தமிழ்நாட்டில் சித்தர் மரபு என்றால் அது புரட்சிகர ஆன்மீகம் என்பது போல ஒரு பிம்பம் உள்ளது. இமயமலை “நவநாத” சித்தர்களின் மகாகுரு கோரக்நாதர் தான் தமிழில் கோரக்கர் ஆகிறார். உ.பி. முதல்வர் யோகி ஆதித்யநாத் கோரக்நாத் சித்தர் பீடத்தின் தலைவர். ஆனால் அவரைக் குறித்து கீழ்த்தரமான வசைகள், அவதூறுகள், வெறுப்பு இங்கு பரப்பப் படுகிறது. அதைக் குறித்து ஒரு கண்டனம் கூட கிடையாது, மாறாக “சித்தர்” ஆசாமிகளும் கூட இதில் சேர்ந்து கொள்ளும் கொடுமை தான் இங்கு நடக்கிறது…
View More கோரக்கர் வழிவரும் யோகி ஆதித்தியநாத சித்தர்Tag: சித்தர் பாடல்கள்
சித்தர்கள் வேத மறுப்பாளர்களா: சுகிசிவம் கருத்துக்கு எதிர்வினை
‘ஓதுகின்ற வேதம்எச்சில்’ என்கிறார் சிவவாக்கியர். பார்த்தாயா வேதத்தை எச்சில் என்று சொல்லிவிட்டார் எப்படிப்பட்ட வேத மறுப்பாளர்! அடுத்த இரண்டாம் வரியில் மதியும் எச்சில் ஒளியும் எச்சில் என்கிறார். எனவே அவர் வேத மறுப்பாளர் மட்டுமல்ல. ஒளி மறுப்பாளரும் கூட என்று சொன்னால் எவ்வளவு அபத்தமோ என்று எழுதும் போதே, ’ஒளி என்றால் நெருப்பு. எச்சில் என்றால் நீர். எனவே ஆரிய ஒளியே திராவிட நீர்தான் என்று சிவவாக்கியர் சொல்லுகிறார்’ என்று அடுத்து காணொளி படைப்பாரோ என்று மனம் திடுக்கிடாமல் இல்லை… வேதமே தன்னை தானே பகடி செய்யும் தைரியம் கொண்ட நூல்தான். தன் தெய்வங்களை தானே கேள்வி கேட்கும் தைரியம் வேத ரிஷிகளுக்கு உண்டு… முருகனின் அன்னை சித்த சேனானியாகவும் வேதமாதாவாகவும் வேதத்தின் ஆத்மாகாவும் இருப்பாள் என்றால் முருகன் சித்த சேனனாகவும் சுப்ரமணியனாகவும் ஏன் இருக்க முடியாது?…
View More சித்தர்கள் வேத மறுப்பாளர்களா: சுகிசிவம் கருத்துக்கு எதிர்வினைபாரதி: மரபும் திரிபும் – 8
மதிமாறனின் பாட்டனார்கள்- திராவிட இயக்கப் போர்வாள்கள், “…அடிமையாய்க் கிடந்த தமிழை விடுதலை செய்து, எளிமையாக்கி வீதிக்குக் கொண்டுவந்து மக்கள்மயப்படுத்தியவன் பாரதி” என்று கூறி மதிமாறனின் முகத்தில் அறைகிறார்கள்… 1924இல் நடைபெற்ற வைக்கம் போராட்டத்தில் கலந்துகொண்டு சென்ற அத்துனை பேரும் (ஈவெரா உள்பட) பாரதியாரின் பாடலையே பாடிச் சென்றனர்… ஆனால் எல்லாச் சித்தர்களுமே சிவனை ஏற்றுக்கொண்டவர்கள், கடவுள் உண்டு என்பதை நம்புபவர்கள் என்பதை மட்டும் மதிமாறன் சொல்ல ம(றைத்து)றந்துவிட்டார்… அழுகணிச் சித்தரின் கண்ணம்மாவைதான், கடத்தி வந்து பாரதி தன் காதலியாக்கிக் கொண்டார் என்று மதிமாறன் குற்றம் சுமத்துகிறார்… வார்த்தைக்கு வார்த்தை, கம்பன், குறளை அப்படியே எடுத்துப் பயன்படுத்தியிருக்கிறான்…
View More பாரதி: மரபும் திரிபும் – 8