூலம் கிராம அளவில் உண்மையான ஜனநாயகம் கண்ட மதம்.
ஜனநாயகம் என்பது நம் நாட்டின் அடிப்படை வேர். அது வலுப்பெற , இதுபோன்ற நல்ல உண்மைகள் பரவுவது எல்லோருக்கும் நல்லது.ஜோ தமிழ் செல்வனின் பணி நிச்சயம் பாராட்டுக்குரியதே.
பழைய வரலாறு எதற்கு அய்யா என்று கேட்டால், பள்ளி கல்லூரி இவற்றில் சரித்திரம் போதிப்பதை உலகநாடுகள் எல்லாம் நிறுத்தும் போது நாமும் நிறுத்திவிடுவோம். சரித்திரம் படிப்பதால் , அதில் உள்ள பழைய கால விரோதங்கள் வெளியே தெரிந்து , பல மத, இன, மொழிக்காரர்களிடையே வீண் சண்டை மேலும் வளரும் என்று பலரும் அபிப்பிராயப்படுகிறோம். ஆனால் துரைசாமி போன்றோர் , குறுகிய மத வாத சக்திகளின் வேண்டுகோளை புறக்கணித்து , நியாயமாக செயல்பட்டிருக்கின்றனர் என்ற உண்மை அனைவருக்கும் தெரிவது நம் ஜனநாயகத்துக்கு வலு சேர்க்கும்.
@ tamil …..
// தேர்தல் பிரச்சாரத்தில் பலர் பலவிதமாகப் பேசுவது பெரிய விசயமில்லை.//
கழக கலாச்சாரம் தமிழனை எந்த அளவுக்கு தாழ்த்தி விட்டது…..? பிரச்சாரம் என்பது வேறு…..அவதூறு என்பது வேறு…….கருணாநிதி செய்ததெல்லாம் அப்பட்டமான , அநியாயமான ,அயோக்கியத்தனமான அவதூறுகள்……நனைந்த பனைமரம், காமராஜின் முதுகுத்தோலை உரித்தால் இரண்டு டமாரம் செய்யலாம் . என்பதெல்லாம் உங்களுக்கு பிரச்சாரமாக தெரிகிறதா? கழகங்களின் பிரச்சார பாணிஎல்லாம் மனித நாகரீகத்துக்கே எதிரானவை…..
அப்போது மட்டுமல்ல……இரண்டு வருடங்களுக்கு முன்பு கூட , தான் முதல்வராக இருந்தபோது காமராஜருக்கு தேர்தல் பிரச்சாரத்தின்போது ஏ.சி ரூம் கொடுத்ததாகவும் , அந்த நன்றிக்காக நான் கருணாநிதிக்கு எதிராக பிரச்சாரம் செய்யமாட்டேன் என்று காமராஜர் மறுத்துவிட்டதாகவும் ஒரு அண்டப்புளுகை அவிழ்த்துவிட்டிருந்தார் ….
//அன்றைய தலைவ்ரைத் திட்டினார் எனவே அவருடன் சேர மாட்டோம் என்று கட்சி நடாத்தமுடியாது //
உண்மை……ஆனால் கருணாநிதி திட்டுவதோடு நிற்கவில்லை……காங்கிரசை கிட்டத்தட்ட ஒழித்தே விட்டார்…..எம்ஜிஆர் கட்சி ஆரம்பித்து காங்கிரசோடு கூட்டணி வைத்த பின்பே காங்கிரஸ் மீண்டும் தலையெடுத்தது ……
மற்றொரு விஷயம்…………அன்றைய காமராஜரின் காங்கிரஸ் வேறு ………………….. ” வெள்ளையனே வெளியேறு ” போராட்டத்தின் நூற்றாண்டு விழாவை ,ஒரு வெள்ளைக்காரியின் தலைமையில் கொண்டாடும் இன்றைய கோமாளிகளின் ,கொள்ளையர் காங்கிரஸ் வேறு…….
Tamil நானும் குமரி மாவட்டத்தை சார்ந்தவன்தான், ஆனால் எனக்கு இதில் குறிப்பிடப்பட்டவைகளில் பல விசயங்கள் தெரியாது, தாணுலிங்க நாடார் பற்றி இந்து முன்னணியை ஆரம்பித்தவர் என்று மட்டுமே தெரியும், ஆனால் அவருக்கும், நேசமணிக்கும் நடந்த விவாதம் இந்த கட்டுரை மூலல்ம்தான் தெரியும், மேலும் இது புத்தக விமர்சன கட்டுரைதான், இந்த இணைய தளத்தில் வருகின்ற அனைத்தையும் நீங்கள் படிக்கவேண்டும் என்ற கட்டாயம் இல்லை, என்னைப்போல் இந்த மாதிரியான கட்டுரைகள் மூலம் தகவல்கள் தெரிந்து கொள்ளவிரும்புவர்கள் இதை படித்துவிட்டு போகட்டுமே! உங்களுக்கு தெரியும் என்றால் ஒதுங்கி கொள்ளுங்கள்.
வேறு சமுதாய ஆள் எழுதியிருக்கலாம்தானே! என்கிறீர்கள், குமரி மாவட்ட மீனவர்களில் எத்தனை பேர் அவர்கள் சார்ந்திருக்கும் மதத்தின் குறைகளை சுட்டிக்காட்ட முன்வருவார்கள் என நீங்கள் எதிர்பார்க்கிறீர்கள்? பைபிள் கிரிச்துவர்களால்தான் எழுதப்பட்டதே தவிர, மற்றவர்களால் அல்ல, ஆக ஒரு மீனவரை பற்றி இன்னொரு மீனவர் எழுதுவது தவறில்லை, அரவிந்தன்தான் அனைத்தையும் ஆராய்ந்து எழுதவேண்டும் என்றில்லையே! இங்கு தமிழ்செல்வன் எழுதியுள்ளார்கள், அதுபோல் நீங்களும் முயலலாமே!
அரசியல் எதிர்ப்பு, நண்பன், விரோதி, பிரச்சார யுக்தி,……. அனைத்தும் சரி, இந்த கெட்ட அனைத்துக்கும் ஆணிவேர் திராவிட கட்சிகள் அதிலும் கருணாநிதிதான் காரண கர்த்தா என்பதை ஒத்து கொள்கிறீர்களா? இவர்களின் பேச்சை கேட்டு அரசியலால் குடும்பத்துக்குள் விரோதத்தை வளர்த்து கொண்டவர்கள் எத்தனை பேர்? அதற்கு வித்திட்ட கருணாநிதி தானை தலைவரா?
ஆக மொத்தத்தில் உங்கள் மறுமொழி ஏதோ ஒரு முரண்பட்ட மனதுடன், வெறுப்புடன் உங்களால் பாதிக்கப்பட்டுள்ளது என நினைக்கிறேன்.
அருமையான கட்டுரை
Mr Sadasivan!
இன்றைய சந்ததியருக்கு – அவர்கள் எம்மாவட்டத்தைச்சேர்ந்தவர்களாகயிருப்பினும்- புதியவை; சொல்லப்படவேண்டுமெனபதில் இருவேறு கருத்துக்கள் இருக்கா. இருப்பினும் எனக்கு அவை ஒன்றும் பெருங்குற்றத்தைச்சாற்றியதாகத் தெரியவில்லை. இதைவிட நல்ல எடுத்துக்காட்டுக்கள் அந்நூலில் இருக்கலாம் என்பது என் கணிப்பு.
போகட்டும். கருநாதிக்கே வருவோம். தி மு கதான் தேர்தல் கலாச்சாரத்தை படிகுழியில் தள்ளியது என்பது ஒரு வாதமே அன்று. ஏனென்றால், இக்காலகட்டத்தில் நின்று பார்க்கும்போது, எக்கட்சியும் தேர்தல் கலாச்சாரத்தை கீழே தள்ளித்தான் விடும். விட்டுக்கொண்டுமிருக்கிறது. காங்கிரசு இல்லையா? கம்யூனிஸ்டுகள் இல்லையா? பிஜேபி மட்டும் தனியன்று. அவர்களும் தேர்தலுக்காக எதையும் பேசி எவருடன் கூட்டுவைக்கத்தயார். தில்லி மாநில அரசுக்கு மக்களின் நம்பிக்கையோடு ஆட்சியைப்பிடித்த பிஜேபியினர் அம்மக்களாலேயே தூக்கியெறியப்பட்டார்கள் மறுதேரதலில். காரணம் அவர்கள் செய்த, செய்யாதவைகளிலாலே. எனவே ஷீலா தீட்சித்தை வைத்தர். அவரும் இன்று மோசம். என் கருத்து எக்கட்சியும் புனிதரன்று இன்றைய அரசியலில். இதை மறுப்போருக்கு மனசாட்சியில்லை என்பது தேற்றம்.
இராமர் கோயிலைக்கட்டுவோம் என்று ஆட்சியில் அமர்ந்த பிஜேபி கட்டியதா? இல்லை. பதவி வந்ததும் அனைத்தும் பறந்து போம்.
தமிழகத்தில் கழகத்தில் மேலே தூடனை பொழியும் நீங்கள் தேர்தல் கலாச்சாரம் அனைத்து மாநிலங்களிலும் அனைத்துக்கட்சிகளினாலும் குழிதோண்டி புதைக்கப்பட்டு உமிழப்படுகின்றது என்ற உண்மையை மறுப்பீர்களா? உங்கள் திருப்திக்காக தமிழ்நாடுதான் மோசம் என்று சொல்லிக்கொள்ளுங்கள். வேறென்ன?
வரலாறு மறைக்கப்படுகிறது; இருட்டடிக்கப்படுகிறது. இதோ இவர்தான் அதை வெளியில் கொண்டுவந்தார் என்பவர்களுக்கு மீண்டும் சொல்வேன்.
இவ்வாதத்தில் எட்டுணையும் சரக்கில்லை. ஏன்?
ஜோவின் படத்தைப்பாருங்கள். என்ன வயதிருக்கும் 30 லிருந்து 40 போடலாமா/ ஆக, நூலில் காட்டப்படும் காட்சிகள் நடந்தேறிய போது அவர் குழந்தை. ஒருவேலை பிறந்திருக்கவே மாட்டார். கிட்டத்தட்ட 50 ஆண்டுகளுக்குப்புறம். வளர்ந்து பெரியவனான பின் இவர் எழுதி நமக்குச் சொல்கிறார். இந்த இடைக்காலத்தில் ஏன் பிறர் எழுதவில்லை? அப்படி எழுதினால் கருநாதி தடுத்திருப்பாரா? அவரின் ஆட்சிக்காலத்தில் வரலாற்றறிஞர்கள் எழுதிய நூலுக்காக சிறையில் வாடினரா? அவர்கள் நூலக்ள் தடை செய்யப்பட்டனவா? எழுத்துச்சுதந்திரம் எமெர்ஜென்சி காலத்தில் இந்திராவால் மட்டுமே தடை செய்யப்படது.
ஆக ஒன்றுமே நடக்கவில்லை. ஆனால் ஏன் ஒருவரும் எழுதவில்லை. காரணம் சோம்பேறித்தனம். இதையல்லவா ஒத்துக்கொள்ள் வேண்டும்? மாறாகா, அரவிந்தன் நீலகண்டன் போடும் பீடிகை என்ன? வரலாறு மறைக்கப்ப்பட்டது; இருட்டடிக்கப்பட்டது.
இதைப்போன்று பலவரலாறுகள் மறைக்கப்படவேயில்லை. எழுதப்படவில்லை என்பது மட்டுமே.
மேலும்…
முரசொலி மாறனால் கழக வரலாறு என்ற நூல் யாக்கப்ப்ட்டது. எப்போது/ அப்போது. இன்று புதிய பதிவாக தினகரனால் விற்பனை செய்யப்படுகிறது. அவ்வர்லாறு பொய் புனைகதைகள் என்றால் அன்றல்லவே பதில் வரலாறு எழுதப்பட்டிருக்கவேண்டும்? ஆனால் இப்போதுதான் மலர்மன்னனால் – எனக்குத்தெரிந்தவரையில் – எழுதப்பட்டு விற்பனையாகிறது.
அதைப்போல, 40 களில் அண்ணாத்துரை ஆரிய மாயை என்ற சிறுநூலை யாத்தார்? எவருமே திராவிட மாயை எழுதவில்லை. இன்று, 60 ஆண்டுகளுக்குப்பின்னர் சுப்புவால் திராவிட மாயை எழுதப்பட்டு விற்பனையாகிறது.
பிரேக்கிங் இந்தியாவை எழுத அரவிந்தன் நீலகண்டன் – மல்ஹோத்ரா ஜோடிக்காக 60 ஆண்டுகள் காக்க வேண்டியிருக்கிறது.
போகட்டும். இரு வகை வரலாறுகளும் இன்று சந்தையில் கிடைக்கின்றன. அதில் இப்போது எழுதப்பட்ட வர்லாறு வெகு வேகமாக விற்பனை. விக்கிப்பீடியாவின் படி, பிரேக்கிங் இந்தியா பெஸ்ட் செல்லர் லிஸ்டில். மலர்மன்னனின் திராவிட வர்லாறு புனைவுகள் நன்றாக விற்பனை என்று கேள்வி.
ஆக, எதற்காக அபால்ஜெடிக் டோன். எதற்காக அவ்வரலாறு எழுத்ப்பட்டு மக்கள் ஏமாற்றப்பட்டார்கள் என்ற விண்ணப்பம்? இரண்டுமே பொதுவெளியில் இருக்க, மக்கள் வாங்கிப்படித்து அவர்களாகவே முடிவு செய்யட்டும்.
காரணம் எவரும் எதையும் எழுதி வெளியிடலாம் வரலாறு என்று சொல்லி – எத்தடையும் இல்லையல்லவா?
To SanrOn
//கழக கலாச்சாரம் தமிழனை எந்த அளவுக்கு தாழ்த்தி விட்டது…..? பிரச்சாரம் என்பது வேறு…..அவதூறு என்பது வேறு…….கருணாநிதி செய்ததெல்லாம் அப்பட்டமான , அநியாயமான ,அயோக்கியத்தனமான அவதூறுகள்……நனைந்த பனைமரம், காமராஜின் முதுகுத்தோலை உரித்தால் இரண்டு டமாரம் செய்யலாம் . என்பதெல்லாம் உங்களுக்கு பிரச்சாரமாக தெரிகிறதா? கழகங்களின் பிரச்சார பாணிஎல்லாம் மனித நாகரீகத்துக்கே எதிரானவை…..//
மனித நாகரீகம் என்பது நிரந்தரமான ஒன்றன்று. நாகரிகத்தைக்கடவுள் படைக்கவில்லை. அது மனிதனின் கட்டமைப்பே.
அன்றியும், ஒருவனின் நாகரிகம் அவனைச்சுற்றியுள்ள சமூகத்தின் நாகரீகத்தை ஒப்பிட்டே கணிக்கப்படும். ஊரெல்லாம் ஆடையில்லாமிலிருக்கும்போது இவனின் நிர்வாணமும் நாகரீகமே. எனவே கருநாதியின் போக்கு மனித நாகரிகமே இல்லையென்பது கருநாதியின் வெறுப்பாளர்களின் சுய கருத்தே.
பனைமரம், தோல் என்று நீங்கள் எழுதியது கட்டுரையில் சொல்லப்படவில்லை. எனக்கென்று பொது கருத்துண்டென்றால், அதன்படி அப்பேச்சு தேர்தல் அநாகரிகம். மனித நாகரிகம் என்ற் சொல்லெல்லாம் மிகை.
//மற்றொரு விஷயம்…………அன்றைய காமராஜரின் காங்கிரஸ் வேறு ………………….. ” வெள்ளையனே வெளியேறு ” போராட்டத்தின் நூற்றாண்டு விழாவை ,ஒரு வெள்ளைக்காரியின் தலைமையில் கொண்டாடும் இன்றைய கோமாளிகளின் ,கொள்ளையர் காங்கிரஸ் வேறு…….
//
சபாஷ். ஒவ்வொரு தமிழ் இந்து கட்டுரையாளரும் பின்னூட்டமிடுவோரும் மேலே உள்ள உணமையை நினைவில் வைத்துக்கொண்டு எழுதினால், நான் இடைபுக வேண்டிய அவசியமே இராது. அன்று காமராஜரை இழிவுபடித்திய்வரை வைத்து இன்று காமராஜரின் சிலையைத் திறக்க வேண்டுகிறார்கள் காங்கிரசுக்காரர்கள் என்ற எள்ளலகள் எழுதப்பட்டிருக்கா.
அடுத்து, அன்றைய காங்கிரசு தலைவர்கள் வெள்ளையர் ஆட்சியில் பிறந்து விடுதலைப்போராட்டம் செய்தோர். வெள்ளையர் சென்ற பின், அவர்கள் நம் நாடு நற்றிசையில் பயணிக்கும் என்றும் அப்படிச்செல்ல நாம் முனைவோம் என்றா தாகம் கொண்டார்கள். அது நிராசையாகபோய் பலர் வேதனையில் மாண்டார்கள்.
அவர்கள் காலம் போய்விட்டது. இன்று சர்ச்சில் சொன்னதே உண்மையாகி விட்டது. நாம் சென்ற பின் இன்னாடு கயவர்கள் கைகளின் சென்றடைந்து தவிக்கும் என்றார்.
பணம, பதவி சுகம், ஆசை, பேராசை என்று தலைவர்கள் மட்டுமன்று; பொது சமூகமே மாற, நீங்களே அக்காலத்தைப்பற்றி நினைவுகளைச்சுமந்து கொண்டு வாழ்கிறீர்கள். இல்லையா? ஆனால் அதுவும் ஒரு சுஹம். டே டீரிம்ஸ் கிவ் சம் பீரீஃப் பிளஷர் !
To M Periasamy
//ஜோ தமிழ் செல்வனின் பணி நிச்சயம் பாராட்டுக்குரியதே.//
அன்னாரின் நூலை எவரும் பழிக்கவில்லை. அஃதேன் இவ்வளவு காலமாக எழுதப்படவில்லை என்றுதான் கேட்கப்படுகிறது.
மதவுணர்வுகளைத்தூண்டி வாக்குகளைக்குறிவைப்பது நம்நாட்டுத்தேர்தல் நாகரிமாகும். மதம், இனம், ஜாதி என்று எல்லாமே தேர்தல் பிரச்சாரத்தின் கருவிகள்.
எனவே மத்தியாசின் மதத்தைக்காட்டி வாக்குகளைத்தேடியது உங்கள் பார்வையில் குற்றம். எதார்த்த பார்வையில் வியப்பன்று. சரியே.
ஆல் இஸ் ஃபேர் இன் லவ், வார் அன்ட் பாலிடிக்ஸ்.
இதையுணர்ந்தவன் ஆட்சியைப்பிடிப்பான். உணராதவன் கனவுலகில் பிடிப்பான்.
அவ்வளவுதான்.
எல்லாவரலாறுகளும் அவரவர் வழியிலே எழுதப்படட்டும். நீங்கள் சொன்ன அதே ஜனநாயகம் பலவகைப்பட்ட வரலாறுகளை அனுமதிக்கிறது.
ஆக, நீங்களும் நானும் ஒரே கருத்துக்குத்தான் வருகிறோம்.
தர்மம் என்ற சொல் ஒரு சிலேடையாகத்தான் எழுதப்பட்டது. கொள்ளை இலாபமே இன்றைய வியாபார தர்மம் என்றால் அதை உடனே தர்மம் கிடையாதென்று வாதிக்காதீர்கள். ஒரு சிலேடை.
இதன்படி,
தேர்தல் தர்மம் என்பது மத இன ஜாதி உணர்வுகளைத் தூண்டியும் அவதூறுகளை அள்ளி வீசியும் சினிமாக்களை எடுத்துக்காட்டியும் செய்வதுதான். வெற்றி ஒன்றே குறிக்கோள்.
கடந்த உலகக்கோப்பை காலபந்து இறுதிப்போட்டியைப்பார்த்திர்களா? எப்படியாவது கோப்பையை வென்றுவிட வேண்டுமென்று இரு போட்டியாளர்களும் டிஃபெண்சிவ் மெத்தேடையே வைத்தார்கள்.
வெற்றியடைந்தவனுக்குத்தான் கைதட்டல், தோல்விய்டைந்தவன் எங்கே போனான் போட்டிக்கப்புறம் என்று எவருமே கேட்பதில்லை.
//ஆனால் கருணாநிதி திட்டுவதோடு நிற்கவில்லை……காங்கிரசை கிட்டத்தட்ட ஒழித்தே விட்டார்…..எம்ஜிஆர் கட்சி ஆரம்பித்து காங்கிரசோடு கூட்டணி வைத்த பின்பே காங்கிரஸ் மீண்டும் தலையெடுத்தது //
கருநாநிதியின் பங்கு சிறுபங்கு. அவர் அதைச்செய்தே ஆக வேண்டும். அரசியலில் சரி. எப்படி ஒரு பிரபலமான கம்பெனியை வீழ்த்தி வெற்றி கொள்ளமுடியவில்லையென்றால், அக்கம்பெனியையே விலைக்கு வாங்கி தம்மை மட்டும் நிலைகொள்ளவைப்பது வியாபார உத்தியோ அப்படி இன்னொரு கட்சியை ஒழிப்பதுமாகும். ஒழிப்பதற்கு அவர்கள் எம் எல் ஏக்களையே விலைக்கு வாங்குவதை குதிரை வியாபாரம் (horse trading) என்று அரசியல் விஞ்ஞானம் (political science) வகைப்படுத்தும். இன்று, ஜெயலலிதா தேதிமுகவை ஒழித்துக்கட்டிக்கொண்டிருக்கிறாரல்லவா?
Politics is an art of possible என்பது அப்பாடத்தைப்படிக்கும் மாணாக்கர் முதலாண்டிலே படிப்பது.
அவர் பங்கு போக, காங்கிரசு தன்னைத்தானே ஒழித்துக்கொண்டுவிட்டது எனப்துதான் தமிழக மக்கள் அனைவரும் கண்டது.
அப்படி கருநாதியே செய்தாரென்றால் அனைத்தையும், அவர் தொண்டர்கள் அவரை அரசியல் சாணக்கியன் என்பது உண்மையென்று நீங்கள் சொல்லாமல் சொல்கிறீர்கள்.
Good night