மணிமேகலை 29 — கச்சி மாநகர் புக்க காதை

தன்முன் நிற்பது பதின்பருவத்தில் பருவவேறுபாட்டில் ஆண்களின் கோரப் பார்வைக்குத் தப்பி ஓடியொளிந்த ஒரு சாதாரணப் பெண்ணாக விளங்கிய அந்த மணிமேகலையல்லள், இவள் புதியவள், புத்த நெறியில் தன்னைக் கரைத்துக்கொண்டவள், அனைவரும் கைகூப்பித் தொழும் பெண்தெய்வமாக விளங்குபவள்,அவள் மீது கவிந்திருந்த கணிகையின் மகள் என்ற நிழல் முற்றிலும் விலகி புத்தஞாயிறின் கிரணங்கள் பூரணமாகப் பொலியத் தொடங்கிவிட்டது. இனி அவள் என் மகள் இல்லை. நான்தான் மணிமேகலையின் தாய்!

View More மணிமேகலை 29 — கச்சி மாநகர் புக்க காதை

பாத்திரங்கொண்டு பிச்சைபுக்க காதை – மணிமேகலை 16

துறவின் மிகக்கடினமான செயல், தான் என்பதை அறவே துறந்து, பசிக்கு உணவுவேண்டி, வேற்று இல்லத்தின்முன் நின்று, அம்மா உணவளியுங்கள் என்று அழைப்பதுதான். மாதவியின் கண்களில் நீர் நிறைந்தது. தான் பிச்சை எடுக்கிறோம் என்ற நினைப்பு மணிமேகலை முகத்தில் சிறிதும் இல்லை. மாறாக முகத்தில் புன்னகை மலர, “அம்மா! பத்தினிப் பெண்கள் இடும் பிச்சை, பெரும்பிச்சைகளில் சிறந்த பிச்சை. புண்ணியவதி. சோறு போடம்மா” என்று வேண்டிநின்றாள்.

View More பாத்திரங்கொண்டு பிச்சைபுக்க காதை – மணிமேகலை 16

சக்கரவாளக்கோட்டம் உரைத்த காதை [மணிமேகலை – 7]

எரிப்பவர்களும்,கொண்டுவந்து கிடத்துபவர்களும், குழிபறித்து அதில் இறந்த உடல்களை இடுவோரும், பள்ளத்தில் உடலைப் போடுபவர்களும், முதுமக்கள் தாழியில் போட்டுப் புதைக்க வருபவர்களும் இரவு-பகல் என்று பாராமல் வந்துபோய்க்கொண்டிருப்பதால் பலத்த ஓசை உடைய இடமாக அது இருந்தது… “இறந்த பிறகு உடலைப் பிரியும் உயிரானது, இப்பிறவியில்செய்த நன்மை-தீமைகளுக்கு ஏற்ப மறுபிறவி எடுக்கும் என்பதை அறிந்தவள்தானே நீ? பின் எதற்குக் கலங்குகிறாய்? உயிர் உடலைவிட்டு நீங்கியபின், அதனை மீட்டுத்தரும் ஆற்றல்கொண்டவளல்ல நான். தெரிந்துகொள்…”

View More சக்கரவாளக்கோட்டம் உரைத்த காதை [மணிமேகலை – 7]

மணிமேகலா தெய்வம் தோன்றிய காதை – [மணிமேகலை – 6]

“என்னவெல்லாம் கூறியிருப்பான்? கற்பில்லாதவள், தூய தவமற்றவள், வருணக்காப்பு இல்லாதவள், விலைமகள் என்று என்னவெல்லாம் கேவலப்படுத்தியிருப்பானா? இவனது பழிச்சொற்கள் எதையுமே பொருட்படுத்தாமல், என் மனம் ஏன் இவன்பால் செல்கிறது? இதுதான் காமத்தின் இயல்பா? நான் துறவறக் கோலம் பூண்டுள்ளது எல்லாம் வேடம்தானா? இதுதான் உண்மையென்றால், என்னுடைய நேர்மை அழியட்டும்!“

View More மணிமேகலா தெய்வம் தோன்றிய காதை – [மணிமேகலை – 6]

பளிக்கறை புக்க காதை – [மணிமேகலை – 5]

இன்று பல்வேறு திரைப்படங்களிலும் கதாநாயகனை அறிமுகம்செய்யும்போது அவனுடைய வீரபிரதாபத்துடன் அறிமுகப்படுத்துவதுபோல, உதயகுமாரனை ஒரு யானையை அடக்கும் நிகழ்ச்சியுடன் அறிமுகப்படுத்துகிறார். அதேபோல் தாமரைமீது துள்ளிய கயல்மீன் மீன்கொத்திப் பறவையிடம் சிக்காமல் தப்பியதைக் கூறுவதன்மூலம் மணிமேகலை உதயகுமாரன் கைகளுக்குச் சிக்காமல் தப்பிக்கப் போவதை குறிப்பால் உணர்த்துகிறார்.

View More பளிக்கறை புக்க காதை – [மணிமேகலை – 5]

மலர்வனம் புக்க காதை — [மணிமேகலை – 4]

கணிகையர் இல்லங்களில் பிறந்த பெண்களுக்கு இரண்டு வழிகள் உள்ளன. ஒருவழி பாட்டி சித்திராபதி கூறுவதுபோல சகல கலைகளையும் கற்றுக்கொண்டு பேர்பெற்ற கணிகையாக ஆடம்பரவாழ்வு வாழலாம், அல்லது அம்மாவைப்போல இளம்வயதில் துறவு மேற்கொண்டு புத்தபிக்குணியாக சமயவிற்பன்னர்களுடன் ஊர் ஊராக மதம்பரப்பச் செல்லலாம். இரண்டுமே ஒரு பெண்ணிற்கு இரண்டு உச்சங்களைத்தொடும் வாழ்க்கை. இதற்கு இடையில் ஒரு வாழ்க்கை உள்ளது. உரியபருவத்தில் காதல்மணவாளன் ஒருவனைக் கைப்பிடித்து, வேதியர் வேள்விவளர்த்து, தீவலம்வந்து, இல்லறம்தொடங்கும் வாழ்க்கையே அது.

View More மலர்வனம் புக்க காதை — [மணிமேகலை – 4]