சந்திரயான் – கோல் முதல் கோள் வரை..

சந்திரயான்-3 மென்மையான தரையிறக்கம் (ஃசாப்ட் லேண்டிங்) செய்யும் அந்த தருணத்தை நேற்று இந்தியா முழுவதும் பார்த்து பரவசப் பட்டார்கள். இதுவே ஒரு சாதனையாக சொல்லலாம்.. சில அடிப்படையைப் புரிந்துகொண்டால் சந்திரயானை நன்கு அனுபவிக்கலாம். இந்தக் கட்டுரையின் நோக்கமும் அதுவே… மேலே செல்லும்போது, அதன் உள் இருக்கும் எரிபொருள் குறைவாகி, புவி ஈர்ப்பு மாறும். அப்போது அதன் வலிமையைச் சரியாகக் கணக்கிட்டு அதைக் கீழே இருந்து சரி செய்ய ஆணை பிறப்பிக்க வேண்டும்… கவருக்குள் இருக்கும் இன்னொரு முதல் கவருக்கு பேலோட் அதற்குள் இருக்கும் இன்னொரு கவர் அதற்கு பேலோட்…. இப்படி. சந்திரயான்விலும் இப்படித்தான் பல பேலோட் இருக்கிறது… நாம் வெள்ளையரைப் பார்த்தால் நம்மைவிட அவர்கள் ஒரு படி மேலே என்ற மனப்பான்மை நம்மையும் அறியாமல் நம்மிடம் இருக்கும். கடந்த சில வருடங்களாக நம் பாரதப் பிரதமர் மோடியின் ஆட்சியில் அந்த மனப்பான்மை படிப்படியாகக் குறைந்து வருகிறது. நேற்று நிலவை மென்மையாக முத்தமிட்ட போது அந்த மனப்பான்மை முழுவதும் மறைந்து ’மதி நிறைந்த நன்னாளானது’….

View More சந்திரயான் – கோல் முதல் கோள் வரை..

மங்கல்யானும் மறக்கப்பட்ட மனிதர்களும்

“செலவு? நம்மை போல வளரும் நாட்டின் பொருளாதாரத்துக்கு முடியுமா? அதுவும் அமெரிக்கா விதித்த தடைகள் எல்லாம் இருக்கின்றனவே”…. ”அதையெல்லாம் கவலைப்படாதீர்கள். இந்திய தொழில்நுட்பத்தால் அதிசயங்களை செய்ய முடியும். அரசு முழுமையாக துணை செய்ய வேண்டும்”…. சர்வ சிக்க்ஷா அபியானுக்கும் சந்திரயானுக்கும் இன்றைக்கு மங்கல்யானுக்கும் ஒரு பொதுத்தன்மை இருக்கிறது. அது இந்த செயல்திட்டங்களின் சிக்கனம் சார்ந்த செயல்திறமை. இயல்பாக நம் பண்பாட்டில் ஊறியது அது. … பாரதத்துக்கும் எனவே இந்துத்துவத்துக்கும், எதிராக மார்க்ஸியர்கள் ஏகாதிபத்தியவாதிகளுடன் கை கோர்ப்பதென்பது வரலாற்றில் எப்போதும் நடக்கும் துரோகம்தானே!

View More மங்கல்யானும் மறக்கப்பட்ட மனிதர்களும்

நட்சத்திரங்களின் கதை!

ஒரு நட்சத்திரத்தை எடுத்துக்கொண்டு அதன் வரலாறை, அது உருவாகும், உள்படல தூசுகளின் (Interstellar Dust ) மூலத்தில் இருந்து, அது தன்னொளியை நிறுத்திகொள்ளும் அந்திம காலம் வரையிலான நிகழ்வுகளை விளக்க முயலுவோம். நாம் இங்கே அந்த படலகதையின் உண்மைகளை சாட்சியங்கள் கொண்டு விளக்க முயலபோவதில்லை. ஆனால் இந்தக்கதையை, இன்று மாபெரும் அறிவியலாளர்கள் புரிந்து கொண்டிருக்கும் இயல்பிலேயே விளக்க தலைப்படுகிறோம்.

View More நட்சத்திரங்களின் கதை!

வேற்றுக்கிரகவாசிகள்: வீண் வதந்திகளா? அறிவியல் உண்மையா?

வேற்றுலகவாசிகள் என்றால் அறிவுடைய ஒரு பண்பாடாகத்தான் அவர்கள் இருக்க வேண்டுமென்பதில்லை. நிச்சயமாக நுண்ணுயிரிகளாவது இருக்க வாய்ப்புள்ளது அல்லவா? … அவர்களின் அறிவியலும் அறிதல் முறையும் எவ்வாறு இருக்கும்? அவர்களின் உலகில் இசை இருக்குமா? … விண்மண்டலங்களுக்கு இடையே, பல ஒளி ஆண்டுகளுக்கு அப்பால் விளங்கும் இரு வெவ்வேறு பண்பாடுகளுக்கு இடையே பிரபஞ்ச பொது மொழியாக கணிதம் அமையும். அத்வைதி இவ்வுண்மையை புன்னகையுடன் ஆமோதிப்பான்.

View More வேற்றுக்கிரகவாசிகள்: வீண் வதந்திகளா? அறிவியல் உண்மையா?

சந்திரயான், பாரம்பரிய அறிவியல் மற்றும் அரைகுறை ‘பகுத்தறிவு’…

இந்து மரபில் மட்டுமே இந்த ராகு-கேது தொன்ம மரபு பூமி-சந்திரன் ஆகியவற்றின் இயக்கத்துடனும் நிழல்களுடனும் தொடர்பு கொள்ளச் செய்யப்பட்டு அவை சாயாகிரகங்கள் என அழைக்கப்பட்டன. வானியல் கணித்தல்களில் ஒரு கணிதச்சமன்பாட்டின் அங்கமாக மாற்றப்பட்டன….இந்திய பாரம்பரிய் அறிவியல் சஞ்சிகையில் பஞ்சாங்கங்களின் மழைக்கணிப்பு குறித்து ஒரு ஆராய்ச்சி வெளிவந்தது.. போலி பகுத்தறிவு பேசி அரசியல் நடத்தி இன்றைக்கு பெரும் பொறுப்பில் இருக்கும் தமிழகத் தலைவர் ஒருவர் சந்திரயான் விண்கலம் குறித்து கவிதை என்கிற பெயரில் சில கருத்துக்களை கூறியிருக்கிறார். அதில் தெரியும் இந்து எதிர்ப்பு வக்கிரம் அந்த தலைவரது பகுத்தறிவின்மைக்கும் கட்டியம் கூறுவதாக அமைந்திருப்பதுதான் இதில் வேடிக்கை!

View More சந்திரயான், பாரம்பரிய அறிவியல் மற்றும் அரைகுறை ‘பகுத்தறிவு’…