அவரிடமிருந்து கற்கவேண்டிய விஷயம் அவரது மனோபலம்தான். எந்த நிலையிலும் தளர்ந்து போக மாட்டார். அவருடைய அசாத்திய உழைப்பு அனைவரையும் ஆச்சர்யப்பட வைக்கும். இறுதிவரை தொடர்ந்த ஜபதபங்கள், வாசிப்பு, சிந்தனை, சொற்பொழிவு எல்லாமே ஆச்சர்யப் படுத்துபவை. இம்மி அளவுகூட விரதங்களில் சமரசம் செய்துகொள்ளாதவர். தமிழகம் தாண்டி இந்தியாவெங்கும் எத்தனை எத்தனை மருத்துவமனைகள், கல்வி நிலையங்கள், ஆதரவு நிலையங்கள்! எல்லாவற்றையும் தமது நேரடிப் பார்வையிலேயே நிர்வாகம் செய்தவர் சுவாமிகள்… ஸ்ரீ ஜெயேந்திரர் பயணித்த பாதை கடும் முட்களும் விஷ பாம்புகளும் நிரம்பியது. ஒவ்வொரு தலித் பகுதிக்கும் சென்றது, தலித் பூசகர்களிடம் கை நீட்டி பிரசாதம் வாங்கியது, தலித் தொழில் முனைவோருக்கு மடத்தின் சார்பில் உதவி வழங்கியது- என மடத்தின் போக்கை மாற்றியவர் அவர். அவரது மடத்தின் சூழலிலும் வரலாற்றிலும் அவர் எடுத்த முயற்சிகள் நிச்சயம் மிகப் பெரிய முன்னகர்வு….
View More அஞ்சலி: ஸ்ரீ ஜெயேந்திர சரஸ்வதி சுவாமிகள்Tag: சந்திரசேகரேந்திர சரஸ்வதி
ஜெயேந்திரர் விடுதலை…
சங்கரராமனை உண்மையில் கொலை செய்தது யார் என்கிற கேள்வி இயல்பாகவே எழுகிறது. காவல்துறை இந்த விஷயத்தில் ஜெயேந்திரரை சிக்க வைக்க வேண்டும் சங்கர மடத்துக்கு எத்தனை அவப்பெயரை ஏற்படுத்த முடியுமோ அத்தனை அவப்பெயரை ஏற்படுத்த வேண்டுமென்கிற ஒற்றை நோக்கத்தில் செயல்பட்டது என்பதுதான் உண்மை. குற்றவாளியை நீதிமன்றத்தில் நிறுத்தி தண்டனை பெற்று தர வேண்டும் என்பதைவிட சங்கர மடத்துக்கும் சங்கராச்சாரியாருக்கும் முடிந்த அளவு கெட்ட பெயரை பெற்றுத் தர வேண்டும் என்பதே லட்சியமாகக் கொண்டு செயல்பட்டது காவல்துறை… அதே சமயம் தொடர்ந்து கிறிஸ்தவ கல்வி நிலையங்களில் பெண்களுக்கு எதிரான கொடுமை நடந்து கொண்டுதான் இருக்கிறது. ஓமலூர் சுகன்யா நினைவிருக்கிறதா? ஜெயேந்திரரிடம் நடந்த அதே ஊடக ஓநாய்த்தனத்துடன் ஊடகங்கள் பாதிரிகளிடம் நடந்தனவா? வாராவாரம் விசாரணை செய்திகள் வதந்திகளாக ஊடகங்களில் காவல்துறையால் கசிந்துவிடப்பட்டனவா? எதுவும் இல்லை….
View More ஜெயேந்திரர் விடுதலை…