இங்ஙனம் மூன்று மகத்தான ஆசாரிய பரம்பரையினரின் புனித சங்கமமாக விளங்கியவர் சுவாமி ஓங்காரானந்தர். சுவாமிகள் அடிப்படையில் ஒர் ஆசிரியர். அவரது மையமான பணி என்பது நமது ஞான நூல்களை ஆழமாகவும், முறையாகவும் தொடர்ச்சியாகவும் கற்பிப்பது என்பதாகவே இருந்தது… துறவியும் ஆன்மீகத் தலைவருமாக இருக்கும் ஒருவர் இந்து தர்மத்தை அவமதிக்கும் வெறுப்பு பிரசாரங்களுக்கு எந்தவகையில் உறுதியான எதிர்ப்பையும் எதிர்வினையையும் பதிவுசெய்ய முடியும், செய்ய வேண்டும் என்பதற்கான ஆதர்ச வழிகாட்டுதலாக சுவாமிகளின் இந்த நடவடிக்கைகள் அமைந்தன.
View More அஞ்சலி: சுவாமி ஓங்காரானந்தர்Tag: சுவாமி தயானந்த சரஸ்வதி ஸ்வாமிகள்
அஞ்சலி: பூஜ்ய சுவாமி தயானந்த சரஸ்வதி
1967 முதல், சுவாமிகள் வேதாந்தத்தை முறையாக, ஆழமாக அதன் அனைத்துப் பரிமாணங்களுடனும் கற்பிக்கும் பாடத்திட்டத்தை உருவாக்கி, நல்லாசானாக அமர்ந்து கற்பிக்கத் தொடங்கினார். தனது நீண்ட வாழ்நாளில், சுவாமிஜி, இது போன்ற பத்து 3-வருடக் கல்விப் பயிற்சிகளில் நேரடியாக மாணவர்களுக்குக் கற்பித்திருக்கிறார். இதன் மூலம் இனிவரும் தலைமுறைகளுக்கு வேதாந்த ஞானத்தை அதன் தூயவடிவில் அளிக்கத் தகுதிவாய்ந்த நூற்றுக் கணக்கான ஆசிரியர்களை அவர் உருவாக்கிச் சென்றிருக்கிறார்… 2000ம் வருடம் AIM For Seva என்ற பெயரில் ஒரு சிறப்பான அகில இந்திய சமூக சேவை இயக்கத்தை சுவாமிஜி தொடங்கினார். இந்த இயக்கம் இந்தியாவின் பல மாநிலங்களில் ஏழை எளிய மக்களுக்கு கல்வி, மருத்துவ சேவைகளை இலவசமாக வழங்கி வருகிறது…
View More அஞ்சலி: பூஜ்ய சுவாமி தயானந்த சரஸ்வதிகடவுள் என்றால் என்ன? – 2
சுவாமி தயானந்த சரஸ்வதியின் விளக்கங்கள் – ஈஸ்வரன் பௌதீக ஒழுங்கு முறைகளிலும், உயிரியல் ஒழுங்கு முறைகளிலும் வியாபித்து இருக்கின்றார். எனவே உயிரியலைப் பற்றித் தெரிந்துகொள்வது ஈஸ்வரனை பற்றி தெரிந்து கொள்வதே ஆகும். அதனால் இதுவும் புனிதமானது… என்னடா ஒரு எலிக்கு வேலை செய்யும் மருந்து நமக்கு அந்த வேலையை செய்வதா ! நாம் எலியைவிட மட்டமா என்பது உண்மை அல்ல. முத்துக்களை தாங்கி பிடிக்க அதன் இடையே கோர்க்கப்பட்ட நூல் இழைபோல் பிராணன் என்பது எல்லா உயிரினிடத்தும் உள்ளே இருந்து உயிருடன் இருக்கும் வரையில் தாங்கிப்பிடிக்கிறது… தர்மம் என்பது மனிதனுடைய தலையைப் போன்றது. அதுவே உங்கள் செய்கைகளை கட்டுப்படுத்துகிறது. இந்த கட்டுப்படுத்துதல் இல்லை என்றால் ஒருவருக்கு எது நல்லது, எது கெட்டது என்ற தெரிந்துகொள்ள வாய்பே இல்லை….
View More கடவுள் என்றால் என்ன? – 2கடவுள் என்றால் என்ன? – 1
சுவாமி தயானந்த சரஸ்வதி அவர்களின் விளக்கங்கள் – வேதம் இங்கே இருப்பது ஒரு ஈஸ்வரன் என்று சொல்லவில்லை, இங்கே இருப்பது எல்லாமுமே ஈஸ்வரன்தான் என்கிறது… ஒரு பௌதீக பேராசிரியர் சக்தி-பொருண்மை என்பதை கூறுகையில் E=mc2 என்கிறார். ஒரு எம்.எஸ்.சி. மாணவன் அவர் வகுப்பில் எழுந்து எனக்கு உங்கள்மேல் நம்பிக்கை இருப்பதால் எனக்கு அந்த சமன்பாடு பற்றி புரியாவிட்டாலும் பரவாயில்லை என்பது எப்படி முட்டாள் தனமோ அப்படித்தான் நான் கடவுளை நம்புகிறேன் என்பதுவும். இந்த அகிலமே ஈஸ்வரன் தான் என்றால் அது வெறும் நம்பிக்கை சார்ந்தது அல்ல; நாம் துருவித் துருவி ஆராய்ந்து புரிந்து கொள்ள வேண்டிய ஒன்றாகும்… .சிருஷ்டியும், சிருஷ்டிப்பவரும் கடவுள் தான் என்பது வேதம். இங்கே படைப்பும் படைப்போனும் வேறு வேறு இல்லை. எனவே இந்த ஜகத் என்பது ஈஸ்வரனின் விரிவாக்கமே அன்றி உருவாக்கம் இல்லை என்று புரிந்துகொள்ள வேண்டும்…..
View More கடவுள் என்றால் என்ன? – 1ஓராசிரியர் பள்ளி எனும் ஓர் உன்னத சேவை
ஆர்ஷ வித்யா பீடாதிபதி பூஜைக்குரிய சுவாமி தயானந்த சரஸ்வதி அவர்களின் ஆசியுடன், ஸ்ரீ விவேகானந்தா ஊரக வளர்ச்சிச் சங்கம் (Sri Vivekananda Rural Development Society) தமிழகத்தில் இத்திட்டத்தைச் செயல்படுத்தி வருகின்றது… குடிப்பழக்கம் இருக்கும் தகப்பன்மார்களை குழந்தைகள் வணங்குவதில்லை. தாயாரை மட்டும் வணங்குகின்றனர். அவமானப்படும் தகப்பன்மார்… இந்த நற்பணிக்கு நன்கொடை தருபவர்களுக்கு, அந்தத் தொகைக்கு வருமான வரியிலிருந்து, வருமான வரிச் சட்டம் – பிரிவு 35 AC கீழ் 100 சதவிகிதம் விலக்கு அளிக்கப்படுகிறது…
View More ஓராசிரியர் பள்ளி எனும் ஓர் உன்னத சேவை