ஒவ்வொரு இனமும் தங்கள் இன வரலாறு என்பது அறிவியலுக்கு அப்பாற்பட்டதாகவும் தங்கள் மூதாதையார்களால் பேணிப் பாதுகாக்கப்பட்டு இந்நாள் வரை வந்துள்ளதாகவும் உறுதியாக நம்புகின்றனர். உணவு, உடை, மொழி, மூதாதையரால் தங்களுக்கு வந்துள்ள அறிவு (எழுதப்பட்டதாகவோ அல்லது வாய்மொழியால் இன்றுவரை பேணப்பட்டு வருவதாகவோ இருப்பது), கடவுள் மற்றும் அந்தக் கடவுளை வழிபடும் முறைகள், மருத்துவம், ஒவ்வொரு மனிதனின் வாழ்க்கையிலும் பல்வேறு நிலைகளில் நடத்தப்படும் சடங்கு மற்றும் சம்பிரதாயங்கள் (தொட்டிலிலிருந்து சுடுகாடு வரை) போன்றவை இனத்திற்கு இனம் வேறுபட்டு உள்ளன.
View More இனவாதமும், இனப் படுகொலைகளும்: ஒரு பார்வை – 1