காங்கிரஸ் மத்தியில் ஆட்சியில் இருந்திருந்தால் அதிமுக அரசு இந்நேரம் வீட்டுக்கு அனுப்பப்பட்டிருக்கும் என்பதை அனைவரும் அறிவர். இப்போதே, ‘மத்தியில் ஆட்சி மாற்றம் ஏற்பட்டால், அதையடுத்து தமிழகத்தில் செயல்படாத அதிமுக அரசு வீட்டுக்கு அனுப்பப்படும்’ என்று திமுக தலைவர்கள் பேசி வருகின்றனர். எனவே, அதிமுகவுக்கு ராஜதந்திரத்துடன் யோசிக்க வேண்டிய தருணம் இது.
View More அதிமுக- பாஜக கூட்டணி அமையுமா?Tag: தம்பிதுரை
சின்னம்மாவும், நமது அரசியல் சிறுமையும்…
அதிமுகவின் தலைமைப் பொறுப்பு இப்போது விவாதப் பொருளாகி இருக்கிறது. சசிகலா பொதுசெயலாளர் ஆவாரா? முதல்வர் பதவியையும் கைப்பற்றுவாரா? நிர்பந்தங்களால் அரசியலிலிருந்தே ஒதுங்குவாரா? எல்லாம் காலத்தின் கரங்களில் இருக்கிறது. எது நடந்தாலும், அது தமிழகத்தின் அரசியலில் அழிக்க முடியாத கறையாகவே இருக்கும்.
காமராஜரும், ராஜாஜியும், சத்தியமூர்த்தியும், முத்துராமலிங்கத் தேவரும், திரு.வி.க.வும், பாரதியும், வ.உ.சி.யும், தன்னலமின்றி அரசியல் நடத்திய மண்ணில், சுயநலத்துக்காக அதிமுகவினர் எந்த அரசியல் பின்புலமும் அற்ற ஒருவரிடம் கையேந்துவதே நமது தர வீழ்ச்சியின் அடையாளம்.
View More சின்னம்மாவும், நமது அரசியல் சிறுமையும்…