க்ருபையாவது பிறர் படும் துன்பத்தைக் கண்டு பொறுக்கமாட்டாமை. ஜீவர்கள் ஸம்ஸாரத்தில் படும் துக்கத்தைக் கண்டு பொறுக்கமாட்டாமல் எம்பெருமானோடு இவர்களை சேர்ப்பதற்கு உறுப்பான முயற்சி செய்வதற்கு க்ருபை வேணும். பிராட்டி ஜனகராஜன் திருமகளாராய்த் தோன்றி அப்பெருமாளை மூன்றுதரம் பிரிந்து இம்மூன்று குணங்களை வெளிப்படுத்தினாள். நாம் அதுகொண்டு அறியலாம்… இந்தத் தேவியின் மனம் ராமனிடத்திலும், ராமனின் மனம் இந்த தேவியிடத்திலும் நிலைத்திருக்கின்றது. அதனால்தான் இந்த தேவியும், தர்மாத்மாவான ராமரும், இதுநாள் வரையிலும் உயிரோடு இருக்கின்றனர் என்கிறான் அனுமன். குளிர்ந்த பெரிய மலர் உந்தி வீட்டை உண்டாக்கி, அதில் உலகங்களை படையென்று நான்முகன் முதலியவர்களை உண்டாக்கியவன். அதையே திருவிளையாடல்களாகச் செய்யும் மாசற்றவனைக் கண்டீரோ? என்கிறாள் ஆண்டாள்…
View More ஸீதையின் மஹாசரித்ரமும் அஷ்டாக்ஷரத்தின் பொருளும் – 1Tag: ஜனகர்
“சீதையின் ராமன்” டி.வி. தொடர் – திரிபுகளும் பொய்களும்
இந்தத் தொடர், ராமாயணத்தை ‘சீதையின் பார்வையிலிருந்து’ சித்தரிக்கப் போவதாக சொல்லப்பட்டது. ஆனால், ஒரு மாதத்திற்குப் பின், இந்தத் தொடர் தன்னிச்சையாக ஒரு பாதையில் பயணிக்கத் தொடங்கி, வால்மீகி ராமாயணத்தின் மூலத்திலிருந்து முற்றிலும் விலகிவிட்டது.. மூலக் கதையை திரித்தது மட்டும் இல்லாமல், நவீன “மதச்சார்பற்ற” “முற்போக்கு” கருத்துக்களையும் அதன் மேல் திணிக்க முயற்சி செய்து, ஹிந்துக்களின் பண்டைய வரலாற்றின் ஒரு பகுதியாக, இதிகாசமாகவும் புனித நூலாகவும் கருதப்படும் ராமாயணத்தை கேலி செய்வது போல் அமைந்துள்ளது… ராம -லட்சுமணர்களுக்கும் மாரீசன்- சுபாகு தலைமையிலான ராட்சதர்களுக்கும் இடையே நடைபெறும் யுத்தம், அரசர்களுக்கும் பழங்குடி மக்களுக்கும் இடையே நடைபெறுவதாகக் காட்டப்படுகிறது ! இந்தத் தொடரை உருவாக்கியவர்களுக்கு ஆரியப் படையெடுப்பு தொடர்பான கதைகளின் தாக்கம் அதிகம் இருந்திருக்கும் போல…
View More “சீதையின் ராமன்” டி.வி. தொடர் – திரிபுகளும் பொய்களும்இராமன்: ஒரு மாபெரும் மனிதகுல விளக்கு – 3
மக்களைக் காக்கும் பணியில், சாதாரணமாகக் கருதப்படும் தவிர்க்கப்பட வேண்டிய செயல், அல்லது கொடூரமான, மனிதாபிமானமற்ற செயல் என்றாலும் அரசு அதைச் செய்யவேண்டும்.. மன்னித்தல் என்பது எவருக்குமே கடினமான ஒரு காரியம்; கடவுளுக்குக் கூட… கௌசல்யையின் செல்ல மகனே! வைகறைப் பொழுது புலர்ந்து விட்டது. புருஷர்களில் உத்தமனே! விழித்துக் கொள். இன்று நீ ஆற்ற வேண்டிய தெய்வீகக் கடமைகள் காத்துக் கொண்டிருக்கின்றன… பக்தியுடனும், நன்றியுடனும், நேர்மையுடனும் உன்னுடன் வாழப்போகும் இந்தப் பாக்கியசாலியான சீதா உன்னை எப்போதும் நிழல்போலத் தொடரட்டும்…
View More இராமன்: ஒரு மாபெரும் மனிதகுல விளக்கு – 3