அங்கு அறைக்குள் நண்பர்களுடன் ஜெபமணி அவர்களும் பிறரும் சோவுடன் கூடியிருந்தனர். சோ எந்தவித பதட்டமும் அச்சமும் இல்லாமல் நிதானமாக இருந்தார். சற்று முன் அவர் மீது கொலைவெறி தாக்குதல் நடந்ததன் அடையாளம் ஏதும் இல்லாமல் அமைதியாக இருந்தார். அவர் மீதான ஒரே கொலை முயற்சி வன்முறைத் தாக்குதல் அது மட்டுமே. அந்த ஒரே ஒரு கொலை முயற்சி வன்முறைத் தாக்குதல் இந்தியாவின் வரலாற்றையே தீர்மானிப்பதில் முடிந்தது. அதற்கு ஒரு சாட்சியாக நான் அந்த இரவில் இருந்தேன்… ராஜீவ் காந்தி சோ மீது மிகுந்த மரியாதை வைத்திருந்தார். அவர் சோவிடம் பல விஷயங்களைக் கலந்தாலோசித்துக் கொண்டிருந்தார். ராஜீவின் ஆதரவுடனான மைனாரிடி அரசை நடத்திக் கொண்டிருந்த சந்திரசேகர் ஒரு மாநில அரசை டிஸ்மிஸ் செய்த ஒரே காரணம் சோவும், சுப்ரமணியம் சுவாமியும் கொடுத்த அழுத்தம் மட்டுமே…
View More சோ: சில நினைவுகள் – 3Tag: துக்ளக்
சோ: சில நினைவுகள் – 2
என் டி ஆருக்கு மெஜாரிடி இருந்தும் கூட இந்திரா அவரது அரசை கலைக்க ஏற்பாடு செய்தார். அதற்கெதிரான போராட்டத்தில் சோவின் பங்கு முக்கியமானது. ஜனநாயகத்திற்காக சோ என் டி ஆருக்கு அளித்த ஆதரவுகள் மூலமாக அவரது செல்வாக்கு வட இந்தியத் தலைவர்களிடம் வெகுவாக உயர்ந்தது… தமிழகமெங்கும் புலிகள் வீடுகள் வாடகைக்கு எடுத்துத் தங்கி துப்பாக்கிகளுடன் சுதந்திரமாகத் திரிந்து வந்தனர்.சோ விடுதலைப் புலிகளைக் கடுமையாக எதிர்த்து வந்தார். அவர்களுக்கு அளிக்கப் படும் சுதந்திரம் தமிழ் நாட்டை ஒரு வன்முறை பூமியாக மாற்றி விடும் என்று கதறி வந்தார். அவர் ஒருவர் மட்டுமே புலிகளைத் துணிவாக எதிர்த்து எழுதி வந்தவர்… மாநிலத்தில் எம் ஜி ஆரின் மறைவு, மத்தியில் ராஜீவின் தோல்வி, வி பி சிங்கின் ஆட்சி என்று இந்தியா மீண்டும் ஒரு பெரும் புயலில் சிக்கித் தவித்துக் கொண்டிருந்தது. அந்தக் குழப்பமான சூழலில் அரசியல் தெளிவு துக்ளக் மூலமாகவே அளிக்கப் பட்டுக் கொண்டிருந்தது. இந்த சமயங்களில் சோ அவரது உச்சத்தில் செயல் பட்டு வந்தார்…
View More சோ: சில நினைவுகள் – 2சோ: சில நினைவுகள் – 1
கிட்டத்தட்ட 46 வருடங்களாக என்னுடன் தொடர்ந்து நெருக்கமாக வருபவர் சோ. என் சிந்தனைகளை கருத்துக்களை ஆளுமையை இன்று நான் எழுதுவதை அனைத்தையுமே ஆக்ரமித்தவர் சோ… ஆரம்ப காலங்களில் அவர் எழுதிய வாஷிங்டனில் நல்லதம்பி போன்ற தொடர்கள் தி மு க வின் முட்டாள்களையும் ஊழல்களையும் கிழிப்பவையாக இருந்தன. வட்டம், மாவட்டம் என்று தோளில் ஆட்டுக்கள்ளன் துண்டுடன் இரண்டு தலைக்குப் பதிலாக மூளையில்லாத தலைகளைக் குறிக்கும் வகையில் இரண்டு வெறும் முட்டைகளுடன் கார்ட்டூன்கள் வரும். ஆரம்ப இதழ் துவங்கி கழுதை துக்ளக்கில் அட்டைப் படம் முதல் உள்ளே உள்ள கார்ட்டூன்கள் வரையிலும் இடம் பெறும்.எமர்ஜென்சி காலத்தில் கருணாநிதியை விமர்சிக்க சோ மறுத்து விட்டார். என்று இந்திராவை விமர்சிக்கும் சுதந்திரம் எனக்கு கிடைக்கிறதோ அன்று நான் கருணாநிதியையும் விமர்சிப்பேன் என்று சொல்லி விட்டார்…
View More சோ: சில நினைவுகள் – 1வன்முறையே வரலாறாய்…- 33
ஒரு முஸ்லிம் அவனால் கைப்பற்றப்பட்ட எந்தவொரு காஃபிர் அடிமைப் பெண்ணுடனும் உடலுறவு கொள்ளலாம். அவள் திருமணமானவளாக இருந்தாலும் கூட.. நம்பிக்கையாளன் அடிமைகளைப் பிடிக்கவும், அவர்களை அடிமைகளாக வைத்துக் கொள்ளவும் அல்லா அவனுக்கு அளவற்ற சுதந்திரத்தை வழங்குகிறான்… 1070-ஆம் வருடம் பஞ்சாபின் மீது படையெடுத்த இன்னொரு கஜ்னாவி சுல்தானான இப்ராஹிம் ஏராளமான செல்வங்களைக் கொள்ளையிட்டதுடன், ஒரு இலட்சத்திற்கும் மேற்பட்ட அடிமைகளைப் பிடித்து அவர்களை கஜினிக்குக் கொண்டு சென்றான் என தாரிக்-இ-அல்ஃபி மற்றும் தபாகத்-இ-அக்பாரி புகழ்ந்துரைக்கிறது… 1398ம் வருடத்திய தில்லிப் படையெடுப்பைத் தொடர்ந்து தைமூரின் படைகள் வட இந்தியா முழுவதும் கொலை வெறியாட்டமிட்டன.. தைமூர் ஏறக்குறைய 25 இலட்சம் வரையிலான இந்து அடிமைப் பெண்களையும், குழந்தைகளையும் பிடித்து மத்திய ஆசியாவிற்குக் கொண்டு சென்றான் என்று வரலாற்று ஆசிரியர்கள் மதிப்பிடுகிறார்கள்..
View More வன்முறையே வரலாறாய்…- 33இந்த வாரம் இந்து உலகம் (மார்ச்-31, 2012)
இந்தியாவில் தான் சிறுபான்மை அமைப்புகள் என்ற பெயரில் பெருமளவு பண மோசடி, மதமாற்றம், அமைதியைக் குலைத்தல் ஆகியவற்றில் தைரியமாக ஈடுபட முடிகிறது. இதை விசாரித்தால், உடனே இந்து மதம் என்ன வாழ்கிறது? சாதி கொடுமைகள் இந்து மதத்தில் தானே இருக்கின்றன என்பார்கள். இந்த சாதி என்ற ஒன்றை வைத்தே இந்துக்களை குற்ற உணர்ச்சிக்கு ஆளாக்கி, தம்மைக் குறித்த எந்த விமர்சனத்தையும் மறுத்து வருகிறார்கள். ஆனால் உண்மையில் சாதியத்துக்கு எதிராகவும், சிறுபான்மையினருக்கு பாதுகாப்பாகவும் சட்டங்கள் இயற்றுவதும், உரையாடல்களை சமூகத்தில் நிகழ்த்துவதுமாக மாற்றங்களை முன்னெடுப்பது இந்துக்களே. இதை இந்துக்களும் உணரவேண்டும்.
View More இந்த வாரம் இந்து உலகம் (மார்ச்-31, 2012)பெரியாரின் மறுபக்கம் – பாகம் 18: தேசப்பற்று இல்லாத ஈ.வே. ராமசாமி நாயக்கர்!
”சுயமரியாதை இயக்கத்தின் அரசியல் கொள்கையானது பார்ப்பன ஆதிக்கக் காங்கிரசை எதிர்ப்பது அதற்காக எவ்வளவு அவசியப்பட்டாலும் அவ்வளவு அரசாங்கத்துடன் ஒத்துழைப்பதும், சமுதாயத்தில் ஜாதி மத பேதங்களை அகற்றுவதும். மூடப்பழக்கங்களை ஒழிப்பதும் பொருளியில் சமதர்மமாகும். இவைகளைப் பற்றிய விஷயங்களை மக்களிடையில் பிரசாரம் செய்யவும் அமுலுக்குக் கொண்டுவரவுமான காரியங்கள் நடைபெறவேண்டும். காங்கிரஸ் ஆட்சியைவிட பிரிட்டிஷ் ஆட்சியே மேலானது என்பது என்னுடைய வெகுநாளைய அபிப்ராயம்”.
View More பெரியாரின் மறுபக்கம் – பாகம் 18: தேசப்பற்று இல்லாத ஈ.வே. ராமசாமி நாயக்கர்!போகப் போகத் தெரியும்-12
‘ஹரிஜனப் பெண்கள் சொக்காய் போட ஆரம்பித்ததுதான் துணி விலை உயர்ந்ததற்குக் காரணம். ஹரிஜனங்கள் படிக்க ஆரம்பித்ததால்தான் வேலை இல்லாத் திண்டாட்டம் அதிகமாகி விட்டது…’ என்பதெல்லாம் பெரியாரின் அபிப்பிராயம் என்பது கருணாநிதியின் கருத்து. இதைக் கருணாநிதியிடமே கேட்டு வீரமணி தெரிந்து கொள்ளட்டுமே…
View More போகப் போகத் தெரியும்-12