ஐ டி வேலைக்கு வருபவர்கள் கடும் உழைப்புக்கும் நடுவிலும் சமையல் செய்து பாத்திரம் கழுவி கார் ஓட்டி கார் கழுவி கடைக்குப் போய் சாமான்கள் வாங்கி வாழ்ந்து கொள்வதில்லையா என்ன? இவர்களுக்கு மட்டும் ஏன் இந்தத் துரைத்தனம்?…. இந்தியாவில் இருந்து வேலையாட்களை அழைத்து வரும் உரிமை இவரைப் போன்ற உயர் அதிகாரிகளுக்கு மட்டுமே உண்டு. அதை எவருமே முறையாகப் பயன் படுத்திக் கொள்வதில்லை. பிரிட்டிஷ் கால எச்சமாக நாம் அரசாங்க அதிகாரிகளுக்குத் தேவைக்கேற்ற சொகுசு வாழ்க்கைகளை அளிக்கிறோம்…. நேர்மையும், உறுதியும் தன்னம்பிக்கையும் ஆற்றலும் செயல் திறனும் சிந்தனைத் தெளிவும் தீர்க்க தரிசனமும் கூடிய தலமை இந்தியாவுக்கு அமைய வேண்டும். அது அமைந்து ஆட்சி மாற்றம் ஏற்பட்டு ஊழலில்லாத நேர்மையான துணிவான பிரதமர் ஒருவர் இந்தியாவுக்கு வாய்த்து விட்டால் அமெரிக்கா போன்ற நாடுகளுக்கு இந்தியாவின் மீது தானாகவே மரியாதை பிறக்கும். இந்தியாவின் மீது நல்லெண்ணமும் உயர் அபிப்ராயமும் ஏற்படும். இந்தியர்களும் மதிக்கப் படுவார்கள்….
View More தேவையா நீ பணிப் பெண்ணே? – 2