மாற்றம் கொண்டுவரும் மாற்று அணி!

“பாஜக கூட்டணி காலத்தின் கட்டாயம் சார். பொன்.ராதாகிருஷ்ணன் தனது தலைமையை நிரூபித்திருக்கிறார். இந்தக் கூட்டணி குறைந்தபட்சம் 10 முதல் 15 தொகுதிகளில் வென்றே தீரும்” என்றும் கூறினார் அந்த நடத்துனர். இந்த வார்த்தைகளில் ஒரு சதவிகிதம் கூட கலப்பில்லை. மிகத் தெளிவான, ஊரகப் பகுதி மனிதர் ஒருவரின் வாக்குமூலமாக இதை உணர முடிந்தது. அதன்பிறகு, எங்கள் பேச்சு, தொகுதிப் பங்கீடுகள், வேட்பாளர்கள் தேர்வு குறித்தெல்லாம் சென்றது. நடத்துனரின் அரசியல் அறிவு அதில் பளிச்சிட்டபடியே இருந்தது…. வெற்றி- தோல்விகள் அனைவருக்கும் பொதுவானவை. ஆனால், மகத்தான மாற்றங்களுக்கு முயற்சிப்பதே ஒரு பெரும் சாகசம். அந்த சாகசத்தில் தமிழக பாஜக வெற்றி பெற்றிருக்கிறது. தமிழகத்தில் உருவாகியுள்ள இந்தக் கூட்டணி தேசிய அளவிலும் பாஜக-வுக்கு மிகுந்த தெம்பூட்டுவதாக அமைந்துள்ளது….

View More மாற்றம் கொண்டுவரும் மாற்று அணி!

தமிழகத்தில் மாற்று அணி அமையுமா? – 2

எந்த ஒரு தேர்தலும் ஆட்சிக்கு எதிரான மனநிலை கொண்டதாக இருக்க அதிக வாய்ப்புகள் உள்ளன. எந்த ஒரு அனுதாப அலையும் வீசாத பட்சத்தில் ஆட்சி மாற்றமே பெரும்பாலும் மக்களால் தேர்ந்தெடுக்கப்படுகிறது. இந்த வழக்கமான நடைமுறை இம்முறை மாறுகிறது. இந்தத் தேர்தல்- செயலற்ற, சுயநல வடிவான, ஊழல் மலிந்த ஐ.மு.கூட்டணி அரசை வீட்டுக்கு அனுப்பும் ஒரு செயல்வீரரைத் தேர்ந்தெடுக்கும் தேர்தல். பிரதமர் வேட்பாளராக மோடி தேர்வானது, நாடு முழுவதுமே ஒரு உந்துசக்தியைப் பாய்ச்சி இருக்கிறது…. “செப்டம்பர்-26 அன்று திருச்சி வருகை தரும் மோடியைப் பார்ப்பதற்காக இதுவரை இணையதளம் மூலமும், நேரடியாகவும் சுமார் ஒரு லட்சம் பேர் பதிவு செய்துள்ளனர். இணையதளம் மூலம் பதிவு செய்தவர்களுக்கு இமெயில் மூலம் அடையாள அட்டை அனுப்பி வைக்கப்படும். அதனுடன் ரூ. 10 நுழைவுக் கட்டணம் செலுத்தி, மாநாட்டில் பங்கேற்கலாம்”… இந்த 4 கட்சிகளும், இன்னும் சில சிறிய கட்சிகளும் இணைந்தால், தமிழக அரசியல் வரலாற்றில் புது அத்தியாயம் எழுதப்படும் நிலை உருவாகும். இந்திய ஜனநாயகக் கட்சியும் காந்திய மக்கள் இயக்கமும் பாஜக தலைமையிலான கூட்டணிக்கு துணையாக நிற்கும்…

View More தமிழகத்தில் மாற்று அணி அமையுமா? – 2

புதுக்கோட்டையும் அரசியல் கட்சிகளும்

ஓராண்டுகால அதிமுக ஆட்சியில் சில துறைகளில் ஏற்பட்டுள்ள அதிருப்தியைப் பயன்படுத்தி அதிமுகவுக்கு எதிராக தேமுதிக பிரசாரம் செய்துவருகிறது. எனினும் இந்த அதிருப்தி அதிமுகவை வெல்லப் போதுமானதல்ல. இந்தத் தேர்தலின் விளைவாக, தேர்தல் முடிந்தவுடன் தேமுதிக பிளவுபடக்கூடும்… எப்பாடுபட்டும் இடைத்தேர்தலில் வெல்வதை ஆளும் கட்சிகள் கௌரவப் பிரச்னையாகக் கருதுகின்றன… தமிழக அமைச்சரவையே அங்கு இடம் பெயர்ந்துவிட்டது போல, எங்கு பார்த்தாலும் அமைச்சர்கள், எம்எல்ஏக்களின் வாகனங்கள் பறக்கின்றன. இடைத்தேர்தல் வாழ்க!…

View More புதுக்கோட்டையும் அரசியல் கட்சிகளும்

தேர்தல் களம்: கழகங்களுக்கு மாற்றாகும் பாஜக

கருணாநிதி, ஜெயலலிதா என்ற இரு பெறும் தலைகளிடையே, இரு கழகங்களின் பணபலத்திடையே, கொள்கையற்ற இரு கூட்டணிகளிடையே போராடுவது பத்மவியூகத்தில் அபிமன்யூ போராடுவது போன்றது தான். பாரத அபிமன்யூவுக்கு உதவிகள் தடுக்கப்பட்டன. ஆனால், தமிழக பாஜகவின் உதவிக்கு வந்திருக்கிறது பிற மாநில முதல்வர்கள் படை. எனவே, இந்த அபிமன்யூ களத்தில் சாதித்துக் காட்டுவான்.

View More தேர்தல் களம்: கழகங்களுக்கு மாற்றாகும் பாஜக

அடுத்த தேர்தல் கூட்டணிகள் குறித்து சில ஹேஷ்யங்கள்

தமிழக சட்டமன்றத் தேர்தல், கூட்டணி அமைப்பதிலும், பின் தேர்தலிலும் ஒரு பெரிய மாற்றத்தை அளிக்கப் போகிறது… திமுக விற்கும், அதிமுகவிற்கும் வாழ்வா, சாவா என்கின்ற நிலை… திமுகவின் ராஜ்ய சபா ஏமாற்றல் பா.ம.க வை மிகவும் பாதித்துள்ளது… காங்கிரஸ், அண்ணா திராவிட முன்னேற்ற கழக கூட்டணி என்றால், ஜெயலலிதாவின் பழைய காட்டமான வசைகள், மீண்டும் நினைவிற்கு வருகின்றது… வருகின்ற சட்டமன்றத் தேர்தலில், தமிழகம் ஒரு பெரிய கூத்தைக் காணப் போகிறது.

View More அடுத்த தேர்தல் கூட்டணிகள் குறித்து சில ஹேஷ்யங்கள்