கவி குஞ்சர பாரதி தனது 12ஆம் வயதிலேயே கவிதைகள் இயற்றத் தலைப்பட்டு விட்டார். தமிழில் கீர்த்தனைகளும், பிரபந்தங்களும் கூட இயற்றத் தொடங்கினார். இவர் பாடல்களில் முருகப் பெருமானையே கருப்பொருளாக வைத்து பாடியிருப்பதைக் காணமுடிகிறது… இராமநாதபுரம் சமஸ்தானத்தின் அரசர் சேதுபதி மன்னரின் வேண்டுகோளை ஏற்று இவர் “ஸ்கந்தபுராண கீர்த்தனைகள்” எனும் பெயரில் முருகப் பெருமான் மீது பாடல்களை இயற்றியிருக்கிறார். அப்போது அவருக்கு வயது 55 ஆகியிருந்தது. அதன் பின்னர் இவர் அமைதியாகத் தன் கிராமத்தில் தானுண்டு தன் இசையுண்டு என்று கவிகள் இயற்றிப் பாடிக்கொண்டு வாழ்ந்து வந்தார்…
View More எப்படிப் பாடினரோ – 4: கவிகுஞ்சர பாரதிTag: சிவகங்கை
கைகொடுத்த காரிகை: மாற நாயனார் மனைவி
மாறனார் சிறிதும் தாமதிக்காமல் வீட்டின் கூரையிலிருந்த வரிச்சுகளை வாளால் வெட்டி எடுக்கிறார். அதைக் கொண்டு ஒருவாறு அடுப்பைப் பற்றவைத்துப் பின் ஈரநெல்லை வறுக்கிறாள். அதை அரிசியாக்கி உலையில் போட்டு சோறாக்கு கிறாள். சரி, உணவு தயாராகி விடும். வந்த விருந்தினருக்கு வெறும் சோற்றை மட்டும் எப்படிக் கொடுப்பது? யோசிக்கிறாள். மறுபடியும் கணவரிடம் போய் காய்கறி ஒன்றும் இல்லையே, என்ன செய்யலாம்? என்று இருவரும் சேர்ந்து யோசிக்கிறார்கள்… இக்கோயிலில் இருந்து சற்று தூரத்தில் மாறநாயனார் வாழ்ந்த வீடும், அவர் பயிர் செய்த நிலமும் இருக்கிறது. இந்நிலத்தை “முளைவாரி அமுதளித்த நாற்றாங்கால்’ (இறைவனுக்கு அமுதளிக்க நெல் விளைந்த வயல்) என்கிறார்கள். குருபூஜையன்று மாலையில் சிவன், அம்பாள், மாறநாயனார், அவரது மனைவி புனிதவதி ஆகிய நால்வரும் ஒரே சப்பரத்தில் எழுந்தருளி புறப்பாடாவது விசேஷம். அன்று சிவனுக்கு தண்டுக்கீரை பிரதான நைவேத்யமாக படைக்கப்படும்…
View More கைகொடுத்த காரிகை: மாற நாயனார் மனைவிசிவகங்கைச் சீமையின் வீரமங்கையர்
இந்தச் சூழ்நிலையில் காளையார் கோவில் கோட்டையோ போருக்கு ஆயத்தமாகத் தொடங்கியது. படைவீரர்கள் களைப்பைக் களைந்துவிட்டு அன்று அதிகாலை வேளையில் வேலுநாச்சியாரின் அவசர அழைப்புக் கேட்டு முக்கிய தளபதிகள் அனைவரும் கொலுமண்டபம் விரைந்தனர். அங்கே ராணி வேலுநாச்சியார், அவர்களுக்கு முன்னதாக வந்து காத்திருந்தார். தளபதிகளைக் கண்டதும் ராணி… இதில் நாம் தோல்வி அடைந்தால் இனி எத்தனை ஜென்மம் எடுத்தாலும் வெற்றி பெற முடியாது. நான் வெற்றிக்கு வழிகாட்ட ஒளியூட்டப் போகிறேன். என்னைத் தடுக்காதே,” என்று கூறியபடியே உடல் முழுவது நெய்யில் குளித்தபடி கோயிலில் இருந்த பந்தத்தோடு…
View More சிவகங்கைச் சீமையின் வீரமங்கையர்மறவர் மண்ணில் மதமாற்றம் செய்த பாதிரியார்
பூமிக்கு உரிமையுள்ள ஒருவனையுமல்லவா இந்த பாதிரியார் மதம் மாற்றிவிட்டார் என்ற கோபம், வருத்தம். ஆட்டைக் கடித்து, மாட்டைக் கடித்து கடைசியில் நம்மையுமா? சேதுபதியால் கோபத்தை அடக்கமுடியவில்லை… மறவர் படையினர் இந்தப் பாதிரியாரையும் அவருடன் வந்தவர்களையும் காளையார்கோயிலுக்குக் கொண்டு சென்றனர். அங்கு இவர்கள் சிறையில் அடைக்கப்பட்டனர்.. பாதிரியாரின்பால் இரக்கம் உண்டாகும்படி பிரசாரம் மேற்கொள்ளப் பட்டது மிகவும் திட்டமிட்டு நடத்தப் பட்ட செயல்பாடு..
View More மறவர் மண்ணில் மதமாற்றம் செய்த பாதிரியார்