“சீதையின் ராமன்” டி.வி. தொடர் – திரிபுகளும் பொய்களும்

இந்தத் தொடர், ராமாயணத்தை ‘சீதையின் பார்வையிலிருந்து’ சித்தரிக்கப் போவதாக சொல்லப்பட்டது. ஆனால், ஒரு மாதத்திற்குப் பின், இந்தத் தொடர் தன்னிச்சையாக ஒரு பாதையில் பயணிக்கத் தொடங்கி, வால்மீகி ராமாயணத்தின் மூலத்திலிருந்து முற்றிலும் விலகிவிட்டது.. மூலக் கதையை திரித்தது மட்டும் இல்லாமல், நவீன “மதச்சார்பற்ற” “முற்போக்கு” கருத்துக்களையும் அதன் மேல் திணிக்க முயற்சி செய்து, ஹிந்துக்களின் பண்டைய வரலாற்றின் ஒரு பகுதியாக, இதிகாசமாகவும் புனித நூலாகவும் கருதப்படும் ராமாயணத்தை கேலி செய்வது போல் அமைந்துள்ளது… ராம -லட்சுமணர்களுக்கும் மாரீசன்- சுபாகு தலைமையிலான ராட்சதர்களுக்கும் இடையே நடைபெறும் யுத்தம், அரசர்களுக்கும் பழங்குடி மக்களுக்கும் இடையே நடைபெறுவதாகக் காட்டப்படுகிறது ! இந்தத் தொடரை உருவாக்கியவர்களுக்கு ஆரியப் படையெடுப்பு தொடர்பான கதைகளின் தாக்கம் அதிகம் இருந்திருக்கும் போல…

View More “சீதையின் ராமன்” டி.வி. தொடர் – திரிபுகளும் பொய்களும்

காந்தி மேரி – தெரிந்த முகத்தின் புதிய அறிமுகம்

வெறியாட்டம் சம்பிரதாய நாடக வடிவிலோ, அல்லது நவீன நாடகங்கள் என்று சொல்லப்பட்டு வந்த நாடகங்கள் போன்றோ இல்லை. ஒப்பாரியிலேயே நாடக நிகழ்வு முழுதையும் மேடையேற்றியிருந்தார் ராமானுஜம். நடு நாயகமான பாத்திரம் ஏற்று நடித்த காந்தி மேரியின் நடிப்பு தோரணைகளும் சரி, பெருந்தேவியும் சரி எல்லாமே பொருத்தமாகத் தான் இருந்தன. முதல் முயற்சியே சிறப்பாக வெற்றி பெற்றது தான்… இப்போது காந்தி மேரி ஒரு நாடகாசிரியராக நம் முன் பொம்மக்காவின் மூன்று பெண்கள் என்னும் நாடகத்துடன் வருகிறார். ஆண்கள் விதித்துள்ள வரம்பிற்கு அடங்கி கடைசியில் குரல் எழுப்புவது பெண்ணியக் குரல், எதிர்ப்புக் குரல் அல்ல. பொம்மக்கா நாடகத்தில் பாதிக்கப்பட்ட பெண்கள் அடிப்படையான கேள்விகளை எழுப்புகிறார்கள். இது ஒரு இயல்பான எதிர்ப்புக் குரல், பெண்ணீயக் குரல்… ஃபாஷன் அல்லாத ஒரு காரியத்தைச் செய்துள்ள, ஊரோடு ஒட்டி வாழ மறுத்துள்ள காந்தி மேரிக்கு என் வாழ்த்துக்கள்…

View More காந்தி மேரி – தெரிந்த முகத்தின் புதிய அறிமுகம்

சம(?) உரிமைக்குப் போராடும் பெண்கள் – 2

நகரத்துப் பெண்கள் என்றாலே தலையை விரித்துப் போட்டுக் கொண்டு (இதுக்கு யார் என்ன சொல்லப் போறீங்களோ சொல்லுங்கள், ஆவலோடு காத்திருக்கிறேன்), சல்வார், கமீஸ் போட்டுக் கொண்டு/ அல்லது மிக மிக நாகரிகமாய்க் குட்டைப்பாவாடை அணிந்த வண்ணம்/, கவர்ச்சியான உடை உடுத்திக்கொண்டுதான் இருப்பார்கள் என்றும் அடிக்கடி ஹோட்டல்களில் அதுவும் நட்சத்திர அந்தஸ்துப் பெற்ற ஹோட்டல்களில் சாப்பிடலாம் என்பதும் அவர்கள் கனவு…. ஒரு ஆண் அனுப்புகிற எஸ்.எம்.எஸ்ஸுக்கும், அவனோடு பேசவும் பெண்கள் வரிசையிலே வருவார்கள். வேறு வேலைவெட்டி எதுவும் எல்லாமல் என்னவோ இதற்காகவே பெண்கள் காத்துக்கிடக்கிறாற் போல் காட்டுவார்கள். எந்தப் பெண்ணுரிமைக் கழகம் அல்லது சங்கம், அல்லது மக்கள் பிரதிநிதிகள் இதை எதிர்க்கிறார்கள்?…

View More சம(?) உரிமைக்குப் போராடும் பெண்கள் – 2

சம(?) உரிமைக்குப் போராடும் பெண்கள்

உடை உடுத்துதலில் தொடங்கிய ஆபாசம் இன்று கள்ளக் காதலிலும் லஞ்சம் வாங்குவதிலும் அதற்காகச் சிறு குழந்தை என்று கூடப் பார்க்காமல் கொலை செய்வதிலும் போய் முடிந்திருக்கிறது. நமக்குத் தெரிந்து வெளியே வந்திருக்கும் சில நிகழ்ச்சிகள் இவை…. எல்லாப் பெண்களுக்கும் கிடைத்துவிட்டதா என்றும் கேட்கின்றனர். சரி, இல்லை என்றே வைத்துக்கொள்வோம். எல்லா ஆண்களுக்கும் இந்தச் சம உரிமை கிடைத்திருக்கிறதா? ஏன் எல்லா ஆண்களும் உயர்ந்த இடத்தில் இல்லை? ஏன் ஒரு சிலருக்கு மட்டும் நல்ல உயர்ந்த பதவிகளும்…

View More சம(?) உரிமைக்குப் போராடும் பெண்கள்